ஒபாமாக்கு என்ன தகுதியுள்ளது?

23
ஒபாமாக்கு என்ன தகுதியுள்ளது?

பாமா கொடுத்த நேர்முகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சனைகளைக் கையாளவில்லையென்றால் இந்தியா துண்டாகி விடும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Image Credit

ஒபாமா

இப்பேட்டியை ஒபாமா கொடுக்கும் வரை அவர் மீது அளவுகடந்த மரியாதை வைத்து இருந்தேன் காரணம், அவர் அதற்கு முன் கையாண்ட பிரச்சனைகள்.

அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி ஒபாமா ஆவார். இவர் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படக் காரணம், இவர் எதிர்கொண்ட சூழ்நிலை.

ஒபாமா ஜனாதிபதியான நேரத்தில், அமெரிக்கர்களுக்குக் கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியாமல் லீ மென் பிரதர்ஸ் வங்கி திவாலானதால் அமெரிக்காவே மிக மோசமான நிலையில் இருந்தது.

இதன் தாக்கம் உலகம் முழுக்க எதிரொலித்தது பலருக்கு நினைவு இருக்கும். பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடந்த நேரம்.

ஒபாமா வந்த பிறகு இப்பிரச்சனையைத் திறமையாகக் கையாண்டு சரி செய்தார். இரண்டாம் முறையும் இவரே பதவிக்கு வந்தார். பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது இவரது ஆட்சி காலத்தில் தான்.

மோடி பயணம்

மோடி அமெரிக்கப் பயண நேரத்தில், நேர்முகம் கொடுத்த ஒபாமாவிடம் ‘நீங்கள் மோடியை சந்தித்தால் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?‘ என்று பேட்டியெடுத்த நிருபர் கேட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வுகளில் இந்தியா சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இந்தியா பல துண்டுகளாகி விடும்‘ என்று பதிலளித்தார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை இந்தியாவில் ஏற்படுத்தியது. இதற்கு நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் போன்றோர் பதிலடி கொடுத்தார்கள்.

ஒபாமா கட்சிக்காரரான ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு மரியாதை செய்துகொண்டு இருந்த நேரத்தில், அதே கட்சியைச் சார்ந்த ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார்.

இரு காரணங்கள்

உலகையே அழிக்கும் நாடான அமெரிக்கா தனது வழக்கமான மனித உரிமை பரப்புரையைக் குறிப்பாகக் காஷ்மீர் பிரச்சனையை மோடியிடம் கூறவில்லை.

ஊருக்கெல்லாம் மனித உரிமை பாடம் எடுப்பார்கள் ஆனால், அது அவர்களுக்குப் பொருந்தாது. இப்பயணம் முழுக்க இந்தியாவை ஜோ பைடன் புகழ்ந்தார்.

ஆனால், இங்கே தொட்டிலை ஆட்டி விட்டு, அங்கே ஒபாமாவை வைத்துக் கிள்ளி இருக்கிறது என்கிறார்கள்.

இன்னொன்று உலகக்கேடு கெட்டவன் ஜார்ஜ் சோரோஸ் தான் இவ்வாறு ஒபாமாவை சொல்ல வைத்தது, இதற்கு ஒபாமாக்கு 4 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகளில் வந்தது.

ஒபாமா பணத்துக்காகக் கூறி இருப்பார் என்று தோன்றவில்லை காரணம், இவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பிறகு மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். தற்போதும் அப்படி வாழ்கிறாரா என்று தெரியவில்லை.

எனவே, பணம் வாங்கிப் பேசி இருப்பார் என்று நினைக்க முடியவில்லை.

ஒபாமாவை பேட்டியெடுத்த பெண்ணின் செய்தி நிறுவனத்துக்கு, ஜார்ஜ் சோரோஸ் நிதி உதவி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி ஜார்ஜ் சோரோஸ் சம்பந்தப்பட்ட NGO க்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. CAA போராட்டத்தின் பின்னணியில் இந்த NGO இருந்தது.

ஒபாமா மனிதத்தன்மை

ஒபாமா பணம் வாங்கிப் பேசினாரா இல்லையா என்பது ஒரு பக்கம் என்றாலும், முஸ்லிம் நாடுகளின் மீது குண்டு, ட்ரோன் தாக்குதலில் ஒரு லட்சம் பேர் வரை கொன்றுள்ளார்.

ஏராளமான முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளார். இது போல இந்தியாவில் என்ன நடந்தது?!

இந்தியாவில் பிரச்சனைகள் உள்ளது ஆனால், இவர் கொன்று குவித்ததைப் போல என்ன நடந்து விட்டது?

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பற்றி ஏன் பேசவில்லை?

இவர்கள் ஆதரவு இடது சாரி சித்தாந்தம் உள்ள சீன நாட்டில் என்ன நடந்தாலும் கேட்க மாட்டோம் ஆனால், இந்தியாவில் நடக்கும் அனைத்துக்கு எதிராகப் பேசுவோம் என்பது எப்படிச் சரியானது?

இந்தியாவில் பிரச்சனை உள்ளது ஆனால், முஸ்லிம்கள் சிறுபான்மையோர் என்பதாலையே அவர்கள் அனைவரும் அப்பாவிகள் ஆகி விடுவார்களா?!

ஏராளமான முஸ்லிம்களும் இங்கே பல்வேறு பிரச்சனைகளைச் செய்துகொண்டு தான் உள்ளனர். தினமும் செய்தித்தாளைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

இரு பக்கமும் தவறுகள் உள்ளன.

கள்ளக்குடியேறிகள்

பங்களாதேஷ் மற்றும் மியான்மர் நாடுகளிலிருந்து கள்ளத்தனமாகக் குடியேறிய முஸ்லிம்களை, மேற்கு வங்கத்தில் வாக்குக்காக மம்தா அனுமதித்துத் தற்போது அங்கே பல்வேறு பிரச்சனைகள்.

இந்திய முஸ்லிம்களுக்கும் மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் மத ரீதியாக ஒற்றுமை இருந்தாலும், உணர்வு, எண்ணங்கள் ரீதியாகப் பல வித்யாசங்கள் உள்ளன.

இவர்களால் நாட்டின் இறையாண்மைக்கே பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது. இங்கே CAA செயல்படுத்தவில்லையென்றால், நிலை மிக மோசமாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் கள்ளக்குடியேறிகளால் ஏற்படும் பிரச்சனைகளால் அங்குள்ள மக்களே CAA கொண்டு வர பலமுறை போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் இந்துக்கள் 21% லிருந்து 2% க்கு வந்து விட்டார்கள். இந்துக்களுக்கு இங்கும் பங்களாதேஷிலும் பாதுகாப்பில்லை.

இதை ஒரே ஒரு உலகநாடாவது கேட்டுள்ளதா? சிறுபான்மை இந்துக்களுக்கு நடப்பதை ஏன் கேட்கத்தோன்றவில்லை?! ஒபாமாக்கு இதெல்லாம் ஏன் கண் தெரியவில்லை?!

பெரும்பான்மை

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்பதாலே இந்தியா என்ற நாடு சீராக இயங்கி வருகிறது. எப்போது இந்துக்கள் குறைகிறார்களோ அன்று பாகிஸ்தான் போல அமைதியை இழந்து விடும்.

இந்துக்கள் எந்த அளவுக்குச் சகிப்புத் தன்மை கொண்டவர்கள் என்பது இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது சிறுபான்மையினருக்கு புரியாது.

அதே போல வேண்டும் என்றே பேசும் ஒபாமா போன்றவர்களுக்கும் புரியாது.

கேரளாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து முஸ்லிம்கள், கிறித்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையை வைத்துப்பார்க்கும்போது முஸ்லிம்கள் எண்ணிக்கை எதிர்காலத்தில் கேரளாவில் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகமுள்ளது. அதாவது முஸ்லிம்களே பெரும்பான்மை ஆவார்கள்.

ஏற்கனவே, எதோ கிராமத்தில் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றுவதாகச் செய்திகளில் வந்தது. பெரும்பான்மையானால் அடிப்படை மதவாதத்தைப் பின்பற்றத் துவங்குவார்கள், மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பார்கள்.

ஒட்டுமொத்த இந்தியாக்கும் இது பொருந்தும். எனவே, ஒபாமா போன்றவர்கள் அரசியலுக்காக எதையும் உளறலாம் ஆனால், நிதர்சனம் வேறு.

காண வாய்ப்புள்ளது

இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால், அதற்கு இந்துக்கள் மட்டுமே காரணம் என்பதை ஏற்க முடியாது.

ஆனால், இந்தியாவில் பிரச்சனைகள் இருந்தாலும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரையே எந்தச் சமூகத்துக்கும் பாதுகாப்பு என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.

கேரளா இயல்பாகவும், CAA செயல்படுத்தப்படவில்லையென்றால், மேற்கு வங்கம் கள்ளக்குடியேறிகளாலும் முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக மாறி விடும்.

இந்தச் சமநிலை மாறும் காலத்தில் இந்துக்களின் அருமையை அனைவரும் உணர்வார்கள் ஆனால், காலம் கடந்ததாக இருக்கும்.

CAA

மத்திய அரசு CAA வை அமல்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால், இந்தியா மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்ளும்.

ஏற்கனவே, கள்ளத்தனமாகக் குடியேறிய பங்களாதேஷ், ரோஹிங்கியா முஸ்லிம்கள் வட மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஏகப்பட்ட பிரச்சனைகளைச் செய்து வருகிறார்கள்.

வட மாநிலத்தவர், இந்திய முஸ்லிம்களின் அடையாளத்தில் தமிழகம், கர்நாடகத்தில் ஊடுருவி விட்டார்கள்.

2020 ம் ஆண்டே CAA செயல்படுத்தப்பட்டு இருந்தால், ஏராளமான மதப் பிரச்சனைகள் இந்தியாவில் தவிர்க்கப்பட்டு இருக்கும்.

ஆனால், எதிர்கட்சிகளால், அதைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களாலையே தாமதமாகிறது. முள்ளின் மீதுள்ள சேலையை எடுப்பது போன்று மிகக்கவனமாகச் செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கை.

பொதுச் சிவில் சட்டம் இன்னும் ஒரு சில மாதங்களில் அறிவிக்கப்பட்டு விடும் ஆனால், CAA க்கு இந்த ஆட்சியில் வாய்ப்புக்குறைவு என்றே கருதுகிறேன்.

காரணம், CAA அறிவித்தால் நிச்சயம் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள், அடுத்த வருடம் தேர்தல் வருவதால் அடுத்த ஆட்சிலேயே செயல்படுத்துவார்கள்.

தற்போதைய நிலையில் பொதுச் சிவில் சட்டத்தைச் செயல்படுத்தி CAA சட்டத்தை அடுத்த ஆட்சிக்கு ஒத்தி வைப்பது நல்லது.

மத்திய அரசுக்குத் தெரியாதது எனக்குத் தெரிந்து விடப்போவதில்லை. எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.

இந்தியாவில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளது ஆனால், எதுவும் தெரியாமல் அல்லது வேண்டும் என்றே ஒபாமா பேசியது கண்டிக்கத்தக்கது.

மேற்கத்திய நாடுகள், உலக ஊடகங்கள் அவர்கள் நாட்டில் நடப்பதை கண்டுகொள்ளாமல் இந்தியாக்கு அறிவுரை சொல்வதை நிறுத்த மாட்டார்கள்.

மேற்கத்திய நாடுகளுக்கு முஸ்லிம்கள் மீது அக்கறை இல்லை மாறாக இந்திய வளர்ச்சி மீது காண்டு.

தொடர்புடைய கட்டுரைகள்

ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ]

George Soros | The Big Boss of Left Eco System

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

23 COMMENTS

  1. எந்த ஆதாரமும் இல்லாம இங்க நடக்கிற எல்லா தப்பையும் நியாய படுத்துறமாதிரி எழுதி இருக்கிங்க. இதைத்தான் இப்போ அதிகாரத்துல இருக்குற அரசியல் கட்சி விரும்புறாங்க, the old divide and rule method.

    //பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் இந்துக்கள் 21% லிருந்து 2% க்கு வந்து விட்டார்கள். இந்துக்களுக்கு இங்கும் பங்களாதேஷிலும் பாதுகாப்பில்லை.//

    சென்சஸ் டேட்டா பாருங்க 1941ல பாக்கிஸ்தான் Hindus population 14.58% 1951ல 1.58% இவ்வளவு சீக்கிரம் இந்து மக்கள் தொகை குறைய காரணம் சுதந்திரத்துக்கு பிறகு ஹிந்து மக்கள் இந்தியாவுக்கு வந்துட்டாங்க (migration). 2017 சென்சஸ் படி 2.14% முன்னவிட அதிகமாதான் ஆகி இருக்கு. நீங்க சிறுபான்மையினர்ன்னு மொத்தமாதான் சொல்லி இறுகிங்க but you are wrong about the data.

    ஒரு இடத்துல தப்பு நடக்கும் பொது அத யார் கேட்டா என்ன?

    எல்லா மதத்துலயும் தப்பு செய்றவங்க இருக்காங்க ஒரு குறிப்பிட்ட மதத்துல உள்ளவங்க தப்பு செஞ்சா அந்த மதத்துல உள்ள எல்லாரையும் தப்பா பாக்கணுமா?

