மோடி என்ன செய்தார்? | 3

0
மோடி என்ன செய்தார்? | 3

11.The National Logistics Policy

பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்படும் செலவைக் குறைப்பதற்காகத் தேசியத் தளவாடக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% செலவு ஆகிறது ஆனால், இதே வளர்ந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% செலவு ஆகிறது.

2030 க்குள் தளவாடங்கள் கொண்டு செல்ல ஆகும் செலவை 50% இந்தியா குறைக்க வேண்டு என்பதே இதன் முக்கிய நோக்கம்.

பொருட்களின் விலை உயர்வுக்கு Logistics முக்கிய காரணமாக உள்ளது.

இவற்றோடு இந்தியா முழுவதும் மேம்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு, ரயில்வே துறையில் சரக்கு ரயில்களைக் கையாள தனி வழித்தடம் ஆகியவையும் சரக்குகளைக் கையாள்வதில் முக்கியப்பங்கை வகிக்கின்றன.

இவை சரக்குகளை விரைவாகக் கொண்டு செல்ல உதவுகிறது. இதுமட்டுமல்லாது சேமித்தல், பொருட்களைப் பாதுகாத்தலும் இதில் அடக்கமாகியுள்ளது.

12.PM Mudra Yojna

முத்ரா திட்டம் ஆகச்சிறந்த மக்கள் நலத்திட்டம்.

ஏழை மக்களின் ஆபத்பாந்தவன். கந்து வட்டி கொடுமையினால் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டு இருந்த மக்களுக்கு முத்ரா கடன் பேருதவி செய்து வருகிறது.

சிறு கடை, சாலையோரக் கடை வைத்து இருந்தவர்கள் வாங்கும் சிறு கடன்களுக்கு முத்ரா வங்கிக்கடன் உதவுகிறது. சரியாகக் கட்டினால், தொடர்ந்து கடன் கிடைக்கும்.

இதில் என்னவொரு சிறப்பு என்றால், பெரும்பாலான மக்கள் வங்கியை ஏமாற்றாமல் சரியாகக் கடனைத் திருப்பிச் செலுத்தி வருகிறார்கள்.

Read : முத்ரா கடன் திட்டம் பயன்கள் என்ன?

13.Triple Talaq

முத்தலாக் தடைச் சட்டம் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக்கொண்டு வந்துள்ளது.

இஸ்லாம் ஷரியா சட்டப்படி மூன்று முறை முத்தலாக் கூறி விவாகரத்து பெறலாம் ஆனால், அதற்கு மூன்று பெரிய இடைவெளி உள்ளது.

ஆனால், இவ்வழிமுறை மறைந்து ஒரே நேரத்தில் ‘தலாக் தலாக் தலாக்‘ என்று கூறி உடனடியாக விவாகரத்து செய்ததால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது.

இதனால், முத்தலாக் சட்டத்துக்குத் தடை விதித்து மோடி அறிவித்தார். இதற்குக் குறிப்பாக வடமாநில முஸ்லீம் பெண்களிடையே பெரியளவில் வரவேற்பு.

வடமாநிலங்களில் முஸ்லீம் பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் பாஜகவுக்கு வாக்களிக்கக் காரணம், முத்தலாக் தடைச் சட்டமும் ஒன்று.

இவற்றோடு, இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத, செய்ய முயலாத பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டையும் பாஜக அரசு நிறைவேற்றியள்ளது.

14.Article 370

பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும், மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு, எந்தக் கலவரமும், வன்முறையும் இல்லாமல் Article 370 சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதன் பிறகு ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி ஜெட் வேகத்தில் சென்று கொண்டுள்ளது. இதுவரை பிரிவினைப் பேச்சுகள், கல்லெறிதல் என்று இளையோரையும், பெரியோரையும் சீரழித்த நிலை மாறி வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது.

உட்கட்டமைப்பு மிகப்பெரிய அளவில் மாற்றம் பெற்று வருகிறது. தீவிரவாதம் கிட்டத்தட்ட முற்றுப்பெற்று விட்டது.

இதுவரை தீவிரவாதிகளால் வாழ்க்கையை, வியாபாரத்தை இழந்தவர்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்கள்.

பல இடங்களில் இங்குள்ள மக்களுக்கு இதுவரை கிடைக்காத, மின்சாரம், குடிநீர், பிரதம மந்திரி திட்டத்தில் வீடு, பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு, சுற்றுலா வழியாக வருமானம் ஆகியவற்றைப் பெற்றுள்ளனர்.

சுவிஸ் நாட்டுக்குப் பிறகு இந்திய ஜம்மு காஷ்மீரை சுற்றுலாக்கு பிரபலப்படுத்த மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.

15.UPI

இந்தியாவின் டிஜிட்டல் முகத்தை மாற்றியதில் பெரிய பங்கு UPI க்கு உள்ளது.

காய்கறிக் கடை வைத்துள்ளவர்கள் எப்படி டிஜிட்டல் இந்தியா பயன்படுத்துவார்கள்? இணையம் எங்கே உள்ளது? Swiping Machine எங்கே உள்ளது?‘ என்று பாராளுமன்றத்தில் சிதம்பரம் பேசினார்.

ஆனால், அனைத்துமே மாறி இன்று சாதாரணத் தெருவோரக்கடை வைத்துள்ளவர் கூட UPI பயன்படுத்துகிறார். இன்னும் ஒரு படி மேலே சென்று யாசகம் கூட UPI வழியாகப் பெற்று வருகிறார்கள்.

