இன்ஸ்டா ரீல்ஸ் பரிதாபங்கள்

0
இன்ஸ்டா ரீல்ஸ்

ன்ஸ்டா ரீல்ஸ் பரவலாகப் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இது சமூகத்தையே மாற்றி வருகிறது. Image Credit

இன்ஸ்டா ரீல்ஸ்

TikTok 1 நிமிடக் காணொளிகளுக்காக மிகப்பிரபலம் அடைந்தது.

முன்பு காணொளிகள் என்றால், குறைந்த பட்சம் 5 நிமிடங்களுக்கு மேல் தான் இருக்கும் ஆனால், 1 நிமிடத்துக்கு, 30 நொடிகளுக்கு TikTok கொண்டு வந்த போது பலத்த வரவேற்பு.

இதனால், பலரும் TikTok நகர்ந்ததால், இனி நீண்ட காணொளிகளுக்கு வரவேற்பில்லை என்று இன்ஸ்டா மற்றும் கூகுள் முடிவு செய்து குறுங் காணொளிகளை அறிமுகப்படுத்தின.

இன்ஸ்டா நிறுவனம் Reels என்றும், கூகுள் Shorts என்றும் அறிமுகப்படுத்தின.

இன்ஸ்டா ஏற்கனவே இளையோரிடையே பிரபலம் என்பதால், உடனடியாகப் பிரபலமடைந்தது அதோடு இந்தியாவில் TikTok தடையும் முக்கியக்காரணம்.

எதனால் காணொளிகள் நிமிடம் குறைந்தது?

ஏராளமான காணொளிகள் இருப்பதால், பெரிய காணொளிகளாகப் பார்க்க நேரமில்லை. எனவே, 1 நிமிடக் காணொளிகள் பிரபலமாகியது.

எப்படி இன்னமும் பெரிய கட்டுரைகளைப் படிக்கிறார்களோ, டெஸ்ட் போட்டியைப் பார்க்கிறார்களோ, அதே போலப் பெரிய காணொளிகளைப் பார்க்கவும் பெரும் கூட்டம் உள்ளது.

ஆனால், இளையோரைக் கவர்ந்தது குறுங் காணொளிகள் தான். பெரிய விளக்கத்தைக் கேட்கப் பொறுமையில்லை, ஏதா இருந்தாலும் சுருக்கமாக வேண்டும்.

வருமானம்

தற்போது நிறுவனங்கள் இலாபத்தைப் பகிர்வதால், பலரும் இதில் Reels, Shorts வெளியிட்டு வருவதை வழக்கமாக்கியுள்ளார்கள்.

இது பணம் மட்டுமே அல்ல, பிரபலம், லைக்ஸ் ஆகியவற்றுக்காகவும் அடங்கும்.

தற்போது எல்லை மீறிச் சென்று கொண்டுள்ளது. Prank என்ற பெயரிலும், லைக்ஸ்க்காகவும் பலர் பைத்தியமாகவே மாறி விட்டனர்.

சாலையில் ரீல்ஸ்க்காக கிறுக்கன், கிறுக்கி போல ஆடிக்கொண்டு, எதையாவது செய்து கொண்டுள்ளார்கள்.

குடும்ப ரீல்ஸ்

திருமணமான பெண்கள் உட்பட பலர் அரைகுறையாக உடையணிந்து காணொளிகளை வெளியிடுவது மோசமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

லைக்ஸ்க்காக இவ்வளவு கீழ்த்தரமாக இறங்க வேண்டுமா?! இக்காணொளிகளைப் பார்ப்பவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன மதிப்பு வைத்து இருக்க முடியும்?

புதுப்பேட்டை படத்தில் தனுஷ் கேட்பாரே,

உங்களை எல்லாம் வீட்டுல தேட மாட்டாங்களா?‘ என்று அது மாதிரி, இவங்க வீட்டுல இவற்றையெல்லாம் கண்டிக்க மாட்டாங்களா?