    கூட்டமா நிறயபேர் jai shri ram சொல்லிக்கிட்டு வேற மதத்தை சேந்தவன அடிக்கறாங்க இப்படி செய்றது தீவிரவாதம்தானே, இப்போ சோசியல் மீடியால அடிக்கடி இந்த மாதிரி news பாக்க முடியுது. அது எதுவும் உண்மை இல்லன்னு சொல்ல போறிங்களா.

    இந்தியாவுல சிறுபான்மையினருக்கு எதிரா வன்முறை நடந்துதுக்கிட்டுதான் இருக்கு அதப்பத்தி நீங்க உங்க தளத்துல பேசமாட்டேங்கறீங்க.

  2. உண்மையை யார் சொன்னால் என்ன? உண்மை உண்மைதானே? ஒபாமா கூறியதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள்தான் ஒருதலைப்பட்சமாகவே எழுதுகிறீர்கள்.

  3. @பிரவீன்

    “எந்த ஆதாரமும் இல்லாம இங்க நடக்கிற எல்லா தப்பையும் நியாய படுத்துறமாதிரி எழுதி இருக்கிங்க”

    என்ன நியாயப்படுத்துற மாதிரி எழுதிட்டாங்க?! சும்மா போகிற போக்கில் அடித்து விடாமல் என்ன நியாயப்படுத்தி இருக்கேன்னு தெளிவா சொல்லுங்க.. அதற்கு பதில் கூறுகிறேன்.

    “இதைத்தான் இப்போ அதிகாரத்துல இருக்குற அரசியல் கட்சி விரும்புறாங்க, the old divide and rule method.”

    மற்றவங்க விரும்புவதற்கு விரும்பாததற்கு இங்கே நான் எழுதுவதில்லை. எனக்கு எது சரியென்று படுகிறதோ அதைத்தான் எழுதுகிறேன்.

    “சென்சஸ் டேட்டா பாருங்க 1941ல பாக்கிஸ்தான் Hindus population 14.58% 1951ல 1.58% இவ்வளவு சீக்கிரம் இந்து மக்கள் தொகை குறைய காரணம் சுதந்திரத்துக்கு பிறகு ஹிந்து மக்கள் இந்தியாவுக்கு வந்துட்டாங்க (migration). 2017 சென்சஸ் படி 2.14% முன்னவிட அதிகமாதான் ஆகி இருக்கு. நீங்க சிறுபான்மையினர்ன்னு மொத்தமாதான் சொல்லி இறுகிங்க but you are wrong about the data. ”

    நீங்கள் கூறுவது லாஜிக்காக சரி ஆனால், டேட்டாவை பற்றி கூற தெரிந்த உங்களுக்கு அதன் கீழே எழுதி இருந்த பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலை பார்த்தீங்களா?

    இது தான் இங்க பிரச்சனை.

    பாதிக்கப்படும் முஸ்லிம்களைப் பற்றிப் பேசத் தெரிந்த அனைத்து உலக தலைவர்களுக்கும், உலக ஊடகங்களுக்கும் பாகிஸ்தானில் கொடுமைக்குள்ளாகும் சிறுபான்மை இந்துக்களை பற்றி பேசத் தோன்றவில்லையே!

    “ஒரு இடத்துல தப்பு நடக்கும் பொது அத யார் கேட்டா என்ன?”

    சரியான கேள்வி! ஆனால், ஒரு தப்பை கேள்வி கேட்டால், அந்த தப்பை கேட்டவர் அதே தவறை செய்து இருக்க கூடாது. அதே போல மற்ற பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து இருக்கணும்.

    இவர் லட்சம் பேரை கொன்னுட்டு அடுத்த நாட்டுக்கு உபதேசம் செய்தால், கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.

    “எல்லா மதத்துலயும் தப்பு செய்றவங்க இருக்காங்க ஒரு குறிப்பிட்ட மதத்துல உள்ளவங்க தப்பு செஞ்சா அந்த மதத்துல உள்ள எல்லாரையும் தப்பா பாக்கணுமா?”

    அதைத்தான் கட்டுரையில் கூறி உள்ளேன்.

    ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த நாட்டை ஏன் குறை கூறனும் என்று தான் நானும் கேட்கிறேன்.

    “கூட்டமா நிறயபேர் jai shri ram சொல்லிக்கிட்டு வேற மதத்தை சேந்தவன அடிக்கறாங்க இப்படி செய்றது தீவிரவாதம்தானே, இப்போ சோசியல் மீடியால அடிக்கடி இந்த மாதிரி news பாக்க முடியுது. அது எதுவும் உண்மை இல்லன்னு சொல்ல போறிங்களா.”

    இந்து மதத்தை சார்ந்த தலைவர்களை கொல்வதும், சிலிண்டர், டிபன் பாக்ஸ் குண்டு வைப்பதும், லவ் ஜிகாத் செய்வதும், ரயிலை எரிப்பதும், மத மாற்றம் செய்வதும், எங்க பகுதிகளில் நுழையக் கூடாது என்று அதிகாரிகளைத் தடுப்பதும், இந்தியாவிலிருந்து கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத்ன்னு சொல்றதும், ஷாகின் பாக் போராட்டங்களில் பிரச்சனைகளை உருவாக்குவதும், மோடி சிறந்தவர் என்று கூறியதாலையே ஒருவரை கொன்றதும் உண்மை இல்லைனு சொல்ல போறிங்களா?

    “இந்தியாவுல சிறுபான்மையினருக்கு எதிரா வன்முறை நடந்துதுக்கிட்டுதான் இருக்கு அதப்பத்தி நீங்க உங்க தளத்துல பேசமாட்டேங்கறீங்க.”

    நான் எதற்கு பேசணும்னு கேட்கிறேன்?!

    அதைப்பேச தமிழக ஊடகங்கள், உலக ஊடகங்கள், உலக தலைவர்கள், திராவிட தலைவர்கள், இடது சாரிகள், திமுக, திக, அதிமுக, விசிக, fact checker, ஒபாமா, பைடன், உலக மனித உரிமை ஆணையம், பிரவீன் நீங்க என்று இத்தனை பேர் இருக்கீங்க.

    இவர்கள் எல்லாம் இந்துக்களுக்கு ஆதரவாகவும் பேசி இருந்தால், எனக்கும் மற்றவர்களுக்காக பேச வேண்டும் என்று தோன்றும்.

    இந்துக்களுக்கு ஆதரவா பேச இங்க யார் இருக்கா? நீங்களே (நீங்க இந்து என்று நினைக்கிறேன்) இந்துக்களுக்கு ஆதரவா எதுவுமே பேசவில்லையே? பேச மனம் இல்லையே!

    இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு விருப்பமில்லை.. இந்து கடவுளை அசிங்கப்படுத்தினால் தண்டிக்க அரசு இல்லை.

    மதச்சார்பின்மை என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே இந்துக்களை மதிப்பதில்லை. ஓர வஞ்சனை செய்கிறது.

    தமிழ்நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மை அவ்வளோ தான் ஆனால், எந்த சம உரிமையும், மரியாதையும் கிடைப்பதில்லை.

    முதல்வரைக் கிண்டல் செய்தார் என்று கைது செய்கிறார்கள் ஆனால், பல கோடி மக்கள் மதிக்கும் கடவுளை அசிங்கமா பேசுகிறார்கள் ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    இதுல என்கிட்டே நியாயம் கேட்க வந்துட்டீங்க!

    உங்களுக்கு இந்துக்களுக்கு நடப்பதை பற்றி அக்கறையோ, மற்றவர்கள் இழிவுப்படுத்துவதை பற்றிய கவலையோ இல்லாமல் இருக்கலாம் ஆனால், எனக்கு இருக்கு.

    போலி மதசார்பின்மை போராளிகளால் எதிர்காலத்தில் இந்து மதத்தின், இந்துக்கள் நிலை என்ன ஆகும்? என்ற கவலை அக்கறை உள்ளது.

    இந்துக்களுக்கு, இந்தியாக்கு எதிராக யாராவது பேசினால் கண்டிப்பா கேட்பேன்.

    இங்கு எழுதப்படும் அனைத்து கட்டுரைகளுக்கும் என்ன கேள்வி கேட்டாலும் என்னால் பதிலளிக்க முடியும்.

    எனவே, உங்களுக்கு கேள்வி இருந்தால் பொதுப்படையாக கேட்காமல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதில் என்ன தவறு என்பதை வரியைக் குறிப்பிட்டு கேளுங்கள்.

    உங்களைப் போன்றவர்களுக்காகவே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். நேரம் இருப்பின் படிக்கவும்

    https://www.giriblog.com/hindu-religion-is-going-to-a-tough-situation-in-tamilnadu/

  4. @எழில் பிரகாஷ்

    “உண்மையை யார் சொன்னால் என்ன? உண்மை உண்மைதானே? ஒபாமா கூறியதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை”

    ப்ரவீனுக்கு கூறிய பதிலே உங்களுக்கும்.

    “நீங்கள்தான் ஒருதலைப்பட்சமாகவே எழுதுகிறீர்கள்.”

    நான் எப்போது நடுநிலையாக எழுதுகிறேன் என்று கூறினேன்?! என் நிலையைத் தெளிவாகக் கூறியபிறகும் என்னிடம் எதற்கு எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை!

    நான் நடுநிலை என்று எங்கும் கூறவில்லை. எனவே, எனக்கு போலியாக நடிக்க வேண்டிய எந்த அவசியமுமில்லை.

    https://www.giriblog.com/neautral-is-possible-or-not/

    இங்கே அனைவருமே எதோ ஒரு கருத்தில் / சித்தாந்தத்தில் இருப்போம் அப்படியிருக்கையில் இங்கே யார் நடுநிலை?!

    நான் என் கருத்தைக் கூறுகிறேன் நீங்கள் உங்கள் கருத்தைக் கூறுகிறீர்கள் அவ்வளவே.

    நீங்கள் நடுநிலை என்று கூறுவீர்களா? 100% வாய்ப்பில்லை, பிறகு என்னிடம் எதற்கு எதிர்பார்க்கிறீர்கள்?

    முதலில் இங்கே யார் நடுநிலை என்று கூறுங்கள். எனக்கும் அப்படிப்பட்ட ஒருவரை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.

  5. கிரி ஒரு சின்ன சந்தேகம். நீங்கள் கிளியர் பண்ணுங்க. பாகிஸ்தானில் இந்துக்களுக்கோ மற்ற சிறுபான்மை மக்களுக்கோ அநியாயம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதே!, குற்றவாளிகளை தண்டிக்கிறார்களே!, சமீபத்தில் கூட இலங்கை பிரஜையை கொன்றவர்களை தூக்கு தண்டனை விதித்தார்களே!

    இந்தியாவில் கொலைகாரங்களுக்கு ஆரத்தி எடுத்து பூமாலை போட்டு வரவேற்கும் கூத்து இந்திய மண்ணில் இப்போது தான் நடக்கிறது.

    நீங்கள் உங்கள் மதத்துக்காக தாராளமாக பேசுங்கள். அது உங்கள் உரிமை. ஏன் அநீதிக்கு துணை போகிறீர்கள்.

    முஸ்லிம்கள் செய்கின்ற குற்றங்கள் அவர்களின் சனத்தொகை விகிதாச்சாரத்தோடு ஒப்பிட்டால் மிக மிக குறைவு.

    தங்கள் வீடுகளுக்கு தாங்களே வெடி குண்டு வீசும் பாஜக பிரமுகர்கள் பற்றிய செய்திகள் படித்து இல்லை யா?

    சமீபத்தில் கூட பாஜக பிரமுகர் வீட்டில் வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டது?
    இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

    யார் ரயில் எரித்தது?

    இந்து யாத்ரீகர்கள் ரயிலில் சமைத்ததால் தான் ரயில் தீப்பிடித்தது. ஆய்வறிக்கை படிக்க இல்லையா? தேடி படியுங்கள்.

    அவசரமாக முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி பல நூற்றுக்கணக்கான க்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

    எனக்கு தெரிந்தது மட்டும் நதியா, பாத்திமா பாபு, குஷ்பு போன்றவர் இந்துக்களை திருமணம் செய்தது என்ன ஜிஹாத்?.‌நீஙகள் தான் சொல்ல வேண்டும்.

    நீங்கள் நியாயத்தை பேசுங்கள். உண்மை பேசுங்கள்.

    உங்கள் மதத்தை ஆதரிப்பது வேறு.

    அநியாயத்தை ஆதரிப்பது வேறு.

    வித்தியாசம் உங்களுக்கு தெரியும்.

    இஸ்லாத்தின் மீது அந்த காலத்தில் இருந்து இப்போதும் எப்போதும் அவதூறுகள், அநியாயங்கள் இருந்து கொண்டே இருந்தது. இருந்து கொண்டே இருக்கும்.

  6. பாபர் மசூதி ஒரே இரவில் இடிக்கப்பட்டதே? வெடி மருந்து யார் கொடுத்தது?

    அன்றிலிருந்து இன்றுவரை நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற எல்லா பிரச்சினைகளுக்கும் விதை யார் போட்டது?

    நாட்டை நாசமாக்கி யவர் யார் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

  7. @Fahim

    “உங்கள் மதத்தை ஆதரிப்பது வேறு.

