Electoral Bond கேள்விகள் என்ன? [FAQ]

4
electoral bonds

Electoral Bonds விவரங்கள் வெளியிடப்பட்ட பிறகு பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம். Image Credit

Electoral Bond

2017 ம் ஆண்டு அப்போது நிதியமைச்சராக இருந்த, காலமான அருண் ஜெட்லி அவர்களால், அரசியல் கட்சிகளிடையே புழக்கத்தில் உள்ள கள்ளப்பணத்தை ஒழிக்கக் கொண்டு வரப்பட்டதே Electoral Bond.

Electoral Bond எதனால் கொண்டு வரப்பட்டது?

முன்பு பல நிறுவனங்கள் தனி நபர்கள் கட்சிக்காகக் கொடுக்கப்படும் பணம் கணக்கில் வராததாக இருந்தது. அதாவது ரொக்கமாகக் கொடுக்கப்பட்டது, வங்கி வழியாக அல்லாமல்.

எனவே, அவ்வாறு கொடுக்கப்படும் பணத்துக்குக் கணக்குகள் இல்லை. மிகக்குறைந்த அளவே கட்சிக்காரர்களால், (Digital Transfer) நிதி பெறப்படுகிறது.

Electoral Bond வழியாகக் கொடுக்கப்படும் போது கொடுப்பவரின் பெயர் இரகசியமாக இருப்பதால், பெரியளவு நிதியைக் கொடுக்க எளிதாக இருந்தது.

எனவே, அனைவரும் இவ்வழியாகக் கட்சிக்கு நிதியை வழங்கினர்.

அரசு வங்கியான SBI வங்கியிடம் மட்டுமே நிறுவனங்கள், தனி நபர்கள் Electoral Bond வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

எதனால் கட்சிகள் பணம் பெறுகின்றன?

கட்சிகள் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கும், செலவுகளுக்கும் நிதியைப் பெறுகின்றன. இதன் மூலம் கட்சி சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்துகின்றன.

எடுத்துக்காட்டு, கட்சி மாநாடு மற்றும் கட்சியின் இதர செலவுகள்.

இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் இவ்வாறு நிதி பெறுகின்றன. கட்சி நடத்துவது செலவு பிடிக்கும் ஒன்று.

உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் இதையே பின்பற்றுகின்றன.

எதனால் நிறுவனங்கள் வழங்குகின்றன?

தங்களுக்குப் பிடித்த கட்சிகளுக்கு நிதியைக் கொடுக்கின்றன. அதோடு தங்களுக்குச் சலுகைகள் கொடுக்கும் கட்சிகளுக்கு நிதி வழங்குகின்றன.

சலுகைகளுக்காகக் கொடுப்பது தவறானது என்றாலும், இதுவே உலகம் முழுக்க அரசியல் கட்சிகளிடையே நடைமுறையில் உள்ள வழக்கம்.

இதை எக்காலத்திலும் தடுக்க முடியாது.

இவற்றில் சில நிறுவனங்கள் விரும்பிக் கொடுக்கின்றன, சில மிரட்டப்பட்டுக் கொடுக்க வைக்கப்படுகின்றன.

உச்ச நீதிமன்றம் செய்தது சரியா?

உச்ச நீதிமன்றம் செய்தது சரியே!

காரணம், இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போதே அதில் நீதிமன்றமோ, ED யோ கேட்டால் விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றுள்ளது.

எனவே, அதைத்தான் உச்சநீதிமன்றம் செய்துள்ளது.

இதனால் என்ன நன்மை?

எந்த அரசியல் கட்சிகளுக்கு யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அரசியல் கட்சிகள் ஆதாயங்கள் பெற்றுள்ளனர் என்பது மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

என்ன தீமை?

இதுவரை நாம் கொடுப்பது யாருக்கும் தெரியாது என்ற நம்பிக்கையில் Electoral Bond மூலமாக நிதியை வழங்கினர்.

ஆனால், தற்போது இச்சிக்கல் ஏற்பட்டுள்ளதால், திரும்பக் கணக்கில் வராத ரொக்கமாகக் கொடுப்பார்கள்.

கணக்கில் வராத ரொக்கப்பணமாக மாறுவதால், திரும்பக் கள்ளப்பணம் புழக்கத்தில் வரும், இதன் மூலம் வெளிப்படைத்தன்மை குறையும்.

