தனியொருவன் ரஜினி

31
தனியொருவன் ரஜினி

ரு குறிக்கோளை அடையும் போது இருக்கும் ஆர்வம், பரபரப்பு அதை அடைந்த பிறகு இருப்பதில்லை’ என்று ரஜினி கூறினார். Image Credit

இது தனிப்பட்ட முறையில் பல சூழ்நிலைகளில் எனக்குப் பொருந்தியுள்ளது.

இது போன்று குறிக்கோள் என்ற பெரிய அளவுக்கு இல்லையென்றாலும், அண்ணாத்த படம் வெளியான சமயத்தில் வந்த விமர்சனங்கள் பலவற்றுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று தலைப்பு உட்பட யோசித்து வைத்து இருந்தேன்.

ஆனால், விமர்சனங்களைத் தாண்டிப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிறகு மேற்கூறிய நிலையாகி விட்டது.

இக்கட்டுரை எழுதக்காரணமே பலர் ரஜினியை அழிக்க முயல்கிறார்கள் ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி எப்படி செல்கிறார் என்ற வியப்பினாலே.

பாஜக

முதலில் பஞ்சாயத்தை ஆரம்பித்ததே இணையத்தில் உள்ள பாஜக நபர்கள் தான்.

இவர்களுக்கு ரஜினி, சன் தயாரிப்பில் நடிப்பதும், அரசியலிலிருந்து ரஜினி விலகியதால், திமுகக்கு சாதகமாகி விட்டது என்ற காண்டு காரணமாகப் படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு இருந்தே அண்ணாத்த படத்தை யாரும் பார்க்காதீர்கள் என்று பரப்புரை செய்துகொண்டு இருந்தார்கள்.

இதற்குப் பதிலடியாக ரஜினி ரசிகர்களும் கழுவி ஊத்தியதால், மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக ட்வீட்டை நீக்கி விட்டார்கள்.

சிலர் கூட்டுச் சேர்ந்து கொண்டு திட்டிச் சுய இன்பம் அடைந்து கொண்டார்கள், கொண்டு இருக்கிறார்கள் தற்போதும்.

மோடி, அண்ணாமலை, பாஜக மீது மிகுந்த மதிப்புள்ளது ஆனால், அதற்காக ரஜினியை திட்டினால் சரி என்று கேட்டுட்டு போகிற நபர் கிடையாது.

முன்னரே கூறியபடி ரஜினி தான் எனக்கு முதலில், மற்றவர்கள் அனைவரும் அதன் பிறகே. ரஜினியை விமர்சிக்கும் பாஜகவினர் மூளையற்றவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

ஏனென்றால், தமிழ் திரையுலகம் முழுக்க இடது சாரி ஆதரவாளர்களால் நிரம்பி வருகிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் பலர் இந்து மத எதிர்ப்புள்ளவர்கள்.

இந்நிலையில் காலா தவிர்த்து எங்குமே கடவுள் சம்பந்தமாக ரஜினி விமர்சனத்துக்குள்ளானது இல்லை.

இராகவேந்திரர், பாபா, அண்ணாமலையார், முருகன் என்று இந்து மதத்துக்கு மரியாதை செய்து, நெற்றி முழுக்கத் திருநீர் வைத்து நடித்து வருபவர்.

அண்ணாத்த படத்திலும் இந்து மத நம்பிக்கைகளை முன்னிறுத்தி நடித்து இருந்தார்.

தமிழ் திரையுலகில் இந்து மதத்தை (எந்த மதத்தையும்) இழிவுபடுத்தாத, பல பாஜக முன்னெடுப்புகளை பாராட்டிய முக்கிய நடிகரான இவரையே எதிர்க்கிறார்கள் என்றால், இவர்கள் அடிமுட்டாளாகத் தானே இருக்க வேண்டும்!

ரஜினியின் பலமும், மதிப்பும் தெரிந்ததாலே பாஜக தலைவர்கள் ரஜினியை மதிக்கிறார்கள். இதுவே தலைவர்களுக்கும் இணைய போராளிகளுக்கும் உள்ள வித்யாசம்.

