தலைவர் ரஜினி

43
தலைவர் ரஜினி

லைவர் ரஜினி மீது அதீத அன்பு கொண்டுள்ளவர்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, திரைத்துறை என்பதையும் தாண்டி ரசிக்கும் ஏராளமான மக்கள் என்பது ரஜினிக்கு உடல்நலம் இல்லாமல் போனபோது தான் உண்மையாக அறிந்து கொண்டேன்.

ரஜினியை கிண்டல் அடித்துக்கொண்டு இருக்கும் என் நண்பர்கள் சிலர் எல்லாம் அக்கறையாக விசாரித்த போது தான் ரஜினி எத்தனை பேர் மனங்களில் நுழைந்து இருக்கிறார் என்பதை அனுபவப்பூர்வமாகத் தெரிந்து கொண்டேன்.

எத்தனை விசாரிப்புகள்! Image Credit

தலைவர்

இன்றைய தேதிக்கு NDTV வரை எல்லோருக்கும் தெரிந்த தலைவர் என்றால் அது “ரஜினி” தான்.

பலரும் ரஜினியை தலைவர் என்று அழைப்பதால் எதோ அழைப்பவர்கள் அனைவரும் தொண்டர்கள் போலவும் ரஜினி அரசியல் கட்சித்தலைவர் போலவும் நினைத்து என்னய்யா! சும்மா தலைவர் தலைவர் னு சொல்லிட்டு இருக்கீங்க…இப்படி தலைவர் கோஷம் போட்டே அழிந்து போங்கள்! என்று தங்களை புத்திசாலிகளாகவும் இவ்வாறு அழைப்பவர்களை முட்டாள்களாகவும் நினைத்துக்கொண்டுள்ளார்கள்.

இது பற்றி நீண்ட நாட்களாகக் கூற வேண்டும் என்று நினைத்து இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை தற்போது அதைக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வித்யாசம்

ரஜினியை தலைவர் என்று கூறுவதற்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவரைத் தலைவர் என்று கூறுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.

வார்த்தைகளில் ஒன்றாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமாக வேறு வேறு.

இதை இவ்வாறு கூறுபவர்களால் மட்டுமே உணர முடியும் மற்றவர்களுக்கு இது ஒரே மாதியான வார்த்தை தான். எனவே இவர்களால்(உங்களால்) என்றும் இந்த வித்யாசத்தை என்றும் புரிந்து கொள்ள முடியாது.

தலைவர் என்ற வார்த்தையை அரசியல் கட்சிகள் எல்லாம் சுயலாபத்திற்க்காகப் பயன்படுத்துவார்கள் தங்கள் வேலை நடக்க வேண்டும் என்பதற்காகப் போலியாகப் புகழ்ச்சியாகக் கூறும் வார்த்தைகள் அவை.

தங்களுக்கு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக அவரை உயர்த்திக் கூறும் வார்த்தைகள் ஆனால் ரஜினியை தலைவர் என்று யாரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பாகக் கூறுவது.

சுருக்கமாகக் கூறுவதென்றால் உங்களுக்கு ரொம்பப் பிடித்த ஒருவரை அல்லது  வயதில் மூத்தவராக இருப்பதால் பெயரைக் கூறி அழைக்க முடியாததால் “சொல்லுங்க தலைவரே” என அன்பாக அழைப்பீர்களே அதனோடு ஒப்பிடக்கூடியது.

உங்கள் நண்பரைத் தலைவர் என்று அழைத்ததால், அவர் அரசியல் கட்சித் தலைவராகவும் நீங்கள் அவருடைய தொண்டராகவும் மாறி விட்டீர்களா என்ன!

இதைப் புரிந்து கொண்டாலே ரஜினியை அனைவரும் அவ்வாறு கூறுவதன் அர்த்தம் புரிந்து கொள்ள முடியும். இதுவரை எத்தனையோ நடிகர் வந்துள்ளார்கள் ஆனால் தலைவர் என்றால் அது ரஜினி தான். (வாத்தியார் என்றால் அது MGR போல).

ரஜினியை தலைவர் என்று கூறுவதை யாரும் இழுக்காக நினைக்கவில்லை பெருமையாகவே கருதுகிறார்கள். ஏனென்றால் அதற்கான அர்த்தத்தை உணருவதால்.

இன்றைய தலைமுறை நடிகர்கள் கூடத் தலைவர் படம் என்றால் முதல் நாள் முதல் ஷோ ங்க என்று கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அது பிரியத்தினால் வரும் வார்த்தை.

ஆண்கள் தான் இவ்வாறு கூறுகிறார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். ரஜினியை தலைவர் என்று அழைக்கும் எண்ணற்ற பெண்களைச் சந்தித்து உள்ளேன்.

என்னிடம் ‘என்ன கிரி உங்க தலைவர் என்ன சொல்றாரு?’ என்று கேட்கும் எத்தனையோ பெண் நண்பர்களைச் சந்தித்து உள்ளேன்.

அம்மா அக்கா போன்றோர் கேட்கும் சாதாரணமான கேள்விகள் இவை.

இவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? என்  பெண் நண்பர்கள் பலர் ரஜினி என்று அழைக்காமல் தலைவர் என்று அழைப்பதை கூறக்கேட்டு உள்ளேன்.

