24 (SEASON 1 2001) | ஒரே நாள் சம்பவங்கள்

2
24

ரு நாளில் நடக்கும் சம்பவங்களை ஒரு சீசனாகவே 24 ல் கொடுத்துள்ளார்கள்.

24

அதிபர் தேர்தலில் போட்டியிடும் டேவிட் பால்மர் உயிருக்கு அச்சுறுத்தல். இதற்காகப் பாதுகாப்புப் படையின் அதிகாரி ஜேக் பணியில் ஈடுபடும் வேளையில் அவரது மகள் காணாமல் போய் விடுகிறார். Image Credit

உச்சக்கட்டப் பரபரப்பாக கொலைகளும் நடந்து விடுகின்றன. அதிபர் வேட்பாளரைக் கொல்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நெருங்கி விடுகிறார்கள்.

இந்நிலையில், டேவிட் காப்பாற்றப்பட்டாரா? என்ன ஆனது என்பதே 24.

24 எபிசோடுகள்

தலைப்பைப் பார்த்ததுமே எச்சரிக்கையாகி இருக்க வேண்டும்.

முதல் சீசனில் 24 எபிசோடுகள், அதாவது ஒரு மணி நேரத்துக்கு (Live) ஒரு எபிசோடு. 24 மணி நேரங்களுக்கு 24 எபிசோடு.

வழக்கமாக 8 எபிசோடுகள் ஒரு சீசனுக்கு இருக்கும். 8 முடிந்து, 9 வந்தது, 10, 11 ம் தாண்டியது சரி 12 வரை போல என்று நினைத்தால் 24 எபிசோடுகள்.

8 வது எபிசோடிலேயே முதல் சீசன் முடிவது போல இருக்கும் ஆனால், எதுக்குடா நீட்டிக்கிறார்கள் என்று யோசித்தால், 24 ல் கொண்டு வந்து நிறுத்தினார்கள் 🙂 .

கிறுகிறுத்து விட்டது. 3 சீசன் எபிசோடுகள் ஒரே சீசனில்.

ஒரு நாள்

ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும், பார்க்கும் நமக்கு பல நாட்களாக நடப்பது போலவே உணர்வு. ஒவ்வொரு குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒரு முறை தற்போதைய நேரத்தைக் காண்பிக்கிறார்கள்.

இருப்பினும் ஒரு நாளில் நடப்பது போலவே தோன்றவில்லை. காரணம், ஒவ்வொரு பக்க கதாபாத்திரத்தின் பக்கத்தையும் விரிவாகக் காட்டுவதால்.

ஆனால், அனைத்து எபிசோடுகளும் பரபரப்பாகவே செல்கின்றன.

பாதுகாப்புத்துறையில் யார் கருப்பாடு என்று தெரிந்து கொள்ள முடியாமல், ஜேக் திணறுவதும் விறுவிறுப்பாக உள்ளது.

இது போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் பலவற்றைப் பார்த்ததால், அடுத்தது என்ன நடக்கும்? என்ன பேசுவார்கள்? என்பது எளிதாக ஊகிக்க முடிந்தது.

2001 ம் ஆண்டு வெளியானதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அப்பவே இதில் வந்த தொழில்நுட்பங்கள், CCTV ஆகியவை பிரமிக்க வைக்கிறது. இந்தியா எவ்வளவு பின்தங்கி இருந்துள்ளது என்று புரிகிறது.

டேவிட்

இவருக்குப் பெரிய ரசிகனாக மாறி விட்டேன் 🙂 . செம கதாபாத்திரம்.

இவர் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக மாறுவார். இதற்கிடையே இவரது குடும்பத்திலேயே பல்வேறு சட்ட பிரச்சனைகள்.

ஆனால், இவரின் நேர்மை குறிப்பாக மனசாட்சிக்கு நேர்மையாக நடக்கும் எண்ணம் ரொம்ப அற்புதமாக உள்ளது. உண்மையாகவே ரொம்ப Inspiration ஆக இருந்தது.