எதில் அரசியல் செய்ய வேண்டும், யாரை எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் கம்பு சுத்திக்கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கு அண்ணாமலை தான் புத்தி சொல்ல வேண்டும்

அண்ணாத்த விமர்சனம்

படத்தைப் பார்க்காமலே அண்ணாத்த படத்தைக் கடுமையாக விமர்சித்தார்கள். மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று சிலர் அவர்களும் கிண்டலடித்தார்கள்.

அண்ணாத்த அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை, தாராளமாக விமர்சிக்கட்டும் ஆனால், உள்நோக்கத்தில் விமர்சிக்கப்படுவதே கேள்வியாகிறது.

யார் நடித்தாலும் கதை, திரைக்கதை நன்றாக இருந்து மக்களைக் கவர்ந்தாலே படம் வெற்றி பெறும்‘ என்று ரஜினி கூறியிருந்தார்.

இது தான் அண்ணாத்த படத்துக்கு நேர்ந்தது.

பலர் புரிந்து கொள்ளாதது, சென்டிமென்டுக்குத் தமிழகத்தில் இன்னும் வரவேற்பு உள்ளது என்பதை.

நாலு உலகப்படங்களைப் பார்த்துத் தன்னை உலகப்பட ரசிகனாகக் கருதிக்கொண்டு அண்ணாத்த படத்தைக் கேவலமாக விமர்சிக்கிறார்கள்.

விஸ்வாசம், நம்ம வீட்டு பிள்ளை படமெல்லாம் எப்படி வெற்றி பெற்றது?! காரணம், இன்னும் தமிழ்நாட்டில் சென்டிமென்டுக்கு இருக்கும் வரவேற்பு தான்.

அண்ணாத்தக்குப் பிரச்சனை கதையல்ல, ரஜினி தான். இதே படத்தில் வேறொருவர் நடித்து இருந்தால், விமர்சித்தவர்கள் பலர் ஆஹா ஓஹோன்னு பாராட்டியிருப்பார்கள்.

தனியொருவன் ரஜினி

ரஜினிக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அவருக்கு யாரும் துணை வருவதில்லை, ரசிகர்களைத் தவிர. அவரே தான் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்.

குசேலன் படத்துக்கு நான்கு நாட்களில், லிங்காக்கு ஒரு வாரத்தில் தோல்வி என்று போராட்டம் நடந்த போது தனியொருவனாகவே எதிர்கொண்டார்.

நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ எவரும் உதவிக்கு வரவில்லை.

படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே இது போல நடந்து கொள்வது சரியா? என்று எவரும் கேட்கவில்லை, கண்டிக்கவில்லை.

தினம் தினம் படத்தைக் கொன்றார்கள் சார்‘ (சிங்காரவேலன்) என்று லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், மேடையில் கண்ணீர் விட்ட போது ஆறுதல் கூற தயாரிப்பாளர் சங்கம் வரவில்லை.

வேறு எந்தப் படத்துக்குப் பிரச்சனையென்றாலும் ‘ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை‘ என்று விமர்சனம் வரும்! ஆனால், ரஜினி படத்துக்கு ஒருவரும் வரமாட்டார்கள்.

திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கொடுத்த போது, நடிகர் சங்கம் உட்பட எவரும் மரியாதைக்குக் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இதே வேறு மாநிலமாக இருந்தால், கொண்டாடி தீர்த்து இருப்பார்கள். வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் தான் இணையத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

700+ கோடி வசூலித்துத் தமிழ்த்திரையுலகையே உலகளவில் பிரபலப்படுத்திய 2.0 திரைப்படத்தைத் தமிழ்த் திரையுலகினர் பெருமையாகக் கருதவில்லை.

இதே படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு இருந்தால், நிலையே வேறு!

ஒரு மனிதன் மேல் எதற்காக இவ்வளவு வன்மத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ரஜினியின் வளர்ச்சி என்பதைத்தவிர வேறு எந்தக்காரணமும் எனக்குப்புரியவில்லை.

இதையெல்லாம் தாண்டி இக்குதிரை ஓடிக்கொண்டு இருப்பது கெத்தாகத்தான் உள்ளது.