இவை எல்லாம் ஒரு மரியாதை கலந்த அன்பினாலையே தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.

NDTV தனது செய்தியிலேயே ரஜினியை “தலைவர்” என்று கூறுகிறார்கள் இவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?

காரணம் ஒன்று தான் ரஜினி என்ற மனிதர் மதங்கள் மொழிகள் மாநிலங்கள் கடந்து அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்பதே அது.

ரஜினியை பிடிக்காதவர்களுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் உண்மையை ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்.

மறைந்து இருக்கும் அன்பு

ரஜினி பற்றி எத்தனையோ கட்டுரைகளை எழுதி உள்ளேன் ஆனால், என்றும் மற்ற நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்தது இல்லை.

கொஞ்சம் மெச்சூர்டான ரசிகனாகவே நடந்து கொண்டுள்ளேன்.

தீவிர ரசிகர்களைப்போல டெர்ரராக நடந்து கொண்டதில்லை ஆனால் அப்படிப்பட்ட எனக்கே ரஜினி உடல்நிலை சரியில்லை என்ற போதும் அவரைப் பற்றித் தவறாக வதந்திகள் உலவிய போதும் தாங்க முடியவில்லை கண் கலங்கி விட்டேன்.

என்னைவிட எவ்வளவோ மடங்கு அதிகம் அன்பு வைத்து என்னைப்போல மெச்சூர்டான ரசிகர் என்ற நிலையில் இல்லாமல் வெளிப்படையாக அவரைத் தாறுமாறாக ஆதரிக்கும் ரசிகர்களை நினைத்த போது, சில நேரங்களில் நான் மெச்சூர்ட் என்ற பெயரில் போலியாக இருக்கிறேனோ என்று நினைத்ததுண்டு.

ரசிகன் என்பவன் எங்கும் ஒன்று தான் சில நடவடிக்கைகளில் மட்டுமே வேறுபாடு என்பதை உணர முடிகிறது. மூளை அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தாலும் மனது என்று வரும் போது அது அனைவருக்கும் ஒன்று தான் என்றாகி விட்டது தலைவர் விசயத்தில்.

Read: ரஜினிக்கு “ரசிகனாக” இருப்பதில் என்ன தவறு?

தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற போது முதலில் பெரிதாகப் பாதிக்கவில்லை காரணம், மனிதன் என்றால் பிரச்சனை வருவது சகஜம் தானே ஆனால், அதையொட்டி வந்த வதந்திகள் தான் மனதை ரொம்பப் பாதித்து விட்டது.

கூகிள் தேடுதலில் “Rajini” என்று தேடினாலே இச்செய்தி வரும் அளவுக்குகப் பரவி விட்டது. பிறகு, உடலில் உள்ள பிரச்சனைகள் பற்றி ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கிப் ‘பெரிய பாதிப்பில்லை‘ என்று கூறினாலும் சமாதானம் ஆகவில்லை.

ரஜினிக்கும் எனக்கும் என்னைப் போன்ற ரசிகர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்தப் பதட்டம்? ஏன் இந்த விசாரிப்பு?

இவ்வளவு வருடங்களாக ரஜினி ரசிகனாக இருந்தாலும் தற்போது தான் உண்மையாகவே நான் ரஜினி மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

வெறும் ரசிகன் என்பதையும் தாண்டி எதோ ஒரு அன்பு உள்ளது என்பதை புரியவைக்கிறது. சினிமா என்பதையும் தாண்டி ரசித்தால் மட்டுமே சாத்தியம்.

ரஜினி ரசிகர்களாக இல்லாதவர்கள் கூட அக்கறையோடு ரஜினியைப் பற்றி விசாரிக்கும் போது தான், தலைவர் எத்தனை பேர் மனங்களில் சினிமா என்பதையும் தாண்டி மனதில் வீற்று இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

எத்தனை குடும்பங்களில் ரஜினிக்காகப் பிரார்த்தித்தார்கள் என்பதை உண்மை அறியும். தங்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு என்பது போலத் துடித்த உள்ளங்கள் எத்தனை.

இவை நிச்சயம் அலங்கார வார்த்தைகள் அல்ல.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதில் முழு நம்பிக்கை உண்டு. தலைவருக்கு ஏற்பட்டது கூட ஏதோ ஒரு காரணத்தால் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

ரஜினியும் என் அம்மாவும்

அம்மாவிற்கு உண்மையாகவே ரஜினி பிடிக்குமா அல்லது எனக்குப் பிடிக்கும் என்பதால் அவருக்கும் பிடித்ததா என்று இன்று வரை எனக்குக் குழப்பம்.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்ற போது என்னைவிட என் அம்மா அதிகம் கவலைப்பட்டார்கள்.

இவருக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? ரஜினியால் இவர் எதுவும் பயன் பெற்றாரா? அது தான் ரஜினி.

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு (இது நடந்து 10 வருடம் இருக்கும்) ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய ஒருவர் தன்னுடைய குழந்தை ரஜினியிடம் பேச வேண்டும் என்று அழுது அடம்பிடிப்பதாகவும் அதனால் ஏதோ ஒரு எண்ணை அழுத்தியதில் உங்கள் எண் வந்து விட்டதாகவும் கூறி மன்னிப்புக் கேட்டார்.