    அநியாயத்தை ஆதரிப்பது வேறு.

    வித்தியாசம் உங்களுக்கு தெரியும்.”

    நீங்கள் கூறிய மேற்கூறிய விஷயம் உங்களுக்கும் பொருந்தும் என்ற உண்மை புரியாமலே என்னைச் சொல்லிக்கொண்டுள்ளீர்கள்.

    இதைக் கூறி விட்டு, முடித்துக்கொள்ளலாம் என்று தான் நினைத்தேன்.

    காரணம், நீங்களும் நானும் விவாதிப்பது சுவற்றின் முன் நின்று கொண்டு சத்தம் போட்டுக்கொண்டு இருப்பதற்கு சமம்.

    இருவருக்குமே எந்த பயனுமில்லை.

    ஆனால், இதற்கு பதில் அளிக்கிறேன் காரணம், பதில் உங்களுக்கு அல்ல. ஏனென்றால், எதைக்கூறினாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும்.

    நீங்கள் கேங்ஸ்டர் அடிக் அகமதுவையே அவர் இஸ்லாத்தை சார்ந்தவர் என்பதால் ஆதரித்தவர்.

    இதற்கு விளக்கம் கொடுக்க நினைத்ததற்கு முக்கிய காரணம், நீங்களும் நானும் விவாதிப்பது இருவருக்கும் எந்த பயனையும் அளிக்காது

    ஆனால்,

    இதைப்படிப்பவர்களுக்கு யார் எப்படி பேசுகிறார்கள்? எதை எதிர்க்கிறார்கள்? எதை ஆதரிக்கிறார்கள் என்று புரியும்.

    இதன் மூலம் மற்றவர்களுக்கு யார் கூறிக்கொண்டு இருப்பது முட்டாள்தனமாக உள்ளது என்பது புரியும்.

    எனவே, உங்களின் அனைத்து கருத்துகளுக்கும் வரிக்கு வரி பதில் அளிக்கிறேன். எவ்வளவு தூரம் போகிறது? என்னென்ன தகவல்கள் வெளியே வருகிறது? என்று பார்ப்போம்.

    நீங்கள் உங்களுக்கு தேவையான விஷயத்தை மட்டும் எடுத்து அதைக் கேள்வி கேட்டுள்ளீர்கள். கட்டுரையில் கூறியுள்ளதை தவிர்த்து விட்டு, கமெண்ட்ஸில் கூறியதை வைத்துக் கருத்து இட்டுள்ளீர்கள்.

    அது ப்ரவீனுக்கு கூறியது.

    கட்டுரையை பற்றி நீங்கள் எதுவுமே கூறவில்லை.

    உங்களின் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன், வரிக்கு வரி. ஏனென்றால், நான் என் மனசாட்சி படி எழுதுகிறேன். நான் எழுதிய கட்டுரைக்கு என்ன கேள்விகள் கேட்டாலும் பதில் அளிக்க முடியும்.

    எனவே, தவறு என்றால் ஒப்புக்கொள்ள முடியும்.

    நான் எந்தத் தவறையும் நியாயப்படுத்த விரும்பவில்லை. தவறு யார் செய்தாலும் தவறே!

    உங்களுடைய மேற்கூறிய விமர்சனத்துக்கு விரைவில் பதில் அளிக்கிறேன்.

  8. கிரி, நான் கேங்ஸ்டர் அதிக் அகமது வை ஆதரிக்கவே இல்லை. யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறினேன். அவர் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிக்கு ஒரு தண்டனையும் இல்லை.

    நீங்கள் கூட அது என்கவுண்டர் என்று நியாயப்படுத்தினீர்கள். அவரை கொன்றவர் போலீசார் இல்லை. உங்கள் கருத்துப்படி யார் வேண்டுமானாலும் சட்டத்தை கையில் எடுக்கலாம்.அதைதவறு என்று தான் சொல்ல வந்தேன்.

    தவறு செய்பவர் முஸ்லிம் என்று தெரிந்து நான் கண் மூடித்தனமாக ஆதரித்தால் நான் உண்மையில் முஸ்லிமே இல்லை. பச்சை இனவாதி.

    இஸ்லாம் எங்களுக்கு பொய் சாட்சி சொல்வதை பெரும் பாவமாக எச்சரிக்கை செய்கிறது.

  9. @Fahim

    “பாகிஸ்தானில் இந்துக்களுக்கோ மற்ற சிறுபான்மை மக்களுக்கோ அநியாயம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதே!, குற்றவாளிகளை தண்டிக்கிறார்களே!”

    இதைப்படித்தால் பாகிஸ்தான்காரனே சிரித்து விடுவான். கோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதீங்க Fahim.

    “இந்தியாவில் கொலைகாரங்களுக்கு ஆரத்தி எடுத்து பூமாலை போட்டு வரவேற்கும் கூத்து இந்திய மண்ணில் இப்போது தான் நடக்கிறது.”

    தங்கள் வீடுகளுக்கு தாங்களே வெடி குண்டு வீசும் பாஜக பிரமுகர்கள் பற்றிய செய்திகள் படித்து இல்லை யா?”

    ஆரத்தி எடுத்தது மிகத்தவறானது. வன்புணர்வு செய்தவர்களை தூக்கில் போட்டு இருக்க வேண்டும். இதுவே என் உறுதியான கருத்து.

    பாஜக காரன் அவனுக வீட்டுல குண்டு போட்டு லைம் லைட்டுக்காக செய்த வழக்கில் ஐந்து வருடங்களாவது குறைந்தது சிறையில் அடைக்க வேண்டும்.

    இது போன்ற பையத்தியக்காரத்தனமான செயல்களைத் தொடர அனுமதிக்க கூடாது.

    “முஸ்லிம்கள் செய்கின்ற குற்றங்கள் அவர்களின் சனத்தொகை விகிதாச்சாரத்தோடு ஒப்பிட்டால் மிக மிக குறைவு.”

    நீங்கள் உங்க சமூக தள செய்திகளை மட்டுமே படித்துக்கொண்டு இருந்தால், இது போன்ற கற்பனையில் தான் இருக்க வேண்டும்.

    “சமீபத்தில் கூட பாஜக பிரமுகர் வீட்டில் வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டது? இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?”

    கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முட்டிக்கு முட்டி தட்டி சிறையில் அடைக்கணும். இனியொரு முறை இந்த எண்ணமே வர முடியாத அளவுக்கு நொக்கி எடுக்கணும்.

    மேற்கு வங்கத்தில் 27,000 கிலோ அமோனியம் நைட்ரேட், 1625 கிலோ ஜெலட்டின் குச்சிகள், 2325 டெட்டனேட்டர்களை NIA ஜுன் 2022 ல் கண்டுபிடித்தது. இதை பாதுகாத்து வைத்தது முஸ்லிம்கள்.

    இவை வைத்து எப்படிப்பட்ட பேரழிவை ஏற்படுத்த முடியும் என்ற சீரியஸ்னஸ் புரிகிறதா? இது மாதிரி ஏராளமான சம்பவங்கள் முஸ்லிம்கள் மீது உள்ளன.

    கோவை குண்டு வெடிப்பில் கைதானவர்களை விடுதலை செய்யக்கூறி கோரிக்கை வைக்கிறீர்கள்!

    என்ன செய்யலாம்?! நீங்கள் சொல்லுங்கள்.

    “யார் ரயில் எரித்தது?”

    அடிப்படை வாத முஸ்லிம்கள்.

    “இந்து யாத்ரீகர்கள் ரயிலில் சமைத்ததால் தான் ரயில் தீப்பிடித்தது. ஆய்வறிக்கை படிக்க இல்லையா? தேடி படியுங்கள்.”

    ஆமாம். இந்துக்களே ரயில் வெளிக் கதவெல்லாம் பூட்டி வைத்துத் திறக்க முடியாத அளவுக்குச் செய்து அடுப்பையும் பற்ற வைத்து தீயில் வெந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் என்று செய்துள்ளார்கள்.

    நீதிமன்றம் தான் மோடியையும் குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது ஆனால், ஏன் எதிர்க்கிறீர்கள்? குற்றம் சுமத்துகிறீர்கள்? நீதிமன்ற அறிக்கை கூறியது சரி என்று ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை.

    அப்போது ஆய்வு அறிக்கையைப் படிக்க மறந்து விட்டீர்களா? தேடி படியுங்கள்.

    சமீபத்தில் கேரளாவில் உபியை சார்ந்த முஸ்லீம் ஒருவன் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டான். இதில் இறந்தவர்களில் முஸ்லீம் பெண்மணியும் ஒருவர்.

    தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான்.

    “எனக்கு தெரிந்தது மட்டும் நதியா, பாத்திமா பாபு, குஷ்பு போன்றவர் இந்துக்களை திருமணம் செய்தது என்ன ஜிஹாத்?.‌நீஙகள் தான் சொல்ல வேண்டும்.”

    இயல்பாக காதலித்து திருமணம் செய்கிறவர்களை யாரும் குறை கூற போவதில்லை.

    ஆனால், காதலித்து மதம் மாற்றம் செய்ய வேண்டும், பின்னர் கழட்டி விட வேண்டும் என்பதையே வேலையாக செய்து கொண்டு இருப்பவர்கள் தான் பிரச்சனை.

    வாரத்துக்கு நான்கு செய்திகள் குறைந்தது இது போல வருகிறது. இந்து பெயரில் காதலித்து பின்னர் உண்மை பெயர் தெரிய வந்து பெண் ஒதுங்கினால் கொலை செய்வது.

    ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் இதற்காகவே முஸ்லீம் அமைப்புகளால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

    The Kerala Story யில் வருவது போல. நான் கூறுவது இவர்களைத்தான்.

    “இஸ்லாத்தின் மீது அந்த காலத்தில் இருந்து இப்போதும் எப்போதும் அவதூறுகள், அநியாயங்கள் இருந்து கொண்டே இருந்தது. இருந்து கொண்டே இருக்கும்.”

    அதற்கு காரணம் பல முஸ்லிம்களின் அடிப்படைவாத சிந்தனை, வஹாபி சிந்தனை. முஸ்லீம் மதம் மட்டுமே சிறந்தது, அல்லா ஒருவரே கடவுள் என்று கூறுவது.

    முஸ்லிம்கள் மட்டுமே நினைத்துக்கொள்வதில் தவறில்லை ஆனால், மற்றவர்களையும் நம்ப வைக்க முயற்சிக்கும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது.

    UCC யை கொண்டு வரக் கூடாது, மோடி அமித்ஷாவை கொலை செய்து விடுவோம் என்று பொதுவெளியில் மிரட்டியுள்ளார்கள்.

    முஸ்லிம்கள் அனைவரும் அப்பாவிகள், எந்தக் குற்றமும் செய்யாதவர்கள், வாயில் விரலை வைத்தால் கூடக் கடிக்க தெரியாதவர்கள் என்று யாரோ உங்களை நம்ப வைத்துள்ளார்கள்.

    எதனால் அகதிகளாக சென்ற முஸ்லிம்கள், வாழ இடம் கொடுத்த நாட்டிலேயே பிரச்சனை செய்கிறார்கள்? எதனால் முஸ்லீம் அகதிகளை அரபு நாடுகள் ஏற்பதில்லை?

    இதற்கான காரணத்தைக் கூறுங்கள்?

    “பாபர் மசூதி ஒரே இரவில் இடிக்கப்பட்டதே? வெடி மருந்து யார் கொடுத்தது?”

    மேற்கு வங்கத்தில் தயாரிப்பது போல இவர்களுக்கும் யாராவது கொடுத்து இருக்கலாம்.

    “அன்றிலிருந்து இன்றுவரை நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற எல்லா பிரச்சினைகளுக்கும் விதை யார் போட்டது?”

    காந்தி.

    ஜின்னா மட்டும் பாகிஸ்தான் என்று முஸ்லிம்களை தனியாக பிரித்து செல்லவில்லை என்றால், இன்று இந்து முஸ்லீம் என்று அடித்துக்கொண்டு அனைவரும் செத்து இருப்பார்கள்.

    ஆனால், காந்தி எதோ ரொம்ப நல்லவர் போல செக்குலர் என்று இந்தியாவை அறிவித்து இன்று வரை பிரச்சனையாக உள்ளது.

    செக்குலர் என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களின் வழக்கங்கள் மறுக்கப்படுகின்றன. போட்டி வழக்கங்கள் திணிக்கப்படுகின்றன. எதையும் நிம்மதியாக செய்ய முடியவில்லை.

    சிறுபான்மையின வாக்குக்காக இந்துக்களை அவமானப்படுத்தும், புறக்கணிக்கும், ஒதுக்கும் செயல்கள் அதிகரித்து விட்டன.

    சுதந்திரம் வாங்கி கொடுக்கப் பேருதவியாக இருந்தவர் காந்தி ஆனால், அதன் பிறகான வாழ்க்கையை வாழச் சரியான முடிவுகளை எடுக்கவில்லை.

    எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயற்சித்தால், நாமும் நன்றாக இருக்க முடியாது, மற்றவர்களும் நன்றாக இருக்க முடியாது.

    இது ஒரு தலைவருக்கு முக்கியமான தகுதி. இது போன்ற முடிவுகளில் அறிவு சொல்வதை கேட்டு முடிவு செய்ய வேண்டும், இதயம் சொல்வதைக் கேட்டல்ல.

