மோடி என்ன செய்தார்? | 6

4
மோடி என்ன செய்தார்?

41.Pharmaceutical

உலகளவில் ஆயுத உற்பத்திக்கு ஈடாக மிகப்பெரிய மாஃபியா இயங்கி வருவது மருந்து துறையில் தான். இதில் புரளும் பணம் கற்பனைக்கு எட்டாதது. Image Credit

கோவிட் பிரச்சனை வந்த போது அமெரிக்கா தனது நாட்டின் நிறுவனமான Pfizer தடுப்பூசிகளை வாங்க நெருக்கடி கொடுத்தது.

இந்தியாவில் பலருக்குப் பணம் கொடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் பலரும் Pfizer வாங்கக்கூறி நெருக்கடி கொடுத்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல அரசியல்வாதிகள், ட்விட்டர் பிரபலங்கள் இதில் மிக முக்கியமானவர்கள் ஆனால், மத்திய அரசு எதற்கும் மசியவில்லை.

இந்தியாவின் தடுப்பூசியான COVISHIELD அனைவருக்கும் கொடுக்கப்பட்டு பல ஆயிரம் கோடிகள் பணம் மிச்சப்படுத்தப்பட்டது.

இதன் பிறகு இந்தியா மருந்து உற்பத்தி துறையில் அதிக கவனம் எடுத்து, உற்பத்தியை அதிகப்படுத்திப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

Medical Tourism பிரிவில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.

ஆயுத ஏற்றுமதி போல, அமெரிக்காவுக்குப் பெரிய அடி, இதுவும் இந்தியாவை அடிக்கடி சீண்டிக்கொண்டு இருப்பதற்கு காரணம்.

42.Affordable LEDs for All

ஆற்றல் சேமிப்பு மற்றும் உமிழ்வுகள் குறைக்கப்பட LED விளக்குகளை அனைவருக்கும் மத்திய அரசு வழங்கியதோடு அரசு அலுவலகங்களிலும் LED விளக்குகளைப் பயன்படுத்தியது.

இதன் மூலம் மின்சாரக் கட்டணம் குறைந்ததோடு, உமிழ்வுகள் குறைக்கப்பட்டன. இது இயற்கைக்குச் செய்யும் பேருதவியாகும்.

மக்களும், இயற்கையும் சேர்ந்து பயன்பெறும் முறை.

1 கோடி வீடுகளுக்குச் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மின்சாரத் தேவையைக் குறைக்க முடியும்.

சுயசார்பு திட்டமாக மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது. எதிர்காலத்தில் சூரிய சக்தி (பசுமை எரிசக்தி) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

தற்போது இதற்கு செலவிடப்படும் பேட்டரியின் விலை அதிகமாகவுள்ளது ஆனால், எதிர்காலத்தில் இதில் உள்ள பிரச்சனைகள் களையப்பட்டு எளிதாகும்.

43.International Policy

அயலுறவு கொள்கை என்பது ஒரு நாட்டுக்கு மிக முக்கியமானது. ஒரு நாட்டின் மதிப்பை, பலத்தைப் பிரதிபலிப்பது இதுவே!

அயலுறவு கொள்கை 2014 – 2019 காலத்திலும் சிறப்பாக இருந்தது என்றாலும், உச்சம் பெற்றது இரண்டாம் 2019 – 2024 காலத்திலேயே.

முதல் ஐந்து ஆண்டுகள் மோடி அதிகம் வெளிநாட்டுப்பயணம் போகிறார் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டார் ஆனால், அவை மற்ற நாடுகளுடன் உறவைப் பலப்படுத்த என்பதை அறியவில்லை.

அதோடு இந்தியாவின் அடிப்படை பிரச்சனைகள், நிர்வாக சிக்கல்கள் களையப்பட்டு இரண்டாம் ஆட்சிக் காலத்திலே இந்திய பெரிய வளர்ச்சி பெற்றது.

