யாழ்ப்பாணம் | சொந்த ஊர் என்றாலே மகிழ்ச்சி தானே!

4
யாழ்ப்பாணம்

லைவர் ரசிகரும் ஈழத்தமிழருமான ஜீவதர்ஷன் இயக்கத்தில் அடுத்த படைப்பு யாழ்ப்பாணம். Image Credit

யாழ்ப்பாணம்

சொந்த ஊரான யாழ்ப்பாணம் வரும் ஒருவர் எப்படித் தன் விடுமுறையை நண்பர்கள், சொந்தங்கள், மக்களோடு கழிக்கிறார் என்பதே இப்பாடலின் கதை.

இப்பாடல் பார்த்த பிறகே யாழ்ப்பாணம் மற்றும் Jaffna இரண்டுமே ஒரே இடம் என்று தெரியும், சிங்களத்தில் வேறு பெயர். பெயர்ச்சொல் எப்படி அழைத்தாலும் ஒரே பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும்.

முந்தைய அரசியல், நிலப்பரப்பு பிரச்சனைகள் காரணங்களால் இப்பெயர் மாற்றம் நடந்து இருக்கலாம்.

யாழ்ப்பாணம் இவ்வளவு அழகாக இருக்குமா?! என்று வியப்பாக உள்ளது. எவ்வளவு பசுமை, சுத்தம்! அடடா! அருமை.

நம்ம ஊரில் இது போன்று பார்க்க வேண்டும் என்றால், பொள்ளாச்சி, கோபி, தேனி போன்ற இடங்களுக்குச் சென்றால் காணலாம்.

ஆனால், கடல் கிடைக்காது. இங்கே அனைத்துமே அற்புதமாக உள்ளது. கிராமத்திலும் சாலை தரமாக உள்ளது.

இலங்கை சுற்றுலா

இலங்கை சுற்றுலா சென்ற பலரும் அங்கு உட்கட்டமைப்பு சிறப்பாக இருக்கும், சாலை விதிகள் சரியாகப் பின்பற்றப்படும், குப்பை போட மாட்டார்கள் என்று கூறுவார்கள்.

இக்காணொளி பார்த்தால், உண்மை தான் என்று தோன்றுகிறது. பேருந்து நிலையம் மட்டும் நம்ம ஊரு போலச் சுவரொட்டியால் கெடுத்து வைத்துள்ளார்கள் 🙂 .

கடல் நீர், அதையொட்டி நீர் நிலை எங்குமே சுத்தமாக, குப்பை இல்லாமல் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இக்காணொளி அவசியம் இலங்கைக்கு சுற்றலா செல்ல வேண்டும் என்ற திட்டத்தை உறுதிப்படுத்துகிறது. இந்தியா UPI இலங்கையில் சில இடங்களில் வந்து விட்டது.

கிராமம்

ஒரு பக்கா கிராமத்துக்குச் சென்றால் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்குமோ அப்படியே இக்காணொளியில் உள்ளது.

சொந்த கிராமத்துக்கு, ஊருக்குச் செல்வதை விரும்புபவர்கள், இக்காணொளி பார்த்தால், தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைக்காமல் இருக்க முடியாது.

பல்வேறு பிரச்சனைகளால் தாய் நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் தற்போதைய வாழ்க்கை முறை மாறி விட்டாலும் இக்காணொளி பார்த்தால், ஒரு ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியாது.

அந்த அளவுக்கு அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

தொழில்நுட்பம்

ஒளிப்பதிவு அட்டகாசமாக உள்ளது. ட்ரோன் காட்சிகள் ஆகட்டும், வழக்கமான காட்சிகள் ஆகட்டும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல உள்ளது.

ரசனையாக படமாக்கியுள்ளார்.

பாடல் பார்த்த யாருக்கெல்லாம் தங்கள் சொந்த ஊரைத் தவற விடுகிறோமே என்று தோன்றுகிறதோ அங்கெல்லாம் இயக்குநர் வெற்றி பெறுகிறார்.

பாடலும் சிறப்பு ஆனால், ஒரே பாடலாக இல்லாமல் இடையிடையே வேறு பாடல்களும் வருவது ஒரு தொடர்ச்சியை (conitnuity) துண்டிக்கிறது.

பாடல் இடையே குரல்கள் வந்து பாடல் தொடர்வது இயல்பானது ஆனால், வேறு பாடல்களும் வருவது ஒரு கோர்வையாக ரசிப்பதைத் தடுப்பது போல உள்ளது.

பாடல் வரிகள் அழகாக, ஊரைத் தவறவிடுகிறோமே என்ற ஏக்கத்தைச் சரியாக பிரதிபலித்துள்ளது.

