செக்குலர் என்ற அழிவுப்பாதை

4
செக்குலர்

செக்குலர் என்ற மதச்சார்பின்மை என்பது உயர்ந்த எண்ணத்துக்காகக் கொண்டு வரப்பட்டது ஆனால், தற்போது உலகம் முழுக்க அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. Image Credit

செக்குலர்

இந்தியா பாகிஸ்தான் பிரிந்த போது முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் அறிவிக்கப்பட்டாலும், இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்படாமல் செக்குலர் நாடாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முக்கியக்காரணமாக இருந்தவர்கள் மகாத்மா காந்தி, நேரு போன்றவர்கள்.

ஆனால், தற்போது அரசியல் கட்சிகள் செக்குலர் என்ற வார்த்தையை வைத்தும், சிறுபான்மையினர் வாக்குகளுக்காகவும் பெரும்பான்மை இந்துக்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறார்கள்.

இந்து மதம் தவிர அனைத்து மதங்களையும் கூட்டணியில் வைத்துக்கொள்வதன் பெயர் மதச்சார்பற்ற கூட்டணி. இதுவே செக்குலர் அரசியல்.

இவர்களுக்குக் கூடுதல் அனுகூலமாக இருப்பதே குறிப்பிட்ட சதவீத இடது சாரி எண்ணத்தில் உள்ள இந்துக்களே. எனவே, இது இவர்களுக்கு வசதியாக உள்ளது.

இடது சாரி, செக்குலர் நாடுகள் என்றும் நிம்மதியாகவே இருக்காது.

புறக்கணிப்பு

செக்குலர் என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இந்துக்களின் பண்பாடு, வழக்கங்கள் இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இந்தியப் பண்பாடு என்றாலே அது இந்து வழக்கங்கள் தான். இதைத்தவிர்த்துக் காண்பிக்க எதுவுமே கிடையாது. காரணம், கிறித்துவ, இஸ்லாம் மதங்கள் இங்கே உருவாகவில்லை.

மற்ற மதங்கள் இந்து மதத்திலிருந்து பிரிந்தவை மற்றும் பெரியளவில் வித்தியாசங்கள் இல்லை.

மற்ற மதங்களையும் சரிசமமாக நடத்த, இந்துக்களின் வழக்கங்களைப் புறக்கணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கொடுக்கிறார்கள்.

  • சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி MP பூமி பூஜை செய்ததற்குச் செய்த அட்ராசிட்டிகள். ஆயுத பூஜைக்குத் திருப்பூரில் ஏற்பட்ட சர்ச்சை.
  • தெலுங்கானா தேர்வறையில் முஸ்லீம் அல்லாத மாணவிகளுக்கு அனைத்து பரிசோதனையும் நடைபெறுகிறது, நகை உட்பட அனைத்தையும் கழட்டுகிறார்கள்.
  • ஆனால், முஸ்லீம் மாணவிகள் எந்தப் பரிசோதனையும் இல்லாமல் ஹிஜாப், புர்கா அணிந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்வு எழுதச் செல்லும் மாணவி உண்மையான மாணவி தானா என்பது கூட உறுதியில்லை.
  • கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் ஆனால், மற்ற மதங்களின் வழிபாட்டுத்தலங்கள் அவரவர் மத நபர்கள் கட்டுப்பாட்டில்.
  • பீகாரில் இந்து பண்டிகைகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, முஸ்லிம்கள் பண்டிகைகளுக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட அறிவிப்பு வருகிறது.

இது போல எடுத்துக்காட்டுகள் கூற ஆயிரம் உள்ளது. செக்குலர் என்பது வெறுப்புணர்வை தூண்ட மட்டுமே பயன்படுகிறது.

செக்குலர் நாடுகள்

அரபு நாடுகளில் செக்குலர் நாடுகள் என்று எதுவுமே இல்லை ஆனால், அங்கே எந்த மதப்பிரச்சனையும் இல்லை என்று கருதுகிறேன்.

கட்டுப்பாடுகள் அதிகம் ஆனால், இந்தியா போல மதச்சண்டைகள் இருப்பதாகத் தெரியவில்லை. செய்திகளில் படித்தது தான், அங்கே இருந்து பார்த்ததில்லை.

