பாகிஸ்தான், கனடா, அமெரிக்காவில் தீவிரவாதிகள் Unknown Men களால் கொல்லப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பாகிஸ்தானில் மாதம் குறைந்தது மூவர் கொல்லப்படுகிறார்கள். Image Credit
Unknown Men
கடந்த ஓரிரு வருடங்களாக இந்தியாவில் தீவிரவாத செயல்களைச் செய்தவர்கள், தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் கொல்லப்படுகிறார்கள்.
யார் அந்த Unknown Men என்று பாகிஸ்தான் தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளது. எப்படி நடக்கிறது என்று எந்தத் துப்பும் கிடைக்காமல் குழம்பி போய் உள்ளனர்.
பாக் ISI என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கியுள்ளது.
கொல்லப்படும் ஒவ்வொருவரும் பாக்கின் முக்கியத்தீவிரவாதிகள் என்பதால், பாக் பதட்டமாகியுள்ளது. எனவே, யாருமே கேள்விப்படாத ஒன்றை செய்து வருகிறது.
தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்பை அதிகரித்துள்ளது 🙂 . இரகசிய பாதாள அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளதாக பாக் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
தீவிரவாதிகளுக்குப் பயப்படும் காலம் போய், Unknown Men களுக்கு பயந்து ஓடி ஒளிய வேண்டிய பரிதாபமான நிலை வரும் என்று தீவிரவாதிகள் கனவிலும் நினைத்து இருக்க மாட்டார்கள்.
கேவலமான சித்தாந்தத்துக்காக அப்பாவிகளைக் கொன்று குவித்தவர்கள், தற்போது தங்கள் உயிரைக் காப்பாற்றப் போராடிக்கொண்டுள்ளார்கள்.
ஆனாலும், இத்தாக்குதல் நிற்பது போலத் தெரியவில்லை.
எப்படி நடக்கிறது?
Unknown Men கள் நேரடியாகவும் செயல்பட்டுத் தாக்கிக் கொல்கிறார்கள் அல்லது அங்குள்ள உள்ளூர் நபர்களை வைத்துப் போட்டுத்தள்ளுகிறார்கள்.
இவர்கள் சிக்கினாலும் யார் உத்தரவு கொடுத்தது என்று யாருக்கும் தெரியாது.
இது தான் அவர்கள் கம்பியை எடுத்து அவர்கள் கண்ணையே குத்துவது. இந்தியாவில் அழிவைச் செய்தவர்களுக்கு, தங்களுக்கு நடக்கும் போது பயமாக இருக்காதா!
ஒவ்வொரு கொலையும் பல்வேறு விதமாக உள்ளது.
புற்றுநோய் வரவைக்கப்பட்டு, Sniper துப்பாக்கி மூலம் சுடப்பட்டு, விபத்து ஏற்படுத்தி, கடத்தப்பட்டு, இதய அடைப்பு என்று கிறுகிறுக்க வைக்கிறார்கள்.
சாகும் ஒவ்வொருவரும் பிக்பாக்கெட் திருடர்கள் இல்லை. மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்தியவர்கள், தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள்.
அதுவும் சமீப தாக்குதல் அல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதலிலும் சம்பந்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
Unknown Men களுக்கு மிகப்பெரிய ரசிகர் படை உருவாகி வருகிறது.
கனடா அமெரிக்கா இங்கிலாந்து
கனடாவில் ஒரு முக்கிய காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டதற்கு, கனடா அரசு கொந்தளித்தது அனைவரும் அறிந்தது.
இந்தியா RAW (உளவு அமைப்பு) தான் இதைச் செய்கிறது என்று இந்தியாவைக் கண்டித்து, தூதரக அதிகாரியை இந்தியாக்கு அனுப்பி கெத்து காட்டியது.
பழைய சப்பையான அரசு என்று நினைத்து இருந்ததோ என்னவோ, இங்கிருந்த 40 கனடா தூதரக அதிகாரிகளைக் கிளம்பக்கூறி இந்தியா அதிரடி காட்டியது.
கனடா விசாக்களையும் தற்காலிகமா நிறுத்தி, பின் அனுமதித்தது. இதனால் மிரண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ‘சமாதானம், சமாதானம்’ என்றார் ஆனால், வெளியுறவுத்துறை வச்சு செய்கிறது.
