கோடை விடுமுறை என்பதால், MGM Dizzee World போகலாம் என்று முடிவு செய்து, சனி ஞாயிறு என்றால், கூட்டம் அதிகம் என்று வார நாளில் சென்றோம். Image Credit
MGM Dizzee World
சென்னை நண்பர்களுடன் MGM Dizzee World சென்றேன். அதன் பிறகு 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் செல்கிறேன்.
அப்போது இருந்தது போலவே உள்ளது கூடுதலாகச் சில ரைடுகளுடன்.
Tickets
Jumbo Package, Mega Fund Package, Fast Track என்று உள்ளது. இருப்பதிலேயே குறைவான கட்டணம் Jumbo Package தான், இதுவே போதுமானது.
மற்ற தீம் பார்க்குகளை ஒப்பிடுகையில் இங்குக் கட்டணம் அதிகம்.
சனி ஞாயிறு சென்றால் கூட்டமாக இருக்கும் என்பதாலும், அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டும் என்பதாலும், வார நாளில் சென்றது வசதியாக இருந்தது.
துவக்க விளையாட்டான ஜெயிண்ட் வீல் மட்டும் வரிசையில் அதிகம் இருந்தனர், மற்ற விளையாட்டுகளுக்கு அதிகபட்சம் 10 நிமிடங்களுக்குள் செல்ல முடிந்தது.
வார நாட்களில் சென்றால் Fast Track தேவையில்லை.
குழந்தைகளுக்கென்று தனி விளையாட்டுகள் உள்ளதால், பெரியவர்கள் விளையாடும் ரைடுகளில் அனுமதியில்லை. எனவே, கவனமாக வாங்கவும்.
உள்ளே நுழையும் போதே உயரத்தைப் பார்த்துக் கூறுகிறார்கள் என்றாலும், சில நேரங்களில் அனுமதித்து விடுகிறார்கள்.
உள்ளே வந்த பிறகு பெரியவர்கள் விளையாட்டில் அனுமதியில்லை என்றால், வளர்ந்த சிறுவர் சிறுமியர் அழுது ஆர்ப்பாட்டம் செய்வர்.
எனவே, கட்டணம் குறைவு என்று வாங்கி, பின்னர் கடுப்பாக வேண்டாம்.
விளையாட்டுகள்
பெரியவர்களுக்கு ஈடாக, குழந்தைகளுக்கும் ஏராளமான ரைடுகள் உள்ளன.
இரட்டைப் படையாகச் சென்றால் எளிது காரணம், ரைடில் செல்லும் போது செல்ல வசதியாக இருக்கும். இல்லையென்றால், ஒருவர் தனியாக இருக்க வேண்டும்.
குழந்தையுடன் செல்பவர்கள் யாரோ ஒருவர் குழந்தைக்காக ரைடில் செல்லாமல் இருக்க, மற்றவர்கள் பெரியவர்கள் ரைடில் செல்ல வேண்டும். இவை தவிர்க்க முடியாத நெருக்கடிகள்.
குழந்தைகள் பெரியவர்களுக்கு தனித்தனி ரைடுகள் இருந்தாலும், குடும்பத்துடன் செல்லும் ரைடுகளும் உள்ளன.
Get Wet என்று தண்ணீருக்கென்று ஒரு பகுதியுள்ளது. இருப்பதிலேயே கூட்டம் அதிகமுள்ள பகுதி. எப்போது ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை.
அருகிலேயே உள்ள Food Court மிகப்பெரிய இடமாக உள்ளதால், அமர்ந்து கொள்ள வசதியாக உள்ளது. தண்ணீர் விளையாட்டுகளுக்குச் செல்லாதவர்கள் பலர் இங்கே அமர்ந்து இருந்தனர்.
சில ரைடுகளில் கூட்டம் இல்லையென்றாலும், ஒரே ஒரு குழந்தைக்காகவும் ரைடை இயக்குகிறார்கள்.
கவனித்தவரை விளையாட்டுகளை இயக்குபவர்கள் நட்புடன் நடந்து கொள்கிறார்கள்.
சிறப்புகள் என்ன?
- அனைத்து நாட்களிலும் திறந்துள்ளன.
- காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை.
- இணையத்திலும் முன் பதிவு செய்யலாம். கிரெடிட் கார்டில் சலுகையுள்ளவர்கள் இம்முறையை முயற்சிக்கலாம்.
- சில தளங்களில் குறிப்பிட்ட காலங்களில் கட்டண தள்ளுபடிகளும் உள்ளது. எனவே, முயற்சித்துப்பார்க்கலாம்.
- உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதியுள்ளது. எனவே, மதிய உணவுக்கு முடிந்தால் வீட்டிலேயே தயார் செய்து எடுத்துச் செல்லலாம்.
- உள்ளே Food Court மற்றும் ஐஸ்கிரீம் கடைகள் உள்ளன. எனவே, உணவை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை.
- தண்ணீரில் செலவழிக்கும் நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், அனுமதிக்கப்பட்ட நேரம் சரியானதாகவே உள்ளது.
- தண்ணீர் விளையாட்டுகளுக்கு உடைகளை எடுத்துச் செல்லலாம், அங்கே சென்று தான் வாங்க வேண்டும் என்பதில்லை.
- உடை கட்டுப்பாடுகள் இருப்பதாக அறிவிப்பு உள்ளது ஆனால், பின்பற்றப்படுவதில்லை.
மேலும் விவரங்களுக்கு https://www.mgmdizzeeworld.com/
யார் செல்லலாம்?
அனைவரும் குடும்பத்துடன், நண்பர்களுடன் செல்லலாம்.
மற்ற தீம் பார்க்குகளை ஒப்பிடுகையில் MGM Dizzee World ல் கட்டணம் அதிகம். இது மட்டுமே குறை.
கொசுறு
சென்னையில் MGM போன்று உள்ள கிஷ்கிந்தா தீம் பார்க்கில் 6 மாதங்கள் பணி புரிந்துள்ளேன். என் முதல் பணி இங்கே தான் துவங்கியது.
கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆபரேட்டராக இருந்தேன் 🙂 .
தொடர்புடைய கட்டுரை
எச்சுச்மி! டோக்கன் போட்டுட்டேன் கேம் ஸ்டார்ட் ஆகலை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.