அம்மா அந்தக்குழந்தையை பேசக்கூறி

நான் ரஜினி அம்மா பேசுகிறேன் ரஜினி ஷூட்டிங்க்கிற்காக வெளியே சென்றுள்ளார். உன்னை அழாமல், அப்பா சொன்னபடி கேட்கக்கூறினார் அப்போது தான் உன்னை Good Boy என்பார்

என்று என் அம்மா கூறியதைக்கேட்டு அக்குழந்தை ‘அப்படியா! சரி‘ என்று அழுகையை நிறுத்தி விட்டு அமைதியானது.

இதற்கு அக்குழந்தையின் அப்பா நன்றி கூறியது மறக்க முடியாதது. இதைக்கூறி என் அம்மா “நான் ரஜினிக்கு அம்மாவாக நடித்து விட்டேன்” என்று பெருமைப்பட்டுக்கொள்வார்.

நடிப்பையும் தாண்டிய அன்பு

அம்மா போல எத்தனையோ பேர் ரஜினி மீது அன்பு வைத்து இருக்கக்காரணம் அவருடைய நடிப்பு என்பதையும் தாண்டி அவர் மீதுள்ள கொண்டுள்ள அன்பு தான்.

இது போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும் ஆனால், எந்த எடுத்துக்காட்டையும் கூறி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

ஏனென்றால், புரிந்து கொள்பவர்கள் உடனே புரிந்து கொள்வார்கள் புரிந்து கொள்ளாதவர்கள் எத்தனை விளக்கியும் புரிந்துகொள்ளப்போவதில்லை.

ரஜினியைப் பிடிக்காதவர்கள் தலைவர் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகளை வைக்கலாம் ஆனால், அவர்களால் ரஜினி ஒரு குடும்பத்தை ஏமாற்றி விட்டார் சொத்தை அபகரித்து விட்டார் என்று எந்தக் காரணத்தையும் கூற முடியாது.

தன்னால் எவரும் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்று நினைப்பவர் என்றும் தன்னுடைய சுயலாபத்திற்காகத் ரசிகர்களைப் பயன்படுத்தியதில்லை பயன்படுத்திக்கொள்ள எவ்வளவோ வாய்ப்புகள் கிடைத்த போதும்.

எப்போதும் குடும்பத்தைக் கவனியுங்கள் குடும்பம் தான் முக்கியம் அதன் பிறகு தான் மற்றதெல்லாம் என்று கூறுவார்.

நல்ல மனதை நல்ல எண்ணங்களைக் கொண்டவர்களுக்குச் சோதனைகள் வந்தாலும் முடிவில் நல்லதே நடக்கும் அந்த வகையில் தலைவரும் இந்தப் பிரச்சனையில் இருந்து விரைவில் மீண்டு வந்து ரசிகர்களைக் கண்டிப்பாக வழக்கம்போல மகிழ்விப்பார்.

ஊரை அடித்து உலையில் போடுகிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்கும் போது சிறு துரும்புக்கு கூடக் கெட்டது நினைத்து இராத உனக்கென்ன தலைவா! சரவெடியாகத் திரும்பி வா! உண்மை ரசிகர்கள் என்றும் உன்னுடன் இருப்போம்.

தலைவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை நினைத்துச் சந்தோசப்பட்டு தவறான வதந்திகளைப் பரப்பிவிட்டவர்களே! உங்களை எல்லாம் கடுமையாகத் திட்ட வேண்டும் என்று தான் நினைத்தேன்.

ஆனால், என்றும் அமைதியை விரும்பும் தன்னைப் பற்றிக் கேவலமாகப் பேசியவர்களைக்கூட எதுவும் கூறாமல் மன்னிக்கும் ரஜினியைப் பற்றி எழுதும் போது தரக்குறைவாக எழுதித் தலைவரை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று விடுகிறேன்.

உங்களுக்கெல்லாம் கீழே உள்ள காணொளியே போதும்.

43 COMMENTS

 1. ஒவ்வொரு ரசிகனின் மனதில் உள்ளதை அப்படியே எழுதி இருக்கீங்க அதற்க்கு நன்றி. தலைவர் உடல் நலம் தேறி வருவார். கவலை வேண்டாம். இத்தனை பேருடைய பிரார்த்தனையும் அவரை காப்பாற்றும்

 2. ரஜினியிடம் எந்த எதிர்பார்ப்புமே இல்லாதவர்கள்தான் ரசிகர்களாக உள்ளனர். ஆனால் சிலர் அவரிடம் உள்ள காழ்புணர்ச்சி காரணமாக ஒரு ரசிகனின் கடிதம் என்று அவதூறாக எழுதி அகமகிழ்ந்து கொள்கிறார்கள். தலைவா என்றால் வேறு அர்த்தம் என்று எல்லா ரசிகனின் மனதிலும் இருக்கும் விஷயத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டீர்கள். நன்றி.