இக்காலத்தில் கிடைத்த வைரம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர். இவரின் அதிரடி பேச்சால், பதிலால் இந்தியா அதிகம் கவனிக்கப்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகள் மேட்டிமை எண்ணத்துடனேயே இந்தியாவை அணுகி வந்த நிலை முற்றிலும் மாறி விட்டது.

இன்று முன்பு போல இந்தியாவை மிரட்டிப் பார்ப்பதோ, சீண்டிப் பார்ப்பதோ நடவாத காரியம். உடனுக்குடன் தாமதம் இல்லாமல் பதிலடி கொடுக்கப்படுகிறது.

44.Sukanya Samriddhi Scheme

பெண் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியது செல்வ மகள் சேமிப்புத் திட்டம். இந்தியில் சுகன்யா சம்ரிதி யோஜனா.

மத்திய அரசின் திட்டம் என்பதாலும், தமிழகத்தில் சேமிப்புத் திட்டங்களுக்கு எப்போதும் பலத்த வரவேற்பு இருக்கும் என்பதாலும், செல்வ மகள் சேமிப்புத்திட்டம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், சேமிக்கப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும்.

இத்திட்ட இறுதிக்காலம் பெரும்பாலும் கல்லூரியில் இணையும் காலத்தை அடையும். அக்காலத்தில் ஏற்படும் செலவுகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

Read : செல்வ மகள் சேமிப்பு திட்டம் | சுகன்யா சம்ரிதி யோஜனா

45.Naxal

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்த நக்சல் பிரச்சனைகளைப் பாஜக அரசு வந்த பிறகு முதல்வர் ஹேமந்தா பிஸ்வாஸ் நக்சல் குழுக்களுடன் தொடர்ந்து பேசி அவர்களை ஆயுதங்களைத் துறந்து பொது வாழ்க்கைக்கு அழைத்து வந்தார்.

இவரின் இச்சாதனை அசாதாரணமானது ஆனால், பலருக்குக் குறிப்பாகத் தென் மாநிலங்களில் இது குறித்து செய்திகள் அதிகம் தெரியவில்லை.

இவற்றோடு பக்கத்து மாநிலங்களோடு இருந்த 50 ஆண்டு கால எல்லை பிரச்சனையையும் பேசிச் சுமுகமாகச் சரி செய்து வரலாற்றுச் சாதனை செய்தார்.

நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட இன்னொரு மாநிலம் சட்டீஸ்கர். காங் அரசு இருந்தவரை இப்பிரச்சனை வளர்ந்து கொண்டே இருந்தது, தீர்வு கிடைக்கவில்லை.

தற்போதைய தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கான நடவடிக்கையைத் தீவிரமாக எடுத்து வருகிறது.

பிரச்சனைகள் இல்லாமல் இந்தியா இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. பிரிவினை, பிரச்சனையோடு இருக்க வேண்டும் என்று காங் நினைக்கிறது.

46.National Pension Scheme

எதிர்காலத்தில் ஓய்வூதியங்களால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு மற்றும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும் என்று கருதி வாஜ்பாய் அறிமுகப்படுத்தியதே தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) திட்டம்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் (ஜனவரி 1 2004) அறிமுகப்படுத்தப்பட்டு, காங் அரசால் 2004 ல் கொண்டு வரப்பட்டது.

துவக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் இருந்து, 2009 ல் தனியார் ஊழியர்களுக்கும், அனைவருக்கும் விரிவாக்கப்பட்டது.

2015 ல் பாஜக அரசு ₹1,50,000 (80 CCD (1)) வரிச்சலுகையோடு கூடுதலாக ₹50,000 (80CCD(1B)) வரிச்சலுகையை அறிவித்தது. இதன் பிறகே பலரும் NPS யில் இணையத் துவங்கினார்கள்.

