21.DigiLocker
DigiLocker சேவை இந்திய மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தியதில் மிகமுக்கியப்பங்காற்றுகிறது.
இன்னும் பலருக்கு இதன் சேவை பற்றிய அறிமுகம் இல்லை அல்லது எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பயனடைகிறார்கள்.
இதில் நமது மின்னணு சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, PAN, பள்ளி சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், RC, காப்பீடு, தேசியச் சுகாதார எண், ஆதார் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம்.
இவையனைத்தும் அசல் அடையாள அட்டைகளுக்கு ஈடானது. அதிகாரிகள் கேட்கும் போது இதைக்காண்பித்தால், அசல் அட்டையைக் காண்பிப்பதற்கு ஈடானது.
மத்திய அரசு IT ACT, 2000 படி DigiLocker ல் Issued Documents என்ற பிரிவில் உள்ளவை அனைத்தும் அசல் ஐடிக்கு இணையான அதிகாரத்தைப் பெறுகிறது.
Read : DigiLocker | அரசு சேவைகள் உங்கள் கைகளில்
22.Parliament expense
புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு பலரும் எதிர்ப்புத்தெரிவித்தார்கள். அதில் ஒரு காரணம், வாடகைப் பணம் பறிபோகும் என்பதும்.
அதாவது, MP க்கள் பலரின் வீடுகள், காங் உட்படப் பல அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளாக இருந்தது. இதற்கு அரசு கோடிக்கணக்கில் மாதம் வாடகை செலவழித்துக்கொண்டு இருந்தது.
தற்போது புதிய பாராளுமன்றத்தில் MP க்கள் மற்ற அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் வீடுகள், அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் வாடகைப் பணம் கொடுக்கப்பட்டு இருந்த நிலை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
23.National Highway
தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவின் சாலை முகத்தையே மாற்றிக்கொண்டுள்ளார்.
இந்தியா முழுக்க புதிய பசுமை நெடுஞ்சாலைகளை உருவாக்கி வருகிறார். ஏராளமான பாலங்கள், பசுமைச் சாலைகள், விரைவுச் சாலைகள் குறைந்த காலத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.
புதிய அறிவிப்பாகக் கனரக வாகனங்களை ஓட்டுபவர்கள் ஓய்வு எடுப்பதற்காக நெடுஞ்சாலைகளில் ஓய்வு இடம் அமைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அமெரிக்கா பணக்கார நாடாக இருப்பதால், இந்நாட்டுச் சாலைகள் சிறப்பாக இருக்கவில்லை. அமெரிக்கச் சாலைகள் சிறப்பாக இருப்பதால் தான், அமெரிக்கா பணக்கார நாடாக இருக்கிறது‘ என்று கூறி இருந்தார்.
வட மாநிலங்கள் நெடுஞ்சாலைகளை அதிகம் பெற்று வருகின்றன குறிப்பாகத் துறைமுக வாய்ப்பு இல்லாத உத்தரப்பிரதேசம், ஒரே வாய்ப்பான நெடுஞ்சாலை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
நிதின் கட்கரி போன்ற வேகமாக செயலாற்றும் அமைச்சரை வைத்துக்கொண்டு, பல்வேறு மாநில அரசியல் காரணமாக, தமிழகம் வாய்ப்புகளை இழந்து வருகிறது.
Read : நிதின் கட்கரி என்ற சம்பவக்காரன்
24.PM Housing Scheme
விதிமுறைகளுக்கு, வருமானத்துக்கு உட்பட்ட நபர்களுக்குப் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது.
இதுவரை வீடு இல்லாதவர்களுக்கு, சொந்த வீடு என்பது கனவாகவே உள்ள, வருமானம் குறைவாக உள்ள மக்களுக்கு இத்திட்டம் உதவியாக உள்ளது.
இத்திட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளார்கள்.
https://pmaymis.gov.in தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
25.Enforcement Directorate
பல்வேறு வகையில் அரசை ஏமாற்றி சொத்தைச் சேர்ப்பவர்களிடமிருந்து பணத்தை திரும்பப்பெற உருவாக்கப்பட்டதே அமலாக்கத்துறை.
பணமோசடி, அந்நியச் செலாவணி மோசடி போன்றவற்றைக் கண்டறிய உதவுகிறது.
அரசியல் காரணங்களுக்காக இத்துறை பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், இத்துறை மூலம் காங் காலத்தை விடக் கிட்டத்தட்ட 30 மடங்கு கள்ளப்பணம் அதிகமாக பாஜக மத்திய அரசின் 2014 – 2024 காலத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் மனதில் ED பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. ஒரு நபரை ED பிடிக்கிறார்கள் என்றால், முழுமையான ஆதாரங்களைத் திரட்டிய பிறகே நடவடிக்கை எடுப்பார்கள்.
26.Citizenship Amendment Act
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து கொண்டு வர முயன்ற CAA சட்டத்தைப் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
2019 ல் சட்டத்தைக் கொண்டு வந்த போது எதிர்க்கட்சிகள், NGO மற்றும் இடது சாரி கட்சிகள் இத்திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள், வன்முறையை நடத்தி தடுத்து விட்டன.