அங்கே மற்ற மதத்தினருக்குச் சம உரிமை கிடையாது ஆனால், மற்ற மதத்தினர் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதாகவே உணர்கிறேன்.

நல்ல எண்ணத்தில் அபுதாபியில் கட்டப்படும் மிகப்பெரிய Akshardham கோவில் கூட என்னைப்பொறுத்தவரை அவசியமில்லாதது, குறிப்பாகப் பெரும்பான்மை முஸ்லிம்களுள்ள இடத்தில்.

காரணம், நாளை இந்துக்கள் கோவிலைப் பெரியளவில் கொண்டாடுவார்கள், பண்டிகைகள் சிறப்பாக நடத்தப்படும்.

இது வரும் காலங்களில் நிச்சயம் அங்குள்ள முஸ்லிம்களுக்கு இந்துக்கள் மீது வெறுப்புணர்வைக் கொடுக்கும். இதன் கோபம் வேறு வழிகளில் வெளிப்படும்.

இதுவே அமைதியாக இருக்கும் நாடுகளில், செக்குலர் செய்யும் சம்பவங்கள்.

இந்து நாடாக இருந்தவரை நிம்மதியாக இருந்த நேபாள், எப்போது செக்குலர் நாடாக மாறியதோ அன்று முதல் மதப்பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகிறது.

செக்குலர், கம்யூனிஸ்ட்கள் (இடது சாரி) இருக்கும் நாடாக மாறினால், விளங்காது என்பதற்கு நேபாள் ஒரு எடுத்துக்காட்டு.

இன்று நேபாளை இந்து நாடாக்கக் கோரி போராட்டங்கள் வலுத்து வருகிறது.

சிங்கப்பூர்

மற்ற செக்குலர் நாடுகள் எப்படி என்று தெரியவில்லை ஆனால், நான் 8 ஆண்டுகள் வசித்த சிங்கப்பூர் செக்குலர் நாடு தான்.

அங்கு அனைத்து மதங்களுக்கும் அவர் மதப்படி வழிபட, கொண்டாட முழு உரிமையுண்டு. மற்ற மதங்களை இழிவுபடுத்தி விட்டுத் தப்பித்து விட முடியாது.

இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறாமல், மற்ற மதங்களுக்கு வாழ்த்துக் கூறும் கேவலம் சிங்கப்பூரில் நடக்காது. தீபாவளி, தைப்பூசம், பொங்கல் மிகச்சிறப்பாக அரசால் கொண்டாடப்படும்.

இந்துக் கடவுளை அசிங்கமாகப் பேசினால் கண்டுகொள்ளப்படாமலும், மற்ற மத கடவுள், மதத்தைத் தவறாகப் பேசினால் உடனடி கைதும் இங்கே நடப்பது போலச் சிங்கப்பூரில் நடக்காது.

யார் தவறு செய்தாலும், கடுமையான தண்டனை கிடைக்கும். இது தான் மதச்சார்பின்மை.

செக்குலர் என்ற வார்த்தை இந்தியாவில் இந்துக்களைப் புறக்கணிக்க, முக்கியத்துவத்தைக் குறைக்க, பலத்தைக் குறைக்க மட்டுமே பயன்படுகிறது.

எனவே, சிங்கப்பூர் போன்ற நாடுகளே செக்குலர் என்ற வார்த்தைக்குத் தகுதியானவை, இந்தியா அல்ல.

வெளிநாடுகளின் விமர்சனங்கள்

உலகத்திலேயே இந்தியா மிகப்பெரிய செக்குலர் நாடு.

இந்தியாவின் வளர்ச்சி, மற்ற வளர்ந்த நாடுகளுக்குப் பிடிப்பதில்லை. குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பா நாடுகள்.

எனவே, இந்தியாவில் மத ரீதியாக என்ன பிரச்சனை நடந்தாலும், உடனே இந்தியாக்கு அறிவுரை கூற கிளம்பி விடுவார்கள்.

இதற்கு அவர்களின் ஊடகங்கள் பின்பாட்டுப் பாடுவார்கள்.