NPS அல்லாத பழைய ஓய்வூதிய முறையைத் தொடரும் மாநிலங்கள் எதிர்காலத்தில் திவால் நிலைக்குச் செல்லும்.

வாக்கரசியலுக்காக காங், திமுக போன்ற கட்சிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவதாகக் கூறியும் கொண்டு வர முடியவில்லை.

அடுத்த ஆட்சியில் வர முடியாது என்று தெரிய வரும் போது, திமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிப்பு செய்து தமிழக பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் விட்டுச் செல்லும்.

47.Sovereign Gold Bonds

 2015 முதல் RBI (Reserve Bank of India) வழியாகத் தங்கத்தை Sovereign Gold Bonds என்ற பெயரில் பத்திரமாக (Bond) மத்திய அரசு வழங்கி வருகிறது.

இதன் முக்கிய நோக்கம் பல இருந்தாலும், தங்க இறக்குமதியைப் பெரியளவில் குறைக்க வேண்டும் என்பதே.

அதாவது தங்கம் வாங்கும் அனைவரும் உடனே பயன்படுத்துவார்கள் என்பது பொருளல்ல. சிலர் சேமிப்புக்காக வாங்குவார்கள், சிலர் எதிர்காலத் தேவைக்காகத் தற்போது வாங்குவார்கள்.

எனவே, Physical தங்கமாக அல்லாது, Paper தங்கமாக (Bond) மத்திய அரசு வழங்கியது.

இதன் மூலம் இந்த Bond வாங்கிக்கொண்டு 8 ஆண்டுகள் முடிவில், அப்போது என்ன தொகையோ அதைப் பெற்றுக்கொண்டு தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் பில்லியன்களில் அந்நிய செலாவணியை இந்தியா பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளது.

Read : Sovereign Gold Bonds வாங்கலாமா?

48.Uniform Code for Pharmaceutical Marketing Practices

மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை விற்பனை செய்ய மருத்துவர்களுக்கு சலுகைகள் கொடுப்பது வழக்கமான செயல்.

இதனால், தரமற்ற மருந்துகளும் மக்களுக்குக் கொடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்படும் வாய்ப்புள்ளதால், தற்போது மேற்கூறிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் மருந்து நிறுவனங்களிடமிருந்து சலுகைகளான, வெளிநாட்டுப் பயணம், இந்தியாவுக்குள் சுற்றுலா, பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை மருத்துவர்கள் பெறக் கூடாது.

அறிமுகக்கூட்டம் என்று நடத்தி விருந்து கொடுப்பது போன்றவற்றுக்கும் தடையுள்ளது.

இதுவொரு அற்புதமான திட்டம் ஆனால், செயல்படுத்துவது எளிதல்ல. துவக்கத்தில் இதற்கு ஆதரவு இருக்காது, வேறு வகையில் இச்சலுகைகள் தொடரும் என்றாலும், எதிர்காலத்தில் கடுமையாக்கப்படும்.

இந்தியா போன்று அனைத்திலும் ஊழல், லஞ்சம், சலுகை என்றுள்ள நிலையில் அவற்றை குறைக்க இது போன்ற முயற்சிகள் நிச்சயம் ஆரோக்கியமான மாற்றம்.

49.Development of North East

பாஜக அரசின் சாதனைகளாகப் பல குறிப்பிடப்பட்டாலும், எனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமானதாக உள்ளது வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி.

60+ ஆண்டு கால காங் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது, தமிழகத்தில் தென் மாவட்டங்களைப் போல.

தமிழகத்தின் தென் மாவட்டங்களும் தமிழக பாஜக ஆட்சிக் காலத்தில் வளம் பெறும் என்ற நம்பிக்கையுள்ளது.

ஒரு ரயில் சென்றடைவதற்கே 75 ஆண்டுகள் ஆனது என்பது வியப்பாக இருக்கலாம். தற்போது வட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப்பாதையில் உள்ளது.