இதன் பிறகு யாரெல்லாம், எந்த வகையில் திடீரென்று புகுந்தார்கள், எந்த அமைப்புகள் இவர்களை இயங்கின என்பதைக் கண்டறிந்த அமித்ஷா அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.
குறிப்பாக NGO என்ற பெயரில் அந்நிய சக்திகளுக்காக இயங்கி, மக்களைத் தூண்டி போராட்டத்தை நடந்த உதவிய NGO க்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டு CAA செயல்படுத்தப்பட்டது.
இந்திய முஸ்லிம்களுக்கு CAA சட்டத்தால், எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும், அரசியலுக்காகப் பொய் பரப்புரை செய்யப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்பு, எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், CAA அவசியம். தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதை பாஜக நிறைவேற்றியுள்ளது.
Read : CAA சந்தேகங்கள் என்ன? [FAQ]
27.Media trip
தமிழக ஊடகங்களுக்கு திமுக அரசு எப்படி சலுகைகள், வசதிகள் செய்து தருகிறதோ அதே போல UPA ஆட்சியில் ஊடகங்கள் கவனிக்கப்பட்டன.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவர் வெளிநாடு செல்லும் போதெல்லாம், பெரிய ஊடகவியலாளர்கள் கூட்டம் உடன் செல்லும்.
செய்தி சேகரிப்பதற்காக செல்லும் இவர்களுக்கான செலவுகள், இவர்கள் செலவு செய்யத் தொகை அனைத்துமே மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.
மோடி பதவிக்கு வந்த பிறகு இவை அனைத்தையும் தடை செய்து விட்டார். இதுவும் இடது சாரி ஊடகவியலாளர்கள் மோடி மீது பாய்வதற்குக் காரணங்களில் ஒன்று.
இத்தடை மூலம் இந்திய மக்களின் வரிப்பணம் பல நூறு கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும் வழக்கங்களுக்கெல்லாம், மோடி தொடர்ந்து தடை விதித்து வருகிறார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகிறார்கள்.
28.Indian Army
இந்திய இராணுவத்தின் மதிப்பு உலகளவில் பல மடங்கு அதிகரித்துள்ளது. எல்லைப்பகுதியில் அதிகாரம் இல்லாமல் அவமானப்பட்டுக்கொண்டு இருந்த இந்திய இராணுவம் தற்போது பலமாக மாறியுள்ளது.
எல்லைப்பகுதி இராணுவத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படை தற்போது அரபிக்கடல் பகுதியில் சோமாலியக் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வெளிநாட்டுக் கப்பல்களை மீட்டு, மாலுமிகளைக் காப்பாற்றி வருகிறார்கள். இதில் பாகிஸ்தான் மாலுமிகளும் அடங்குவர்.
இதற்கு பாதிக்கப்பட்ட நாடுகள் நன்றி தெரிவித்து வருகின்றன.
இராணுவ வீரர்களின் பாதுகாப்பு உடை, தரமற்றதாக இருந்ததை மாற்றி, தற்போது தரமான உடையாகவும், ஆயுதங்கள் நவீனமாகவும் வழங்கப்பட்டுள்ளன.
29.Corporate Social Responsibility
CSR எனப்படும் Corporate Social Responsibility திட்டம் காங் அரசின் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட திட்டமாகும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் மூன்று நிதி ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2% மக்களுக்குப் பங்களிக்க வேண்டும்.
இதன் மூலம் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்குவது, அறை கட்டிக்கொடுப்பது, பொதுவெளியில் பூங்காக்கள் அமைப்பது, கழிவறை கட்டிக்கொடுப்பது உட்பட பல்வேறு சேவைகளைச் செய்யலாம்.
காங் அரசு கொண்டு வந்த திட்டங்களில் இதுவொரு சிறந்த திட்டமாகும், அதைப் பாஜக அரசு மேம்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இதைச் செய்ய உள்ளூர் அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு தேவை. எனவே, உள்ளூர் அரசியல்வாதிகள் தாங்கள் செய்தது போலக் காண்பித்துக்கொள்வார்கள்.
செலவு செய்வது கார்ப்பரேட் நிறுவனங்கள், பெயர் வாங்குவது அரசியல்வாதிகள்.
30.FasTag
சுங்கச்சாவடிகளில் நடைபெறும் ஊழலைத் தடுப்பதற்காகவும், மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவும், வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டதே FasTag.
இதன் மூலம் போலி கணக்கு காண்பித்து அல்லது கணக்கே காட்டாமல் பல நூறு கோடிகளைத் திருடுவது தடுக்கப்பட்டுள்ளது.
மின்னணு பரிவர்த்தனை என்பதால், மக்களுக்கும் எளிதாக உள்ளது.
தற்போது FasTag வசதியை நீக்கி, GPS / கேமரா மூலமாக வாகனங்கள் பயணம் செய்த தூரத்தைக் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் புதிய முறையைச் செயல்படுத்தப்போவதாக நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.