Blog பிரபலமாக இருந்த காலத்தில் எழுதிய ஜீவதர்ஷன் தற்போது சம்பந்தமே இல்லாமல் அற்புதமான காணொளிகளை இயக்குவது வியப்பை அளிக்கிறது.

யாரிடம் என்ன திறமை உள்ளது என்றே புரிந்து கொள்ள முடிவதில்லை!

ஒற்றுமை

ஜீவதர்ஷன் இயக்கிய இரு காணொளிகளிலும் ஒரு ஒற்றுமையைக் காண முடிகிறது.

ஈழம் என்றாலே, அழுகை, பரிதாபம், போர் காயங்கள், சோகம் என்று எதிர்மறையான செய்திகள், காணொளிகளையே பார்க்கும் நமக்கு இக்காணொளிகள் நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கிறது.

இலங்கையின் மீதுள்ள பொதுப் பார்வையை மாற்றுகிறது.

இக்காணொளிக்காக உழைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இதே ஜீவதர்ஷன் இயக்கிய குறும்படம் –> சாம் சூசைட் பண்ண போறான்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. Thank you so much… as usual always ur love on me continuing ❤️ thank for ur valuable time to watch and write this way.

  our whole team say big thank to you 🙏

 2. கிரி.. காணொளியை பார்த்தேன்.. அருமையாக இருந்தது.

  கிராமங்களில் தான் நம்முடைய பண்பாடு, கலாச்சாரம், பழமை, பழக்க வழக்கங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.. நகரங்களில் இவ்வற்றையெல்லாம் என்றோ கொன்று புதைத்து விட்டோம்..

  எட்டாம் வகுப்பு படிக்கும் போது இலங்கையை குறித்து ஒரு பாடம் இருக்கும்.. அதில் குறிப்பாக திரிகோணமலை, யாழ்ப்பாணம் இவற்றின் அழகை குறித்து வர்ணித்து இருப்பார்கள்.. அப்போது தான் முதன் முறையாக எனக்கு இலங்கையை பற்றி அறியும்..

  அதன் பிறகு 2011 இல் அ.முத்துலிங்கம் ஐயாவின் பதிவுகளை படிக்க தொடங்கிய பிறகு நிறைய தகவல்களை இலங்கையை குறித்து தெரிந்து கொண்டேன்.

  ஐயாவின் சில பதிவுகள் கண்ணில் கண்ணீரை வர வைத்து விடும்.. இவரின் இளமை பருவம் தான் பிறந்த (கொக்குவில்) பகுதியை குறித்து மிகவும் சிலாகித்து எழுதி இருப்பார்..

  இவரின் வயது 70 தாண்டி இருக்கும்.. ஆனால் இவரின் எழுத்துக்கள் நேற்று பார்த்த காட்சியை விவரித்து எழுதியது போல இருக்கும். சில பதிவுகளை படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.

  50/60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவைகளை எப்படி? இவ்வளவு நேர்த்தியாக, அழகாக விவரிக்கிறார் என்று.. பல பதிவுகள் இருந்தாலும் நான் அடிக்கடி விரும்பி படிப்பது சிலது.. அவற்றில் பின்வரும் பதிவும் உண்டு..

  https://tinyurl.com/bddxbx36

  https://tinyurl.com/4n5uccxj

  நேரம் இருப்பின் படித்து பார்க்கவும்.. சில சொற்கள் இலங்கை தமிழில் இருக்கும்.. பொருளறிந்து படிக்கவும்.. இன்னும் இன்னும் அதிகம் பதிவுகள் இருக்கிறது.

  என்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஐயாவை நேரில் சந்தித்து கை குலுக்கி செல்ல வேண்டும் என்ற ஒற்றை ஆசை உண்டு..

 3. @யாசின்

  அ.முத்துலிங்கம் அவர்கள் பற்றி அடிக்கடி கூறியுள்ளீர்கள். நீங்கள் அவரைச் சந்திக்கும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தர வேண்டுகிறேன்.

  நீங்கள் குறிப்பிட்ட கட்டுரைகளைப் படிக்க முயல்கிறேன்.

  @Raj

  அனைவருக்கும் காணொளியோ, திரைப்படமோ பிடிக்க வேண்டும் என்பதில்லை. காரணம், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனை இருக்கும்.

  ஆனால், இதில் என்ன பிடிக்கவில்லை, என்ன தவறு என்று கூறினால், ஒருவேளை நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இருந்தால், அவர்கள் அத்தவறுகளை திருத்திக் கொள்வார்கள்.

  அடுத்த காணொளியை, குறும்படத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here