இன்னும் அங்கே இன, மதப்பிரச்சனைகள் அதிகம் உள்ளது காரணம், போதை மருந்து உற்பத்தியால். பாஜக அரசு எப்போதுமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாது.

ஆனால், கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பாட்டை எடுத்து, பிரச்சனை செய்பவர்களை அகற்றி இம்மாநிலங்கள் நிம்மதியைப் பெறும் என்று 100% நம்பிக்கையுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலம் சாலை வசதி பெறாததற்கு காங் கூறிய காரணம், ‘சாலை அமைத்தால், சீனா இராணுவப் படை இந்திய எல்லைக்கு உள்ளே வந்தால், எளிதாக மற்ற இந்திய இடங்களுக்கு நுழைந்து விடும்‘ என்று.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே மின்சாரம், குடிநீர், மத்திய அரசுச் சலுகைகள் உட்பட அடிப்படை வசதிகளை அருணாச்சல பிரதேசம் பெற்றுள்ளது.

வட கிழக்கு மாநிலங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாறும் என்ற நம்பிக்கையுள்ளது.

50.Jalsakthi Scheme

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற அற்புதமான திட்டமே ஜல்சக்தி.

தண்ணீர் ஏதாவது ஒரு வகையில் கிடைப்பவர்களுக்கு இதன் முழுமையான பயன், சாதனையைப் புரிந்து கொள்ள முடியாது.

ஒரு குடம் தண்ணீருக்காக மைல் கணக்கில் நடக்க வேண்டியவர்களுக்கும், காசு கொடுத்து அனைத்துக்கும் தண்ணீர் விலைக்கு வாங்குபவர்களுக்கும் மட்டுமே இதன் மகத்துவம் புரியும்.

தமிழகத்தில் பல இடங்களில் முன்பே தண்ணீர்க் குழாய்கள் இருப்பினும், வட மாநிலங்களில் உள்ளவர்களுக்கு ஜல்சக்தி திட்டம் ஒரு வரப்பிரசாதம்.

60+ வருடங்களாக ஆட்சியிலிருந்தும் காங் அரசு, மாநிலக் கட்சிகள் சாதிக்க முடியாத அடிப்படைத் தேவையை மோடி அரசு 10 வருடங்களில் சாதித்துள்ளது.

EVM Hack

மோடி வெற்றி பெறுகிறார் என்றால் சும்மா இல்லை. எதையுமே புரிந்து கொள்ளாமல், முட்டாள்தனமாக மோடியை எதிர்க்கிறார்கள்.

ஒவ்வொருவரின் வீட்டிலும் மோடி வைத்திருக்கும் EVM Hack இது தான். இதைப் புரிந்து கொள்ளாத வரை INDI கூட்டணி கனவிலும் வெற்றி பெற முடியாது.

மோடி லட்டுல வைத்தாருன்னு நினைத்துட்டு இருக்கும் போது அங்க வைக்கல நட்டுல வைத்தாருன்னு புரியும் போது அனைத்துமே கழண்டு ஓடி இருக்கும்.

இவ்வளவு சாதனைகள், மாற்றங்களைச் செய்துள்ளார் ஆனால், மோடி ஒன்றுமே செய்யலைனு மனசாட்சியே இல்லாமல் பேசிக்கொண்டு உள்ளார்கள். வெறும் திட்டங்கள் அறிவிப்பு மட்டுமல்ல, அனைத்துமே செயல்பாட்டில் உள்ளது.

மோடி செய்ததில் ஒரு பங்கைத்தான் கூறியுள்ளேன். மோடி போன்ற ஒரு தலைவர் இந்தியாக்கு கிடைக்க ஒரு யுகமே தேவைப்படும்.