எடுத்துக்காட்டு குர்ஆனிலிருந்ததை நுபுர் சர்மா கூறியதை, அவர் குர்ஆனை இழிவுபடுத்தி விட்டதாகப் பொருள் தரும்படி உலகப் பிரச்சனையாக்கி விட்டார்கள்.

முஸ்லீம் நாடுகள் (OIC) குறிப்பாக கத்தார் இதைப் பெரிய பிரச்சனையாக்கியது.

சீனா

சீனாவில் 16,000 மசூதிகளில் 65% மசூதிகளை அழித்து விட்டதாக, முஸ்லிம்களை இன அழிப்பு செய்ததாகச் செய்திகளில் வந்துள்ளது.

ஒருத்தர், ஒருத்தர் கூட வாய் திறக்கவில்லை.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு ஒன்றென்றால் கொந்தளிக்கும் இடது சாரியினர், அவர்கள் ஆதரவு இடது சாரி நாடான சீனாவில் நடக்கும் கொடுமைகளுக்கு வாயை இறுக மூடியுள்ளார்கள்.

குர்ஆனில் இருந்ததைக் கூறியதற்குப் பொங்கிய முஸ்லீம் நாடுகள், மேற்கத்திய நாடுகள், ஊடகங்கள் இவ்வளவு பெரிய சம்பவம் நடைபெறுகிறது ஏன் வாய் திறக்கவில்லை?

இது தற்போது தான் நடப்பதும் கிடையாது. உய்குர் முஸ்லிம்களைச் சீனா தொடர்ந்து இதே போல் செய்து வருகிறது ஆனால், சிறு முனகல் கூட எந்த நாட்டிலும் இல்லை.

பாகிஸ்தானில் உள்ள ஆப்கான் முஸ்லிம்களைப் பாகிஸ்தான் அரசு வெளியேற்றிய போது ஒரு நாடு கூட ஏன் என்று கேட்கவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்களை பங்களாதேஷ் தடுத்து விட்டது.

ஆனால், இந்தியா NRC / CAA கொண்டு வந்த போது விமர்சிக்காத நாடோ, ஊடகமோ இல்லை!

இவர்களுக்கு உண்மையில் முஸ்லிம்கள் / இஸ்லாம் மீது அக்கறையா? அல்லது இந்தியா மீது காண்டா?!

காஸா

இஸ்ரேல் காஸா போர் நடக்கும் போது பாலஸ்தீன அகதிகளை ஜோர்டான், துருக்கி உள்ளிட்ட பெரும்பான்மை நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன.

ஏன்?

இவர்கள் மதத்தினரை இவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம் ஆனால், பாகிஸ்தான், ஆப்கான், பங்களாதேஷ், ரோஹிங்கியாக்களை இந்தியா ஏற்க வேண்டுமாம்!

என்னங்க அநியாயம்?

இவர்கள் எல்லாம் உள்ளே நுழைந்து இந்தியாவையே நாசம் செய்து கொண்டு இருப்பார்கள் (ஷாஹின்பாக் போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு), இதற்கு செக்குலர் என்ற போர்வையில் அரசியல் கட்சிகள், இடது சாரி அமைப்புகள் ஆதரவு வேறு ..!

பங்களாதேஷிகளுக்கு வாக்கு அடையாள அட்டை இல்லையென்றால் கூறுங்கள் ஏற்பாடு செய்கிறோம்‘ என்று மேற்கு வங்கத்தில் தலைவர் மேடையில் கூறுகிறார்.

இவர்கள் வெற்றி பெற நாட்டையே சீரழித்துக் கொண்டுள்ளார்கள். இந்தியாக்கு உடனடி தேவை CAA, NRC, இல்லையேல் இந்தியா நாசமாவதைத் தடுக்கவே முடியாது.

செக்குலர் மேற்கத்திய நாடுகள்

உலகிலேயே தாங்கள் கருணை மிக்கவர்கள் என்ற எண்ணம் மேற்கத்திய நாடுகளுக்கு உண்டு ஆனால், உலகையே நாசம் செய்வது இவர்கள் தான் என்பது தனிக்கதை.