 3. //நல்ல மனதை நல்ல எண்ணங்களை கொண்டவர்களுக்கு சோதனைகள் வந்தாலும் முடிவில் நல்லதே நடக்கும் அந்த வகையில் தலைவரும் இந்தப் பிரச்சனையில் இருந்து விரைவில் மீண்டு வந்து ரசிகர்களை கண்டிப்பாக வழக்கம்போல மகிழ்விப்பார்.//

  Yes Yes……………. 🙂

 4. Giri Anna,

  Kallkittenga..!!! Superb article at the right time….!!! Every line in this post is exact feelings of the fan..

  But Smtimes stardom creates unwanted things like that which they cant avoid… if we think thier family perspective it was very tough…No privacy at all….Hope Thalivar will come over this very quick….

  ithu yetho ullkuthu madhri irruka..??!!!! 🙂
  //ஊரை அடித்து உலையில் போடுகிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்கும் போது சிறு துரும்புக்கு கூட கெட்டது நினைத்து இராத உனகென்ன தலைவா!//

 5. தலைவர் வருவாரு, கலக்குவாரு, எதிரிகள் பாசறையை வழமைபோல தாங்கொணா வயித்தெரிச்சல் பட வைப்பாரு………….

 6. //இதுவரை எத்தனையோ நடிகர் வந்துள்ளார்கள் ஆனால் தலைவர் என்றால் அது ரஜினி தான். (வாத்தியார் என்றால் அது MGR போல).//

  நச்…

  தலைவரை பற்றின வதந்தி கிளப்பிவிட்டதே திமுகவினர் என்று கேள்விப்பட்டேன்.

 7. அருமையா எழுதியிருக்கீங்க கிரி நம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மன நிலையை வெளிபடுத்தியமைக்கு நன்றி

 8. கோடி நன்றிகள் கிரி சத்தியமா கண்ணு கலங்கிட்டேன்
  தலைவர் வருவார் அவருக்கே உரிய ஸ்டைல் ல பேசுவார்

 9. அரசியல்வாதி மேல நம்பிக்கை வைக்கிறாங்க. அவன் அரசியல் விட்டுப் போறேன்னு சொன்னா போதும், உடனே தீக்குளிக்க ரெடியா தொண்டனுங்க இருக்கிறாங்க, அவ்வளவு பிரியம் தலைவன் மேல. ஆனா, அவன் தொடனுக்கு எதையும் செய்வதில்லை, அவன் குடும்பத்துக்கு பணத்தைக் கொள்ளையடிக்கிறான் என்பதைப் பார்க்கும் போது கஷ்டமா இருக்கு. சாமியார் மேல நம்பிக்கை வைக்கிறாங்க, அவன் ஒழுக்கத்தைப் போதிச்சிட்டு தனிப்பட்ட முறையில ஒழுங்கீனமா இருக்கிறான். இதையும் பாத்தாச்சு. கிரிக்கெட் என்றாலும், கிரிக்கெட் வீரன் என்றாலும் உசிரையும் விடத் தயாரா சனம் இருக்கு, அவன் என்னடான்னா பெட்டிங் அது இதுன்னு குறுக்கு வழியில பணம் பார்க்கிரவனா இருக்கான். முழுசா நம்பி வந்த முப்பது நாப்பது பெண்களை கல்யாணம் பண்ணி அம்போன்னு விட்டுட்டு போனவனையும் பாத்தாச்சு. இப்படி திரும்பும் பக்கமெல்லாம், சனம் கசாப்புக் கடைக் காரன் மேல உசிரையே வச்சிருக்கிற ஆடு மாதிரி யாருக்காச்சும் உசிரை குடுக்க தயாரா இருக்காங்க. அவர்களில் பெரும்பாலும் இதை நினைத்துப் பார்க்காமல் சமயம் வரும் போது போட்டுத் தள்ளத் தயாராக இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். நீங்களும் ஒரு தலைவர் மேல நம்பிக்கை வச்சிருக்கீங்க. உங்க நம்பிக்கை வீணாகப் போயிடக் கூடாதுன்னு நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நண்பர்களே!

 10. pinnitteenga ponga.. namma thalaivaar innum niraya varudam nalla vaazhvaar sir.. nallavangalukku saavu seekram varathu

 11. தலைவர் படம் மாதிரி தான் உங்க பதிவும்… எப்போ வந்து எவ்ளோ தடவ படிச்சாலும் அட்டகாசமா இருக்கு:)

 12. கிரி ..,

  அன்னிக்கி சத்தியமா என்னக்கு வேலையே ஓடலை …,தக்காளி எவன் இந்த மாதிரி வதந்திய பரபுன்னான்னு தெர்ல ..,மாட்னா ….,தோல உரிச்சிடுவோம் ..,நான் எல்லாம் உங்கள மாதிரி மெசுர்டு ரசிகர்கள் இல்ல கிரி ..,அதான் ..,என்வழி .காம் அ தலைவர் படிக்கிறார் ன்னு கேள்வி பட்டதும் ..,அங்க பேச பயமா இருக்கு ..,

 13. ///// தலைவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை நினைத்து சந்தோசப்பட்டு தவறான வதந்திகளை பரப்பிவிட்டவர்களே! உங்களை எல்லாம் கடுமையாக திட்ட வேண்டும் என்று தான் நினைத்தேன் ////////

  அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம் ..,இங்க எவனா எடா கூடாம கமெண்ட் போட்டான் அவன இங்கயே சங்க அறுத்துடுவோம் ..,

 14. சார் ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட இந்த காளிங்கறவன் பொழச்சுக்குவான் சார்.. ரொம்ப கெட்ட பய சார் அவன்!! அவருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாதவங்க பரப்பி விட்ட வதந்தி அது .. விடுங்க கிரி சார்.. dont feel தலைவருக்கு இன்னும் எத்தன வேலை இருக்கு… ராணா வெற்றி விழாவுல பேசிப்போம் இவங்கள…

 15. அன்புள்ள ரஜினிகாந்த்
  அன்புள்ளம் கொண்ட ரஜினிகாந்த்

  அபூர்வ ராகமாய் அறிமுகமானாலும்
  என்றென்றும் எங்கள் அதிசய ராகம் அல்லவோ நீ

  ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்
  எங்கள் சாம்ராஜயத்தின் மன்னன் அல்லவோ நீ

  விண்ணை முட்டும் புகழ் சுமந்தாலும் பணிவுடன் வலம் வரும் மனிதன்அல்லவோ நீ

  உன் நலனுக்காக ரசிகர்களை என்றுமே
  அழைத்ததில்லையே நீ

  ரசிகன் எனும் காட்டாற்று வெள்ளம்
  இதோ பரிதவித்து அனாதையாய் நிற்கிறது

  ஒவ்வொரு சோதனையையும் சாதனையாய் மாற்றிய
  நீ இந்த சோதனையை யும் சாதனையாய்
  மாற்றுவாய்

  இறைவன் அருளால் இந்த சோதனையையும்
  வென்று வா

  நோயிலிருந்து விரைந்து மீண்டு
  வா

  திரையுலகில் மீண்டும் ஒரு சரித்திரம் எழுதலாம்
  வா

  வதந்திகளை தகர்த்தெறிவோம்
  வா

  கலங்கி நிற்கும் பல கோடி உள்ளங்களுக்கு
  மகிழ்ச்சியை தா

  காத்திருக்கிறோம்

  ஆர்.வி.சரவணன்

 16. உங்கள் காணொளி மிக தெளிவாக உள்ளது….ஒரே வார்த்தை இல் சொன்னால் முறை!!!!

  தலைவர் நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் உடல் வரும் நாள் வெகு தெளிவில் இல்லை….

  U will get well soon sir….

 17. தலைவா

  உனக்கு ஒன்னும் ஆகாது.

  நீ நல்ல படியா திரும்பி வருவே.

  கடவுள்னு ஒன்னு இருக்கு தலைவா.

  நீ கவலபடமே ஆஸ்பத்திரியில நல்ல ரெஸ்ட் ஏடு தலைவா .

  ஒனக்கு ஒன்னும் இல்ல .

  நாங்க இருக்கோம் தலைவா உனக்கு.

  முடியல தலைவா
  சீக்கிரம் வா தலைவா

 18. தலைவா சீக்கிரம் வா….நீ தானே சொல்லுவ “நான் குதிரை மாதிரி உடனே எழுந்திரிசுடுவேன் அப்டின்னு”….இன்னும் ஏன் இப்டி???? நல்லதே நிணங்க நல்லதே நடக்கும் னு சொன்ன உனக்கா இப்டி?????எனக்கு கடவுள் மேல நம்பிக்கை போறதுக்குள்ள எழுந்து வா……உனக்கு ஒன்னும் ஆகாது……naanga இருக்கோம்…. நீ எப்போ வருவ,எப்டி வருவனு யாருக்கும் தெரியாது…அதே மாதிரி வா…….வாழ்க பல்லாண்டு,வளர்க நூறு ஆண்டு. …………

 19. தலைவா……..!!!!
  கிரி …. கண்கள் கலங்கி விட்டது …சுப்பர் ……தலைவரை பாத்து தான் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டதாக நினைக்கிறன்…தலைவர் ரியல் ஹீரோ ..தலைவர் வலிகளை வீழ்த்தி வருவார்…நம் பிரார்த்தனை வீண் போகாது. தலைவர் நலமுடன் வாழ ..அந்த கடவுள் அருள் புரிவராக ..

 20. ஊரை அடித்து உலையில் போடுகிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்கும் போது சிறு துரும்புக்கு கூட கெட்டது நினைத்து இராத உனகென்ன தலைவா

  ========================================================
  இந்தியாவை அடித்து உலையில் போடுகிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்கும் போது (even after crossing the age of 85 years) சிறு துரும்புக்கு கூட கெட்டது நினைத்து இராத உனகென்ன தலைவா

  rajesh v

 21. கண் கலங்க வச்சிடீங்க கிரி சார். அருமையான ஆர்டிகல்…
  தலைவர் விரைவில் வருவார்… கலக்குவார்…..