காலிஸ்தானிகள் இந்தியத் தூதரக அலுவலகத்தில் தேசிய கொடியை அவமதித்ததற்கு இங்கிலாந்து அரசு எந்த நடவடிக்கையும், பாதுகாப்பும் கொடுக்காமலிருந்தது.
இந்தியா உடனே இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துக்குப் பாதுகாப்பை விலக்கியதோடு, தற்காலிக கழிவறையை அவர்கள் தூதரகம் முன்னே அமைத்தது.
இதன் பிறகு இங்கிலாந்து அலறியடித்துப் பாதுகாப்பைப் பலப்படுத்தியது.
ஏர் இந்தியா விமானத்தைத் தகர்க்கப் போவதாக அறிவித்து, தொடர்ந்து இந்தியாக்கு மிரட்டல் விடுத்து வந்த காலிஸ்தான் தீவிரவாதி Pannu வை அமெரிக்காவில் UnknownMen கொல்ல முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
ஆனால், இதை நாங்க செய்யவில்லை! என்று இந்தியா மறுத்து அறிக்கை விட்டது.
மனமார்ந்த நன்றிகள்
தீவிரவாதிகளுக்கே பீதியைக் கொடுக்கும், Unknown Men மற்றும் அவர்களை இயக்குபவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
இவர்களாலே இந்திய நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
சென்னை மழை வெள்ளம் பத்தி எழுதுங்க. திமுகவினர் மக்களிடம் கடுமையாக செருப்படி வாங்கி வருகின்றனர். திமுக மீது விமர்சனம் வைத்தாலே அவர்களை பாஜக சங்கி என சொல்லி பொது மக்களிடம் திமுக கடுமையான அதிருப்தியை சம்பாதித்துள்ளது. 98% 90% என ஆளாளுக்கு பொய்யான சதவீத கணக்கு சொல்லி மக்களை ஏமாற்றி 4000 கோடி கொள்ளை அடித்து இப்போது திமுக நன்றாக மாட்டிக்கொண்டு விட்டது. இது ஓட்டாக மாற வேண்டும். சென்னையிலேயே திமுக நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். ஆனால் இந்த மக்கள் 1000 ரூபாய் வாங்கி கொண்டு மீண்டும் திமுகவிற்கு ஓட்டு போட்டு விடுவார்கள்
@ஹரிஷ் இங்கே உள்ளது https://www.giriblog.com/chennai-infrastructure-is-a-complete-mess/
கிரி.. பூமி தோன்றிய நாட்கள் முதல் கிட்டத்திட்ட பல ஆயிரம் ஆண்டுகள் காற்றின் ஒலியும், கடலின் அலை ஓசையும், பறவைகளின் ரீங்காரத்தையும் தவிர இந்த பூமியில் வேறு சத்தங்கள் ஏதுமில்லை.. அப்படி இருந்த பூமி இன்று எவ்வாறு இருக்கிறது..
மனதின் தன் சுயநலனுக்காக எல்லா வித ஆசைகளை கொண்டதன் விளைவு தான், உலக வரைபடத்தில் எத்தனை அடித்தல் கோடுகள். தான் இந்த உலகிற்கு வந்துள்ள ஒரு தற்காலிக பயணி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.. அவன் இதனை உணராதவரை இந்த பிரச்சனைகள் ஓயாது..
@யாசின்
நீங்கள் கூறுவது சரி தான் ஆனால், என்ன செய்வது.
காஷ்மீரில் அமைதி திரும்பியது போலச் சரியான உறுதியான முடிவுகளை எடுத்தால், மற்ற இடங்களும் இதே நிலையை அடையும்.
கிரி. தாவூத் இப்ராஹிம் மர்ம நபர்களால் விஷம் வைத்து கராச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்ன்னு நியூஸ் வந்திருக்கு. பார்த்தீர்களா? பாகிஸ்தான்ல பல ஊர்ல அரசு இணையசேவை கட் பண்ணிட்டாங்க. ரா அமைப்பு தான் காரணம்னு பாகி சந்தேக படுது. மோடி உண்மையாகவே வேற லெவல். மோடின்னு சொல்றத விட அஜித் தோவல் வேற லெவல்னு தான் சொல்லனும். 😃😃😃