    காந்தியின் அன்றைய இரக்க குணம், இன்று பல்வேறு கலவரங்களுக்கு பிரச்சனைகளுக்கு காரணமாகியுள்ளது.

    தற்போது நடக்கும் இந்து முஸ்லீம் பிரச்சனைகளை விட சுதந்திரத்துக்கு முன் மிக மிக மோசமான கலவரங்கள் நடந்துள்ளன.

    அப்படியிருக்கும் போது செக்குலர் நாடு என்று அறிவித்தால் இந்தியா என்ன நிலைக்கு எதிர்காலத்தில் செல்லும் என்று கணிக்க முடியவில்லையா?

    ஜின்னா பிரித்ததால் தான் இன்று நீங்களும் நானும் பேசிக்கொண்டுள்ளோம். இல்லையென்றால், உயிருடன் இருப்போமா என்பதே சந்தேகம்.

    முஸ்லிம்களுக்கு 50 நாடுகள் உள்ளன ஆனால், இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே உள்ளது.

    எனவே, இந்த ஒரு நாடும் போய் விடுமோ, இருப்பவர்களையும் மதம் மாற்றி விடுவார்களோ என்ற பயமே எங்களை இப்படி பேச வைக்கிறது.

    ஏற்கனவே PFI போன்ற இயக்கங்கள் இந்தியாவை 2047 ம் ஆண்டில் முஸ்லீம் நாடாக மாற்றுவோம் என்று கூறி வருகிறார்கள்.

    இந்நிலையில் மதம் மாற்றம், லவ் ஜிகாத், இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடரும் போது மதத்தின் மீது பற்றுள்ள ஒரு இந்துக்கு பயம் வருவது இயற்கை தானே!

    “நாட்டை நாசமாக்கி யவர் யார் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.”

    வாக்கரசியலுக்காக செக்குலர் என்று பேசும் கேடுகெட்ட அரசியல்வாதிகளும், நடுநிலை என்று சுற்றிக்கொண்டு, முற்போக்கு பேசும் வீணாப்போன இந்துக்களும் தான்.

  10. “நீங்கள் கூட அது என்கவுண்டர் என்று நியாயப்படுத்தினீர்கள். அவரை கொன்றவர் போலீசார் இல்லை. உங்கள் கருத்துப்படி யார் வேண்டுமானாலும் சட்டத்தை கையில் எடுக்கலாம்.அதைதவறு என்று தான் சொல்ல வந்தேன்.”

    பலரின் வாழ்க்கையை சீரழித்தவன், பெண்களைச் சிறுமிகளை வன்புணர்வு செய்தவன், பலரின் நிலங்களை அபகரித்தவன், அப்பாவிகளைக் கொன்றவன் என்கவுண்டர் செய்யப்பட்டு செத்தால் என்ன? இன்னொரு கேங்ஸ்டரால் கொல்லப்பட்டு செத்தால் என்ன?

    இவனுக்காக எதற்கு முஸ்லிம்கள் மெழுகு வர்த்தி ஏந்தி ஊர்வலம் போகிறீர்கள்? எதற்கு இது படுகொலை என்று கூவனும்?

    எதற்கு நாளைக்கு நமக்கும் இந்த நிலை வரலாம் என்று பயப்படணும்? நீங்கள் மேற்கூறிய குற்றங்களைச் செய்கிறீர்களா? இல்லையே!

    இதையெல்லாம் செய்பவன் தான் நம்மையும் போட்டுத் தள்ளிடுவாங்களோ என்று பயப்படணும், சாதாரண நபர் நீங்கள் எதற்கு பயப்படணும்?

    இவனெல்லாம் எப்படி செத்தால் என்ன? இவனெல்லாம் நாட்டுக்கே பாரம்.

    முஸ்லிம்கள் பெண்கள், மதரஸா சிறுமிகள் உட்பட பல பெண்களை கடத்தி வன்புணர்வு செய்து கொன்றுள்ளான்.

    இவனைப்போன்றவர்களுக்கு எந்த மதத்தினராக இருந்தாலும் இதே நிலை தான் வரணும், இருந்தால் இன்னும் நாலு குடும்பங்களைச் சீரழிப்பார்கள்.

    பாதிக்கப்பட்டது யாரோ ஒருத்தர், யாரோ ஒரு முஸ்லீம் குடும்பம் என்பதால் தானே அவன் படுகொலையைக் கண்டிக்க வேண்டும், சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்றெல்லாம் நியாயம் பேசுகிறீர்கள்.

    இதே அடிக் அகமதுவால் நீங்களோ, உங்கள் குடும்பத்தினருரோ பாதிக்கப்பட்டு இருந்தால், இதே போல கூறிக்கொண்டு இருப்பீர்களா?

    சட்டத்தைக் கையில் எடுப்பது தவறு தான் ஆனால், இது போன்ற கேடு கெட்டவர்களைக் கொல்வதற்கு சட்டத்தைக் கையில் எடுப்பது 100% சரியே.

    எந்த ரவுடி செத்தாலும் யாரும் அவனுக்காக பரிதாபப்படப்போவதில்லை. உங்களைப் போன்றவர்களே சட்டம், மனித உரிமைன்னு நியாயம் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

    உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். அவை உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா இல்லையா என்பதை பற்றி எனக்கு கவலையில்லை.

    ஆனால், எதையும் புறக்கணிக்காமல், பயந்து ஒதுங்காமல் பதில் அளித்துள்ளேன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

    இனி நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன்.

    சிறுபான்மையினர் என்ற பெயரில் செய்யும் தவறுகளை எப்படி நியாயப்படுத்துகிறார்கள், செக்குலரை எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    எனவே, நீங்கள் எப்படி, என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அளிக்கத் தயார். எவ்வளவு தூரம் போகிறது என்று பார்த்து விடுவோம்.

    யார் லாஜிக்கலாக, தெளிவாக, சரியான விவாதத்தைச் செய்கிறார்கள் என்று மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

  11. நான் இவ்வளவு காலமும் உங்களுடன் பேசியது இதயத்தைக் கேட்டு. நீங்களும் இதயத்தைக் கேட்டு பதில் சொல்கிறீர்கள் என்று தான் எதிர்ப்பார்த்தேன். நீங்கள் அப்படி இல்லை.

    பரவாயில்லை. முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே இந்துக்களை ஆயுதப் பயிற்சி கொடுத்து நச்சு எண்ணங்களை விதைக்கும் ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் தானே நீங்கள். உங்களிடம் நியாயத்தை எதிர்ப்பார்த்து வாதம் புரிந்தது என் பிழை தான்.

    உங்கள் மனசாட்சி படி சொல்லுங்க குஜராத் கலவரத்துக்கு யார் காரணம்?

    மோடி இல்லை யா? ஈசான் ஜாஃப்ரி மோடி டெலிபோன் உரையாடல் ரெக்கார்ட்ஸ் எப்படி அழிந்தது?

    முஸ்லிம்கள் மீதான படுகொலையின் போது போலீசார் இராணுவம் கைகட்டி வேடிக்கை பார்க்க யார் காரணம். ?

    அவர்களை செயற்பட விடாமல் தடுத்தது யார்?

    ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை அப்படி அழிப்போம் இப்படி அழிப்போம் என்று நாளுக்கு ஒரு சாமியார் கூக்குரல் இடுகிறார்களே என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

    BBC ஆவணப் படம் ஏன் தடை செய்தீர்கள்?
    மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் ஏன்?

    அதில் மோடி யின் குரல் தெளிவாக கேட்கிறதே?

    பொய் வீடியோ என்று BBC க்கு எதிராக அவதூறு வழக்கு போடலாம் தானே?

    பாஜக வுக்கு சார்பாக தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகள் ரிடயர்டுக்கு பிறகு கவர்னர் பதவிகளுக்கு நியமனம் நியமனம் பெறுவது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?

    தீவிரவாத சிந்தனை முழு நாட்டையும் சீரழிக்கும். சமூகத்தையும் சீரழிக்கும். அப்படிப் பட்ட சிந்தனைக்கு வழி வகுத்தது பாபர் மசூதி இடிப்பு தான்.
    1990 க்கு பிறகு தான் நாடு சீரழிய துவங்கியது. ஏற்றுக் கொள்வீர்களா?

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி யார்?

    கோட்சே ஏன் முஸ்லிம் தோற்றத்தில் காந்தி யை கொன்றான்?

    முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்று தானே?

    அடிக் அஹ்மத் குற்றவாளி என்பது நிரூபித்து தாராளமாக தூக்கு தண்டனை வாங்கிக் கொடுங்கள்?
    யார் வேண்டாம் என்றது?

    ஏன் நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை யா?

    போலீசார் முன்னிலையில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி சுட்டவர்கள் முஸ்லிம்கள் மீது இரக்கப்பட்டு , அடிக் அஹ்மத் முஸ்லிம்கள் மீது நிறைய அநியாயம் செய்கிறான் என்று நல்ல எண்ணத்தில் சுட்டிருப்பார்கள். அந்த கொலை காரர்கள் எவ்வளவு நல்லவர்கள்!!!

    அடிக் அஹ்மத் விடயத்தில் முஸ்லிம்கள் விடயத்தில் நீங்கள் காட்டும் அன்பு, பாசம், அக்கறைக்கு மிகவும் நன்றி.

    அதே அன்பு பாசம் அக்கறை முஸ்லிம்கள் மீது அநீதி இழைத்த போது அநீதி இழைக்கப்படும் போது மவுனமாக இருக்கிறீர்களே? இது எப்படி?

    நேர்மறை எண்ணங்கள், கர்மா என்று அடிக்கடி பேசும் நீங்கள் அதற்கு மாற்றாக செயற்படுவது இப்போது நன்றாக தெரிகிறது.

  12. கோவை குண்டு வெடிப்பில் கைதானவர்களை விடுதலை செய்யக்கூறி கோரிக்கை வைக்கிறீர்கள்!

    என்ன செய்யலாம்?! நீங்கள் சொல்லுங்கள்.

    ராஜிவ் காந்தி கொலையாளி களை என்ன செய்தீர்கள், ராஜீவ் காந்தி சாதாரண நபரா?

    வருடாவருடம் பயங்கர குற்றங்களை செய்த பல ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார் களே?

    ஆயுள் தண்டனை காலம் முடிவடைந்தால் விடுதலை செய்ய தானே வேண்டும்.

    “ஆனால், காதலித்து மதம் மாற்றம் செய்ய வேண்டும், பின்னர் கழட்டி விட வேண்டும் என்பதையே வேலையாக செய்து கொண்டு இருப்பவர்கள் தான் பிரச்சனை”

    இது என்ன லாஜிக் இல்லாத பேச்சு?

    காதலித்து கடைசி வரை அன்புடன் இருந்தால் மட்டுமே அந்த பெண் முஸ்லிமாக இருப்பாள். இடையில் கழட்டி விட்டால் அவள் தாய் மதத்துக்கே திரும்பி விடுவாளே?

    இப்படி ஒரு லவ் ஜிஹாத் தேவை யா?

    “The Kerala Story யில் வருவது போல. நான் கூறுவது இவர்களைத்தான்”

    இன்னுமா Kerala Story ஐ உதாரணமாக சொல்லலாம். அது கற்பனை கதை என்று அதை எடுத்த இயக்குனரே நீதிமன்றத்தில் சொல்லிட்டாரே!!!

    கொஞ்சம் update ஆ இருக்க கிரி,
    அந்த கற்பனை யை உண்மை என்று நம்பி என்னா விமர்சனம் எழுதினீர்கள்?

    “முஸ்லிம்கள் அனைவரும் அப்பாவிகள், எந்தக் குற்றமும் செய்யாதவர்கள், வாயில் விரலை வைத்தால் கூடக் கடிக்க தெரியாதவர்கள் என்று யாரோ உங்களை நம்ப வைத்துள்ளார்கள்”

    இதை யாரிடம் சொல்வது. நான் அப்படி சொன்னேனா?

    நான் சொன்னால் நீங்கள் நம்ப போவது இல்லை. தரவு களை தேடிப் பாருங்கள். குற்றவாளிகள் விகிதம் சனத்தொகை விகிதம்.

    “ஏற்கனவே PFI போன்ற இயக்கங்கள் இந்தியாவை 2047 ம் ஆண்டில் முஸ்லீம் நாடாக மாற்றுவோம் என்று கூறி வருகிறார்கள்.”

    இந்தியா என்றில்லை. உலகத்தில் இஸ்லாம் வேகமாக வளர்கின்றது. எவ்வளவு எதிர்ப்புகள், அவதூறுகள், அநியாயங்கள், யுத்தங்கள், பழிகள் முஸ்லிம்கள் மீது இஸ்லாத்தின் மீது போடப்பட்டது, போடப்பட்டு கொண்டு இருந்தது.

    இதை எல்லாம் தாண்டி இஸ்லாம் வேகமாக வளர்கின்றது என்றால் என்ன காரணம்?

    மேற்கு ஊடகங்கள் முதல் அனைத்து ஊடகங்களும் திரைப்படங்கள் உட்பட அனைத்து கருவிகளையும் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தினாலும் இஸ்லாம் வேகமாக வளர்கின்றது.

    அந்த காழ்ப்புணர்ச்சி தான் உங்களை இப்படி பேச எழுத வைக்கிறது.