இத்தொடரை இதோடு முடிக்கிறேன். மேலும் இதன் தொடர்ச்சி இடைவெளிக்குப் பிறகு தொடரும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. அருமையான கட்டுரைகள்

    மோடி அவர்கள் இந்தியாவுக்கு பெருமிதம்

    அண்ணாமலை அவர்கள் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர்

    தமிழ்நாட்டு ஆசாமிகளுக்கு சுத்தமா புரியாது நீங்கள் சொல்லும் எதுவும்

    என்னுடைய கிருஸ்துவ &முஸ்லீம் நண்பர்கள் மோடி என்று சொன்னாலே திட்டி தீர்க்க ஆரம்பித்து விடுவார்கள்

    சொரணை கெட்ட இந்துக்கள் தி மு க.. அதிமுக.. வை தான் நம்புவார்கள்..

    தமிழகத்தில் தாமரை மலர வேண்டும். பார்ப்போம் எப்போது என்று..

    நன்றி

  2. சித்தாந்த மாற்றங்கள் உடனே நடந்து விடாது.

    இதற்கு கடுமையான உழைப்பு தேவை, அதை அண்ணாமலை தலைமையில் பாஜக கட்சி செய்து கொண்டுள்ளது.

    ஜூன் 4 சில கேள்விகளுக்கு விடையளிக்கும் என்று நம்பலாம். பாஜக எந்த நிலையில் உள்ளது என்று தெரிய வரும்.

    திராவிட கட்சிகள் கடந்த 60 வருடங்களாக தமிழக மக்களை மூளைச்சலவை செய்துள்ளது.

    எனவே, இதிலிருந்து மக்களின் எண்ணங்களை மாற்றுவது எளிதல்ல.

    மோடி செய்த நல்லதை கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளார்கள். எனவே, மாற்றம் வரும் ஆனால், கொஞ்சம் நேரம் எடுக்கும்.

  3. கிரி, மிக விரிவான கட்டுரை. இந்த தேர்தலுக்கு நீங்கள் செய்யும் பரப்புரையாக நான் இதை எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் மேற்கோள் காட்டிய பெரும்பாலான திட்டத்தில் நானும் எனது குடும்பமும் பயன் பெறுகிறோம்.

    ஆதார் கார்டு: ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் நான் ஆதார் அட்டையை பெற்றேன். மாநில அரசு கொடுக்கும் வோட்டர் id க்கும் ரேஷன் கார்டு க்கும் லஞ்சம் இல்லாமல் வாங்க முடியாது என்ற நிலைமை இருந்தது, அது மட்டும் இல்லாமல் நீண்ட காலம் எடுத்து கொண்டார்கள். நான் கடந்த ஆண்டு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இன்னும் எனக்கு கிடைக்க வில்லை. கார்டு அச்சடித்து சென்னையிலே 6 மாதங்களுக்கு மேலே இருந்தது. கேட்டால் மகளிர் உரிமை தொகைக்காக செப்டெம்பர் வரை நிறுத்தி வைத்தததாக சொன்னார்கள். பொங்கல் விடுமுறை பொழுது கேட்டால் தேர்தல் வருகிறது என்றார்கள். 2 வாரத்துக்கு முன்பு கார்டு வந்து வாங்கிக்கொள்ள சொன்னார்கள், நேரில் சென்றால் தேர்தல் விதிமுறை செயலில் உள்ளது. நீங்கள் ஜூன் 4 க்கு பிறகு வாருங்கள் என்கிறார்கள். இதே நிலைமை தான் தமிழ்நாடு முழுவதும். இதை பார்க்கும் போது மத்திய அரசு ஆதார் கார்டு விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று சொல்ல வேண்டும். போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப் பட்டது. வோட்டர் id உடனும் ஆதாரை இணைந்ததால் 20 லட்சம் போலி வாக்காளர் அட்டைகள் தமிழ்நாட்டில் நீக்க பட்டது.

