டைனோசர்ஸ் (2023) | உண்மைக்கு உயிர் இருக்கு

3
டைனோசர்ஸ்

ட சென்னை படங்களில் ஒன்றாக டைனோசர்ஸ். Image Credit

டைனோசர்ஸ்

வட சென்னை கதையென்றாலே, ரவுடிகள், அடிதடி, கொலை, குழுச் சண்டை என்று முத்திரை பதித்து, இப்படத்திலும் தொடர்கிறது.

வழக்கமான வட சென்னை கதை தான் ஆனால், திரைக்கதை, கூற வந்த மையக்கருத்து சுவாரசியமாக இருந்ததாலே டைனோசர்ஸ் கவனிக்க வைத்துள்ளது.

கதாபாத்திரங்கள்

இப்படத்தின் பலமே கதாபாத்திரங்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கும், இடத்துக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறார்கள்.

நாயகன் கார்த்திக் துவக்கத்தில் வழக்கமா ஊதாரித்தனமா சுற்றிக்கொண்டு இருக்கும் கதாபாத்திரம் தான்.

அப்புறமா சரியாகிட்டாரான்னு கேட்காதீங்க! 🙂 அப்புறமும் அதே போலத்தான் ஆனால், கவனிக்க வைக்கும் நடிப்புக்கு மாறி விடுவார்.

குறிப்பாக ஒரு இறப்பு காட்சியில் அவரது நடிப்பு சிறப்பு. வழக்கம் போல நம்ப முடியாத காதல் வந்தாலும், அதையும் இறுதியில் ரசிக்கும்படி எதார்த்தமாகக் கொண்டு சென்றுள்ளார்கள்.

இரு குழுக்கள் தலயாக வருபவர்கள் நடிப்பு நன்றாக உள்ளது. இந்த அடிதடி, கொலை என்று வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு என்ன கிடைக்கிறது? பலநாள் சந்தேகம்!

இறுதியில் சாகிறார்கள் அல்லது ஒன்றும் இல்லாமல் சப்பையாகி விடுகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு அடிதடி, கொலை, வன்முறை!

இவர்கள் வாழ்க்கை விட்டில் பூச்சி போலத்தான்.

வட சென்னை

வட சென்னை கதையில் என்னெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவையெல்லாம் இதில் உள்ளது ஆனால், திரைக்கதையால் கவனிக்க வைக்கிறது.

இவ்வகை கதைக்குள்ள பலமே அப்பகுதியின் இயல்புத்தன்மை, மக்கள். சரியான இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் அமைந்து விட்டால், அட்டகாசமாகக் காட்டலாம்.

கதாபாத்திரங்கள், இடங்கள் எல்லாமே மிக இயல்பாக அமைந்துள்ளது. படம் முழுக்க மெல்லிய நகைச்சுவை கதையுடன் தொடர்ந்து வருகிறது.

ஒரு ரவுடியிடம் கார்த்தி அம்மா கோபமாகப் பேசுவது சரவெடி. பக்கா வடசென்னை கெத்து பதிலடி. துவக்கத்திலிருந்து வழக்கமான அம்மாவாக பேசிக்கொண்டு இருந்தவர் இறுதியில் தெறிக்க விட்டுட்டார் 🙂 .

ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்ட வேண்டும். காரணம், ஒவ்வொரு இடமும், காட்சியும் எங்குமே செயற்கைத்தனம் இல்லாதது இதன் பலம். புள்ளைங்கோ ஏன் இப்படி கலர் கலராக தலையை வைத்துக்கொள்கிறார்கள்?!

வட சென்னை படங்களுக்கு ஒளிப்பதிவு, கதாபாத்திரங்கள், இயக்கம் சரியாக அமைந்து விட்டால், மற்ற குறைகளை மறக்க வைத்து விடும்.

டைனோசர்ஸ் அப்படியான ஒரு படம்.

பின்னணி இசையும் நன்றாக இருந்தது. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ஒரு படத்துக்கு மிகப்பெரிய தூண்கள்.