இவரைப்போலவே பொய்யைக் கூறி விட்டு, என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. ஒன்று உண்மையைச் கூறி விட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்டு விட வேண்டும்.

இதனாலேயே இவர் எடுக்கும் முடிவுகளுக்கு ரசிகனாகி விட்டேன். இறுதியிலும் சூழ்நிலை காரணமாகத் தவறு செய்து விடக் கூடாது என்று படபடப்பாகி விட்டது 🙂 .

அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் முறை இன்று வரை குழப்பம். ரேட்டிங் என்கிறார்கள், பல நாட்கள் தேர்தல் நடத்துகிறார்கள், ஒன்றுமே புரியவில்லை.

தேர்தலுக்கு முன்பே எப்படி அதிபர் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதைத் தெரிந்து கொண்டு ஒரு கட்டுரை எழுத வேண்டும் 🙂 .

ஜேக்

மனுசன் பரபரப்பா ஓடிட்டே இருக்கிறார். நின்று பொறுமையாகக் கேட்பதற்கெல்லாம் ஏற்றவர் அல்ல, அதிரடியான நபர். முதலில் வீச்சு அப்புறம் பேச்சு.

அதிபர் ஆகப்போகிறவரை காப்பாற்றுவதா, மகளைக் காப்பாற்றுவதா என்று நெருக்கடியில் இருப்பார். இதில் மனைவியும் சிக்கிக்கொள்ளப் பல முனை தாக்குதலாக இருக்கும்.

இந்த இரண்டுமே தனித்தனி சம்பவங்களாக இருக்கும் ஆனால், இரண்டுக்கும் முடிச்சு போட்டுக் கொண்டு வருவது செம.

ஒன்று முடிந்து அப்பாடா! என்று நிம்மதி பெருமூச்சு விட்டால், அடுத்தது என்று திணறத் திணற அடிக்கிறார்கள்.

வில்லன் அனைத்து இடங்களிலும் CCTV யில் நுழைவது காதில் பூச்சுற்றுவது போல உள்ளது. நம்பலைனா ஹாலிவுட் படம் பார்க்க முடியாது என்பதால், நம்பிட்டேன் 🙂 .

பழைய சீரீஸ் (2001) என்பதால், ஒளிப்பதிவு தரம் பழையதாக உள்ளது ஆனால், பின்னணி இசை நன்றாக உள்ளது.

யார் பார்க்கலாம்?

திரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் பார்க்கலாம். சில அடல்ட் காட்சிகளும் உள்ளன. எனவே, எச்சரிக்கை தேவை.

24 எபிசோடுகள் என்பது மட்டுமே குறை ஆனால், அந்த 24 ம் தரமான எபிசோடுகளே!

தற்போதைக்கு 1 சீசன் மட்டுமே பார்த்துள்ளேன், மீதியை பின்னர் பார்க்க வேண்டும்.

பரிந்துரைத்தது பாபு, சூர்யா. Disney+ Hotstar ல் காணலாம்.

Created by Joel Surnow, Robert Cochran
Starring Kiefer Sutherland, (and others)
Composer Sean Callery
Country of origin United States
Original language English
No. of seasons 9
No. of episodes 192 + 24: Redemption + 12 (24: Live Another Day) (list of episodes)
Cinematography Peter Levy, Rodney Charters, Jeffrey C. Mygatt
Running time 43–51 minutes
Production companies Imagine Television
Original release
Network Fox
Release November 6, 2001 – May 24, 2010
Release May 5 –July 14, 2014

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. பதிவை படிக்கும் போது விறுவிறுப்பாக, செம்மையாக இருக்கிறது.. உங்களின் ரசனை எழுத்தில் தெரிகிறது.. இது வரை இந்த சீசன் பற்றி கேள்விப்பட்டதில்லை.. வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்க முயற்சிக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here