 22. கிரி அவங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டாமா? உங்க நச் கம்மெண்ட எதிர்பார்க்கிறேன்… அப்படியே நான் கொடுத்த கம்மெண்ட விட உங்க பதிலடி பயங்கரமா இருக்கணும் கிரி.. ப்ளீஸ்…. உங்களுடைய கோபம் நியாயமானதே.. நாட்டில் கவலைப்படக்கூடிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன..அவர் இருந்தால் என்ன? போனால் என்ன ?அவர் உங்கள் குடும்பத்திற்காக என்ன செய்தார் என்ற உங்கள் கோபம் புரிகிறது.. முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் அவர் அரசியலில் ஊழல் செய்து கோடி கோடியாக சம்பாரிக்கவில்லை.. தன்னிடம் இருக்கும் மிகச் சிறந்த நடிப்பால்,சொந்த உழைப்பால் தான் சம்பாரித்து மக்களை தன்பால் ஈர்த்துள்ளார்.. அதை மற்றவர்களுக்கு கொடுப்பதும் கொடுக்காததும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்..ரஜினிக்கு ரசிகனாக இருப்பதால் எங்களுக்கு ஈழத்தமிழர் மீது அக்கறை இல்லை, குப்பன், சுப்பன் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் அக்கறை இல்லை என்று சொல்வதற்கு முன் படங்களில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட தலைவருக்கே நாங்கள் இவ்வளவு பிரார்த்திக்கும் போது எங்கள் வீட்டு குப்பன் சுப்பன் மீது அதை விட எங்களுக்கு அதிகமாகவே அக்கறை உள்ளது.. அதையே தான் தலைவர் இன்றளவும் வலியுறுத்துவார்..
  ஆனால் அதையெல்லாம் விடுத்து விட்டு ரஜினி என்னும் மனிதருக்கு இவ்வளவு மக்களும் ஒன்று கூடி பிரார்த்திக்கிறார்கள் என்றால் அதற்கு அவரிடம் இருக்கும் ஒரு வகையான காந்த சக்திதான்.. இது ஒரு இனம்புரியாத கவர்ச்சி…அதுதான் படித்த படிக்காத அனைத்து மக்களையும் அவர் பக்கம் இழுக்கிறது.. இந்த வசிய சக்தியை அவர் 1996லியே பயன்படுத்தியிருந்தால் அவரும் எம்.ஜி.ஆர்.போல அசைக்க முடியாத முதல்வர் ஆகியிருந்திருப்பார்.. ஆனால் சில முடிவுகளில் அவர் தடுமாறியிருந்ததாலும் இன்று வரை மக்களின் சக்தியை தன்னுடைய சுயநலத்துக்காக பயன்படுத்தாமல் தனக்குத் தெரிந்த நடிப்பை மக்களுக்கு அளித்து சந்தோசப்படுத்தி வருகிறார்..எத்தனையோ ஊழல் சாக்கடையில் புரண்ட இந்த சில கேடு கேட்ட அரசியல்வாதிகளுக்கு கொடி பிடிப்பவர்களை விட அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல மனிதருக்கு பிரார்த்திப்பது தவறேதும் இல்லையே.. நீங்கள் இவ்வாறு பதிவு எழுதி நேரத்தை செலவு செய்வதை விட எத்தனையோ ஏழைகள் நாட்டில் உள்ளார்களே அவர்களுக்கு எதாவது செய்திருக்கலாமே… யார் இந்த ரஜினிகாந்த்? எதற்கு இந்த விளம்பரம் உங்களுக்கு? அவரவரால் முடிந்ததை தான் செய்ய முடியும்… அதை விடுத்து விட்டு சும்மா குற்றம் சொல்லக்கூடாது….

 23. காயத்ரி நாகா நிச்சயம் என்னால் அதற்கு பதில் தர முடியும் ஆனால் யோசித்துப்பாருங்கள் ..இவர் ஒருவர் மட்டுமா சொல்கிறார்? இவரைப்போல பலர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு பதில் தருவதால் என்ன பயன்? நம்முடைய நேரம் தான் வீண். நமக்கு எப்படி பிடிக்க காரணம் இருக்கிறதோ அதைப்போல அவர்களுக்கு பிடிக்காமல் இருக்க காரணம் இருக்கிறது.

  இவர்கள் கூறுவதால் ரஜினியின் புகழலில் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. கூறினால் கூறி விட்டுப் போகட்டுமே! நாம் இவற்றை புறக்கணித்தாலே போதுமானது.

  • yes giri …. தேவையில்லாம டென்சன் ஆகிட்டேன்… தேங்க்ஸ் கிரி…

  • //நமக்கு எப்படி பிடிக்க காரணம் இருக்கிறதோ அதைப்போல அவர்களுக்கு பிடிக்காமல் இருக்க காரணம் இருக்கிறது.//
   மன்னிக்கவும் கிரி சார். பிடிக்காமல் போக ஒரு காரணமும் இல்லை. வயதேரிச்ச்சல் அவளவு தான்.
   இந்த மனிதனுக்கு பின்னல் இவளவு கோடி பேர் இருக்கிறார்களே என்ற வயத்தெரிச்சல். யாருக்குமே கிடைக்காத மக்கள் ஷக்தி இவருக்கு இருக்கே என்ற பொறாமை.
   @காயத்ரிநாகா: சரியான பதிலடி குடுத்தீங்க. சிஸ்டர் இதுக்கு பொய் டென்ஷன் ஆகா வேண்டாம். அந்த நாய்ங்க கொளச்சி கொளச்சி tired ஆகி ஓடிப்போயடும்.
   சாரி சார் நன் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.