UPI தற்போது பல நாடுகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு சாதாரண நபரின் வாழ்க்கையை எளிமைப்படுத்திய முக்கிய மாற்றங்களில் UPI குறிப்பிடத்தக்கது.

Read : PhonePe Google Pay Paytm எது சிறந்தது?

16.Aayushman Yojana

ஏழைகளுக்கு, வருமானம் மிகக்குறைவாக உள்ளவர்களுக்கு, மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டமே ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு திட்டம்.

இத்திட்டம் மூலம் வருடத்துக்கு ₹5 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டை நேரடியாக, பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயனாளர்கள் பெற முடியும்.

ஏற்கனவே உடல் பிரச்சனையிருந்தாலும், இத்திட்டத்தில் இணைந்த பிறகு காப்பீடு பெறலாம். தனியார் காப்பீடு திட்டத்தில் இது முடியாது.

Read : ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு பெறுவது எப்படி?

17.Demonetisation

பணமதிப்பிழப்பு அறிமுகப்படுத்தட்ட போது பலத்த வரவேற்பைப் பெற்றது ஆனால், அதன் பிறகு கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது.

இதனால், பலர் பாதிக்கப்பட்டனர். பணமதிப்பிழப்பு செயல்படுத்தியதில் பல குளறுபடிகள் நடந்ததால், விமர்சனங்களுக்குள்ளானது.

இந்நடவடிக்கை மூலம், வரி ஏய்ப்புக்காக Shell company (போலி) நடத்தி வந்த நிறுவனங்கள் சிக்கின. கள்ளப்பணமாக இருந்தவை கணக்குக்கு வந்தன.

இதனால் நடந்த ஆகச்சிறந்த செயல்களில் ஒன்று, ஜம்மு காஷ்மீரில் நடந்த கல்லெறி சம்பவங்கள் டக்கென்று நின்றது.

பணமதிப்பிழப்பு நடக்க முக்கியக்காரணங்களில் ஒன்று, இந்திய பணத்தை பாகிஸ்தான் கள்ளப்பணமாக அச்சடித்ததாலே. ப.சிதம்பரம் இந்தியப் பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை விற்றதை, பாக் வேறு வழியாகப் பெற்று விட்டது.

இதை வெளிப்படையாகக் கூறினால், இந்தியப் பண மதிப்பு அதலபாதாளத்துக்குச் சென்று விடும் என்பதால், பணமதிப்பிழப்பு முடிவு எடுக்கப்பட்டது.

இதன் பிறகு பாக் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. எல்லையோர தீவிரவாத செயல்கள் கிட்டத்தட்ட நின்று விட்டன.

பணமதிப்பிழப்பு செயல்படுத்தியதில் குளறுபடிகள் இருந்தாலும், அதன் நோக்கம் சரியானது. அதனால் கிடைத்த பலன்கள் ஏராளம்.

Read : பாகிஸ்தான் | பணமதிப்பிழப்பு செய்த சம்பவம்

18.Start-up India

புதிய நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்குடன் Startup நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன.

இவ்வாறு அதிக நிறுவனங்களை உருவாக்குவது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதோடு, பலருக்கு வேலை வாய்ப்பையும் அளிக்கிறது.

மற்ற நாடுகளில் அதிகளவில் Startup நிறுவனங்கள் துவங்கிய போது மிகவும் பின்தங்கியிருந்த இந்தியா தற்போது முன்னணி நாடுகளுக்குச் சவாலைக் கொடுத்து வருகிறது.

தற்போது இந்தப்போட்டி இந்திய மாநிலங்களுக்கிடையே நடைபெறுவது ஆரோக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. எந்த மாநிலத்தில் அதிக Startup என்பது தான் தற்போதைய ட்ரெண்ட்.

19.SMART cities

சீர்மிகு நகரங்கள் என்ற பெயரில், நகரின் குறிப்பிட்ட பகுதியை நவீன முறையில் மாற்ற மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது.

இந்நிதியைக்கொண்டு அப்பகுதியில் புதிய வசதிகள், சாலை, கால்வாய் மேம்படுத்துதல், பூங்கா, விளையாட்டு மைதானம், வாகன நிறுத்தம் அமைப்பது ஆகியவை உள்ளடக்கியது.

சுருக்கமாக உட்கட்டமைப்பைச் சிறப்பாக மேம்படுத்துவது. மக்களுக்குத் தரமான சேவைகள், வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

வட மாநிலங்கள் இத்திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி, தங்கள் நகரின் வடிவமைப்பைச் சிறப்பாக மாற்றி வருகின்றன ஆனால், தமிழ்நாடு மிகப் பின்தங்கியுள்ளதோடு செயல்படுத்திய பகுதிகளும் தரமாக இல்லை.

20.Vishwakarma Scheme

கைவினை கலைஞர்கள் மற்றும் வழக்கொழிந்து வரும் பாரம்பரியத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும் விஸ்வகர்மா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமைப்பு சாரா தொழில் செய்பவர்களான இவர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா வரப்பிரசாதமானது.

கடனைச் சரியாகத் திரும்பச் செலுத்துவதன் மூலம் இரண்டாம் கட்ட கடன் இரண்டு இலட்சம் வழங்கப்படும். இதற்கு முந்தைய பரிவர்த்தனை மின்னணு பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்.

Read : விஸ்வகர்மா திட்டம் | விமர்சனங்கள் நியாயமா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here