எண்ணம் போல் வாழ்க்கை என்றால் என்ன?

4
எண்ணம் போல் வாழ்க்கை

முன்னோர்களுடைய அனுபவங்களில் வந்த சிறந்த பொன் மொழிகளில் ஒன்று எண்ணம் போல் வாழ்க்கை. Image Credit

எண்ணம் போல் வாழ்க்கை என்றால் என்ன?

நம் எண்ண அலைகளுக்குப் பலம் உண்டு.

எதைப் பற்றி அதிகம் நினைக்கிறோமோ அது தொடர்பான நிகழ்வுகளை, மனிதர்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும்.

நம் எண்ண அலைகளுக்கு ஏற்பச் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டு இருப்பதே எண்ணம் போல வாழ்க்கை என அழைக்கப்படுகிறது.

எதிர்மறை எண்ணங்கள்

 • எல்லாமே தவறாக நடக்கிறது, பிரச்சனை மேல பிரச்சனை‘ என்று சிலர் தொடர்ச்சியாகப் புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
 • இயல்பாக நடக்கும் சம்பவங்களைத் தங்கள் பிரச்சனையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள்.
 • இவர்களால் என்றுமே நிம்மதியாக இருக்க முடியாது. இருக்க முடியாது என்று கூறுவதை விட நிம்மதியாக இருக்கவே முனைய மாட்டார்கள்.
 • தங்களுக்குப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருப்பதாகத் தேவையற்ற கற்பனை செய்து கொள்வார்கள்.
 • எண்ணங்கள் தவறாக இருந்தால் செயல்களும், சம்பவங்களும் தவறாகவே நடக்கும்.

நேர்மறை எண்ணங்கள்

 • நேர்மறை எண்ணங்களைக் கொண்டவர்கள் எதையுமே பிரச்சனையாகக் கருத மாட்டார்கள். நடக்கும் சம்பவங்களைக் கடந்து சென்று விடுவார்கள்.
 • அடுத்தவர் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.
 • எந்தப்பிரச்சனை நடந்தாலும், எளிதாக எடுத்துக்கொள்வார்கள். யாரையும் வன்மமாக நினைக்க மாட்டார்கள்.
 • எந்த நிகழ்வுக்கும் பதட்டமாக மாட்டார்கள். ஒருவேளை கோபம், பதட்டம் இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு அடுத்ததுக்கு உடனே நகர்ந்து விடுவார்கள்.
 • வரும் பிரச்சனைகள் தானாகவே பனி போல விலகி விடும்.

எண்ண அலைகள்

மேற்கூறிய இரண்டுமே தனிப்பட்ட நபரின் குணங்கள். ஆனால், எண்ணங்கள் வேறு.

எண்ண அலைகளுக்கு எப்போதுமே பலம் அதிகம். நம் எண்ண அலைகள் எதிரில் உள்ளவரின் மனநிலையை மாற்றும் திறன் கொண்டது.

எதிர்மறையான சிந்தனைகள் கொண்டு இருந்தால் தவறாகவும், நேர்மறை சிந்தனைகள் கொண்டு இருந்தால், சரியாகவும் நடக்கும்.

தவறாகவே யோசித்துக்கொண்டு இருந்தால், கெட்டதே நடக்கும். நல்லதையே நினைத்தால், நல்லதே நடக்கும்.

இதையே ‘என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்‘ என்கிறார் புத்தர்.

நல்லதையே எப்போதும் நினைத்தால், பிரச்சனை செய்ய நினைப்பவர்களின் மனது கூட நம்மிடம் வரும் போது மாறி விடும்.

மேற்கூறியது 100% உண்மை. நேர்மறையான எண்ணங்களை, பதட்டம், கோபம் இல்லாத நிலையைத் தொடர ஆரம்பித்தது முதல் எனக்கு நல்லதே நடக்கிறது.

யாரையுமே எதிரியாக நினைக்கத் தோன்றுவதில்லை. அனைவரும் நட்பாக, அன்பாகப் பழகுகிறார்கள், குறைந்தபட்சம் பிரச்சனை செய்வதில்லை.

எனவே, நல்ல எண்ண அலைகளின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்கிறேன், நம்புகிறேன். முன்னோர்கள் கூறியது முற்றிலும் சரி.

இதுவும் கடந்து போகும்‘ என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை ‘எண்ணம் போல் வாழ்க்கை’.

எனவே, நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள், நல்லதையே பெறுங்கள் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!

மன அழுத்தம் எப்படி இருக்கும்?!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. கிரி, தற்போது என்னுடைய வாழ்க்கையில் நடக்க கூடியவைகளை நினைக்கும் போது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.. காரணம் நான் மிகவும் பக்குவப்பட்டவனாக அடுத்தவர்களின் பார்வையில் தெரிவேன்.. காரணம் மிகவும் நிதானமாக, அமைதியாக, கலகலவென இருப்பேன்.. முடிவுகளும் அப்படித்தான் இருக்கும்.. ஆனால் சில சறுக்கல்கள் ஏற்பட்ட பின் என்னுள் தடுமாற்றம் தெரிகிறது.. மனதிற்கு இது தவறு, என்று தெரிந்தும் அதிலிருந்து மீள கொஞ்சம் கடினமாக இருக்கிறது.. குறிப்பாக யாரிடம் இதை பற்றி பேசவும் பிடிக்காது .. சக்தியை தவிர.. அதிக நேரம் மனது ஒரு அமைதியை தேடுகிறது.. காற்றின் ஓசையும், அலையின் சத்தமும், பறவையின் ஒலிகளை மட்டும் கேட்க விரும்புகிறது.. உங்கள் பதிவை படிக்கும் போது ஒரு வித உற்சாகமாக இருக்கிறது.. நன்றி கிரி.

 2. @யாசின் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தானாகவே பக்குவம் வந்து விடும். பதட்டமாகாமல் இருந்தாலே பாதி பிரச்சனை இருக்காது.

  @கோபி மின்னஞ்சல் அனுப்புங்கள் contact @ giriblog.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here