வழக்கமான காட்சிகள் துவக்கத்திலிருந்தாலும், சுவாரசியமான திரைக்கதை ரசிக்க வைக்கிறது குறிப்பாக வித்தியாசமான இறுதி முடிவு.

யார் பார்க்கலாம்?

சிலருக்கு வடசென்னை படங்கள் (ஒரே மாதிரியான கேங்ஸ்டர் கதை காரணமாக) பிடிக்காது, அவர்கள் தவிர்த்து விடலாம்.

ஆனால், எந்தப்படமாக இருந்தாலும் திரைக்கதையுடன் தொழில்நுட்பமும் சரியாக அமைந்தால் ரசிக்கும் என்னைப் போன்ற நபராக இருந்தால், பார்க்கவும்.

இரண்டாம் பாகம் வரப்போவதாகத் தகவல்.

பரிந்துரைத்தது மணியன். Amazon Prime ல் காணலாம்.

Directed by M. R. Madhavan
Written by M. R. Madhavan
Produced by Srinivas Sambandam
Starring Udhay Karthik. Rishi Rithvik, Saipriya Deva
Cinematography Jones V. Anand
Edited by R. Kalaivanan
Music by Bobo Shashi
Runtime 2 hours 28 minutes
Release date 28 July 2023
Country India
Language Tamil

தொடர்புடைய விமர்சனம்

புதுப்பேட்டை [2006] “The King Of Gangster Movies”

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. கிரி. ஹரிஷ் கல்யாண் எம்எஸ் பாஸ்கர் நடிச்ச parking படம் பாருங்க. வேற லெவல் படம். பார்கிங் பிரச்சினைல வர ஈகோ வால் மனிதன் எவ்வளவு தூரம் மோசமாக நடந்து கொள்கிறார்கள்னு வேற லெவல் திரைக்கதையுடன் அசத்தி உள்ளார் இயக்குனர். எம் எஸ் பாஸ்கர் ஈகோவால் பழிவாங்க துடிக்கும் கதாபாத்திரம். படம் பார்த்துட்டு review போடுங்க

  2. பொதுவாக வன்முறை, சண்டை காட்சிகள் உள்ள படங்களின் மீது ஆர்வம் குறைவு. ஆனால் வரலாற்று படங்கள், போர்கள் குறித்த படங்களை பார்ப்பதில் ஆர்வம் உண்டு. தற்போது வெளியான நெப்போலியன் படத்தை பார்க்க ஆர்வமாய் இருந்தேன்..

    ஏதோ ஒரு காரணத்தால் பார்க்க முடியாமல் தள்ளி கொண்டே போகிறது. கோவையில் இருந்த போது இந்த தொய்வு என்றும் ஏற்பட்டதில்லை. காரணம் நான் படத்துக்கு கூப்பிட்டு ஒரு முறை கூட சக்தி மறுத்ததில்லை. அதே போல் தான் அவர் கூப்பிட்டு நான் மறுத்ததில்லை. இங்கு நண்பர்கள் பல இருந்தாலும் சக்தியை போல் ஒருவரும் இல்லை..

    இந்த படத்தை இதுவரை பார்க்கவில்லை. படத்தோட தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது.. வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்க முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @ஹரிஷ்

    OTT யில் வந்த பிறகு பார்த்து விமர்சனம் எழுதுகிறேன். பலரும் நன்றாக உள்ளதாகக் கூறினார்கள்.

    @யாசின்

    “நான் படத்துக்கு கூப்பிட்டு ஒரு முறை கூட சக்தி மறுத்ததில்லை. அதே போல் தான் அவர் கூப்பிட்டு நான் மறுத்ததில்லை.”

    நண்பனுடன் பார்ப்பது எப்போதுமே அலாதியான இன்பம். நான் என் நண்பன் சதீஷுடன் பார்க்க விருப்பப்படுவேன், குறிப்பாக தலைவர் படங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!