வரவேற்பு

அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி கூறிய பிறகு வரும் படம் என்பதால், படத்துக்கு வரவேற்பு இருக்குமா? என்ற சந்தேகம் பலரை போல எனக்கும் இருந்தது.

இதற்குத் தகுந்த மாதிரி சன் பிக்சர்ஸ் எந்த ப்ரோமோஷனும் செய்யவில்லை. பாடல் வெளியீடு இல்லை, பரபரப்பு இல்லை. கன்னட மொழியில் வெளியாகிறது என்று அங்குள்ளவர்களுக்கே தெரியவில்லை.

ரசிகர்கள், பொதுமக்கள் அண்ணாத்த படத்தை ஏற்றுக்கொள்வார்களா? படம் வெற்றியாகி வரும் கூட்டத்தை விட முதல் நாள் எப்படியுள்ளது என்பதே முக்கியமாக இருந்தது.

ஆனால், எவருமே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

முதல் நாளிலிருந்து பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். எதற்கு நடிக்க வேண்டும்? ஓய்வு எடுக்கலாமே! என்றார்கள்.

விமர்சனம் என்ற பெயரில் அநாகரீகமாக YouTube ல் விமர்சித்தார்கள்.

YouTube, Shorts, Reels, ட்விட்டர், ஃபேஸ்புக், WhatsApp முழுக்க அண்ணாத்தயை கிண்டல் செய்து செய்திகளைப் பரப்பினாலும், மக்கள் ஆதரவினால் பெரிய வெற்றியைப்பெற்றது.

ஆந்திராவில் இப்படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தேன் ஆனால், நடக்கவில்லை இது மட்டுமே என் ஒரே ஏமாற்றம்.

NETFLIX

NETFLIX ல் பார்த்து, ‘நன்றாக உள்ளது இதை ஏன் மோசமாக விமர்சித்தார்கள்!‘ என்று பலர் சமூகத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்றவர்கள் சொன்னார்கள் என்று எப்படிப் படத்தையே பார்க்காமல் கிண்டலடிக்க முடிகிறது?! இப்படிக் கூறவும் முடிகிறது!

திரையரங்கில் ஓடியதையே பலரால் ஜீரணிக்க முடியவில்லை ஆனால், NETFLIX லும் தமிழ் & இந்தி போட்டி போட்டு முதல் இரண்டு இடங்களைப் பெறும் போது இன்னும் கடுப்பாகவே இருக்கும்.

என்னங்க பண்ணுறது..! எதிர்ப்பாளர்கள் ஒன்று நினைத்தால், காலம் வேறு நினைக்கிறது. எண்ணம் போல வாழ்க்கை.

ஒன்றுமே செய்ய முடியவில்லையே!

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் ரஜினி அதே அமைதியுடன், எப்போதும் போலவே செவிட்டு தவளையாகவே உள்ளார்.

மிகப்பெரிய வலைப்பின்னல் மூலம் ரஜினியின் வளர்ச்சியைத் தடுக்கப் பெரியளவில் திட்டமிடுதல்கள் தமிழ்த்திரையுலகில் நடைபெறுகின்றன.

ரஜினிக்கு மார்க்கெட் அவ்வளவு தான் என்று YouTube சேனல்கள், சமூகத்தளங்கள் மூலம் திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுகிறது.

ரஜினியே கூறியது போல 'ஏறிய கொடி ஒரு நாள் இறங்கத்தான் செய்யும்'. ரஜினியாலும் எப்போதும் உயரத்திலேயே இருக்க முடியாது, என்றாவது ஒரு நாள் இறங்கித்தான் ஆகணும்.
ஆனால், அதைத் தீர்மானிக்க வேண்டியது காலம், அவரது எதிர்ப்பாளர்கள் அல்ல.

மக்களின், ரசிகர்களின் ஆதரவும் அதோடு அவர் எப்போதும் நம்பும் கடவுளும் அவருக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பதால், வேறு எந்த ஆதரவும் தேவையில்லை என்று நினைக்கிறாரோ!

அனைத்துப் பிரச்சனைகளையும் தனி ஒரு ஆளாக எதிர்கொள்ளும் தனியொருவன் தலைவர் ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🙂 .