Multiculture என்ற பெயரில் கட்டுப்பாடு இல்லாமல் ஏராளமான அகதிகளை அனுமதித்து விட்டார்கள், அனுமதித்து வருகிறார்கள்.

மேற்கத்திய நாடுகள் தங்களை செக்குலர் என்று கூறிக்கொண்டாலும், அவர்களுக்கு இந்தியா போலப் பல நூறு ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனைகள் இல்லை.

எனவே, தாங்கள் மதப் பிரச்சனைகளை எதிர்கொள்ளாததால், செக்குலர் நாடான இந்தியாக்கு அறிவுரை கூறுவது எளிதாக இருந்தது.

தற்போது தான் செக்குலர் என்ற வார்த்தையின் சூட்டை உணர ஆரம்பித்துள்ளார்கள் ஆனால், இந்தியா இதில் பல நூறு ஆண்டுகள் பாதிப்பை, அனுபவத்தைப் பெற்றது.

இந்தியா செக்குலர் பிரச்சனைகளைக் கையாண்டு கரை கண்டு விட்டது ஆனால், மேற்கத்திய நாடுகளால் திடீர் சமூக மாற்றத்தைச் சமாளிக்க முடியவில்லை.

இனி தான் செக்குலர் ஆரம்பம்

செக்குலர் என்று இதுவரை இந்தியாக்கு அறிவுரை கூறி வந்த மேற்கத்திய நாடுகள் மற்றும் அவர்களது ஊடகங்கள் இனிமேல் தான் தங்கள் மருந்தின் சுவையை உணரப்போகிறார்கள்.

அகதிகள் பிரச்சனையால், முதலில் பெருமளவில் பாதிக்கப்படப்போவது இங்கிலாந்து, தொடர்ந்து ஜெர்மன், ஸ்வீடன், இத்தாலி, பிரான்ஸ் ஆகியவை.

ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியும் அகதிகளை மறுத்த போலந்து, கலவரம், மதப்பிரச்சனைகள் இல்லாத அமைதியான ஐரோப்பா நாடாக உள்ளது.

Welcome Refugees என்று கூறி அகதிகளை வரவேற்ற ஜெர்மன் தினமும் திருட்டு, கொலை, வழிப்பறி, பாலியல் வன்முறை, கலவரத்தால் சீரழிந்து கொண்டுள்ளது.

தற்போது ஏற்படும் பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்ந்த நாடுகளில் இடது சாரி ஆட்சி முடிந்து வலது சாரி ஆட்சி மாறிக்கொண்டுள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டைனா, தற்போது நெதர்லாந்தில் ஆட்சி மாறியுள்ளது. அமெரிக்காவிலும் ஆட்சி மாறும்.

அயர்லாந்தில் ஒரு அகதி, குழந்தைகளைக் கொன்றதால், அங்கே தற்போது பொதுமக்களால் கலவரம் நடந்து கொண்டுள்ளது.

அகதிகளுக்கெதிரான போராட்டம் வலுப்பெற்றுள்ளது.

கர்மா

இது ஆரம்பம் தான். ஐரோப்பா சந்திக்கப் போகும் அதிர்ச்சிகள், பிரச்சனைகள் ஏராளம்.

நமக்கு அறிவுரை கூறிய செக்குலர் மேற்கத்திய நாடுகள் இனி மதச்சார்பின்மையை எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதைப் பார்க்கப்போகிறோம்.

உலகையே ஆட்சி செய்த இங்கிலாந்து என்னவாகப்போகிறது என்பதை உலகம் இத்தலைமுறையிலே காணப்போகிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இந்து முஸ்லீம் மதப்பிரச்சனையைத் தூண்டி ஆட்சி செய்தார்கள். தற்போது அதே மதம் அவர்களைப் பதம் பார்க்கப்போகிறது.

மற்றவர்களுக்கு நீ என்ன செய்தாயோ அதுவே உனக்கு, உன் சந்ததியினருக்கு திரும்பக் கிடைக்கும். #கர்மா

அழிவுப்பாதை

அனைவரும் சமம் என்று கூறி,  பின் சிறுபான்மையினருக்கு மட்டுமானதாக மாறி, இறுதியில் அனைவருக்கும் அழிவைக் கொடுக்கும் ஒன்றே செக்குலர்.