கணவன், மனைவி ரீல்ஸ்ல இன்னும் இவர்களுடைய அந்தரங்கத்தை மட்டும் தான் கொண்டு வரவில்லை, மற்றபடி அனைத்தும் வந்து விட்டது.

பிரைவசி பற்றிய யோசனையே இருக்காதா?! என்று வியப்பாக உள்ளது.

இன்னொரு சேனலில் அம்மா, அப்பா, கணவன், மனைவி, குழந்தை என்றே குடும்பமே ரீல்ஸ் செய்து கொண்டுள்ளார்கள். என்ன கொடுமை சார்!

தொழில்

பலர் சம்பாதிக்கும் துறையாக YouTube யை மாற்றியுள்ளார்கள்.

தொழில் ரீதியாக இதை மாற்றுபவர்களைப் பற்றிக் குறை கூற முடியாது காரணம், இது இல்லையென்றாலும் அவர்களுக்கு ஒரு தொழில் தெரியும், அதை வைத்து வாழ்க்கையைத் தொடர முடியும்.

ஆனால், Prank செய்வது, எதையாவது நகைச்சுவை என்ற பெயரில் செய்வது என்று தொடர்பவர்கள், ஒரு கட்டத்தில் வளர்ந்த பிறகு அவர்களுக்கான வரவேற்பு குறையும்.

அதாவது, ஒன்று அவர்களுக்கான கன்டென்ட் குறையும் அல்லது வயது அதிகமாகும். அப்போது அவர்களுடைய எண்ணங்களில் வறட்சி ஏற்படும்.

அவ்வாறு ஆகும் போது பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தால், வருமானமும் குறையும். இதனால், பல்வேறு நெருக்கடிக்குள்ளாவார்கள்.

எந்தத் தொழிலும் தெரியாது, எந்த வேலைக்கும் போக முடியாது காரணம், இதையே கல்லூரி முடிந்ததிலிருந்து பிழைப்பாக வைத்து இருந்து இருப்பார்கள்.

சமீபத்தில் ஒரு மீம் பார்த்தேன், கஷ்டப்பட்டுப் படித்து, பட்டம் வாங்கி இறுதியில் ‘Welcome to My YouTube Channel’ என்று கூறுவதற்கா இவ்வளவும்!

இன்ஸ்டா பிரபலம்

தற்போது இன்ஸ்டாவில் பிரபலமானவர்களைக் கல்லூரிக்கும் அழைக்கிறார்கள்.

என்ன காரணம் என்றால், மற்ற பிரபலங்களை அழைத்தால் ₹10,00,000 வரை கேட்கிறார்கள். இவர்கள் என்றால் சில ஆயிரங்களில் முடிந்து விடும் என்கிறார்கள்.

இது தான் இன்ஸ்டா பிரபலங்களைக் கல்லூரிகளுக்கு அழைக்கக் காரணமாம்.

சமூக மாற்றங்கள்

இத்தொழில்நுட்ப மாற்றம் தவிர்க்க முடியாது என்றாலும், பலரின் வாழ்க்கையை, குடும்பத்தைச் சீரழிக்கப்போகிறது. துவக்கத்தில் விளையாட்டாக இருந்தாலும், முடிவில் இது வினையாகவே முடியும்.

பொது இடத்தில் Prank செய்பவர்களிடம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மகிழ்ச்சிக்காக, சம்பாதிக்க பொது இடத்தில் ஒருவரை கோமாளியாக்குவது எப்படி நியாயமாகும்?

இன்ஸ்டா, Shorts காணொளி லைக்ஸ், பார்வைகள் ஒரு போதை, சுழல் அதில் சிக்கிக்கொண்டால், வெளியே வருவது மிகக்கடினம்.

அப்போது TikTok தற்போது Reels ஆனால், காட்சிகள் ஒன்றே!

எச்சரிக்கையாக இருங்கள்!

தொடர்புடைய கட்டுரை

“Tik Tok” ஏற்படுத்தப் போகும் புயல்!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here