ஜெ காலமான பிறகு வலிமையான ஆளுமைத்தலைவர் இல்லாததால் திமுக பலம் வாய்ந்த கட்சியாக மாறி விட்டது. இப்படி பலமான கட்சியான திமுகவை வீழ்த்த முடியுமா? என்று பார்ப்போம். Image Credit
திமுக
வாயாலே வளர்ந்த கட்சி திமுக. துவக்கத்திலிருந்து தனது பேச்சுத்திறனாலே மக்களைக் கவர்ந்து, பொய்களை நம்ப வைத்து வெற்றி பெறும் கட்சி.
வெறும் பொய்களைக் கூறி ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று விட முடியாது. எனவே, அவர்கள் செய்த வளர்ச்சி திட்டங்களும் பல உள்ளன.
ஆனால், இவை எல்லாம் கடந்த கால செய்தியாகி விட்டது. 2000 க்கு பிறகு ஊழல் மட்டுமே அதிகரித்து வளர்ச்சி திட்டங்கள் குறைந்து வருகிறது.
அதிலும், 2021 ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மிக மோசமாகப் போய்க்கொண்டுள்ளது.
திமுக இன்னும் பெயரைப் பெறுவதற்குக் காரணம், இங்கே துவங்கப்படும் தொழில் நிறுவனங்கள். இங்கே மற்ற மாநிலங்களுக்கு சவால் விடும் வகையில் தொழில் நிறுவனங்கள் வருகின்றன.
இதற்கு திமுக மட்டுமல்ல, வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் இதே தான் நடந்து இருக்கும். எண்ணிக்கையில் முன்ன பின்ன இருக்கலாம் அவ்வளவே.
காரணம், அதற்கு இங்குள்ள சூழல், மக்களின் ஒத்துழைப்பு, துறைமுகம், படித்தவர்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு காரணிகள் உள்ளன.
திமுக பலம் வாய்ந்த கட்சியா?
ஜெ காலமான பிறகு திமுக மட்டுமே பலம் வாய்ந்த கட்சியாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
திமுக தோராயமாகத் தேர்தலில் 30% முதல் 35%+ வாக்குகளைப் பெறுகிறது ஆனால், மீதம் 10%+ வாக்குகள் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடனே பெறப்படுகிறது.
10 வருடங்கள் ஆட்சி செய்த அதிமுகவை விட 4% மட்டுமே 10 வருடங்கள் எதிர்க்கட்சியாக இருந்த திமுக 2021 தேர்தலில் அதிகம் வாக்குகள் பெற்றது.
கட்சி துவங்கிய காலத்திலிருந்து கூட்டணி இல்லாமல் தனித்து நிற்காத ஒரு பெரிய கட்சி தமிழகத்திலேயே திமுக மட்டுமே!
30% வாக்குகள்
ஒரு கட்சி தொகுதியில் வெற்றி பெறக் குறைந்த பட்சம் 30% வாக்குகள் தேவை. அப்போது தான் தொகுதியில் வெற்றியாக மாறும். இக்கணக்குகள் போட்டியிடும் கட்சிகள் / கூட்டணி எண்ணிக்கையைப் பொறுத்துக் கூடக் குறையலாம்.
எடுத்துக்காட்டுக்கு, 2026 தேர்தலில் தற்போதுள்ள நிலைக்குப் பல கட்சிகள் போட்டியிடும். எனவே, அந்த நேரத்தில் இந்தச் சதவீதங்கள் குறையலாம். காரணம், வாக்குகள் பிரிவதால்.
திமுக பலமான கட்சி என்று கூற முடியாது மாறாக பலம் வாய்ந்த கூட்டணி கட்சி என்று கூறலாம். தனித்து நின்றெல்லாம் வெற்றி பெற முடியாது.
அதை உறுதியாக திமுக செய்யவும் மாட்டார்கள்.
எனவே, திமுக பலம் வாய்ந்த கட்சி என்பதெல்லாம் ஒரு மித். ஊடகங்களின் ஆதரவு இருப்பதால், திமுக தன் தவறுகளை மறைத்துத் தன்னை பெரிய ஆளாகக் காட்டிக்கொண்டுள்ளது.
கட்சிகளால் பிரியும் வாக்குகள்
தற்போது (2024) நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது. இதில் நாம் தமிழரைப் பிரித்து விடலாம் காரணம், அவர்கள் தனியாக வாக்கு சதவீதத்தை வைத்துள்ளார்கள் அதோடு கூட்டணியில் இல்லை.