உடல் ஆரோக்கியத்துடன், மன அமைதியுடன், அனைவரையும் மகிழ்வித்து இன்னும் பல ஆண்டுகள் தலைவர் வாழ, கடவுளை வேண்டுகிறேன்.

மனதுக்குச் சரி என்று தோன்றுவதை, மற்றவர் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அனைவரையும் திருப்தி செய்ய நினைக்காமல் கருத்தைக் கூறும் மனநிலையை எனக்குக் கொடுத்த ரஜினி அவர்களுக்கு நன்றி.

தொடர்புடைய கட்டுரைகள்

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

டிராக்கர்ஸ் அரசியலும் உணராத ரசிகர்களும்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

31 COMMENTS

  1. “இதுக்கு பெயர் தான் தலைவர் அதிரடி ..” ⚡️🌟🤩
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தலைவா ! 😊🙏💐

  2. கிரி, திரு. ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வராதது எனக்கு ஏமாற்றமே. தமிழக அரசியலில் ஒரு திருப்பம் வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அது நிகழவில்லை. காலம் அவருக்கு வேறொருன்று வைத்திருக்கும் போலும். அவர் தேர்தல் அரசியலிருந்து விலகிய பிறகு, மிக கண்ணியமாகவும் அமைதியாகவும் இருந்தது என்னை மிகவும் கவர்ந்தது.

    அவர் அரசிலியலுக்கு வராதது நல்லதே என்று இப்பொழுது நான் நினைக்கிறேன். பதவி ஆசை காரணமாக சில ரசிகர்கள் அவரை விட்டு விலகி இதர கட்சிகளில் இணைத்தனர். இதுவே நமது மக்கள், ஜனநாயகம் மற்றும் அரசியல் களம். இந்த யதார்த்தத்தை ரஜினி நன்கு அறிவார். பல கோணங்களில் யோசிப்பவர், புத்திசாலியும் கூட.

    அசுர பலம் கொண்ட திமுக மீடியாக்கள் அவரை வளர விட்டு இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

    ரஜினி அவர்களின் சினிமா வரலாறு பற்றி ஆய்வு கட்டுரைகள் மற்றும் விமர்சன புத்தகங்கள் வெளிவந்தால் இன்றைய இளைய தலைமுறைக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் தரும். அந்த காலத்தில் கதாநாயனுக்கு எதிர்பார்க்க பட்ட தகுதிகள் எதுவும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்து இன்று உலக அரங்கில் இந்திய முகமாக எப்படி உருவாகினார் என்பது ஒரு சூப்பர்மேன் கதைக்கு இணையானது.

    ரஜினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்…

    • நேரடியா தெரிஞ்சுக்காமயே நாம படிச்சா கேட்ட விஷயத்தை வெச்சே நம்ம இவ்வளவு எழுதறோம் வருத்தப்படறோம், ஆனா அந்த துறைல இருக்கறவருக்கு தன் மேல யார் யார் எவ்வளவு வெறுப்பு வெச்சிருக்காங்கன்னு எந்தளவுக்கு புரிஞ்சுவெச்சிருக்கணும். தன் குடும்பத்துக்கும் ரசிகர்கள் அபிமானிகளுக்கும் தன்னாலயோ தனக்குப்பிறகோ எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு அவர் எவ்வளவு யோசிச்சிருப்பார். தன் கட்சி பேர்ல இன்னொருத்தர் தான் ஆட்சி செய்வார்னு சொன்னவுடனே எத்தனை பேர் பாராட்டறேன் பேர்வழின்னு பயத்துல வாந்தி பேதிய மறைச்சுக்கிட்டு பாராட்டுனானுக. சொன்னா சொல்லிகிட்டே இருக்கலாம். ஆனா தலைவர் தப்பான முடிவு எடுக்க மாட்டார். கடவுள் எடுக்க விடமாட்டார்.