    உட்கட்டமைப்பு: இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்காவும், 1980 ல் சீனாவும் செய்த மிக தீவிரமான கட்டமைப்பு அவர்களை மிக உயரிய இடத்துக்கு கொண்டு சென்றது. மோடி அவர்களின் தலைமையில் தான் அதற்க்கான தீவிர தன்மையை காண முடிகிறது.எங்கு பார்த்தாலும் மேம்பால வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. ரயில்வே துறையின் வளர்ச்சி அபாரம். கொரோன காலத்தில் மிக தீவிரமாக புது பாதைகள் மற்றும் மேம் பாலங்களையும்(ரயில் crossing) அமைத்தார்கள்.இது காலத்தின் தேவை. இதன் பலனை அடுத்த தலைமுறை அனுபவிக்கும். நாம் கூறும் பல விஷயங்கள் அவர்களுக்கு இன்னும் 20 ஆண்டுகளில் வினோதமாக இருக்க கூடும்.

    PM Kisan – குறு விவசாயியான எனது தந்தை வருடத்திற்கு 6000 பெறுகிறார்.

    Triple Talaq : Instant Triple Talaq க்கு தான் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இஸ்லாமிய நாட்டிலே இந்த சட்டம் இல்லை. இஸ்லாமிய பெண்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்று உள்ளது. uniform civil code மூலம் அவர்களுக்கு சொத்து உரிமை கிடைக்கும் பொழுது, இன்னும் கூடுதல் கவனமும், வரவேற்பும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    Free Toilet & Ujjwala scheme : இந்த திட்டம் தான் அவர்கள் 2019 ல் வெற்றி பெற அடிகோலாக அமைந்தது என்று சொல்லலாம். பெரும்பாலான இந்திய ஊடங்கங்கள் இதன் தாக்கத்தை விரிவாக பதிவு செய்து உள்ளன.

    Sukanya Samriddhi Scheme : எனது மகளுக்கு வருடம் ஒரு முறை அஞ்சல் கணக்கில் சேமித்து வருகிறேன். வட்டி விகிதத்தை கொஞ்சம் குறைத்து உள்ளார்கள். FD யை விட இது பரவாயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு எந்த சிறப்பு திட்டமும் இல்லை. PPF account மூலம் மட்டுமே சேமிக்க முடியும்.

    நீங்கள் குறிப்பிட மறந்த சில திட்டங்கள்:

    Pradhan Mantri Suraksha Bima Yojana : விபத்து காப்பீடு திட்டம் , வருடத்திற்கு 12 ரூபாய் தவணை, ரூ 2 லட்சம் வரை பெறலாம்.

    Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana: ஆயுள் காப்பீட்டு திட்டம். வருடத்திற்கு 330 ரூபாய் தவணை, ரூ 2 லட்சம் வரை பெறலாம்.

    பாஸ்போர்ட் சேவை: சுஷ்ஸ்மா ஸ்வராஜ் அவர்களின் தலைமையில் புதிய உச்சத்தை தொட்டது. தற்போது 7 நாட்களில் புதிய பாஸ்போர்ட் பெற முடியும். மூன்றே நாட்களில் புதுபித்த அட்டையை பெற முடியும். முக்கியமாக லஞ்சம் மற்றும் தரகர் இல்லாமல்.

    Tax refund: நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், tax file செய்த ஒரே வாரத்தில் refund பணம் வங்கி கணக்கில் வரவு வைக்க பட்டது.

    இன்னும் பல திட்டங்கள் உள்ளன. சிறுபான்மையினர்க்கும் தலித்துகளுக்கும் செய்ய பட்ட திட்டங்களை விரிவாக ஆய்வு செய்து நேர்மையாக பதிவு செய்ய வேண்டும். பெரும்பாலான தலித் மக்கள் பிஜேபி பக்கம் இருப்பதற்கு காரணம் அதுவே.

    பிகு: atal pension yojana தவிர, வேறு எந்த திட்டத்திலும் அவர் பெயரோ அவர் கட்சியின் தலைவர்கள் பெயரோ இல்லை என்பது குறிப்பிடதக்கது.

