பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் 2024

2
தேர்தல் வாக்குறுதிகள் 2024

2024 பாராளுமன்றத்தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்கள். அதில் சில முக்கியமானவற்றைப் பார்ப்போம். Image Credit

திமுக தேர்தல் வாக்குறுதிகள்

  • குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்.
  • கச்சத்தீவு மீட்கப்படும்
  • பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.
  • புதிய தேசியக் கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்.
  • மாணவர்களின் கல்விக்கடன் ரத்து
  • அனைத்து மாநில மகளிருக்கும் ₹1000 உரிமைத்தொகை வழங்கப்படும்.
  • தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
  • திருச்சி கோவை மதுரை விமான நிலைய விரிவாக்கம்.
  • பெட்ரோல் ₹75 க்கும், டீசல் ₹65 க்கும் எரிவாயு ₹500 க்கும் வழங்கப்படும்.
  • சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை மெட்ரோ பாதை அமைக்கப்படும்.
  • 50 காசு செலவில் இந்தியா முழுவதும் பேசும் வசதி.

முழுமையான திமுக தேர்தல் வாக்குறுதிகள்

விமர்சனம்

மேற்கூறிய தேர்தல் வாக்குறுதிகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். சில்வற்றைத் தவிர இதுவொரு உருப்படாத தேர்தல் வாக்குறுதிகள் என்று.

முழுமையாக படித்தால், கடுப்பு தான் வரும்.

பெரும்பாலானவை முந்தைய திட்டங்கள் ரத்தாக உள்ளது, கடன்கள் ரத்தாக உள்ளது அல்லது அரசைத் திவால் நிலைக்குக் கொண்டு செல்லும் வாக்குறுதிகளாக உள்ளது.

கல்விக்கடன் ரத்து பற்றி 2019 தேர்தல் வாக்குறுதியிலும் கூறினார்கள், 2021 தேர்தலிலும் கூறினார்கள், 2024 தேர்தலிலும் கூறியுள்ளார்கள்.

கச்சத்தீவைக் கொடுத்து அதைப் பெற 50 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலிலும் கூச்சமே இல்லாமல் வாக்குறுதி கொடுக்கும் தைரியம் திமுகக்கு மட்டுமே உண்டு.

பெரும்பாலான வாக்குறுதிகள், ஏற்கனவே கூறிய, செயல்படுத்த முடியாத, பெயரளவுக்கான வாக்குறுதிகளாகவே உள்ளது.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்

காங்கிரஸ் வாக்குறுதிகள் திமுக போல, நிதிச்சுமை, நடைமுறையில் சாத்தியமில்லாத பெயரளவு வாக்குறுதிகளாகவே உள்ளது.

அனைவருக்குமான கட்சி என்ற நிலையைக் கடந்து விட்டார்கள். இனி காங்கிரசுக்கு எதிர்காலம் இருப்பதாகவும் தெரியவில்லை.

அதனால் ஒரே ஒரு தேர்தல் வாக்குறுதி மட்டும் கூறுகிறேன்.

  • பெண்களுக்கு வருடம் ஒரு லட்சம் உரிமைத்தொகை வழங்கப்படும்.

முழுமையான காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்

விமர்சனம்

இது எப்படிப்பட்ட மோசமான பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்று காங்கிரசுக்கு புரியவில்லையா?

குறைந்தபட்சம் 1 கோடி பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதாகக் கணக்கு போட்டால் இந்தியப் பொருளாதாரமே தலைச்சுற்றி விழுந்து விடும்.

இவையல்லாமல், மற்ற நிதி சலுகைகள், கடன் / வட்டி தள்ளுபடி தனி.

எப்படி இதைச் சமாளிப்பீர்கள்? இதற்கான நிதி எங்கே இருந்து கிடைக்கும்? என்று ராகுலின் அரசியல் ஆலோசகரிடம் கேட்ட போது,

நாங்கள் வரியை உயர்த்துவோம். நடுத்தர மக்கள் சுயநலமாக இருக்கக் கூடாது. அவர்கள் கொஞ்சம் பணத்தை வரியாகக் கொடுக்கலாமே!‘ என்று கூறுகிறார்.

இதற்கு மேல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி விமர்சிக்க எதுவுமில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்… வேண்டாம் கற்பனை செய்யவே பயமாக உள்ளது.

