WhatsApp மிரட்டல் சாத்தியமா?

0
WhatsApp மிரட்டல் சாத்தியமா?

த்திய அரசின் கட்டுப்பாடுகளுக்கு WhatsApp மிரட்டல் விடுத்துள்ளது. Image Credit

WhatsApp மிரட்டல்

மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு சமூகவலைத்தளங்களுக்கான நெறிமுறைகளை அறிவித்தது.

மத்திய அரசு கேட்கும் போது தகவல்களைக் கொடுக்க வேண்டும், கணக்குகளை முடக்க வேண்டும் என்பதாகும். இதற்கு பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

ட்விட்டர் நிறுவன உரிமையாளராக ஜேக் இருந்த போது எதிர்த்து நீதிமன்றம் சென்றார் ஆனால், அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வரவில்லை.

எலன் மஸ்க் வந்த பிறகு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடப்பதாக அறிவித்தார்.

தற்போது WhatsApp நிறுவனம், மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. வற்புறுத்தினால், நாட்டை விட்டு வெளியேறுவோம் என்று மிரட்டியுள்ளது.

மத்திய அரசு என்ன கூறுகிறது?

WhatsApp மூலம் ஏராளமான பொய் தகவல்கள் (Fake News) பரவுகிறது. இதனால் பலர் பாதிப்படைகின்றனர். எனவே, பொய் தகவலை ஆரம்பித்து வைத்த நபரைக் கண்டறிய வேண்டும் என்கிறது மத்திய அரசு.

எப்படியென்றால், நீதிமன்றம் வழியாகச் சென்று தகவல்கள் கேட்கப்படும், அதை WhatsApp நிறுவனம் தர வேண்டும் என்று கூறுகிறது.

இதற்கு தான் WhatsApp எதிர்ப்பு தெரிவிக்கிறது.

WhatsApp என்ன கூறுகிறது?

WhatsApp Encryption செய்யப்பட்டது. எனவே, இது தனியுரிமையைப் பாதிக்கும் செயல். வாட்சப் சிறப்பே பயனாளர்களின் பாதுகாப்பு / தனியுரிமை (Privacy) தான்.

எனவே, அடிப்படையையே கேள்விக்குறியாக்குவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று WhatsApp கூறுகிறது.

யார் கூறுவது சரி?

WhatsApp கூறுவது போலத் தனியுரிமை என்ற பெயரில் ஒரு நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட முடியாது, செயல்பட அனுமதிக்க முடியாது.

தனியுரிமை என்பது பொதுவெளிக்கு வந்து விட்டால், அதை அரசாங்கம் மட்டுமே தீர்மானிக்க முடியும் காரணம், இதனால் பாதிப்படைவது பொதுமக்கள், அரசு.

எடுத்துக்காட்டுக்கு, ஒருவர் WhatsApp பயன்படுத்துவதில்லை ஆனால், அவர் குறித்த தவறான தகவல் WhatsApp ல் பரவுகிறது. இதனால் இவர் பாதிப்படைகிறார்.

சம்பந்தமே இல்லாமல் எதற்கு ஒருவர் பாதிப்படைய வேண்டும், அதை விட அதற்கு நீதியும் கிடைக்கவில்லையென்றால், எப்படி நியாயமாகும்?

WhatsApp யைத் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் காரணம், அவர்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது.

பொறுப்பேற்பது யார்?

இவற்றை எப்படித் தடுப்பது? இதற்கு எப்படித் தீர்வு கூறுவது? இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்குப் பதில் கூற வேண்டியது அரசா? WhatsApp நிறுவனமா?

நிறுவனங்கள் ஆளுக்கொரு கொள்கை என்று வைத்துக்கொண்டு அதை மீற முடியாது என்றால், அதனால் ஏற்படும் விளைவுகளை அரசு எப்படி சமாளிக்க முடியும்?!

மத்திய அரசு கூறுவது, ‘இது போன்ற சூழ்நிலை ஏற்படும் போது நீதிமன்றம் வழியாக சென்றே கேட்போம்‘ என்கிறது. இது நியாயமான வாதமாக உள்ளது.

இல்லையென்றால், வட்ட செயலாளர் வண்டு முருகன், E2 காவல் நிலையம் அதிகாரி ‘எங்க மச்சானைப் பற்றி செய்தி வந்துள்ளது, அதை யாரென்று கண்டுபிடிக்க வேண்டும்’ என்று WhatsApp யை அணுக வாய்ப்புள்ளது.