  3. ரஜினி சார் ஒரு தெய்வீக அந்த தெய்வீகத்தை அழிக்க யாராலும் முடியாது வெல்லட்டும் அவர் புகழ் பாடட்டும் பல ஆண்டுகள் தூற்றுபவர்கள் ஐ உதறித் தள்ளுங்கள் அதற்காக மனம் தளர வேண்டாம் ரஜினி என்றாலே வெற்றிதான்

  4. அற்புதம் !!! அதிசியம்!!! வாழ்க பல்லாண்டு என்றும் சூப்பர் ஸ்டார்

  5. கிரி… நீங்க சொல்லிடீங்க நாங்க மனசுக்குள்ளேய வச்சிக்கிட்டு இருக்கும்

  6. எங்கள் உலக சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  7. இது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. ரஜினி பிறர் நடித்த நல்ல படங்களையும், அதில் நடித்த நடிகர்களையும் பாராட்டத்தவறியது இல்லை.
    இவரை மட்டுமே குறிவைத்து சிலர் எதிர்மறையாக பேசுகின்றனர்.
    தங்களால் முடியாததை இவர் இந்த வயதிலும் சாதிக்கிறார் அதிலும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தும் தனது பணியை செவ்வனே செய்கின்றார் என்ற பொறாமை பலருக்கு….
    இந்த ரசிகர்களும் அந்த இறைவனும் இருக்கும் வரையில் ரஜினி என்ற உன்னத மனிதரை அசைக்க முடியாது.

  8. ரஜினி என்ற உன்னத மனிதரிடம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்…
    – தோழ்வியிலும் துவண்டு விடாமல் மறுபடியும் முயற்சி செய்
    – எந்த சூழ்நிலையிலும் தன் நிலை மறவாதே
    – நீ நீயாக இரு
    – உன்னால் பிறருக்கு கெடுதல் நேராமல் நடந்து கொள்
    – உன் கடமையை செய்..
    இப்படி பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ரஜினி.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்….
    இறைவன் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வேண்டுகிறேன்..

  9. My spiritual Guru, As the world said “The oxford dictionary has mentioned ” Meaning – Simplicity ‘a living person with fame & support, suppose to rule the world, but being humble refuses & stay simple. Example Rajinikanth alias Shivajirao Gaikward, a royal prince live like a spiritual guru is simplicity

  10. அவருக்கு கடவுளுக்கு மேல் ரசிகர்களுக்கு மேல் ஒரு துணை இல்லை. அவருக்கு அடுத்தவங்க உதவி செஞ்சா அவர் ரஜினியா இருக்கமாட்டார். வேற ஒரு நடிகராவோ மனிதராவோ இருந்திருப்பார்.

    அடுத்தவன் போட்ட பாதைல நான் போக மாட்டேன். நான் போறதெல்லாம் பாதையா மாறனும். தனிக்காட்டு ராஜால தலைவர் பேசுனது.

    சினிமா விமர்சகர்கள் சொன்னது தான், எல்லாரும் லெப்ட் ரைட் போட்டப்போ ரைட் லெப்ட் போட்டவர் தலைவர். வந்தார் வெற்றிபெற்றார். என்னும் வெற்றி நடை போடுகிறார். போடுவார்.

  11. தலைவர் தெய்வபிறவி. அவர் புகழ் உலகறியும், தலைவர் வாழ வேண்டும் பல்லாண்டு காலம். வாழ்க தலைவர்.

  12. சன் டிவி நிறுவனம் தன் ஆட்சி பலம் பண பலத்தை வைத்து வேறு எந்த பெரிய படமும் அந்த சமயத்தில் வெளிவராமல் செய்து விட்டார்கள். 2006-2011 ஆட்சியை போல மீண்டும் சினிமா துறையை மெல்ல அவர்கள் கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டனர். கூட்டத்தை வைத்து வெற்றி என்று சொன்னால் நகைப்பாக உள்ளது. மக்கள் தீபாவளி அன்று சினிமாவிற்கு குடும்பத்தோடு கண்டிப்பாக போவார்கள்.
    மக்களுக்கு வேறு ஆப்ஷன் இருந்தால் தானே. மாநாடு படம் தீபாவளிக்கு தான் வரவேண்டியது. இவர்கள் பலத்தால் வரவிடாமல் தடுத்துவிட்டனர். உங்களுக்கு படம் பிடித்து இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கவில்லை. நான் யூடியூப் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் வீடியோ அனைத்தும் பார்த்தேன். அதை வைத்து சொல்கிறேன். நீங்கள் வெறும் கூட்டத்தை வைத்து சொல்கிறீர்கள். கூடத்தில் உள்ள மக்களின் கருத்தை பல ரஜினி ரசிகர்கள் கேட்க மறுக்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்கு படம் பிடித்து இருக்கலாம். ரசிகர் அல்லாத ஆனால் பொது மக்களுக்கு இந்த படம் மொக்கை தான்.