பாஜக வாக்குறுதிகள்

  • பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
  • மக்கள் மருந்தகங்களில் 80% வரையிலான தள்ளுபடி விலையில் மருந்துகள்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும்.
  • சானிட்டரி நாப்கின் ₹1 க்கு வழங்கப்படும்.
  • குழாய் வழியாக எரிவாயு வழங்கப்படும்.
  • 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் ₹5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
  • முத்ரா கடன் ₹10 லட்சத்திலிருந்து ₹20 லட்சமாக உயர்த்தப்படும்.

பாஜகவின் முழுமையான தேர்தல் வாக்குறுதிகள்

விமர்சனம்

முத்ரா கடன் திட்டம் மிகப்பெரிய உதவியைச் சிறு குறு வியாபாரிகளுக்கு வழங்கியுள்ளது. கந்து வட்டி கொடுமையிலிருந்து தப்பித்துள்ளார்கள்.

காப்பீட்டுத் திட்டம், மக்கள் மருந்தகம் தள்ளுபடி மிக மிக முக்கியமானது, வயதான காலத்தில் மருத்துவ செலவு என்பது எதிர்காலத்தில் அளவிடமுடியாததாக இருக்கும்.

அதை விட அந்நேரத்தில் செலவு செய்யப் பணம் இருக்காது. காரணம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மறைந்து வருகிறது. எனவே, மருத்துவச் செலவுகள் முக்கியமானதாக உள்ளது.

அவ்வளவும் உட்கட்டமைப்பு வளர்ச்சி, நலத்திட்டங்கள் மேம்பாடு, ஏற்றுமதி என்று இந்திய வளர்ச்சிக்கான, மக்களின் சுய மேம்பாட்டுக்கான திட்டங்களாகவே உள்ளன.

எது சிறப்பான தேர்தல் வாக்குறுதி?

மூன்று கட்சிகளின் முழுமையான தேர்தல் வாக்குறுதிகளைப் படித்த பிறகு சொல்லுங்க.. இந்த மூன்றில் எது சிறப்பான தேர்தல் வாக்குறுதிகளாக உள்ளது?

திமுக காங் வாக்குறுதிகள் பெரும்பாலானவை இலவசம், நிதிச்சுமை சார்ந்தவையாகவே உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலையெல்லாம் இவர்கள் கூறுவது போன்று குறைப்பது சாத்தியமே இல்லை.

சாத்தியம் என்றால், வரி கண்டபடி அனைத்திலும் உயரும் என்பதே எதார்த்தம் காரணம், தமிழகத்தில் திமுக அதைத்தான் செய்துகொண்டுள்ளது.

திமுக, காங் வாக்குறுதிகள் மீனை மக்களுக்குக் கொடுக்கிறது. பாஜக கொடுத்துள்ள வாக்குறுதிகள் மீனைப் பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் வாக்குறுதிகளாக உள்ளன.

திமுக, காங் வாக்குறுதிகள் மாநிலத்தின், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வாக்குறுதிகளாகவும், பாஜக வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரத்தை ஆர்கானிக்காக உயர்த்தும் படியுள்ளது.

இறுதியாக..

காங்கிரசுக்கு வாக்களிப்பது இந்தியாவை நாசமாக்க வாக்களிப்பதற்குச் சமம்.

நாட்டின் வளர்ச்சிக்கு, உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு, நலத்திட்டங்கள் மக்களுக்குச் சரியாகச் சென்று சேர பாஜகக்கு வாக்களிக்கக் கேட்டுக்கொள்கிறேன் 🙏 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. பெண்களுக்கு வருடம் ஒரு லட்சம் உரிமைத்தொகை வழங்கப்படும் – காங்கிரஸ் ஜெயித்தால் தானே? அப்படி ஒரு வேளை ஜெய்த்துவிட்டால் “தகுதியுள்ள” பெண்களுக்கு மட்டும் என்று மாற்றிவிடுவார்கள்….ஏன் என்றால் அந்த கூட்டணி அப்படி ….

  2. @Payapulla

    இந்த வாக்குறுதி சாத்தியமே இல்லை. ஒருவேளை காங் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது.

    தற்போது கர்நாடகா, ஹிமாச்சல் காங்கிரஸ் எப்படி திணறிக்கொண்டு உள்ளதோ அதே நிலை தான் ஆகும்.

    இந்தியாவையே நாசமாக்கி விட்டுத் தான் செல்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!