மத மாற்றம் பல்வேறு வகையில் நடைபெறுகிறது, அதில் ஒரு வகை இக்கட்டுரை.
மத மாற்றம்
இந்தியாவில் மத மாற்றம் என்பது பல காலமாக நடந்து வருகிறது என்றாலும், 2010 க்குப் பிறகு பெரியளவில் நடந்து வருகிறது. Image Credit
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. இதற்குத் திராவிடக் கட்சிகள் குறிப்பாக வாக்கு அரசியலுக்காக திமுக இவற்றை ஆதரித்து வருகிறது.
ஜெ ஒருவர் மட்டுமே தைரியமாக மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார் ஆனால், அவரும் இறுதியில் வாக்கரசியலால் வாபஸ் வாங்கி விட்டார்.
மதமாற்றம் கிறித்துவ, முஸ்லீம் இரு மதங்களிலும் நடைபெற்றாலும் கிறித்துவர்கள் இதில் பல படி முன்னே உள்ளார்கள்.
இதற்குக் காரணம் சுதந்திரம் பெறாத காலத்திலிருந்து இதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதையொரு மாபெரும் பணியாகவே செய்து வருகிறார்கள்.
இதற்கு நிதி உதவி அளிப்பவர்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து.
என்ன புத்தகம்?
ஒரு வேலையாக சென்ற இடத்தில், 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியதாக இருந்ததால், கடலுக்கு அப்பால் புத்தகத்தையும் கையோடு எடுத்துச்சென்று இருந்தேன்.
அங்கே இருந்த உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது அங்கே யாசகம் கேட்டுக்கொண்டு இருந்தவர்களைப் புறக்கணித்துக் கொஞ்சம் தள்ளிச் சென்று நின்று கொண்டு இருந்தேன்.
அங்கே இருந்தவர்களில் ஒரு பாட்டி மட்டும் என்னிடம் வந்து திரும்பக் கேட்டதால், அவருக்குக் கொடுத்து விட்டு நகர்ந்தேன்.
எப்போதுமே வயதானவர்கள் என்றால், ஒரு பாசம், அன்பு என்னிடம் உண்டு.
பின்னர் அங்கே இருந்து கிளம்பி ஒரு இடத்தில் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தேன். அரை மணி நேரம் கழித்து அதே பாட்டி திரும்ப வந்து யாசகம் கேட்டார்.
‘அப்பவே கொடுத்துட்டேனே பாட்டி‘
‘மறந்துடுச்சுப்பா‘
அவருக்குப் பதில் அளித்து விட்டுத் திரும்பப் புத்தகத்தில் மூழ்கினேன் ஆனால், அவர் நகரவில்லை. என்னையே பார்த்துக்கொண்டு ‘என்ன புத்தகம்?‘ என்று கேட்டார்.
அவருக்கு எப்படி விளக்குவது என்பது தெரியாததால், புத்தகம் பற்றிக் கேட்பவர் என்பதால் அதைப் பற்றிய புரிதல் இருக்குமென்று புத்தகத்தை அவரிடமே கொடுத்தேன்.
புத்தக வெளியீடு, முன்னுரை போன்றவற்றைப் பொறுமையாகப் படித்து விட்டு, புத்தகங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார்.
நின்று கொண்டே பேசிக்கொண்டு இருந்ததால், பக்கத்தில் இடம் இருக்கவே, அமரக் கூறினேன், அமர்ந்தார்.
புத்தகம் பற்றிப் பேச்சுக்கொடுத்து விட்டு ‘இந்த வயதில் ஏன் யாசகம் எடுக்கிறீர்கள்? உங்களுக்குக் குடும்பத்தினர் இல்லையா?‘ என்று பேசிக்கொண்டு இருந்தேன்.
அவர் குடும்பத்தை பற்றிக் கூறி, அவர் வாழ்க்கை பற்றிக் கூறினார்.
எனக்குக் கேட்க நேரம் இருந்ததால், அவர் பேசுவதைப் புறக்கணிக்கவில்லை.
கர்த்தர்
அவர் பேசிய பேச்சிலிருந்து அவர் கிறித்துவராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன் காரணம், கிறித்துவர்களுக்கே உரிய ஆண்டவர், ஜெபம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
‘உங்க பெயர் என்ன?‘ என்றவுடன் அவரின் கிறித்துவப் பெயரைக் கூறினார்.
