பிரிவினைவாதிகளுக்கு செருப்படி கொடுத்த தமிழக மக்கள்

1
Bibin Rawat

முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட இராணுவத்தினர் 12 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததற்குத் தமிழக மக்கள் செலுத்திய அஞ்சலி, இந்தியா முழுக்கப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. Image Credit

பிரிவினை வாதம்

கடந்த சில வருடங்களாகக் குறிப்பாக ஜெ மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் பிரிவினை வாதிகளின் குரல்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

புதிதாகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமியும் இவர்களைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்காததால், அவர்களின் கொட்டம் அதிகரித்துத் தற்போது திமுக ஆட்சியிலும் தொடர்கிறது.

தனித்தமிழ்நாடு என்று கூறுவது, இந்தியாவைக் கேவலமாகப் பேசுவது, பாக், சீனாவை ஆதரித்து இந்தியாவை இழிவுபடுத்துவது, திராவிடநாடு என்பது, இந்தியா தோற்றால் கொண்டாடுவது, வெளிநாட்டு சக்திகளுக்கு ஆதரவளிப்பது.

இந்தியாக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பேசிப் பிரிவினை கருத்துகளை மூளைச்சலவை செய்து மிக மோசமாகச் சென்று கொண்டுள்ளது.

இதுவரை இந்தியாக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது, பிரிவினை பேசுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் தமிழகத்தில் எடுக்கப்பட்டது இல்லை.

இதன் காரணமாகத் தைரியம் பெற்றவர்கள் இன்னும் தீவிரமாகப் பிரிவினைவாதம் பேசி வருகிறார்கள்.

தேசியப்பற்றை வெளிப்படுத்திய மக்கள்

இதனால், தமிழக மக்களும் இவர்கள் பேசுவதை நம்பி மாறி விட்டார்களோ, மாறி விடுவார்களோ என்று கவலையேற்பட்டது.

ஆனால், இக்கவலைகள், பயம் அனைத்தையும் இராணுவ வீரர்களுக்கு உணர்வுப்பூர்வமாகக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி நொறுக்கித்தள்ளி விட்டனர்.

தமிழக மக்கள் மாற மாட்டார்கள். அவர்கள் என்றும் இந்தியத்தமிழர்கள் என்று பிரிவினைவாதிகளுக்குச் செருப்படி கொடுத்துப் புரிய வைத்துள்ளார்கள்.

செய்திகளைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் Goosebumps ஆனது.

தமிழக மக்கள் வரிசையாக நின்று பூக்கள் தூவி இராணுவ வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்தியதை இந்தியா முழுக்க அனைவரும் பாராட்டியதை பார்க்கும் ஒவ்வொரு முறையும் மிகப்பெருமையாக இருந்தது.

நின்று கொண்டு இருந்தவர்களில் பலர் வீர வணக்கம் என்று முழங்கிக்கொண்டு இருந்தார்கள்.

Veeravanakkam

தமிழ் முழக்கமான #Veeravanakkam என்ற # Tag ல் வட இந்தியர்கள் பகிர்ந்து ட்ரெண்டிங் செய்து கொண்டு இருந்தார்கள்.

தமிழகத்தில் #Veeravanakkam Tag அதிகம் பயன்படுத்தப்படவில்லை ஆனால், வட இந்தியாவில், மற்ற மாநிலங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டது, படுகிறது.

நம் மக்கள் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் வழியெங்கும் திரண்டு வந்து மரியாதை செலுத்தியதை கண்ட ஒவ்வொரு முறையும் கண்கள் குளமாகின.

உடல்களை எடுத்து வருவது பலருக்குத் தெரியாது ஆனால், பூக்களுடன் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வரிசையில் சாலையெங்கும் நிற்கின்றனர்.

பெண்கள் கண்ணீர் விட்டழுத போது என் கண்களிலும் கண்ணீர்.

என்ன வியப்பு என்றால், எவ்வளவு முறை பார்த்தாலும், மற்றவர்கள் கூறுவதைப் படித்தாலும் அதே உணர்ச்சியில் இருப்பது தான்!!

எனக்கு இந்தியா ரொம்பப் பிடிக்கும் ஆனால், இவ்வளவு பிடிக்கும் என்று எனக்கே தற்போது தான் தெரியும்!

கடும் நடவடிக்கை தேவை

இராணுவ வீரர்களின் இறப்பை கொண்டாடி மகிழ்கிறார்கள் இந்தியாவில் இருக்கும் சில இந்திய எதிர்ப்பாளர்கள்.

இயக்குநர் பேரரசு குறிப்பிட்டது போல ஒரு கட்சியை எதிர்க்கலாம், சாதியை எதிர்க்கலாம், மதத்தை எதிர்க்கலாம் ஆனால், இந்தியாவை எதிர்ப்பவர்களை விடக்கூடாது.

இந்தியாக்கு எதிராகப் பேசுபவர்களைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் போட்டால் தான் நாளைக்கு எவரும் பேசப்பயப்படுவர்.

இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் விடுவது மிக ஆபத்தான செயல்.

தமிழகத்தை, இந்தியாவை இழிவுபடுத்துபவர்களை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இராமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மக்கள் இவர்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.

தமிழக மக்கள்

இருந்தால் தமிழக மக்களைப் போல இருக்கணும்‘ என்று இந்தியா முழுக்க அனைவராலும் தமிழக மக்கள் பாராட்டுப்பெற்றனர்.

இதற்கு முக்கியக்காரணமாக இருந்த நீலகிரி, மேட்டுப்பாளையம், கோவை, சூலூர் மக்களுக்குச் சிறப்பு நன்றி. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

குறுகிய நேரத்தில் திரண்டு, பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தியது மறக்க முடியாதது.

தமிழகம் என்றும் பிரிவினைவாதிகளின் பேச்சைக்கேட்காது என்று மரண அடி கொடுத்துத் தமிழக மக்கள் புரியவைத்துள்ளார்கள், நம்பிக்கையளித்துள்ளார்கள்.

வாழ்க இந்தியா! வளர்க இந்தியா!!

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியாவை கிண்டலடிக்கும் சைக்கோ இந்தியர்கள்

கேரளா மாடலுக்கு வந்த சோதனை!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

  1. மீடியாக்களில்….பதிவுகளை கண்டபோது எம் கண்களிலும் நீர்…… நன்றி.
    உங்கள் பதிவையும் கண்டுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here