எனவே, இவர்களால் மாற்றம் எதுவுமில்லை.
ஆனால், அதிமுகவிலிருந்து பாஜக பிரிந்து விட்டது. எனவே, இக்கூட்டணியின் வாக்குகள் பிரியும், புதிய வாக்குகள் சேரும்.
2024 தேர்தலில் 15% வாக்கைப் பாஜக உறுதியாகப்பெறும். தேர்தலுக்குள் நடக்கும் பரப்புரைகளால் 20%+ வரலாம்.
திமுக கூட்டணியில் மாற்றங்கள் இல்லையென்பதால், அவர்களுக்கு இழப்பு இல்லை ஆனால், கடந்த மூன்று வருடங்களில் திமுக செய்த சொதப்பல்களால் வேறு கட்சிக்கு வாக்களிப்பவர்களால் இங்கே சதவீதம் குறையும்.
இவ்வாறு பிரியும் வாக்குகள் அதிமுக பாஜக நாதக ஆகிய கட்சிகளுக்குச் சிதறும்.
எனவே, ஒரு பேச்சுக்கு எதிர்ப்பலை காரணமாக திமுக 30% வாக்குகளைப் பெறுகிறது என்றால், பாஜக தோராயமாக 20% வாக்குகளைப் பெறுகிறது என்றால், 10% வாக்குகள் தான் வித்தியாசம்.
பாஜக வளரும் கட்சி, திமுக தேயும் கட்சி. எனவே, எதிர்காலத்தில் இடைவெளி குறைந்து கொண்டே வரும்.
திமுக ஏன் பலமானது?
தற்போது திமுக பலமாக இருப்பதற்குக் காரணம், திமுகவின் CORE வாக்காளர்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் கட்சி மாற மாட்டார்கள் ஆனால், மாறுவார்கள்.
யார் மாறுவார்கள் என்றால், 45 – 50 வயதுக்குக் கீழே இருப்பவர்கள் ஆனால், அதற்கு மேலே இருப்பவர்கள் மாறுபவர்களின் சதவீதம் மிகக்குறைவு.
என்ன நடந்தாலும், சூரியனுக்கே வாக்களிப்பார்கள். இதெல்லாம் மாறுவது எளிதல்ல.
இளைஞர்கள் பெரும்பாலும் மாற்றத்தை விரும்புவார்கள் ஆனால், திமுக இன்னும் பழைய அரசியலையே செய்து கொண்டுள்ளது.
இவை தற்கால இளையோரை ஈர்க்காது.
திமுக வளர்ந்ததே இளையோரை வைத்துத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே சுழற்சி முறையைத் திமுக எதிர்கொள்கிறது.
திமுகவில் இளையோர் உள்ளனர் ஆனால், போலி பரபரப்புரைகளால், தான் புத்திசாலி என்ற வழக்கமான பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.
இவர்கள் எதிர்காலத்தில் எண்ணத்தை மாற்றிக்கொள்ள கூடிய நபர்கள்.
காரணங்கள்
பெரும்பாலான மக்களுக்கு திமுக போலி மதச்சார்பின்மை அரசியல், ஊழல், கொள்ளை போய்ச் சேரவில்லை. இன்னும் பலருக்கு சன் தொலைக்காட்சி மட்டுமே தெரியும், இவர்கள் சொல்வதே செய்தி.
என்ன நடந்தாலும், இவர்கள் திமுகவுக்கே ஆதரவளிப்பார்கள். இதை விட முக்கியமானது தேர்தலில் வாக்களிப்பார்கள் 🙂 .
புரட்சி பேசும் இளையோர் தேர்தல் நாளை விடுமுறை தினக் கொண்டாட்டமாகக் கருதி, இதுவரை பேசியதை காற்றில் விட்டு, வாக்களிப்பதில் தவறி விடுவர்.
இந்த அனுகூலம் திமுகவுக்கு உண்டு, அதிமுகவுக்கும் உண்டு.
இவற்றோடு சிறுபான்மையினர் வாக்கு திமுகக்கு சாதகம் அதிலும் குறிப்பாக திமுக தங்களுக்கு எதுவும் செய்யவில்லையென்றாலும் 80% – 90% முஸ்லீம்கள் வாக்குகளைச் செலுத்துகிறார்கள்.
எனவே, இது போன்ற காரணங்களால் திமுக வாக்கு வங்கி குறிப்பிட்ட சதவீதம் எந்த அரசியல் மாற்றங்கள் வந்தாலும் மாறாமல் உறுதியாக உள்ளது.