    இறைவன் நாட்டம் எல்லாம் நடந்தே தீரும். உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும்.

  13. “முஸ்லிம்களுக்கு 50 நாடுகள் உள்ளன ஆனால், இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே உள்ளது.

    எனவே, இந்த ஒரு நாடும் போய் விடுமோ, இருப்பவர்களையும் மதம் மாற்றி விடுவார்களோ என்ற பயமே எங்களை இப்படி பேச வைக்கிறது”

    இதற்கு அநீதிக்கு துணை போகாதீர்கள்.

    நீதியை பேசுங்கள். உங்கள் மதத்தின் நல்லவைகளை பேசுங்கள். எல்லோரையும் சமமாக நடத்துங்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள். நல்லெண்ணம் வர செய்யுங்கள். இந்தியா வளரும். இந்து மதம் வளரும். ஒற்றுமையில் இருக்கும் நிம்மதி வேற்றுமையில் இல்லை.

    எங்கள் அடுத்த சந்ததிக்கு நிம்மதியாக சந்தோஷமாக இருக்கும்.

    அடுத்தவன் அழிந்தால் நாம் சந்தோஷமாக வாழலாம் என்றால் அது ஒரு போதும் நடக்காது.

    நேர்மறை யாக சிந்திக்க வேண்டுகிறேன்.

  14. “நான் இவ்வளவு காலமும் உங்களுடன் பேசியது இதயத்தைக் கேட்டு. நீங்களும் இதயத்தைக் கேட்டு பதில் சொல்கிறீர்கள் என்று தான் எதிர்ப்பார்த்தேன். நீங்கள் அப்படி இல்லை.

    பரவாயில்லை. முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே இந்துக்களை ஆயுதப் பயிற்சி கொடுத்து நச்சு எண்ணங்களை விதைக்கும் ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் தானே நீங்கள். உங்களிடம் நியாயத்தை எதிர்ப்பார்த்து வாதம் புரிந்தது என் பிழை தான்.”

    தற்போதாவது நீங்கள் என்னைப் புரிந்து கொண்டது மகிழ்ச்சி. இனி உங்களுக்கு சந்தேகம் வராது என்று நம்புகிறேன்.

    “உங்கள் மனசாட்சி படி சொல்லுங்க குஜராத் கலவரத்துக்கு யார் காரணம்?”

    நீங்கள் நூறு முறை எப்படி டிசைன் டிசைனா கேட்டாலும் என்னுடையது ஒரே பதில் தான். அது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்.

    “BBC ஆவணப் படம் ஏன் தடை செய்தீர்கள்?”

    ஏனென்றால், உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகும் அதை அவமதிக்கும் வகையிலும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால்.

    பிபிசி ஒரு கேவலமான செய்தி நிறுவனம். அவர்களுக்கு இன்னும் காலனி எண்ணம் போகவில்லை. இந்தியாவின் வளர்ச்சி அவர்களுக்கு பிடிக்கவில்லை.

    எனவே, இந்தியாவின் மீது எதையாவது குற்றம் சுமத்தி இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்.

    இங்கிலாந்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சனைகள் நடந்தது அப்போது ஏன் அதைப்பற்றி பிபிசி பேசவில்லை.

    இதற்கான காரணம் உங்களுக்கு புரிந்தால் (உங்களுக்கு புரியாது) அதற்கான காரணமும் புரியும்.

    Fahim ஏதாவது ஒரு பக்கம் நில்லுங்க. இங்க ஒரு ஜம்ப் அடிக்கிறீங்க, அங்க ஒரு ஜம்ப் அடிக்கிறீங்க.

    லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு ரைட்ல கையை காட்டிட்டு நேரா போயிட்டு இருக்கீங்க.

    “பாஜக வுக்கு சார்பாக தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகள் ரிடயர்டுக்கு பிறகு கவர்னர் பதவிகளுக்கு நியமனம் நியமனம் பெறுவது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?”

    இப்படி சொல்றீங்க

    “ஏன் நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை யா?”

    இப்படியும் சொல்றீங்க.

    ஏணி சின்னத்துல ஒரு குத்து குத்துறீங்க.. தென்னைமர சின்னத்துல ஒரு குத்து குத்துறீங்க.

    எதை வைத்து நான் பேசுவது? ஒண்ணா இந்தப்பக்கம் வாங்க.. இல்ல அந்தப்பக்கம் போங்க. இரண்டு பக்கமும் குத்திக்கொண்டு இருந்தால், எதை வைத்துப் பதில் அளிப்பது.

  15. “தீவிரவாத சிந்தனை முழு நாட்டையும் சீரழிக்கும். சமூகத்தையும் சீரழிக்கும். அப்படிப் பட்ட சிந்தனைக்கு வழி வகுத்தது பாபர் மசூதி இடிப்பு தான். 1990 க்கு பிறகு தான் நாடு சீரழிய துவங்கியது. ஏற்றுக் கொள்வீர்களா?

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி யார்?

    கோட்சே ஏன் முஸ்லிம் தோற்றத்தில் காந்தி யை கொன்றான்?”

    நான் ஏற்றுக்கொண்டால் சரி என்று கடந்து விடுவீர்களா? நான் ஏற்றுக்கொண்டால் என்ன ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன? எந்த வகையில் அது மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

    தற்போது வரை கட்டுரை தொடர்பான ஒரே ஒரு கேள்வி கூட நீங்கள் கேட்கவில்லை ஆனால், அதை தவிர எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்கீங்க.

    30 வருடங்கள், 75 வருடங்களுக்கு முன்பு நடந்ததை எல்லாம் கேட்டால் எனக்கும் கேள்விகள் இருக்காதா?

    இந்தியாவில் உள்ள கோவில்களை இடித்துத் தானே பாபர் மசூதி கட்டினார்.

    இடித்து தரைமட்டமாக்கி, அதே இடத்தில மசூதியை கட்டியுள்ளார்கள். இன்றும் உபியில் ஒரு வழக்கு சென்று கொண்டுள்ளது.

    இதெல்லாம் ஆரம்பித்து வைத்தது யார்?

    உங்கள் கஜினி 17 முறை படை எடுத்தது மட்டும் தான் வரலாற்றில் உள்ளது ஆனால், 17 முறையும் குஜராத் சோம்நாத் கோவிலில் கொள்ளை அடித்துச் சென்றதை பேசுவதில்லையே!

    50,000 இந்துக்களை கோவிலிலேயே கொன்று குவித்தானே அவையெல்லாம் என்ன கணக்கில் வரும்?

    தைமூர் கொன்ற லட்சக்கணக்கான இந்துக்களை என்ன கணக்கில் வைப்பது? இச்சம்பவம் நடந்த போது உங்கள் மூதாதையரே இந்துக்களாக தான் இருந்து இருப்பார்கள்.

    ஆனால், நீங்கள் கோட்ஸே ஏன் முஸ்லீம் போல வந்தான், ஏன் பச்சை சட்டை போட்டான், ஏன் குல்லா போட்டான்னு கேட்டுட்டு இருக்கீங்க.

    பழைய கதை பேசினால், அதற்கு முந்தைய மொகலாய கதையை எடுத்தால், உங்களால் பதில் கூற முடியுமா?

    “அடிக் அஹ்மத் விடயத்தில் முஸ்லிம்கள் விடயத்தில் நீங்கள் காட்டும் அன்பு, பாசம், அக்கறைக்கு மிகவும் நன்றி.

    அன்பு பாசம் அக்கறை முஸ்லிம்கள் மீது அநீதி இழைத்த போது அநீதி இழைக்கப்படும் போது மவுனமாக இருக்கிறீர்களே? இது எப்படி?”

    பெண்களுக்கு, அப்பாவிகளுக்கு எதிராக யார் நடந்தாலும் அவர்களிடம் எனக்கு என்றுமே கருணை கிடையாது. அதை என்றுமே நியாயப்படுத்த மாட்டேன்.

    ஆனால், அனைத்தையும் செய்து விட்டுச் சிறுபான்மையினர் போர்வையில் ஒளிந்து கொண்டு நியாயம் பேசினால், அதற்கான எதிர் வினை தான் இருக்கும்.

    “நேர்மறை எண்ணங்கள், கர்மா என்று அடிக்கடி பேசும் நீங்கள் அதற்கு மாற்றாக செயற்படுவது இப்போது நன்றாக தெரிகிறது”

    🙂 Fahim உங்களுடைய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. உங்களுடையது மட்டுமல்ல யாருடைய சான்றிதழும் எனக்குத் தேவையில்லை.

    அவற்றை எதிர்பார்த்து நான் இங்கு எழுதிக்கொண்டு இருக்கவில்லை.

    எழுதுவது எனக்கு Passion. எனவே, என் மனசாட்சிக்கு சரி என்று தோன்றுவதை எழுதுகிறேன். அனைவரையும் திருப்தி செய்ய எழுதவில்லை. அது என் வேலையும் அல்ல.

    எனவே, என்னை பற்றி நீங்கள் எந்த மதிப்பீடும் வைத்துக்கொள்ளாதீர்கள். அது அவசியமில்லை.

    என் நேர்மறை எண்ணங்கள் பற்றி ஏற்கனவே விமர்சித்து இருந்தீர்கள். இது தொடர்பாக கட்டுரை எழுதுவதாக கூறி இருந்தேன் ஆனால், நேரம் காரணமாக எழுத முடியவில்லை.

    நான் மறக்கவில்லை கண்டிப்பாக எழுதுகிறேன்.

  16. “ராஜிவ் காந்தி கொலையாளி களை என்ன செய்தீர்கள், ராஜீவ் காந்தி சாதாரண நபரா?”

    கண்டிப்பாக தவறு தான் ஆனால், நீதிமன்றமே அனுமதிக்கும் போது யார் என்ன செய்ய முடியும்! எனக்கு உடன்பாடில்லை ஆனால், நான் இனி என்ன நீதிமன்றத்தையா கேள்வி கேட்க முடியும்!

    “ஆயுள் தண்டனை காலம் முடிவடைந்தால் விடுதலை செய்ய தானே வேண்டும்.”

    குஜராத் கலவரத்தில் வன்புணர்வு செய்தவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்த போது ஆரத்தி எடுத்ததை குறிப்பிட்டு இருந்தீர்கள், அதை நானும் கண்டித்து இருந்தேன்.

    தூக்கிலிட்டு இருக்க வேண்டும் என்று கூறி இருந்தேன்.

    தற்போது தண்டனை முடிந்து கோவை குண்டு வெடிப்பால் பலரை கொன்ற நபர்கள் வெளியே வந்தால், முஸ்லிம்கள் கொண்டாட போகிறீர்கள் அதையும் என்ன செய்யலாம் என்று கூறுங்கள்.

    ஆயுள் தண்டனை முடிந்தால் வெளியே வர வேண்டியது தானே என்று எளிதாக கூறுகிறீர்கள், இவர்களைத் தூக்கிலிட்டு இருக்க வேண்டும் என்று ஏன் கூறத் தோன்றவில்லை!

    குண்டு வெடிப்பால் பல அப்பாவிகளை கொன்று குவித்தவர்கள் தானே!

    உங்களுடைய பல குற்றச்சாட்டுகளை மறுக்காமல், ஏற்றுக்கொண்டுள்ளேன். அதைக் கண்டித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளேன்.

    ஆனால், நீங்கள் இதுவரை நான் கூறிய ஒன்றை கூடக் கண்டிக்கவில்லை மாறாக நியாயப்படுத்தி வருகிறீர்கள்.

    இதுவே நீங்கள் எந்த அளவுக்கு மதத்தில் தீவிரமாக உள்ளீர்கள் என்பதை உணர்த்துகிறது.

    “காதலித்து கடைசி வரை அன்புடன் இருந்தால் மட்டுமே அந்த பெண் முஸ்லிமாக இருப்பாள். இடையில் கழட்டி விட்டால் அவள் தாய் மதத்துக்கே திரும்பி விடுவாளே? இது என்ன லாஜிக் இல்லாத பேச்சு?”

    ஆமாம். சூடுபட்டு திரும்புகிறார்கள்.

    கடைசி வரை காப்பாற்ற நினைக்கிறவனை, நினைப்பவனை பற்றி இங்கே யார் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்?

    இவர்கள் வேலையே லவ் ஜிகாத் செய்து மதம் மாற்ற வேண்டும் அது தானே குறிக்கோள். எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் அடித்து உதைக்கிறார்கள் அல்லது பிரிட்ஜில் வைத்து விடுகிறார்கள்.

    “இன்னுமா Kerala Story ஐ உதாரணமாக சொல்லலாம். அது கற்பனை கதை என்று அதை எடுத்த இயக்குனரே நீதிமன்றத்தில் சொல்லிட்டாரே!!!

    கொஞ்சம் update ஆ இருக்க கிரி,”

    யாரு.. நாங்க 🙂

    “அந்த கற்பனை யை உண்மை என்று நம்பி என்னா விமர்சனம் எழுதினீர்கள்?”

    என்ன எழுதினாங்க… சரியாக தானே எழுதினேன்.

    பாதிக்கப்பட்ட இந்துப் பெண்கள் ஏராளமானோர் பத்திரிகையாளர் சந்திப்பில் தாங்கள் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்று விளக்கினார்களே அதை நீங்கள் பார்க்கவில்லையா?

    நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்? நீங்கள் தான் குதிரைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி போய்க்கொண்டுள்ளீர்களே!

    இயக்குநர் கூறிய எண்ணிக்கை தான் மிகைப்படுத்தப்பட்டது ஆனால், நடந்த சம்பவங்கள் உண்மை.

    “இந்தியா என்றில்லை. உலகத்தில் இஸ்லாம் வேகமாக வளர்கின்றது. எவ்வளவு எதிர்ப்புகள், அவதூறுகள், அநியாயங்கள், யுத்தங்கள், பழிகள் முஸ்லிம்கள் மீது இஸ்லாத்தின் மீது போடப்பட்டது, போடப்பட்டு கொண்டு இருந்தது.”

    அரபு நாடுகள், இந்தோனேசியா போன்ற வெகு சில முஸ்லீம் நாடுகளைத் தவிர்த்து 50 முஸ்லீம் நாடுகளில் எந்தவொரு முஸ்லீம் நாடாவது நிம்மதியாக உள்ளதா?

    எங்கு பார்த்தாலும் வன்முறை என்று சீரழிகிறது. சமீப சூடான் நிலைமை என்ன ஆனது? அமைதிமார்க்கம் ஏன் இப்படி வன்முறையாக உள்ளது.

    பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள் ஏன் மற்ற நாடுகளைத் தேடி ஓடுகிறார்கள்.

    அமைதிமார்க்க தலிபான்கள், போக்கோ ஹரம், ISIS செய்து கொண்டு இருப்பது என்ன?

    #BringBackOurGirls பற்றி தெரியுமா?

    எதனால் முஸ்லிம்கள் அகதிகள் செல்லும் நாட்டில் எல்லாம் பிரச்சனை?

    இதில் ஒரு விஷயம் முக்கியமானது.

    பல முஸ்லீம் நாடுகளின் பிரச்சனைக்கு மேற்கத்திய நாடுகளின் போர் முக்கிய காரணங்களில் ஒன்று, குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து.

    எனவே, அங்கே அகதிகள் செய்யும் பிரச்சனைகளில் எனக்கு பரிதாபம் தோன்றுவதில்லை.

    இங்கிலாந்து பல முஸ்லீம் நாடுகளின் சீரழிவுக்கு காரணம் ஆனால், அந்த நாட்டு பிபிசி சொல்வதற்கு நீங்கள் கொடி பிடிக்கிறீர்கள்.

    சீரியல் கில்லர் அடுத்தவனை பார்த்து சொல்கிறான், அப்பாவியை கொலை செய்து விட்டான் என்று. இதற்கும் நீங்கள் “பார்த்தீர்களா?!” பிபிசி ஆவணப்படம் என்ன மாதிரி இருக்குதுன்னு பிபிசி க்கு முட்டுக்கொடுத்துட்டு இருக்கீங்க.

    விமர்சனம் வைக்க 100% உங்களுக்கு தகுதியுள்ளது. பிபிசி எல்லாம் ஒரு ஊடகம்னு அதை தூக்கிட்டு ஆடாதீங்க.

    பிபிசிக்கு உங்க மேல அக்கறையில்லை, இந்தியா மீது காண்டு.

    “இதை எல்லாம் தாண்டி இஸ்லாம் வேகமாக வளர்கின்றது என்றால் என்ன காரணம்?”

    அளவற்று குழந்தை பெற்றுக்கொள்வது மற்றும் அடிப்படை வாத, வஹாபி எண்ணங்களே!

    வளர்கிறது என்னமோ உண்மை தான் ஆனால், அந்த வளர்ச்சி அனைத்தையும் அழித்து, பலரின் நிம்மதியை தொலைத்து, மதத்தை அடுத்தவர் மீது திணித்து, உலகை வன்முறை களமாக்கி நடைபெறுகிறது.

    இதில் பெருமைப்பட எதுவுமில்லை.

    “அந்த காழ்ப்புணர்ச்சி தான் உங்களை இப்படி பேச எழுத வைக்கிறது.”

    இதன் பெயர் காழ்ப்புணர்ச்சி இல்லை, அக்கறை. முஸ்லிம்களுக்கென்று தனி நாடு கொடுத்தும் போதாது என்று , இந்தியாவையும் முஸ்லீம் நாடாக்க முயல்கிறார்களே என்ற தார்மீக கோபம்.

    உங்கள் விமர்சனங்கள் பல சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

    நீங்கள் பேசுவதைப் பார்க்கும் போது அப்பாவியாகத் தான் தெரிகிறீர்கள் ஆனால், மூளை சலவை செய்யப்பட்டுள்ளீர்கள். எனவே, உங்கள் மீது எனக்கு கோபம் இல்லை, பரிதாபம் தான் ஏற்படுகிறது.

    இல்லையென்றால், நீங்கள் என்னை என்னவெல்லாமோ விமர்சித்தும் இதை எப்படி கூற தோன்றும்?!

    “இறைவன் நாட்டம் எல்லாம் நடந்தே தீரும். உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும்.”

    நீண்ட ஆயுள் முக்கியம் இல்லை, இருக்கும் நாட்களில் எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்.

    அதை எனக்கு கடவுள் கொடுத்துள்ளார். உங்கள் அன்புக்கு நன்றி.

  17. “நீதியை பேசுங்கள். உங்கள் மதத்தின் நல்லவைகளை பேசுங்கள். எல்லோரையும் சமமாக நடத்துங்கள். சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள். நல்லெண்ணம் வர செய்யுங்கள். இந்தியா வளரும். இந்து மதம் வளரும். ஒற்றுமையில் இருக்கும் நிம்மதி வேற்றுமையில் இல்லை.”

    இதை நீங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது 🙂 .

    உங்கள் சமூக மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாமல், முஸ்லிம்கள் அனைவருமே நல்லவர்கள், நல்லவற்றை மட்டுமே பேசுகிறார்கள், அமைதியானவர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கும் உங்கள் மனது இருக்கிறதே…!

    இந்தியா மட்டுமல்ல தற்போது இங்கிலாந்தை முஸ்லீம் நாடாக மாற்றுவோம், அமெரிக்காவை முஸ்லீம் நாடாக மாற்றுவோம் என்று பேசி வருகிறார்கள்.

    ஐரோப்பாவை முஸ்லீம் நாடுகளாக மாற்றுவோம் என்கிறார்கள்.

    எதனால் செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சனை செய்கிறீர்கள். வாழ வழியில்லாமல் சென்று பாதுகாப்பான நிலையை அடைந்ததும் எதனால் மற்ற நாடுகளில் உங்கள் மத வழக்கங்களைத் திணிக்கிறீர்கள்?

    “அடுத்தவன் அழிந்தால் நாம் சந்தோஷமாக வாழலாம் என்றால் அது ஒரு போதும் நடக்காது.”

    சரியாக கூறினீர்கள்.

    “நேர்மறை யாக சிந்திக்க வேண்டுகிறேன்.”

    அதை பலகாலமாக பின் பற்றி வருகிறேன் ஆனால், அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. அதை பற்றி முன்னரே கூறியது போல விரைவில் எழுதுகிறேன்.

    திருவிளையாடல் தருமி மாதிரி தொடர்ச்சியாக கேள்விகள் தான் கேட்டுட்டு இருக்கீங்களே தவிர நான் கேட்டவைகளுக்கு விளக்கம் அளிக்கவே இல்லை.

    பல வரிகளுக்கு பதில் அளிக்காமலே கடந்து விட்டீர்கள் குறைந்தபட்சம் இந்த இரு கேள்விகளுக்காகவாது பதில் அளியுங்கள்.

    1. எதனால் அகதிகளாக சென்ற முஸ்லிம்கள், வாழ இடம் கொடுத்த நாட்டிலேயே பிரச்சனை செய்கிறார்கள்? எதனால் முஸ்லீம் அகதிகளை அரபு நாடுகள் ஏற்பதில்லை?

    2. அடிக் அகமதுவால் நீங்களோ, உங்கள் குடும்பத்தினரோ பாதிக்கப்பட்டு இருந்தால், இதே போல “படுகொலை” என்று கூறிக்கொண்டு இருப்பீர்களா?

    நீங்கள் கேட்டதுக்கு பதில் கூறி விட்டால் அடுத்ததுக்கு செல்லுங்கள், அதிலேயே சுற்றி சுற்றி ஒரே மாதிரி கேள்விகளை வெவ்வேறு வகையில் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.

    அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறுகிறேன் என்றாலும், ஒரே மாதிரிக் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளிப்பது சலிப்பாக உள்ளது.

    என்னிடமிருந்து பதில் வரும் ஆனால், நீங்கள் எதிர்பார்க்கும் பதில் என்னிடமிருந்து வராது. எனவே, திரும்பத்திரும்ப ஒன்றையே கூறிக் / கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.

    தற்போது வரை கட்டுரை சம்பந்தமாக ஒரு கேள்வி கூட நீங்கள் கேட்கவில்லை.

  18. 1. எதனால் அகதிகளாக சென்ற முஸ்லிம்கள், வாழ இடம் கொடுத்த நாட்டிலேயே பிரச்சனை செய்கிறார்கள்? எதனால் முஸ்லீம் அகதிகளை அரபு நாடுகள் ஏற்பதில்லை?

    பிரச்சினைகளை முஸ்லிம்கள் மட்டுமா செய்கிறார்கள் எல்லா அகதிகளும் தான் செய்கிறார்கள். இலங்கை அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் எத்தனை தில்லுமுல்லுகள் செய்தார்கள். ஐரோப்பிய நாடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட யூதர்களுக்கு பரிதாபப்பட்டு இடம் கொடுத்த முஸ்லிம்களை யூதர்கள் விரட்டி விட்டு இஸ்ரேல் நாட்டையே உருவாக்கி விட்டார்கள்.இன்று சொந்த நாட்டையும் இழந்து அகதிகள் ஆகினார்கள். இன்று அரபு நாடுகள் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்காமல் இஸ்ரேல் உடன் நட்பு பாராட்டி வருகின்றனர்.
    என்ன காரணம் மேற்கு உலகத்தின் ஆதரவு இருந்தால் தான் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை தொடர் முடியும்.

    துருக்கி, கட்டார் தான் ஓரளவு சுயமாக இயங்குகிறார்கள்.

    துருக்கியை கவிழ்க்கப் பார்த்தார்கள். கட்டாருக்கு பொருளாதார தடை விதித்தார் கள். இந்த இரண்டு நாடுகளும் தான் முஸ்லிம்களுக்கு உதவி செய்தன.

    சரி விஷயத்துக்கு வருகிறேன். நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் சொரனை இல்லாத இந்து சொரனை இல்லாத இந்து என்று. அது மாதிரி அது மாதிரி அரபு நாடுகள் சொரனை இல்லாத பெயர் தாங்கி கோழை முஸ்லிம் தலைவர்களால் ஆட்சி செய்யப்படுகிறது. அதனால் தான் அகதிகளை ஏற்க இல்லை.

    2. அடிக் அகமதுவால் நீங்களோ, உங்கள் குடும்பத்தினரோ பாதிக்கப்பட்டு இருந்தால், இதே போல “படுகொலை” என்று கூறிக்கொண்டு இருப்பீர்களா?

    இல்லை. இல்லவே இல்லை.சந்தோஷப்பட்டு இருப்பேன். நானும் மனிதன் தான்.

    நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அடிக் அஹ்மத் மாதிரி மோசமான கேரக்டர் உள்ள ஒரு இந்து குற்றவாளியை பாகிஸ்தானில், முஸ்லிம்கள் அல்லாஹ் அக்பர் என்று கூறி கொலை செய்தால் நீங்களோ இந்திய அரசோ , அது ஒரு என்கவுண்டர் என்று சும்மா விட்டுவீங்களா? அட ஒரு குற்றவாளி செத்துட்டான் என்று சந்தோஷமாக இருப்பீங்களா? உங்கள் பதில் என்ன?

    “இந்தியா மட்டுமல்ல தற்போது இங்கிலாந்தை முஸ்லீம் நாடாக மாற்றுவோம், அமெரிக்காவை முஸ்லீம் நாடாக மாற்றுவோம் என்று பேசி வருகிறார்கள்.

    ஐரோப்பாவை முஸ்லீம் நாடுகளாக மாற்றுவோம் என்கிறார்கள்.”

    நாங்கள் மாற்றத் தேவையில்லை. அதுவாக மாறும் இறைவன் நாட்டம் இருந்தால். இன்று மேற்கு உலகம் இஸ்லாத்தின் கொள்கையை நோக்கி வருகிறது.

    எதனால் செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சனை செய்கிறீர்கள். வாழ வழியில்லாமல் சென்று பாதுகாப்பான நிலையை அடைந்ததும் எதனால் மற்ற நாடுகளில் உங்கள் மத வழக்கங்களைத் திணிக்கிறீர்கள்?

    எங்கள் மத வழக்கங்களை யார் மீதும் திணிக்கவும்‌ இல்லை. திணிக்கவும் மாட்டோம். எங்கள் மத வழக்கங்களின் பிரகாரம் எங்களை வாழ விடுங்கள் என்று தான் சொல்கிறோம். உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு எங்கள் மார்க்கம்.

    ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக சென்ற இலங்கை தமிழ் உறவுகள் உங்கள் கருத்துப்படி கிறித்தவர்கள் ஆகிவிட்டார்களா? இல்லை யே? இந்து மதத்தில் இருந்து கொண்டே கோயில் கட்டி சந்தோஷமாக இருக்கிறார்களே?

    இதன் பெயர் காழ்ப்புணர்ச்சி இல்லை, அக்கறை. முஸ்லிம்களுக்கென்று தனி நாடு கொடுத்தும் போதாது என்று , இந்தியாவையும் முஸ்லீம் நாடாக்க முயல்கிறார்களே என்ற தார்மீக கோபம்.

    எங்களுக்கு இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற எந்த அவசியமும் இல்லை. எங்களை முஸ்லிம்களாக வாழ விடுங்கள் என்று தான் சொல்ல வருகிறோம்.

    இந்தியாவை முஸ்லிம் நாடாக்குவது நீங்கள் தான். இந்துக்களை ஜாதி, தீண்டாமை,அது இது என்று எல்லா கொடுமைகளும் செய்து இஸ்லாத்தை நோக்கி வர வைப்பது நீங்கள் தான்.

    அடுத்தவன் சட்டியை உடைக்காமல் உங்கள் சட்டி ஓட்டையை அடையுங்கள்.

    அரபு நாடுகள், இந்தோனேசியா போன்ற வெகு சில முஸ்லீம் நாடுகளைத் தவிர்த்து 50 முஸ்லீம் நாடுகளில் எந்தவொரு முஸ்லீம் நாடாவது நிம்மதியாக உள்ளதா

    எந்த முஸ்லிம் நாடுகளில் கனிய வளங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மேற்குலகம் எல்லா குழப்பங்களையும் செய்யும். அதை நான் சொல்ல தேவையில்லை.

    அமைதிமார்க்க தலிபான்கள், போக்கோ ஹரம், ISIS செய்து கொண்டு இருப்பது என்ன

    இவர்களில் தலிபான் மாத்திரம் தான் முஸ்லிம்கள். ஏனையோர் முஸ்லிம் பெயர் தாங்கிய கூலிப்படைகள்.

    தாலிபான் கூட அமெரிக்கா ஆயுதம் கொடுத்து அமெரிக்கா வால் உருவாக்கப்பட்டது தான்.

    LTTE, நக்சலைட், காலிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் உலகில் உள்ள ஏனைய தீவிரவாதிகள் யார்?

    சொல்லுங்க கிரி.

    ஆயுள் தண்டனை முடிந்தால் வெளியே வர வேண்டியது தானே என்று எளிதாக கூறுகிறீர்கள், இவர்களைத் தூக்கிலிட்டு இருக்க வேண்டும் என்று ஏன் கூறத் தோன்றவில்லை!

    இதை நீங்கள் வழக்கை விசாரித்த நீதிமன்றத்திடம் தான் கேட்க வேண்டும்.

  19. இந்தியாவில் உள்ள கோவில்களை இடித்துத் தானே பாபர் மசூதி கட்டினார்.

    இடித்து தரைமட்டமாக்கி, அதே இடத்தில மசூதியை கட்டியுள்ளார்கள். இன்றும் உபியில் ஒரு வழக்கு சென்று கொண்டுள்ளது.

    இதெல்லாம் ஆரம்பித்து வைத்தது யார்?

    உங்கள் கஜினி 17 முறை படை எடுத்தது மட்டும் தான் வரலாற்றில் உள்ளது ஆனால், 17 முறையும் குஜராத் சோம்நாத் கோவிலில் கொள்ளை அடித்துச் சென்றதை பேசுவதில்லையே!

    50,000 இந்துக்களை கோவிலிலேயே கொன்று குவித்தானே அவையெல்லாம் என்ன கணக்கில் வரும்?

    தைமூர் கொன்ற லட்சக்கணக்கான இந்துக்களை என்ன கணக்கில் வைப்பது? இச்சம்பவம் நடந்த போது உங்கள் மூதாதையரே இந்துக்களாக தான் இருந்து இருப்பார்கள்.

    நல்ல கேள்வி.

    சமீபத்தில் ராஜ ராஜ சோழன் பற்றிய கட்டுரையில் ராஜ ராஜ சோழன் தனது ஆட்சியை இந்தோனேசியா வரை ஆட்சி செய்தான் என்று எவ்வளவு பெருமையாக எழுதி இருந்தீர்கள்.

    ராஜ ராஜ சோழன் யாரையும் கொல்லாமல் எல்லோரையும் கட்டியணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தா அவ்வளவு நாடுகளையும் கைப்பற்றினான்.

    பழைய கதையை பேசி பயன் இல்லை. இப்போது என்ன நடக்கிறது?

    தற்போது வரை கட்டுரை சம்பந்தமாக ஒரு கேள்வி கூட நீங்கள் கேட்கவில்லை.

    ஒபாமா வின் கருத்துக்கு உங்கள் பதிலை நாகரிகமாக எழுதினீர்கள்.
    அது உங்கள் உரிமை.

    திரும்பவும் சொல்றேன்.
    நாங்கள் மத வெறியர்கள் இல்லை. எங்கள் மத வழக்கங்களின் பிரகாரம் எங்களை வாழ விடுங்கள். அந்த சுதந்திரம் அரசியல் சாசனப்படி எல்லோருக்கும் பொருந்தும்.

    உங்களுக்கு உங்கள் மத வழக்கங்களின் பிரகாரம் வாழ விருப்பமோ இல்லையோ அது உங்கள் விருப்பம்.

    எங்கள் மீது உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள்.

    கிரி நீங்கள் படித்தவர்
    உங்கள் இந்து மதத்தில் பற்றுள்ளவர். உங்கள் மதத்தவர்கள் நல்லது செய்தால் ஆதரியுங்கள். கெட்டது செய்தால் எதிராக நில்லுங்கள்.

    இல்லை. என் மதத்தவர்கள் கெட்டது செய்தாலும் நான் ஆதரிப்பேன் என்றால்?

    Very Sorry.
    நீதியான இறைவன் முன்னிலையில் ஒரு நாள் நிற்க வேண்டும். அப்போது யாரும் உதவிக்கு வர மாட்டார்கள்.

    நன்றி.

  20. “பிரச்சினைகளை முஸ்லிம்கள் மட்டுமா செய்கிறார்கள் எல்லா அகதிகளும் தான் செய்கிறார்கள்.”

    வன்முறையில் ஈடுபடுவது யார்? பிரான்ஸ், ஸ்விஸ். ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனியில் நடந்து கொண்டு இருப்பது என்ன? எதனால் இங்கெல்லாம் முஸ்லிம்கள் வன்முறையில். போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்?

    “இலங்கை அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் எத்தனை தில்லுமுல்லுகள் செய்தார்கள்.”

    தில்லுமுல்லு உலகம் முழுக்க அனைத்து நாட்டு மக்களும் தான் செய்கிறார்கள் ஆனால், இவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்களா? மத பிரச்சனைகளில் ஈடுபட்டார்களா?

    போக்குவரத்து நடைபெறும் தெருக்களில் அமர்ந்து நமாஸ் செய்து கொண்டுள்ளார்களா? ஏன் இவ்வாறு பொது இடத்தில் நடந்து கொள்ள வேண்டும் அதுவும் தஞ்சம் புகுந்த இன்னொரு நாட்டில்.

    “யூதர்களுக்கு பரிதாபப்பட்டு இடம் கொடுத்த முஸ்லிம்களை யூதர்கள் விரட்டி விட்டு இஸ்ரேல் நாட்டையே உருவாக்கி விட்டார்கள்.”

    இஸ்ரேல் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்து கூற விரும்பவில்லை.

    லெபனான் ஒரு கிறித்துவ நாடு ஆனால், தற்போது முஸ்லீம் நாடாகி விட்டது. பல காலமாக லெபனான் ஒரு முஸ்லீம் நாடு என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

    “அரபு நாடுகள் சொரனை இல்லாத பெயர் தாங்கி கோழை முஸ்லிம் தலைவர்களால் ஆட்சி செய்யப்படுகிறது. அதனால் தான் அகதிகளை ஏற்க இல்லை.”

    அதனால் தான் அவர்கள் நாடுகள் பிரச்சினை இல்லாமல் உள்ளது. வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.

    நீங்களும் அங்கே நிம்மதியாக ஹஜ் போன்றவற்றுக்கு சென்று வருகிறீர்கள். அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால் தான் இன்னும் பாதுகாப்பாக உள்ளது.

    அவர்கள் அவர்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடுவதில்லை.

    குற்றங்களைச் செய்பவர்களை, மதத்தை தீவிரமாக செயல்படுத்துபவர்களை, தீவிரவாதத்துக்கு நன்கொடை கொடுப்பவர்களை அரபு நாடுகள் ஆதரிப்பதில்லை.

    எதற்காக அகதிகளை அனுமதித்தோம் என்று ஐரோப்பா மக்கள் நொந்து கொண்டுள்ளார்கள்.

    “இல்லை. இல்லவே இல்லை.சந்தோஷப்பட்டு இருப்பேன். நானும் மனிதன் தான்.”

    பின்னர் எதற்கு அவன் படுகொலையை எதிர்க்கிறீர்கள்? அவன் எப்படி செத்தால் என்ன? யார் கொன்றால் என்ன?

    “அடிக் அஹ்மத் மாதிரி மோசமான கேரக்டர் உள்ள ஒரு இந்து குற்றவாளியை பாகிஸ்தானில், முஸ்லிம்கள் அல்லாஹ் அக்பர் என்று கூறி கொலை செய்தால் நீங்களோ இந்திய அரசோ , அது ஒரு என்கவுண்டர் என்று சும்மா விட்டுவீங்களா? அட ஒரு குற்றவாளி செத்துட்டான் என்று சந்தோஷமாக இருப்பீங்களா? உங்கள் பதில் என்ன?”

    இதில் என்ன பதில் கூற இருக்கு..

    அடிக் அகமது மாதிரி மோசமான கேரக்டர் உள்ள குற்றவாளி என்றால் சாகட்டும் எனக்கென்ன! இன்னும் நாலு மிதி சேர்த்து மிதிங்க. அப்பாவி என்றால் தான் கவலைப்படணும்.

    சரி அது எதுக்கு அல்லாஹ் அக்பர்ன்னு கூறி கொலை செய்யணும்.. சொல்லாம செய்யக்கூடாதா? இதுல எதற்கு கடவுளை இழுக்கிறீர்கள்?

    அல்லாவா இவனை போன்றவர்களை கொல்ல சொல்கிறார்?! இல்லையே…பின்னர் ஏன் இதற்கு அல்லாவை பயன்படுத்துகிறீர்கள்.

    “நாங்கள் மாற்றத் தேவையில்லை. ”

    நீங்கள் செய்துகொண்டுள்ளீர்கள். அதைத்தான் நான் கூறிக்கொண்டுள்ளேன். அகதிகளை அனுமதித்த தவறை ஐரோப்பா உணர்வார்கள்.

    ஏற்கனவே முஸ்லீம் அகதிகளை அனுமதித்த தவறை ஸ்வீடன், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் உணர்ந்து விட்டன. இதில் தப்பித்தது போலந்து மட்டுமே.

    போலந்து பிரதமர் சமீபத்தில் முஸ்லீம் அகதிகள் பற்றி என்ன கூறினார் என்று தேடி படித்துப்பாருங்கள், ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லையென்றால்.

    “எங்கள் மத வழக்கங்களை யார் மீதும் திணிக்கவும்‌ இல்லை. திணிக்கவும் மாட்டோம்.”

    இதையெல்லாம் தெரிந்தே சொல்றீங்களா? தெரியாமல் சொல்றீங்களான்னே புரியலை. உலகில் என்ன நடக்குதுன்னு பார்க்காம உபி, குஜராத் பக்கமே சுற்றிட்டு இருப்பீங்க போல.

    “ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக சென்ற இலங்கை தமிழ் உறவுகள் உங்கள் கருத்துப்படி கிறித்தவர்கள் ஆகிவிட்டார்களா? இல்லை யே? இந்து மதத்தில் இருந்து கொண்டே கோயில் கட்டி சந்தோஷமாக இருக்கிறார்களே?”

    மிகச் சரியாக கூறினீர்கள். சொல்ல மறந்தது மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல்.

    “இந்துக்களை ஜாதி, தீண்டாமை,அது இது என்று எல்லா கொடுமைகளும் செய்து இஸ்லாத்தை நோக்கி வர வைப்பது நீங்கள் தான்.”

    இவை உண்மை தான் மறுக்கவில்லை (இதைப்பற்றி நானே கட்டுரை எழுதியுள்ளேன்) ஆனால், அதை சாதகமாக பயன்படுத்தி அப்பாவிகளை ஏமாற்றி மத மாற்றம் செய்வதும் நடக்கிறது.

    https://www.giriblog.com/untouchability/

    என் மதத்தில் உள்ள குறைகளை ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமில்லை.

    “அடுத்தவன் சட்டியை உடைக்காமல் உங்கள் சட்டி ஓட்டையை அடையுங்கள்”

    இஸ்லாமில் ஏன் சன்னி ஷியா பிரிவு என்று அடித்துக்கொள்கிறீர்கள்? எதனால் பாகிஸ்தானில் ஷியா மக்களை கொல்கிறார்கள்? மசூதியை இடிக்கிறார்கள்?