  13. அனைவரின் கருத்துக்கும் நன்றி

    @மணிகண்டன்

    “கிரி, திரு. ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வராதது எனக்கு ஏமாற்றமே. தமிழக அரசியலில் ஒரு திருப்பம் வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அது நிகழவில்லை. காலம் அவருக்கு வேறொருன்று வைத்திருக்கும் போலும்.”

    முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன்.

    “அசுர பலம் கொண்ட திமுக மீடியாக்கள் அவரை வளர விட்டு இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.”

    வாய்ப்புண்டு ஆனால், ஒரு கொரோனா அனைத்தையும் மாற்றி விட்டது.

    “ரஜினி அவர்களின் சினிமா வரலாறு பற்றி ஆய்வு கட்டுரைகள் மற்றும் விமர்சன புத்தகங்கள் வெளிவந்தால் இன்றைய இளைய தலைமுறைக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் தரும்.”

    இது பற்றி ரஜினியும் பேசி இருக்கிறார். சுயசரிதை போல எழுத வேண்டும் என்றால் உண்மையை கூற வேண்டும்.

    உண்மையைக் கூறினால் பலர் மனது காயப்படும். இதை செய்யக் கூடிய தைரியம் எனக்கு வரும் போது எழுதுகிறேன் என்று கூறி உள்ளார்.

    @R.PremAnand அருமை 🙂

    @ஆதி ஜெயராமன் அவர் கடவுளின் குழந்தை.

    @செந்தில் 🙂

  14. @திருமூர்த்தி.R

    “தங்களால் முடியாததை இவர் இந்த வயதிலும் சாதிக்கிறார் அதிலும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தும் தனது பணியை செவ்வனே செய்கின்றார் என்ற பொறாமை பலருக்கு”

    சரியாக கூறினீர்கள்.

    “இந்த ரசிகர்களும் அந்த இறைவனும் இருக்கும் வரையில் ரஜினி என்ற உன்னத மனிதரை அசைக்க முடியாது.”

    மக்களின் ஆதரவும் சேர்த்து.

    @R.PremAnand

    “அவருக்கு அடுத்தவங்க உதவி செஞ்சா அவர் ரஜினியா இருக்கமாட்டார். வேற ஒரு நடிகராவோ மனிதராவோ இருந்திருப்பார்.”

    மிகச்சரி 🙂

    @ஹரிஷ்

    “ரஜினி ரசிகர்களுக்கு படம் பிடித்து இருக்கலாம். ரசிகர் அல்லாத ஆனால் பொது மக்களுக்கு இந்த படம் மொக்கை தான்.”

    ரசிகர்களால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெறாது. அது உண்மை என்றால், பாபா, குசேலன், லிங்கா வெற்றி பெற்று இருக்க வேண்டும்.

    மக்களின் ஆதரவு இருந்தாலே ஒரு படம் வெற்றி பெறும்.

    கட்டுரையில் கூறியபடி அனைவருக்கும் ஒரு படம் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

  15. (மக்களின் ஆதரவு இருந்தாலே ஒரு படம் வெற்றி பெறும். கட்டுரையில் கூறியபடி அனைவருக்கும் ஒரு படம் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.)
    ரசிகர்கள் அல்லாத பொது மக்களின் ஆதரவு இந்த படத்துக்கு இல்லை. அனைவரும் தியேட்டரில் படம் பார்த்தார்கள் தான். ஆனால் தியேட்டரில் படம் பார்த்தவர்கள் கருத்தையும் கேட்க வேண்டும். படம் பார்த்த பொது மக்கள் சொன்னது 99.9% படம் சூரமொக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here