எனவே, நீதிமன்றம் வழியாகச் செல்வது நியாயமானதே!

WhatsApp மிரட்டல் நியாயமா?

இந்த மாதிரி பேசுறதுக்கே வாயில நாலு போடவேண்டும். என்னவொரு திமிர் இருந்தால் இப்படியொரு பேச்சைப் பதிவு செய்து இருக்க முடியும்?

எங்களுக்கு உடன்பாடில்லை, இவ்விதிமுறைகளால் நிறுவனத்தின் கொள்கைகள் பாதிப்படைகிறது என்று கூறுவது வேறு ஆனால், மிரட்டல் விடுப்பது வேறு.

இந்தியாவில் 42 கோடி WhatsApp பயனாளர்கள் உள்ளனர். இவ்வளவு பேரும் வேண்டாம் என்று சென்று விட முடியுமா?

இந்த 42 கோடி மட்டுமல்ல, இந்த 42 கோடி பேருடன் தகவல்களைப் பகிரும் மற்ற நாடுகளைச் சார்ந்தவர்கள் பல கோடி பேர் இருப்பார்கள்.

இவர்கள் எப்படி இந்தியாவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்வார்கள்? இந்தியாவில் உள்ளவர்கள் என்ன செயலியைப் பயன்படுத்துகிறார்களோ அதைத்தான் பயன்படுத்தியாக வேண்டும்.

எனவே, WhatsApp நிறுவனத்துக்கு 42 கோடி மட்டுமல்ல, மேலும் பல கோடி பயனாளர்கள் மற்றும் இதைச்சார்ந்து உள்ள வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

WhatsApp இல்லையென்றால், 100 வேறு செயலிகள் உள்ளன. எனவே, இந்தியா அதில் ஒன்றைப் பயன்படுத்தப்போகிறது.

TikTok தடை

சில வருடங்களுக்கு முன்பு TikTok தடைவிதிக்கப்பட்டது. என்ன குடி முழுகிப் போய் விட்டது? Reels, Shorts மாற்றாக வந்து விட்டது.

WhatsApp தடை ஒருவேளை ஏற்பட்டால் சில வாரங்களுக்கு சிறு சலசலப்பைத் தவிர எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கூகுள்

Google, Map தடை செய்தால், அதிகளவில் பாதிப்பு இருக்கும். காரணம், இவை பொழுது போக்கு அல்ல தின வாழ்க்கையில் பயன்படுத்துபவையாகி விட்டன.

YouTube சிறு தொழில் போன்று ஆரம்பித்து, பெரியளவில் சம்பாதிக்கும் துறையாக மாறி விட்டது. எனவே, இதற்கான தடையென்பது பலருக்கு வேலை வாய்ப்பை இழக்க வைக்கலாம்.

ஆனால், இது போன்ற முட்டாள்தனமான மிரட்டலைக் கூகுள் இதுவரை கூறியதில்லை, கூறவும் போவதில்லை.

காரணம், கூகுளைப் பொறுத்தவரை அதன் வியாபாரம் பாதிக்கும் எதையும் செய்யாது, அரசு முடிவுகளுக்குக் கட்டுப்படும்.

இதுவரை அரசு கூறியவற்றைத் தொடர்ந்து செய்து வருகிறது.

தன்னிறைவு

எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தையும் நம்பி அரசாங்கம், நாடு இருக்கக் கூடாது. நாளைக்கே கூகுளும் எதையாவது கூற வாய்ப்புள்ளது.

ஒருவேளை அமெரிக்க அரசு நெருக்கடி காரணமாக Android க்கு தடை என்றால், நினைத்துப்பாருங்கள். இந்தியாவே ஸ்தம்பித்து விடும்.

எனவே, சீனா போல நம் நாட்டுக்கான செயலிகள், தொழில்நுட்பங்கள் தேவை.

நிதித்துறையில் இந்தியா UPI, RuPay என்று தன்னிறைவு அடைந்தது போல மற்ற தொழில்நுட்பங்களிலும் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும்.

WhatsApp வெளியேறுகிறது என்றால், தாராளமாக வெளியேறட்டும் ஆனால், WhatsApp மிரட்டல் மட்டுமே விடுக்கும் செய்யாது.

உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எதிராக வந்தால், உச்சநீதிமன்றம் செல்லும். பார்ப்போம் என்ன ஆகிறது என்று!

தொடர்புடைய கட்டுரை

RuPay வளர்ச்சியால் கதிகலங்கும் Master & Visa நிறுவனங்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here