    எதனால் குறிப்பிட்ட ஒரு முஸ்லிம் பிரிவினரை குண்டு வைத்து முஸ்லிம்களின் இன்னொரு பிரிவினர் கொல்கின்றனர்? செய்வது எதோ ஒரு முஸ்லீம் பிரிவினர் தானே!

    பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் முஸ்லிம் நாடுகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அங்கே ஏன் மசூதிகளில் குண்டு வைத்து பொதுமக்களை கொல்கிறார்கள்?

    ஈரான் ஷியா, சவூதி சன்னி பிரிவின் ஆதரவாளர்கள் இன்று வரை எதிரிகளாக உள்ளார்களே! இதற்கு ஷியா சன்னி பிரிவுகள் தானே காரணம்.

    இஸ்லாத்தில் ஏற்ற தாழ்வுகள் உள்ளது என்று முஸ்லீம் பெண்மணியே (தமிழ் முஸ்லிம்கள்) கூட்டத்தில் கூறியது வைரலானது. மதம் மாறியவர்களை மோசமாக நடத்துகிறீர்கள்.

    அப்படியென்றால் மற்றவர்களை மதம் மாற்றுவது மட்டுமே உங்கள் எண்ணம் ஆனால், அவர்களுக்கான மரியாதையை, மதிப்பைக் கொடுப்பது அல்ல.

    அரபு முஸ்லிம்களை பொறுத்தவரை நீங்களும் அவர்களும் சமம் அல்ல. இதுவும் ஒரு தீண்டாமை தானே! அவர்கள் உயர் வகுப்பினராகவே கருதப்படுகிறார்கள். மறுக்க முடியுமா?!

    இந்து மதத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் , அவர்கள் ஆதிக்க சாதியினரை கேள்வி கேட்கிறார்கள், எதிர்க்கிறார்கள் ஆனால், இன்றுவரை நீங்கள் அவர்களிடம் அடங்கித்தானே நடக்கிறீர்கள்.

    எதிர்த்துப் பேசி விட முடியுமா? பேசினால் அரபு நாடுகளில் வாழ்ந்து விட முடியுமா?

    உங்கள் சமூகத்திலேயே பிற வகுப்பினரை மணம் முடிக்க மாட்டீர்கள். ஏன் இந்த பாகுபாடு? போரா முஸ்லிம்களை நீங்கள் ஏன் வெறுக்கிறீர்கள்?

    இவ்வளவு வேறுபாடுகளை வைத்துக்கொண்டு இந்துக்களை விமர்சிக்கலாமா?

    உங்க சட்டியே ஏற்கனவே ஏகத்துக்கும் உடைந்து கிடக்கிறதே! நாங்க என்ன புதுசா உடைக்க வேண்டியது இருக்கு.

    “எந்த முஸ்லிம் நாடுகளில் கனிய வளங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மேற்குலகம் எல்லா குழப்பங்களையும் செய்யும். அதை நான் சொல்ல தேவையில்லை.”

    அதைத்தானே நானே முன்பே சொல்லிவிட்டேனே. அவர்கள் (BBC) கூறுவதைத்தானே நீங்கள் தூக்கி பிடித்துட்டு இருக்கீங்க.

    பிபிசி நிருபர்களை நாட்டை விட்டு வெளியேற சிரியா நாடு கூறியுள்ளது. ஏன் என்று தெரியுமா?

    “இவர்களில் தலிபான் மாத்திரம் தான் முஸ்லிம்கள். ஏனையோர் முஸ்லிம் பெயர் தாங்கிய கூலிப்படைகள்.”

    அனைத்து பெண்களின் உரிமைகளையும் தொடர்ச்சியாக தலிபான் பறித்துக்கொண்டு இருக்கிறார்களே இவர்களா குரான் படி நடக்கும் முஸ்லிம்கள்?!

    தற்போது தான் அமெரிக்கா வெளியேறி விட்டதே, தற்போது அந்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யலாமே! ஏன் அவர்களை சீரழிக்கிறார்கள்?!

    தலிபான் மட்டுமல்ல எல்லோருமே முஸ்லிம்கள் தான். நீங்கள் மேலே சொன்ன அல்லாஹ் அக்பர் சொல்லித்தான் அனைத்தையும் செய்கிறார்கள்.

    குரானில் இருப்பதை பின்பற்றுவதாகத்தான் சொல்கிறார்கள். உங்கள் மத கருத்துகளை முன்னிறுத்தி தான் தாக்குதலையே நடத்துகிறார்கள்.

    சூடானில் பாதிக்கப்பட்டவரும் அல்லாஹு அக்பர் என்று கூறுகிறார், அவர்களைக் குண்டு போட்டு அழிக்கும் இன்னொரு தரப்பினரும் அல்லாஹு அக்பர் என்று கூறுகிறார்.

    “LTTE, நக்சலைட், காலிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் உலகில் உள்ள ஏனைய தீவிரவாதிகள் யார்?”

    LTTE தனி ஈழத்துக்காக ஆயுதம் ஏந்தி வன்முறையாக செயல்பட்டவர்கள். நக்சலைட் அரசின் மீதுள்ள கோபத்தில் பொதுமக்களை, அதிகாரிகளை கொல்பவர்கள். காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்காக மத ரீதியாக வன்முறை, பிரிவினை செய்பவர்கள்.

    “சொல்லுங்க கிரி.”

    சொல்லிட்டேன்.

    ஏங்க Fahim நீங்க என்ன என் கூட நேரிலையா பேசிட்டு இருக்கீங்க.. ஒவ்வொரு முறையும் உடனே சொல்லுங்க சொல்லுங்கன்னு சொல்றீங்க..

    உங்க கேள்வி படித்த பிறகு தான் பதில் கூற முடியும்.

    “இதை நீங்கள் வழக்கை விசாரித்த நீதிமன்றத்திடம் தான் கேட்க வேண்டும்.”

    உங்கள் கருத்து என்ன என்று கேட்கிறேன்.

    ஆயுள் தண்டனை முடிந்தால் வெளியே வர வேண்டியது தானே என்று சாதாரணமாக கூறுகிறீர்களே? அவ்வளவு பேரை கொன்றவர்களை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டீர்களே!

    ராஜிவ் குற்றாவாளிகளை விடுவித்ததில் எனக்கு உடன்பாடில்லை, ஆரத்தி எடுக்கப்பட்ட குற்றாவளியை தூக்கிலிட வேண்டும், குண்டு வைத்து இருந்த பாஜக நபருக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கூறியது போல உங்களுக்கு ஏன் கோவை குண்டு வைத்தவர்களைப் பற்றிக் கூறத் தோன்றவில்லை என்று கேட்கிறேன்.

    சிறு குறிப்பு

    உங்கள் கருத்து (16 NOs) ஸ்பாமுக்கு சென்று விட்டது.

    உங்கள் கருத்து பெரிதாக இருந்தால், சில நேரங்களில் ஸ்பாம் என்று கருதி ஸ்பாமுக்கு சென்று விடும்.

    எனவே, வெளியாகவில்லை என்றால், உங்கள் திருப்திக்கு கூடுதலாக ஒரு முறை முயற்சியுங்கள் போதும்.

  21. “பழைய கதையை பேசி பயன் இல்லை. இப்போது என்ன நடக்கிறது?”

    இதை நீங்க 75 வருடங்களுக்கு முன்பு நடந்ததை கூறும் போது தோன்றவில்லையா?! இதைத்தானே நானும் சொன்னேன்.

    அர்ஜுன் மாதிரி சுற்றி வந்து டேபிளை எல்லாம் உடைத்து என் மூக்கையும் உடைத்து தற்போது பழைய கதை பேசி பயன் இல்லைனு சொல்றீங்க 🙂 .

    “ஒபாமா வின் கருத்துக்கு உங்கள் பதிலை நாகரிகமாக எழுதினீர்கள்.”

    சரி நான் வேறு எங்கு அநாகரீகமா எழுதினேன் என்பதை குறிப்பிட்டு கேளுங்கள். நடக்காத ஒன்றை எங்கு நான் கூறினேன்.

    இப்படி போகிற போக்கில் அடித்து விடக்கூடாது.

    இத்தளத்தில் நான் 2008 முதல் எழுதுகிறேன். ஒரே ஒரு கட்டுரை அல்லது கருத்தாவது அநாகரீகமாக எழுதியுள்ளேன் என்று லிங்க்குடன் காட்டுங்கள்.

    எங்குமே என் கருத்தை, விவாதத்தை முன் வைத்துள்ளேனே தவிர அநாகரீகமாக எழுதியதில்லை.

    “எங்கள் மீது உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள்.”

    நான் என்ன திணித்தேன்? என் தளத்தில் என் கருத்துகளை கூறி வருகிறேன் அவ்வளவே. நான் எதையும் யார் மீதும் திணிக்கவில்லை, திணிக்கவும் முடியாது.

    மற்றவர்கள் செய்வதற்கு நான் பொறுப்பாக முடியாது.

    “கிரி நீங்கள் படித்தவர். உங்கள் இந்து மதத்தில் பற்றுள்ளவர். உங்கள் மதத்தவர்கள் நல்லது செய்தால் ஆதரியுங்கள். கெட்டது செய்தால் எதிராக நில்லுங்கள்.”

    நான் அதிகம் படிக்கவில்லை Fahim . கல்லூரி செல்லவில்லை, டிகிரி கூட கரஸில் தான் முடித்தேன்.

    படிப்புக்கும் ஒருவர் நடந்து கொள்வதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நல்லதை ஆதரிப்பேன், கெட்டதை ஆதரிக்கமாட்டேன்.

    “என் மதத்தவர்கள் கெட்டது செய்தாலும் நான் ஆதரிப்பேன் என்றால்?”

    அப்படி நான் எந்த கெட்டதை ஆதரித்தேன் என்பதை தெளிவுபடுத்தவும். பொதுப்படையாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    எது தவறு என்று நினைக்கிறீர்களோ அதை குறிப்பிட்டு தாராளமாக கேட்கலாம், கண்டிப்பாக பதில் அளிப்பேன்.

    எனக்கு பதிலளிக்க எந்தப் பயமும், தயக்கமும் இல்லை. போலியாக நடிப்பவர்கள் தான் பயப்பட வேண்டும், தயங்க வேண்டும்.

    அதனால் தான் என் தளத்தில் மட்டுறுத்தல் (comment Moderation) கூட இல்லை.

    “நீதியான இறைவன் முன்னிலையில் ஒரு நாள் நிற்க வேண்டும். அப்போது யாரும் உதவிக்கு வர மாட்டார்கள்.”

    மாற்றுக்கருத்தில்லை, ஏற்றுக்கொள்கிறேன்.

    நன்றி

  22. # அப்படி நான் எந்த கெட்டதை ஆதரித்தேன் என்பதை தெளிவுபடுத்தவும். பொதுப்படையாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது#

    பாஜக எங்களுக்கு செய்வது அநியாயம் தான். அதை நீங்கள் அதை சரி என்கிறீர்கள். எங்களுக்கு அநியாயம் நடக்கிறது என்கிறோம். நீங்கள் நியாயம் என்கிறீர்கள்.

    உங்களிடம் பேசி பயனில்லை. எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு நீதியை தருவான். நாங்கள் அவனிடம் முறையிடுகிறோம்.

    நன்றி

  23. @Fahim

    “பாஜக எங்களுக்கு செய்வது அநியாயம் தான். அதை நீங்கள் அதை சரி என்கிறீர்கள்”

    திரும்பத்திரும்ப பொதுப்படையாகவே பேசுகிறீர்கள்.

    எதை நான் ஆதரித்தேன். எது தவறு என்று கூறுங்கள், அப்போது தானே புரியும்.

    அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்றீங்க.. எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்ல மாட்டேங்குறீங்களே 🙂

    “உங்களிடம் பேசி பயனில்லை.”

    காரணம், உங்களிடம் பதில் இல்லை. என்னால் அனைத்துக்கும் பதில் அளிக்க முடியும், உங்களால் முடியாது.

    “எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு நீதியை தருவான். நாங்கள் அவனிடம் முறையிடுகிறோம்.”

    அல்லா பாவங்க. சும்மா எதற்கெடுத்தாலும், அவர் பின்னே நின்று கொள்கிறீர்கள். அவரும் எவ்வளவு தான் பார்ப்பார்.

    பல பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே உள்ளது. எல்லாத்துக்கும் கடவுளிடம் சென்று கொண்டு இருந்தால், வேண்டுதலுக்கும் பிரார்த்தனைக்கும் மதிப்பு இருக்காது.

    எல்லாமே கடவுள் பார்த்துப்பார் என்றால், நாம எதுக்கு இருக்கோம்.

    உங்களிடம் விவாதம் செய்தது மகிழ்ச்சி. வேறொரு கட்டுரைக்கு வந்து இதே போல நீங்கள் கேட்டாலும் சலிக்காமல் பதிலளிப்பேன் 🙂 .

    காரணம், எனக்கு புரிதல் உள்ளவற்றை மட்டுமே கட்டுரையாக எழுதுவேன். தவறு என்றால் ஒப்புக்கொள்வேன்.

    எனவே, பதிலளிப்பதில் சிரமமே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!