நிதி கொடுப்பது நிற்காது ஆனால், கணக்கில் வராமல், ரொக்கமாக மாறி விடும்.

முன்னர் Electoral Bond என்பதால், போலிக் கணக்கைக் காட்டினாலும், செலவு கணக்கைக் காட்டியே ஆக வேண்டும்.

தற்போது இரண்டுமே இருக்காது.

எடுத்துக்காட்டு

எளிமையாகக் கூறினால், உங்களுக்கு ஒருவரால் ₹1,00,000 ரொக்கமாகக் கொடுக்கப்பட்டால், அதை நீங்கள் ரொக்கமாகக் கொடுத்தே செலவு செய்யலாம்.

இதனால், யார் கொடுத்தார்கள் என்பதும், நீங்கள் எப்படிச் செலவு செய்தீர்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. இது கணக்கில் வராத கள்ளப்பணம்.

ஆனால், அதே ₹1,00,000 Digital Transfer செய்யப்பட்டால், நீங்கள் யாருக்கு கொடுத்தீர்கள், எப்படி செலவு செய்தீர்கள் என்று வருமான வரித்துறைக்குத் தெரியும் காரணம், இது கணக்கில் வரும் தொகை.

பாஜக அதிகமாக விமர்சிக்கப்படுகிறதே?

இந்தியாவில் பாஜக அரசே 17 மாநிலங்களில் ஆட்சி புரிந்து, ₹6,000 கோடிக்கு நிதி பெற்றுள்ளது. இதை 17 மாநிலங்களால் வகுத்தால், ஒரு மாநிலத்துக்குக் கிடைக்கும் தொகை ₹350 கோடி.

ஆனால், அதே ஒரு மாநிலத்திலேயே ₹650 கோடி திமுக பெற்றுள்ளது. அதில் ₹509 கோடி மார்ட்டின் லாட்டரியிடம் பெற்றுள்ளது.

ஒரு நிறுவனம் வழங்கிய அதிகபட்ச நிதி இதுவே ஆகும்.

பொய் செய்தி

தமிழக அரசிடம் விருது பெற்ற, மதக்கலவரங்கள் ஏற்பட காரணமாக இருக்கும் AltNews மற்றும் Fact Checker ஸுபைர் பாஜக ₹11,000 கோடி பெற்றதாக செய்தி வெளியிட்டார்.

உடனே இவை காட்டுத்தீயாக பரவியது. பின்னர் இந்த ட்வீட் நீக்கப்பட்டு, ₹6,000 கோடி என்று ட்வீட் செய்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தது போல, அவர் வெளியிட்ட செய்தியை வைத்துக் கலைஞர், சன் செய்தி நிறுவனங்கள் உட்பட பல செய்தி நிறுவனங்கள் தங்கள் செய்திகளில் வெளியிட்டன.

கர்நாடக முதலைமைச்சர் சித்தராமையாவும் பாஜக ₹11,000 கோடி வாங்கியதாக செய்தி வெளியிட்டுப் பின்னர் அவரும் டீவீட்டை நீக்கி விட்டார்.

இவர்கள் நீக்கி விட்டார்கள் ஆனால், இவர்கள் வெளியிட்ட பொய் செய்தி சமூகத்தளங்களில் சுற்றிக்கொண்டுள்ளது.

அவர்கள் பரப்ப நினைத்த பொய்யைப் பரப்பி நினைத்ததை சாதித்து விட்டார்கள்.

பாஜகக்கு இதனால் பாதிப்புக்குள்ளானதா?

இதனால், அதிகம் பாதிக்கப்பட்டது எதிர்க்கட்சிகளே! குறிப்பாக திமுக, மமதா கட்சியான திரிணாமுல் கட்சியே.

வந்தவுடன் அனைவருமே CTRL + F போட்டு அதானி, அம்பானி பெயரைத் தேடினார்கள் ஆனால், இல்லை. அப்படியென்றால், இவர்கள் கொடுக்கவில்லையா?

கொடுக்காமல் இருக்க வாய்ப்புக்குறைவு ஆனால், மசோதாவில் உள்ள * (நீதிமன்றம், ED கேட்டால் கொடுக்க வேண்டும்) காரணமாக, கொடுக்காமல் எச்சரிக்கையாகத் தவிர்த்து இருக்கலாம்.