   • நிச்சயமாக அதுதான் உண்மை, பிடிக்காமல் இருக்க ஏதேனும் காரணம் வேணுமே, என்ன காரணத்தை சொல்கிறார்கள் என்று அலசிப்பாருங்கள், ஒன்னுமே உருப்படியாக இருக்காது, தலைவர் படத்தை குறைவாக விமர்சனம் செய்பவர்கள் முதல் நாளே படம் பார்க்க அலைவதையும் பார்க்கத்தானே செய்கிறோம் ஹா ஹா ஹா, கண்ணா இவங்க எல்லாரும் நெஞ்சில படபடப்பையும் கண்ணுல பயத்தையும் வாயில பொய்யையும் வச்சிருப்பாங்க, அவங்கள விடுங்க நாம என்னைக்கும் நம்ம வழியில போவோம், அது தனி வழி தலைவன் வழி ஹா ஹா ஹா

    எதிரியையும் மன்னிக்க கத்துகொடுத்த தலைவனைப்பற்றி இவ்வளவு அழகாக எழுதிவிட முடியாது , சும்மா அதிருதில்ல , , ,இங்கயும் வந்து பாருங்க கிரி,
    www .rajolan .wordpress .com

 24. வணக்கம் கிரி அவர்களே
  என்னைப் போன்ற ஒவ்வொரு ரசிகனின் மனதையும் இந்த பதிவு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் நன்றி.

 25. கிரி சார்…தலைவர் சிங்கை வரார்…பாத்துகோங்க…நல்லா உடம்பை தேத்தி அனுப்புங்க…நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க 🙂

 26. ”என் அம்மா போல எத்தனையோ பேர் ரஜினி மீது அன்பு வைத்து இருக்கக்காரணம் அவருடைய நடிப்பு என்பதையும் தாண்டி அவர் மீதுள்ள கொண்டுள்ள அன்பு தான். இது போல எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும் ஆனால் எந்த உதாரணத்தையும் கூறி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் புரிந்து கொள்பவர்கள் உடனே புரிந்து கொள்வார்கள்”
  ”இது வெறும் ரசிகன் என்பதையும் தாண்டி எதோ ஒரு அன்பு உள்ளது என்பதை புரியவைக்கிறது. சினிமா என்பதையும் தாண்டி அவரை ரசித்தால் மட்டுமே இது சாத்தியம். ரஜினி ரசிகர்களாக இல்லாதவர்கள் கூட அக்கறையோடு ரஜினியைப் பற்றி விசாரிக்கும் போது தான் தலைவர் எத்தனை பேர் மனங்களில் சினிமா என்பதையும் தாண்டி மனதில் வீற்று இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. ”

  இவை அனைத்தும் உண்மையே !, நான் ரஜினி ரசிகனா எனக்கு தெரியல , ஆனால் சினிமா துறையில் என்னமோ எல்லாரையும் விட கொஞ்சம் அதிகம் பிடிக்குது ஏன்னு சொல்ல தெரியல , ரஜினியையும் விமர்சித்து இருக்கேன் , உண்மையிலேயே இந்த நியூஸ் கேட்டபோது என்னமோ போல் ஆனது உண்மை பலமுறை கலைஞ்சர் இறந்துட்டருன்னு வதந்தி வரும் ஆனால் அதை செய்தியாக மட்டுமே பார்க்க தெரிந்த போது மக்களுக்கு இதை அப்படி எடுத்துக்க முடியல ஏதோ தான் வீட்டில் ஒருவருக்கு சுகவீனம் அடைந்தது போல் ஒரு மன வருத்தம் , ஆதங்கம் நான் அடிக்கடி சொல்லுவேன் பிழைக்க தெரியாதா ரஜினி ( நல்ல விதமாக தான் நல்லவர் என்பதை குறிப்பதர்க்ககவே ) ஆமாம் அப்படி இருப்பவர்களுக்கு இன்னமாதிரியான நேரங்களின் தான் அவர்களின் உண்மையான பலம் தெரிய வரும் . நலமுடன் வருவார் பல்லாண்டு வாழ்வார் . இதுவும் உண்மை

 27. ரஜினி மீது திரையிலும், பொது வாழ்விலும் எனக்கு ஆயிரம் மாற்று கருத்துக்கள் உண்டு. (கமல் மீதும் உண்டு). ஆனால் அவை எல்லாம் “என்னுடைய” பார்வை தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என் பார்வை தான் சரி, மற்றவர் கருத்து தவறு என்று சொல்வது முட்டாள்தனம். அதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை.

  ஆனால் ஒரு சாதனையாளராக ரஜினியை நான் என்றுமே வியப்பேன். ஆயிரம் நடிகர்கள் திரை உலகில் இருந்தாலும் காலம் கடந்து பேசப் படுபவர்கள் MKT, MGR, சிவாஜி, நாகேஷ், கமல், ரஜினி என்று வெகு சிலர் தான். அந்த சாதனை ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. இதில் ரஜினியின் சிறப்பு, அவர் படங்கள் வெளி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, எப்போதும் அவர் செயல்களில் ஒரு ஈர்ப்பு இருந்துக்கொண்டே இருக்கும்.