யாரையும் நிம்மதியாக இருக்க விடாது, எல்லோரையும் எப்போதும் பதட்டத்திலேயே, பிரச்சினைகளிலேயே வைத்து இருக்கும்.

செக்குலர் என்ற வார்த்தைக்குப் பொருத்தமானவை சிங்கப்பூர் போன்ற கட்டுப்பாடான சுதந்திரம் கொண்ட நாடுகள் தான். மேற்கத்திய நாடுகள் அல்ல.

ஜனநாயக நாடு என்ற பெயரில் செக்குலர் என்ற வார்த்தையினால் பெரும்பான்மை தான் பாதிக்கப்படுகிறார்கள். இதை மேற்கத்திய நாடுகளும் விரைவில் உணரும்.

செக்குலர் / மதச்சார்பின்மை என்பதெல்லாம் இந்தியாவில் அரசியல் செய்யப் பயன்படுத்த உதவும் ஒரு வார்த்தை அவ்வளவே!

தொடர்புடைய கட்டுரை

ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ] கட்டுரை 2015 ம் ஆண்டு எழுதப்பட்டது. இதில் கூறப்பட்டவை ஐரோப்பாவில் தற்போது நடந்து வருகிறது.

இக்கட்டுரையின் கருத்துப்பகுதியில் ஒருவர் கூறியது இக்கட்டுரையின் சுருக்கம்.

மனித நேயம் wise ஆக handle பண்ணபட வேண்டிய விஷயம். அவசரப்பட்டு மனித நேயம்(!) காண்பித்தால் consequences பயங்கரமாக இருக்கும்.

சிரியா நாட்டின் ஒரு குழந்தையின் படம் இன்று உருவாக்கிய மனிதநேயம் எதிர்காலத்தில் எத்தனை ஐரோப்பிய குழந்தைகளுக்கு எமனாக போகிறதோ!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி.. இந்த பதிவை முழுவதும் இரண்டு முறை படித்து பார்த்தேன்.. என்ன கருத்தை பதிவு செய்யலாம் என்று யோசிக்கும் போது (ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ]) இந்த பதிவில் திரு.ஜோதிஜி அவர்கள் கூறிய கருத்து தான் என் நிலைப்பாடும்.

    அவர் கூறியது : மதம், கடவுள் நம்பிக்கை போன்றவற்றுக்கு பலரும் கருத்து சொல்ல விரும்புவதில்லை. இதற்கு கருத்துச் சொல்லப் போனால் அங்கே தான் தொடங்கும். அங்கே தான் முடியும்.

  2. யாசின் நீங்க இரு முறை படித்தேன் என்று கூறியதே போதுமானது. என்ன கூற வருகிறேன் என்பதை புரிந்துகொள்ள முயல்கிறீர்கள் என்பதே பாராட்டத் தக்க செயல்.

    அனைத்துக்கும் கருத்து கூறியாக வேண்டும் என்பதில்லை ஆனால், படிப்பவர்களை ஒரு கட்டுரை யோசிக்க வைத்தால் போதுமானது.

    கட்டுரையை ஏற்றுக்கொள்வது, மறுப்பது போலவே யோசிக்க வைப்பதும்.

  3. Hi Giri!
    Have been a regular reader of your blog and this is the first time am making my comment on your article

    As you mentioned, there will be nothing going to happen in Abudhabi as Vinayagar chathurthi procession, celebrating Deepavali with firing crackers etc. are usual and allowed

    Those countrymen will not even had a fight or abuse during the holy month of Ramadan because Hindus used to worship in the temples and eat prasadam without any fear or hesitation eventhough the mosque are located nearby

    When compared to our country, celebrating hindu festivals are quite enjoyable and safe in UAE and this is out of my personal experience

    Thanks

  4. @GMRTVS

    Its nice to hear 🙂 .

    Its all because they are doing without secular words hence you are enjoying without any tension / frustration.

    but here in the name of secular everything has been spoiled.

    This is the reason I hate secularism. Arab countries are better than India in religious freedom / rules / action / law in my view.

    They are Muslim countries not secular but still you are safe and enjoying your celebration. Hope it will continue.

    I’m happy for you.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here