தமிழகத்தில் ஊடகங்கள் தொடர்ந்து ஒரு தலைப்பட்சமாகவே செயல்பட்டு வருகின்றன. Image Credit
தமிழக ஊடகங்கள்
தமிழக ஊடகங்களை ஏற்கனவே பலமுறை திட்டிச் சலித்து விட்டது. எவ்வளவு முறைதான் ஒன்றையே கூறிக்கொண்டு இருப்பது.
ஆனால், இவர்கள் செய்வதைப்பார்க்கையில் திட்டாமலும் இருக்க முடியலை.
ஊடகங்களும் தோனி படத்தில் வெட்கத்தை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக பிரகாஷ்ராஜ் மாறுவது போல, வெட்கமே இல்லாமல் செய்திகளை வழங்குகிறார்கள்.
பொது ஊடகங்கள் கூடச் சன் செய்தி, கலைஞர் செய்தி போலச் செய்தி வெளியிடுகிறார்கள். அதிலும் புதிய தலைமுறை, முரசொலி போலச் செயல்படுகிறது.
திமுக என்றால் அமைதி
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலையை கேப்டன் போலக் கோபப்படுத்தி அவரை ஒழிக்க வேண்டும் என்று முயற்சிக்கும் போதெல்லாம் அசிங்கப்பட்டே நிற்கிறார்கள்.
அண்ணாமலையும் இவர்களைப் பொளந்து கட்டுகிறார்.
அண்ணாமலையிடம் கேட்கும் கேள்வி போல ஸ்டாலின், உதயநிதியிடம் கேட்க முடியுமா? குறைந்த பட்சம் அமைச்சர்கள், MLA க்களிடம் கேட்க முடியுமா?
உடனே செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கிளம்பி விடுவார்கள் அல்லது அநாகரீகமாகப் பேசுவார்கள். இவர்களும் துடைத்துவிட்டுச் சென்று விடுவார்கள்.
அண்ணாமலையிடம் கேட்கும் கேள்வியின் வீச்சில் 5% கூட திமுக தலைவர்களால் எதிர்கொள்ள முடியாது.
உதயநிதியிடம் கேட்டால், ‘நாங்கள் பார்க்கிறோம், நடவடிக்கை எடுக்கிறோம், கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்‘ என்ற TEMPLATE பதில்களையே கூறுவார்.
இதை எவரும் கூறலாமே!
இடது சாரி ஊடகங்கள்
தமிழக ஊடகங்கள் முழுக்க இடது சாரி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
வலது சாரி சம்பந்தப்பட்ட செய்தி என்றால் போட்டி போட்டுக் கூறுவதும், இடது சாரி பிரச்சனைகள் என்றால், ஒன்றுமே நடக்காதது போல உள்ளார்கள்.
இவர்களுக்கு கிடைத்த இளிச்சவாய மாநிலம் உத்தரப்பிரதேசம். சொல்வதற்கு ஏராளமான செய்திகள் தமிழகத்திலேயே உள்ளது ஆனால், இங்கே சென்று விடுவார்கள்.
அதிலும் இந்துக்கள் பற்றிய செய்தி என்றால், ஒன்றைக் கூடத் தவறவிட மாட்டார்கள்.
சில வாரங்களுக்கு முன் இரு முஸ்லிம்கள், பக்கத்துக்கு வீட்டு இந்து சிறார்கள் இருவரை வெட்டிக் கொலை செய்து விட்டார்கள், அதில் ஒருத்தன் சிறுவனின் கழுத்தை அறுத்து ரத்தத்தையே குடித்துள்ளான்.
இவனை என்கவுன்ட்டர் செய்து விட்டார்கள், இன்னொருவனை உத்தரப்பிரதேசக் காவல்துறை கைது செய்து விட்டது.
இந்தியா முழுக்க இந்தச் செய்தி பலரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது ஆனால், தமிழக ஊடகங்களில் தமிழ் இந்து மட்டும் வெளியிட்டது.
மற்ற ஒரு ஊடகம் கூட இது பற்றிச் செய்தி வெளியிடவில்லை. எவ்வளவு பெரிய செய்தி ஆனால், அப்படியே தமிழகத்தில் மறைத்து விட்டார்கள்.
ஒரு சார்புச் செய்திகள்
இது போன்ற ஏராளமான செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு ஒரு சார்புச் செய்திகள் மட்டுமே தமிழக மக்களிடையே சென்றடைகிறது.
இதே சம்பவத்தை இந்துக்கள் செய்து இருந்தால், தமிழக ஊடகங்களில் இதுவே முதன்மை செய்தியாக இருக்கும். இப்படித்தான் தமிழக ஊடகங்களில் தொடர்ந்து கருத்து திணிப்பு நடைபெறுகிறது.
யார் தவறு செய்தால் என்ன? தவறு தானே!
எந்த மதத்தினர், சாதியினர் தவறு செய்தாலும் செய்தியைச் செய்தியாகக் கொடுப்பது தானே ஊடகத்தின் பணி. எப்படி இது போல பாகுபாடு காட்ட முடிகிறது?!
வெட்கமே இல்லை
அண்ணாமலை அவமதித்து விட்டார் என்று வழக்கம் போலச் செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணிக்கப்போகிறோம் என்று கிளம்பினார்கள்.
அண்ணாமலையோ மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன், முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.
அண்ணாமலைக்கு பொங்கிய ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர் சங்கம் ஒன்று கூட, திமுகவினரால் கொலை வெறி தாக்குதலுக்கான திருப்பூர் நிருபருக்கு ஆதரவாக ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை.
நிருபர் உயிருக்குப் பயந்து தொலைபேசியில் அலறியதைக் கேட்டு அனைவருமே அதிர்ச்சியானார்கள் ஆனால், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியவர்களோ பேரமைதி.
அண்ணாமலைக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தெரிந்தவர்களுக்கு தங்களில் ஒருவருக்கு பாதிப்பு என்று தெரிந்தும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தோன்றவில்லையே!
இது மட்டுமல்ல, திமுக தலைவர்கள், அமைச்சர்கள் மரியாதைக்குறைவாக பேசுகிறார்கள் ஆனால், சொரணையே இல்லாமல் அமைதியாக உள்ளார்கள்.
ஒரு வேண்டுகோள்
கேவலமான தமிழக ஊடகங்களை, ஊடகவியலாளர்களை அண்ணாமலையைப் போலப் பொளப்பது தமிழகத்திலேயே எவரும் இல்லை.
செய்தியாளர்களை எதிர்க் கேள்வி கேட்டு அண்ணாமலை நாறடிப்பதை எதிர்பார்த்து பலர் காத்திருக்கிறார்கள். எனவே, இவர்களைக் கதற விட வேண்டும்.
அண்ணாமலை ஊடகவியலாளர்களைக் கண்டம் செய்வதைப்பார்க்கப் பெரிய ரசிகர் படையே உள்ளது. இவர்களை வெளுப்பதை கொண்டாடுகிறார்கள்.
எனவே, எந்தப் பரிதாபமும், கருணையும், மரியாதையும் பார்க்காமல் இவர்களை நாறடிக்க வேண்டும். இவ்வாறு செய்வது கொஞ்சம் நிம்மதியாக உள்ளது.
நம்ம கோபத்தை இவர் ஒருவராவது தைரியமாக கேட்கிறாரே என்ற ஆறுதல்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.