எனவே, இந்நிறுவனங்கள் நிதியாக அல்லாமல் வேறு வகையில் உதவி இருக்கலாம். இதுவொரு கணிப்பு தான், உறுதியாகத் தெரியாது.

Electoral Bond விவரங்களைக் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகு பாஜக மாட்டிக்கொண்டது என்று பலரும் நினைத்தார்கள் ஆனால், இதுவொரு TRAP போல மாறி விட்டது.

அதானி அம்பானி

விவரங்கள் வெளியான பிறகு எதிர்க்கட்சிகள் அதிகம் பெற்றது தெரிய வந்துள்ளது. குறிப்பாக அதானி, அம்பானி பெயரில்லாதது பலருக்கு ஏமாற்றமாகி விட்டது.

இருந்தும், பலரும் பாஜகக்கு கொடுக்கப்பட்ட சில நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு Trend செய்து வந்தனர்.

ஆனால், மார்ட்டின் லாட்டரி நிறுவனத்திடமிருந்து திமுக ₹509 கோடி பெற்ற செய்தி வெளியான பிறகு, Electoral Bond பரபரப்பு Trend அப்படியே அமுங்கி விட்டது.

அதோடு அனைவரும் எதிர்பார்த்த அதானி, அம்பானி பெயர் இல்லாதது எதிர்க்கட்சியினருக்கு ஏமாற்றமாகி விட்டது.

அதிலும் குறிப்பாக, அம்பானிக்காவது வேறு நிறுவனம் பெயரில் கொடுக்கப்பட்டதாக ஒரு நிறுவனத்தின் பெயர் கூறப்பட்டது, அதானிக்கு அதுவுமில்லை.

எனவே, அனைவரும் வேறு செய்திக்குத் தாவி விட்டார்கள். பெயருக்கு இதைப் பற்றிப் பேசப்படுகிறது.

நல்ல முயற்சியே!

இந்த மசோதாவை அருண் ஜெட்லி கொண்டு வந்தது, கணக்கில் வராத பணத்தை கணக்குக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே! காரணம், அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதியை எக்காலத்திலும் தடுக்க முடியாது.

அதிலும் அரசு வங்கியான SBI யை மட்டுமே கொடுத்து, வங்கிக்கும் ஒரு வருமானத்தை, பணப்பரிமாற்ற விகிதத்தை மறைமுகமாக அதிகரித்தது.

ஏதாவது ஒரு வகையில் அரசியல் கட்சிகள் நிதியைப் பெற்றுக்கொண்டு தான் இருப்பார்கள். இல்லையென்றால், அவர்களால் கட்சியை நடத்த முடியாது.

எனவே, அதைக் கணக்கில் கொண்டு வந்து முறைப்படுத்தலாம் என்பதாலே Electoral Bond கொண்டு வரப்பட்டது.

இதனால், அரசியல் கட்சிகளின் செலவுகளுக்கு கணக்கு இருந்தது.

மீண்டும் கள்ளப்பணம்

தற்போது மீண்டும் கள்ளப்பணம் நோக்கியே இவற்றைக் கொண்டு செல்லும் என்பது கவலைக்குரியது.

யார் யாருக்கு கொடுத்தார்கள் என்று மக்களுக்கு தெரிந்து விட்டது. இதனால் என்ன மாற்றம் வந்து விட்டது? வந்து விடப்போகிறது?! அரசியல் கட்சிகள் வாங்காமல் இருக்கப்போகிறார்களா? இல்லையே!

எதிர்காலத்தில் ₹500 நோட்டைத் தடை செய்தால், கள்ளப்பணம் உருவாவதைப் பெருமளவு தடுக்க முடியும். அதிக மதிப்புடைய நோட்டுகளே கணக்கில் வராத கள்ளப்பணத்தை ஊக்குவிக்கின்றன.

இனி என்ன தான் உச்சநீதிமன்றம் கூறியபடி மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், எதிர்காலத்தில் இது போன்று பிரச்சனைகள் வரும் என்று பலரும் கள்ளப்பணமே கொடுப்பார்கள்.