  ரஜினியின் உடல் நிலை எல்லோருக்கும் கவலை தான். எனக்கு தெரிந்து பல கமல் ரசிகர்கள் கூட கவலையோடு விசாரிப்பதும், அவர் நலம் பெற விழைவதும் நடக்கிறது. கமல், ரஜினி இருவரும் போட்டியாளர்கள் என்ற நிலையை மீறி இருவரும் நம்மவர்கள் என்று நினைப்பதே காரணம்.

  ரஜினி விரைவில் குணமடைந்து வருவார் என்று நான் பூரணமாக நம்புகிறேன்.

 28. நெகிழ்வான பதிவு! என் கணவர் கிருபாவும் நானும் தீவிர ரஜினி ரசிகர்கள். எனக்கு உடல்நிலை சரியில்லை என ரஜினிக்கு என் கணவர் லெட்டர் போட்டிருந்தார். உடனே ஆறுதல் சொல்லி, ‘கடவுள் இருக்கார். அவரை முழுசா நம்புங்க. உங்களைக் கைவிட மாட்டார்’னு பதில் எழுதியிருந்தார். எல்லோருக்கும் நல்லதையே நினைக்கும் அவரைக் கடவுளும் கைவிட மாட்டார். அவரே சொன்னது போல, அவர் குதிரை! சடக்குனு எழுந்திருச்சு வந்துடுவார்!

 29. கிரி என்றுமே அவர் தான் சூப்பர் ஸ்டார், மற்ற நடிகர்கள் வெறும் போட்ரி அல்லது செய்யுள் என்றால் ரஜினி ஒரு உரை நடை, நடிப்பை எளிமை ஆக்கி மக்கள் தன் நடிப்பை புரிய மற்றும் ரசிக்க வய்த்த நடிகர் அவர், சிவாஜி கணேசன் மற்றும் த.ச. balaiah மற்றும் ரங்கா ராவ் மட்டுமே. இவர்கள் நடிப்பை refer செய்து தான் மட்ட்ரவர்கள் நடிப்பை புரிந்து கொண்டார்கள், இது புது முகத்திற்கும் சேர்த்து சொல்கிறேன்.

 30. எப்போ திருத்தும் இந்த முலே மற்றும் முதுகு எளிம்பு இல்லைதா மக்கள. உலகத்ல 1000 பிரச்சனிகள்

 31. கிரி….

  கலக்கலா எழுதி இருக்கீங்க….. ரொம்ப நல்லா இருந்தது பதிவு….

  ஒவ்வொரு ரசிகரின் மனநிலையையும் அப்படியே பிரதி பலிப்பதாக இருந்தது இந்த பதிவு….

  தலைவருக்காக ஒரு வியாழனன்று சிறப்பு வழிபாடும், ஷிர்டி சாய் பாபா கோவிலில் தனியாகவும் வேண்டி பிரார்த்தனை செய்தேன்.

 32. ஹலோ கிரி சார்,

  நீங்க எழுதின
  // (குசேலன் சமயத்தில் ரஜினி சரி செய்தது சரியா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக ஒரு இடுகையில் பதில் அளிக்கிறேன் தகுந்த (நியாயமான) காரணங்களுடன்) என்றே நம்புகிறேன்,//
  https://www.giriblog.com/what-is-wrong-in-become-rajini-fan
  உங்களோட லிங்க் உங்களுகே… 🙂

  உங்களுக்கு நியாபக படுத்துகிறேன்…எழுதுங்க…உங்க பதில் படிக்குறது காத்துட்டு இருக்கேன்….இந்த இரண்டு பதிவும் எத்தனை முறை படிச்சேன் நு தெரியாது…சூப்பர்அஹ எழுதி இருக்கீங்க….

  தலவைரின் ரசிகன் என்று சொல்லுவதில் நானும் பெருமை அடைகிறேன்…

  நன்றி
  சுவாமி…

 33. சுவாமி நீங்க கூறியதைக் கேட்டு ரொம்ப சந்தோசமாக இருந்தது. பல முறை படிக்கும் அளவிற்கு நான் எழுதி இருக்கேனா என்று. நன்றி.

  நான் குசேலன் பிரச்சனை பற்றி பல முறை எழுத நினைத்த போதும் பல்வேறு பணிகளால் அந்த சமயத்தில் எழுத முடியவில்லை. பின்னர் அது ரொம்ப கால தாமதமாகி விட்டது. இதன் பிறகு எழுதினால் அந்த விசயத்திற்கு மதிப்பு இருக்காது என்று விட்டு விட்டேன். என்றாவது ஒரு நாள் மறுபடியும் இது பற்றிய சர்ச்சை வந்தால் அந்த சமயத்தில் எழுத முயற்சிக்கிறேன். எதையும் பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் விட்டால் அதற்க்கு மதிப்பு போய் விடுகிறது.

  இவ்வளவு நாள் நினைவு வைத்து கேட்டதுக்கு ரொம்ப நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here