  4. @மணிகண்டன்

    “இந்த தேர்தலுக்கு நீங்கள் செய்யும் பரப்புரையாக நான் இதை எடுத்துக் கொள்கிறேன். ”

    இது சரி தான்.

    சில மாதங்களுக்கு முன்பே இத்தொடர் எழுதுவதாக இருந்தேன். இப்ப எழுதாதீங்க, தேர்தல் நேரத்தில் எழுதி வெளியிடுங்க என்று பரிந்துரைத்தார்.

    அதன்படி தற்போது வெளியிடுகிறேன்.

    “நேரில் சென்றால் தேர்தல் விதிமுறை செயலில் உள்ளது. நீங்கள் ஜூன் 4 க்கு பிறகு வாருங்கள் என்கிறார்கள். இதே நிலைமை தான் தமிழ்நாடு முழுவதும்.”

    தமிழ்நாட்டில் அரசுத்துறையில் இது தான் பிரச்சனை. ஒன்றுக்காக சென்றால் இழுத்தடிப்பார்கள்.

    சிலர் பணத்துக்காக சிலர் சோம்பேறித்தனத்தால்.

    “வோட்டர் id உடனும் ஆதாரை இணைந்ததால் 20 லட்சம் போலி வாக்காளர் அட்டைகள் தமிழ்நாட்டில் நீக்க பட்டது.”

    இதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் தரவில்லை என்பதால், முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

    உச்சநீதிமன்றம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்புகிறது.

    “மோடி அவர்களின் தலைமையில் தான் அதற்க்கான தீவிர தன்மையை காண முடிகிறது”

    உட்கட்டமைப்பு மிக முக்கியமானது. நாம் மிக மிக பின்தங்கியுள்ளோம், வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது,

    மோடி வந்ததாலே இந்த மாற்றமானது ஏற்பட்டது. இல்லையென்றால், இன்னும் 20 வருடங்கள் பின்தங்கி இருப்போம்.

    ஆனால், பலருக்கு இது புரியாது.

    “uniform civil code மூலம் அவர்களுக்கு சொத்து உரிமை கிடைக்கும் பொழுது, இன்னும் கூடுதல் கவனமும், வரவேற்பும் இருக்கும் என்று நினைக்கிறேன்.”

    உண்மை தான் அதோடு சில சிக்கல்களும் ஏற்படும். UCC செயல்படுத்திய பிறகு எழுதுகிறேன்.

    “நீங்கள் குறிப்பிட மறந்த சில திட்டங்கள்:

    மறக்கவில்லை, 50 உடன் நிறுத்திக்கொண்டேன். தொடர் பின்னர் தொடரும் போது மற்றவையும் சேர்க்கப்படும்.

    50 க்கு மேலே போனால், படிப்பவர்களுக்கு சலிப்பாகி, படிக்காமல் புறக்கணித்து விடுவார்கள்.

    இது எழுதும் நோக்கத்தையே வீணடித்து விடும் என்பதால், நிறுத்தி உள்ளேன், மறக்க வில்லை.

    “பெரும்பாலான தலித் மக்கள் பிஜேபி பக்கம் இருப்பதற்கு காரணம் அதுவே.”

    மற்ற மாநிலங்களவை இருக்கிறார்கள், தமிழகத்தில் இல்லை.

    ” atal pension yojana தவிர, வேறு எந்த திட்டத்திலும் அவர் பெயரோ அவர் கட்சியின் தலைவர்கள் பெயரோ இல்லை என்பது குறிப்பிடதக்கது.”

    உண்மை தான். இதையே எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை.

    மாநிலங்களில் திட்டங்களுக்கு பாஜக தலைவர்கள் பெயர்கள் வைக்கிறார்கள் ஆனால், பாஜக மத்திய அரசு வைப்பதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!