எதனால் ஆதரிக்கிறார்கள்?
இந்துக்களைக் கேவலமாகப் பேசுகிறார்கள், இந்துக் கடவுளை இழிவுபடுத்துகிறார்கள், இந்து வழிமுறைகளைக் கிண்டலடிக்கிறார்கள் ஆனாலும் எப்படி இந்துக்கள் ஆதரிக்கிறார்கள்? என்ற கேள்வி பல காலமாக எனக்குண்டு.
எதனால் பாஜகவை எதிர்க்கிறார்கள் என்பதும்.
இதைப் பலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் அதாவது, சண்டைக்குச் செல்லவில்லை ஆனால், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டு.
வயது 35
நன்கு பழக்கமான நண்பர், 35 வயது இருக்கும். இவர் திமுக ஆதரவாளர், ஐடி பணியில் உள்ளார்.
‘இவரிடம் இது பற்றிக் கேட்டுப்பார்ப்போம், சண்டை போடக் கூடாது, தெரிந்து கொள்ள மட்டுமே எனவே, கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்‘ என்று துவக்கத்திலேயே முடிவு செய்து கொண்டேன்.
அவரிடம் ‘எதனால் பாஜகவை எதிர்க்கிறீர்கள்?‘ என்று காரணம் கேட்ட போது வழக்கமாக திமுக ஆதரவாளர்கள் கூறும் பதிலைக் கூறினார்.
அதாவது, பாஜக வட மாநில கட்சி, நிதிப் பங்கீடு, மத பிரச்சனை உட்படக் காரணங்களைக் கூறினார். அதற்குச் சரியான காரணங்களோடு பதிலைக் கொடுத்த போது அவரிடம் பதில் இல்லை.
‘அண்ணாமலையை எதனால் எதிர்க்கிறீர்கள்?‘ என்ற கேட்டதற்கும் அவரால், சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை.
இவர் இளைஞர் என்பதால், நான் கூறியதில் உள்ள நியாயமான கேள்விகளைப் புரிந்து கொண்டு, ‘நீங்க கூறுவது சரி தான் ஆனாலும்…‘ என்று இழுத்தார்.
அவரிடம் சரியான வாதம் இல்லை என்பது புரிந்தது.
சண்டையிடும் எண்ணம் இல்லாததால், குறைந்த பட்சம் யோசிக்க வைத்தோம் என்ற எண்ணத்தில் வேறு பொதுவான விஷயங்களைப் பேசிக் கிளம்பி விட்டேன்.
வயது 55+
இன்னொரு தீவிர திமுக ஆதரவாளர், வயது 55+.
இவரிடம் பேசவே முடியாது, பாஜகவைக் குதறி எடுத்து விடுவார். திமுகவின் அனைத்துச் செயல்களுக்கும் நியாயம் கற்பிப்பார், கூறுவதைக் காது கொடுத்துக் கூடக் கேட்க மாட்டார். அதி தீவிர திமுக ஆதரவாளர்.
இவரிடம் அரசியல் பேசுவதையே நிறுத்தி விட்டேன். பாஜக பற்றிப் பேசினாலே இவரிடம் ஆக்ரோஷமான கோபம் உச்சத்தில் இருக்கும்.
சந்திரமுகி படத்தில் தலைவர் கேட்டதும் ஜோதிகா கோபம் ஆவாரே அது போல 🙂 . பாஜக வளர்ச்சி, தன் கட்சிக்குப் போட்டியாக வருகிறது என்ற கோபமாக இருக்கலாம்.
‘உதயநிதிக்கெல்லாம் கொடி பிடிக்கிறீர்களே?!‘ என்றால், ‘இதைத் தொடரவில்லையென்றால், கட்சி இருக்காது. எனவே, இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்‘ என்கிறார்.
அடிமையாக இருப்பதை இழிவாகக் கருதவில்லை ஆனால், உறுதியான தலைமை இல்லாமல் அதிமுக போலக் கட்சி கலகலத்து விடக் கூடாது என்று நினைக்கிறார்.
தன் சுய கௌரவத்தை விடக் கட்சி நிலையை முக்கியமாகக் கருதுகிறார்.
விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிப்பார்த்தால், கேவலமான எண்ணமாக இருந்தாலும், கட்சிக்காரர் என்ற அளவில் எதார்த்தமாகத் தான் உள்ளது.