காரணம், Electoral Bond அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி.. இந்த பதிவை படித்த பிறகு என்னுடைய சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தது.. என்னை பொறுத்தவரை அரசியல் கட்சிகளுக்கு தனி நபர்கள் நிதி வழங்குவதே தவறு.. (எடுத்துக்காட்டு, கட்சி மாநாடு மற்றும் கட்சியின் இதர செலவுகள்.) இவர்கள் மாநாடு நடத்துவதற்கும், கட்சியின் செலவிற்கும் தனிநபர்கள் / நிறுவனங்கள் அழ வேண்டுமா???

    கட்சி உறுப்பினர்களிடம் மட்டும் மாத சந்தாவை வசூல் செய்து கட்சியை நடத்துங்கள்..இவர்கள் அனைவரும் கட்சியை ஒரு கார்பொரேட் நிறுவனத்திற்கு இணையாக நடத்தும் போது நிச்சயம் பெரிய அளவில் முதலீடு தேவைப்படும்..

    சலுகைகளுக்காகக் கொடுப்பது தவறானது என்றாலும், இதுவே உலகம் முழுக்க அரசியல் கட்சிகளிடையே நடைமுறையில் உள்ள வழக்கம். – அடிப்படையே தவறாக உள்ளது.

    இவற்றில் சில நிறுவனங்கள் விரும்பிக் கொடுக்கின்றன, சில மிரட்டப்பட்டுக் கொடுக்க வைக்கப்படுகின்றன. – ஒருத்தரும் விரும்பி கொடுக்க மாட்டார்கள்.. ஒன்று சொந்த ஆதாயம்.. இல்லையென்றால் மிரட்டல்..

  2. @யாசின்

    நீங்கள் பேசுவது எதிர்பார்ப்பு, நான் பேசுவது எதார்த்தம். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

    இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் ஆனால், நிதர்சனம் வேறாக இருக்கும் போது அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

    “ஒருத்தரும் விரும்பி கொடுக்க மாட்டார்கள்.. ஒன்று சொந்த ஆதாயம்.. இல்லையென்றால் மிரட்டல்.”

    நீங்கள் கூறுவது பெரும்பான்மைக்கு சரி தான் ஆனால், அனைவருக்கும் பொருந்தாது.

    சில அவர்களது வியாபாரம் தங்கு தடையின்றி நடப்பதற்கு அரசு காரணமாக உள்ளது என்று விருப்பப்பட்டு கொடுக்கலாம்.

    சிலர் அவர்கள் விரும்பும் கட்சியின் வளர்ச்சிக்காக கொடுக்கலாம்.

    நீங்கள் கூறுவது போல ஆதாயம், தவிர்க்க முடியாதது, மிரட்டல் போன்ற காரணங்களாலும் கொடுக்கலாம்.

  3. @பிரவீன்

    “congress senja corruption, scam bjp senja donation ellarum seirathuthan”

    நீங்க இதை சொன்னதும் எனக்கு உடனே ஒன்று நினைவுக்கு வருகிறது.

    Times Of India ல ஷபீரன்னு ஒரு பத்திரிகையாளர் இருந்தார், திமுக ஆதரவாளர், பாஜக எதிர்ப்பாளர். இதை அவரது ட்விட்டர் கணக்கில் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

    ஒருமுறை அறிவாலயம் செய்தி சேகரிக்க சென்று இவர் எதோ நியாயம் பேச, வாயை உடைத்து அனுப்பி விட்டார்கள். அப்படம் இன்றும் இணையத்தில் சுற்றிக்கொண்டுள்ளது.

    தற்போது News Minute என்ற இடது சாரி செய்தி நிறுவனத்தில் இணைந்து விட்டார்.

    வழக்கம் போல திமுக என்றால் அமைதியாகவும், பாஜக என்றால் பொங்கியும் ட்வீட் போடுவார்.

    Electoral Bond வெளியான பிறகு பாஜக மாட்டிக்கொண்டது என்று டிவீட்டா போட்டுத்தள்ளினார்.

    Hash Tag என்ன தெரியுமா? #ElectoralbondScam

    இரு நாட்களுக்குப் பிறகு திமுக லாட்டரி மார்டினிடம் ₹509 கோடி வாங்கியதாக செய்தி வெளியானது.

    அதற்கு என்ன Hash tag தெரியுமா? #ElectoralbondDonation

    இதன் பிறகு Electoral Bond பற்றிய செய்திகளே அதிகம் அவர் பக்கத்தில் பகிரப்படுவதில்லை.

    நீங்கள் கூறியதும் இது நினைவுக்கு வந்தது 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here