UPI Payment confirmation Sound Box

3
UPI Payment confirmation Sound Box

UPI பணப்பரிவர்த்தனை தாறுமாறான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியாவின் பரிவர்த்தனையை முறையையே தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டது. Image Credit

UPI

டிஜிட்டல் இந்தியா என்று கூறிய போது கிண்டலடித்தவர்களின் முதன்மை பயன்பாட்டில் UPI உள்ளது. மின்னணு பரிவர்த்தனையில், உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.

அக்டோபர் 2021 ல் $100 பில்லியனை அடைந்தது. கடந்த நான்கு வருடத்தில் 70 மடங்கு UPI பயன்பாடு அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் பயன்பாடு, கடைகளில் பயன்பாடு என்று எங்கும் UPI வியாபித்துள்ளது.

கடைகளில் UPI பயன்பாடு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. UPI பயன்படுத்தாத கடைகள் UPI வசதியை அறிமுகப்படுத்தி வருகின்றன.

Google Pay இல்லையா?‘ என்று கடைகளில் பொதுமக்கள் கேள்விகளைச் சாதாரணமாக கேட்க முடிகிறது.

இல்லையென்றால், பொருட்கள் வாங்காமல் செல்லும் போது கடையில் உள்ளவர்களின் ஏமாற்றமும், இச்சேவையின் கட்டாயமும் புரிகிறது.

UPI வசதியை வைக்காதவர்கள், தள்ளிப்போடலாமே தவிர, நிரந்தரமாக தவிர்க்க முடியாது. ஏனென்றால், இதனால் மக்கள் கடையைத் தவிர்க்க ஆரம்பிப்பார்கள்.

அனைவரும் அனைத்து நேரங்களிலும் பணத்தை கையில் வைத்து இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, இது போன்ற நேரங்களில் UPI பேருதவி புரிகிறது.

அதோடு தேவையற்று பணத்தை கையில் வைத்து இருப்பதும் ஆபத்தே.

UPI Payment confirmation Sound Box

2019 ம் ஆண்டு துவக்கத்தில், உணவகத்தில் UPI வழியாக பணம் செலுத்திய போது, செலுத்தப்பட்ட தொகையை ஒலிப் பெருக்கியில் கேட்டவுடன் வியப்பாக இருந்தது.

அட! இது நல்ல யோசனையாக உள்ளதே என்று தோன்றியது.

காரணம், UPI எளிமையென்றாலும் சிக்கல்களும் உண்டு. இணைய திருடர்கள் ஏதாவது ஒரு வழியில் பணத்தை செலுத்தி விட்டதாக ஏமாற்றி விடுகிறார்கள்.

இது பற்றிய செய்திகள் கூட வந்தது. இதனாலே சிலர் குறுந்தகவல் (SMS) பார்க்கும் வரை பணம் செலுத்தியவரை விடுவதில்லை.

இவ்வாறு குறுந்தகவல் பார்த்து உறுதி செய்வதை விட, இது போல எவ்வளவு செலுத்தப்பட்டதுள்ளது என்று அதுவே கூறினால், இன்னும் விரைவாக பணி புரியலாம்.

2019 ல் வியப்பாக இருந்தது, தற்போது (2021) பெரும்பாலான கடைகளில் காணும் நிகழ்வாகி விட்டது. பலரும் எவ்வளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கும் சாதனத்தை வைத்துள்ளார்கள்.

ஆனால், இன்னமும் இது குறித்து தெரியாதவர்கள் உள்ளனர்.

தற்போது Paytm போன்ற நிறுவனங்கள் தங்களுடைய UPI வசதியைச் சந்தைப்படுத்த Paytm QR Code அட்டையுடன் அறிவிப்பு ஒலிப் பெருக்கியையும் சேர்த்தே கொடுக்கிறார்கள்.

எனவே, மற்ற வேலைகளைச் செய்துகொண்டே பணம் பெறுவதை உறுதிப்படுத்துவது எளிதாகிறது. பணம் செலுத்துபவர்களுக்கும் செலுத்தியதை உறுதிப்படுத்த இவ்வசதி எளிதாக உள்ளது.

எனவே, கடைகளில் UPI பயன்படுத்துபவர்கள் இது போன்ற வசதியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

UPI வசதியே இல்லாதவர்கள் Paytm, PhonePe போன்றவர்களிடம் பதிவு செய்தால், இந்த UPI Payment confirmation Sound Box உடன் வாங்கிக்கொள்ளலாம்.

Paytm அதிகம் பயன்படுத்துவதால், எடுத்துக்காட்டுக்கு Paytm குறிப்பிட்டுள்ளேன். இதுபோல மற்ற நிறுவனங்களின் சாதனங்களும் உள்ளன, தேவைக்கேற்றது போல வாங்கிக்கொள்ளலாம்.

கடைகளில் பொருட்கள் வாங்க, சேவையைப் பெற அதிகம் Paytm & PhonePe பயன்படுத்துகிறேன். இந்நிறுவனங்களின் Transaction Success Rate அதிகமுள்ளது.

கொசுறு

தற்போது Google Pay நிறுவனமும் இதே போல வசதியைக் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்

ரொக்கமில்லா பரிவர்த்தனை நோக்கி இந்தியா

UPI பரிவர்த்தனை பரிந்துரைகள் | மிரட்டும் வளர்ச்சி

PhonePe Google Pay Paytm எது சிறந்தது?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. You are writing useful technical articles. But I have a doubt about its reach. Open or Use your Youtube channel, in addition to this blog and record this blog content and publish. The visual presentation would increase your readership. You can monetise more.

    All the Best

  2. @James

    Yes. I have a plan already but couldn’t implement yet.

    Writing and pulishing is easy for me, but video it will take a lot of work. Especially I can do only if it satisfied me because always I will expect a perfection, This is the reason it’s getting delayed.

    As you mentioned YT reach is more and can’t match writing like this, but writing is my passion, so jus writing for my satisfaction.

    Many were suggesting to do in YT like you.. Will do sure but don’t know when 🙂 .

    Thank You

    @Siva Yes correct.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here