வித்தியாசம்
எடுத்துக்காட்டுக்கு, உதயநிதி அல்லாமல் அடுத்து வேறொருவர் கட்சித் தலைமையாக வந்தால், கட்சியில் குழப்பங்கள், போட்டிகள் வரும் என்றே தோன்றுகிறது. இதைத்தான் அவரும் சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.
தற்போது மேற்கூறிய இளையோர், மூத்தவர்கள் குறித்து கூறியதன் வித்தியாசம் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
இளையோர் லாஜிக் பார்ப்பார்கள் குறைந்த பட்சம் யோசிப்பார்கள் ஆனால், பெரியோர்கள் லாஜிக் தவிர்த்து தங்கள் முடிவில் உறுதியாக இருப்பார்கள்.
இவை பெரும்பான்மையை மனதில் வைத்துக்கூறப்பட்டது எனவே, விதிவிலக்குகளைக் கணக்கில் கொள்ள வேண்டாம்.
மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் 100% உண்மை, கற்பனை கிடையாது.
மாறுவது கடினம் ஆனால், நடக்கும்
எனவே, 45 – 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் திமுகவை விட்டு மாறுவார்கள் என்பது மிகக்குறைந்த அளவிலேயே நடக்கும் ஆனால், நடக்கும்.
இந்த வயதுக்கு கீழே உள்ளவர்களிடையே தான் பெரும்பான்மை மாற்றம் நடக்கும்.
பல தலைமுறைகளைக் கடந்த கட்சி, அடித்தளம் பலமானது எனவே, சிலர் நினைப்பது போல அவ்வளவே எளிதாக திமுகவை வீழ்த்த முடியாது.
ஆனால், திமுகவின் ஊழல், கட்ட பஞ்சாயத்து, போலி மதச்சார்பின்மை, போலி சமூகநீதி, டாஸ்மாக், கஞ்சா, மோசமான நிர்வாகம், சட்ட ஒழுங்குச் சீர்கேடு ஆகியவை திமுக எதிர்ப்பு வேகத்தை அதிகரிக்கும்.
தான் வளரப் பாஜக முயல்கிறது என்றாலும், அதற்கு உறுதுணையாக பாஜக வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்தத் திமுகவும் மேற்கூறிய செயல்களால் உதவுகிறது.
இளமையான கட்சி
தற்போதைக்கு இளமையான கட்சியாக இருப்பது, புதிய சிந்தனைகள், இளையோர் ஆதரவு, வேகத்துடன் இருப்பது பாஜக மட்டுமே!
நாம் தமிழர் உள்ளது ஆனால், அவர்கள் எதார்த்த அரசியலிலிருந்து விலகி இருக்கிறார்கள். சீமானுக்கும் கட்சியை வளர்க்கும் எண்ணமில்லை.
எனவே, பாஜக மட்டுமே தற்போதைய மாற்று வாய்ப்பாக உள்ளது.
2024 தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக வந்தால், திமுகவின் வீழ்ச்சி வேகமாகும், பாதகமாக வந்தால், வேகம் குறையும் ஆனால், எதிர்காலத்தில் பாஜகவால் திமுக வீழ்த்தப்படுவது நடக்கும்.
எப்போது நடக்கும் என்பதில் முன்ன பின்ன இருக்கலாம் ஆனால், நடப்பது உறுதியே. சுருக்கமாக, திமுக வீழ்த்தப்படக்கூடிய கட்சியே!
எதிர்காலம் தேசியம் Vs திராவிடம் தான்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இன்னும் 20 நாட்களில் தேர்தல் வருவதால், பெரும்பான்மை கட்டுரைகள் அரசியல் சார்ந்தே இருக்கும்.
அதன் பின்னர் வழக்கம் போல அனைத்து வகை கட்டுரைகளும் வரும்.
நன்றி.
I agree with your views Giri. Except I feel BJP’s vote share in 2024 may be around 10 to 15% maximum.
Also, I feel removing DMK from ruling party status is likely to be slower by BJP alliance.
Only thing that can speed up DMK’s downfall in my opinion is the corruption and money laundering cases and drug possession cases which will definitely be speeded up by Modi 3.0 Govt as they are already aggressive now before elections and will go in top gear post elections.
2G case is also going to start by Delhi HC from May but it will only be reviewing of already recorded evidences based on which judgment will be pronounced.
These things may make DMk become rudderless as many leaders will go inside jail and public will become angry which may reflect in 2026 elections against DMK and BJP alliance may get the chance to form a first coalition govt in TN. Let’s see.
நீங்கள் சிறந்த பாஜக ஆதரவாளன் என்பது இதிலிருந்து தெரிகிறது.ஏன் பாஜக இந்து மதத்தை மட்டும் வைத்து அரசியல் செய்யவில்லையா?
கிரி.. தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளையும், நடக்கின்ற நிகழ்வுகளையும் பார்க்கும் போது ஒன்றுமே கூறுவதற்கு இல்லை.. சில சமயம் அரசியல் குறித்த எந்த செய்திகளையும், தகவல்களையும் பார்க்கவே வேண்டாம் என்று தோன்றுகிறது.. சில ஆண்டுகளுக்கு முன்பு என் பார்வையில் திரு.சகாயம் அவர்கள் மூலம் ஏதேனும் ஒரு மாற்றம் இங்கு நிகழும் என்ற கனவிருந்தது.. ஆனால் அது காணல் நீராகி போனது..
அரசியல் என்பது சேவை என்பதை தாண்டி அது வணிகம் / வியாபாரம் என்றாகி போனதால் இங்கு இலாப / நட்ட கணக்குகள் தான் முன்னிலை படுத்தப்படுகிறது.. நாம் எவ்வளவு சம்பாரிக்க வேண்டும்.. கட்சிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்.. அரசியல்வாதிகள் எந்த அடிப்படை கல்வி தகுதிகள் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று விட்டு ஆட்சி, அதிகாரம் கையில் வந்த பிறகு இவர்களது ஆட்டம் வேறு மாதிரி இருக்கிறது..
காலத்திற்கு தகுந்தாற்போல் எல்லாவற்றிலும் மாற்றங்கள் வருவது போல் அரசியல்வாதிகளுக்கும், தேர்தலில் போட்டியிட அடிப்படை கல்வி தகுதி நிச்சயம் வைக்க வேண்டும்.. குறைந்த பட்சம் இவர்களது பொது அறிவை / உலக அறிவினை சோதிக்கும் ஒரு தேர்வு நிச்சயம் தேவை. மன்னராட்சியின் போது தான் எந்த தகுதியும் இல்லாமல் வாரிசு அரசியல் இருந்தது.. அது முடிவுக்கு வந்தும் இன்றும் தற்போதும் வாரிசு அரசியல் தொடர்கிறது..
I think bjp should have gone with admk, ground reality is not in favour of bjp
@அருண்
பாஜக குறைந்தபட்சம் 15%, மேலும் அதிகரித்து 20% வரை செல்லலாம் என்று கருதுகிறேன்.
நான் ஆய்வாளன் அல்ல, பல காணொளிகள், கட்டுரைகள் படித்ததில் உணர்ந்து கொண்டது.
“These things may make DMk become rudderless as many leaders will go inside jail and public will become angry which may reflect in 2026 elections against DMK and BJP alliance may get the chance to form a first coalition govt in TN.”
தெரியலை பார்ப்போம்.
@செந்தில்
“நீங்கள் சிறந்த பாஜக ஆதரவாளன் என்பது இதிலிருந்து தெரிகிறது”
இதற்கான பதிலைத் தெளிவாக 2021 ம் ஆண்டே கூறி விட்டேனே. https://www.giriblog.com/neautral-is-possible-or-not/
“ஏன் பாஜக இந்து மதத்தை மட்டும் வைத்து அரசியல் செய்யவில்லையா?”
கண்டிப்பாக செய்கிறது.
ஆனால், திமுக தலைவர்களைப் போல பாஜக தலைவர்கள் மற்ற மதங்களை இழிவுபடுத்தவில்லையே.
கட்சித்தலைவரான ஸ்டாலினே இந்து மதத்தை இழிவுபடுத்துகிறாரே. இது போல மோடியோ, அண்ணாமலையோ மற்ற மதங்களை இழிவுபடுத்தவில்லையே.
@யாசின்
“குறைந்த பட்சம் இவர்களது பொது அறிவை / உலக அறிவினை சோதிக்கும் ஒரு தேர்வு நிச்சயம் தேவை”
அப்படியென்றால், அண்ணாமலை மட்டுமே வெற்றி பெறுவார் 😀
@மனோஜ்
“I think bjp should have gone with admk, ground reality is not in favour of bjp”
இதற்கான பதில் இங்கே உள்ளது https://www.giriblog.com/who-will-benefit-from-2024-parliament-election-in-tamilnadu/