இவர் இந்துவாக இருந்து கிறித்துவராக மாறியவர். எதனால் இப்பெயர் வந்தது, குடும்பக்கதை காரணங்கள் போன்றவை தனிப்பட்டதாக இருந்ததால், தவிர்க்கிறேன்.
‘எதனால் கிறித்துவராக மாறினீர்கள்?‘
‘எனக்கு 25 வயதில் குடும்பத்தில் ஒரு பிரச்சனை வந்தது அதனால், ஒரு இடத்தில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தேன்.
அப்போது அங்கே வந்த 3 பாஸ்டர்கள் எனக்கு ஆறுதல் கூறி, இயேசு ஆறுதல் அளிப்பார் என்று கூறி என்னை மதம் மாற்ற வலியுறுத்தினார்கள். நானும் மதம் மாறி விட்டேன்‘
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், இந்த மதமாற்றிகள் இந்துக்களின் பலகீனமான நிலையைப் பயன்படுத்தி இதை செய்கிறார்கள்.
இதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். இதற்கு பெருமளவில் பணம் பெறுகிறார்கள். இவர்கள் யாரும் சொந்தப்பணத்தை எடுத்துக் கொடுப்பதில்லை, வெளிநாட்டு நிதியில் கொடுக்கிறார்கள்.
அதிர்ச்சி கொடுத்த பாட்டி
தினமும் ஜெபிக்கிறேன், வார இறுதியில் சர்ச் செல்கிறேன் என்றதோடு அவர் ஆண்டவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை அழுத்தமாகக் கூறினார்.
அவரின் நம்பிக்கையைக் கூறினாரே தவிர என்னை மதம் மாற்ற முயலவில்லை. ஆண்டவர் தான் எல்லாமே என்றதோடு கையோடு வைத்து இருந்த பைபிளையும் காட்டினார்.
யாசகம் எடுக்கிறார் ஆனால், பைபிளையும் பையில் வைத்துள்ளார், எங்கும் கொண்டு செல்கிறார் என்பது வியப்பை அளித்தது. எவ்வளவு தூரம் அதில் ஈர்க்கப்பட்டுள்ளார் என்று புரிந்தது.
இவ்வளவுக்கும் மெல்லிய தேகத்தில், கூன் விழுந்து, பலகீனமாக இருந்தார். புத்தகமே கூடுதல் சுமை தான் அவருக்கு.
எப்படி இணைந்தீர்கள்?
இவருக்கு வயது தற்போது 80, இவருடைய 25 வது வயதில் மதம் மாறியுள்ளார். அப்படியென்றால், 1970 ம் ஆண்டு வாக்கில் மதம் மாறியுள்ளார்.
இவர் பேசியதெல்லாம் சரி என்றாலும் ‘மூன்று பேர் வந்து பேசியவுடன் எப்படி மாறினார்?!‘ என்ற லாஜிக் எனக்கு புரியவில்லை.
‘அதெப்படி உடனே மாற முடியும்?‘ என்ற சந்தேகத்தைக் கேள்வியாகக் கேட்டேன்.
இவர் சிறுமியாக இருந்த போது அவரது வீடு உட்பட பலர் வீடுகளில் சிறு கிறித்துவப் புத்தகங்களைக் கிறித்துவர்கள் வைத்துச் சென்றுள்ளார்கள். அவற்றைப் படித்து ஏற்கனவே இவருக்கு ஒரு புரிதல் இருந்துள்ளது.
அப்படியென்றால் இது நடந்தது 1960 ஆண்டு வாக்கில். அப்போதே இந்த அளவுக்கு நடந்துள்ளது என்றால், தற்போது நடப்பதையெல்லாம் கற்பனையும் செய்ய முடியவில்லை.
இவரின் மோசமான நிலையில் மூவர் மூளை சலவை செய்ததும் அவர் மாறியிருக்கிறார் ஆனால், இதற்கு அடிப்படை அந்த சிறு புத்தகங்கள்.
இதைக்கேட்டு கடும் அதிர்ச்சியாகி விட்டது.
சிறு புத்தகம் என்ன செய்து விடும்?! என்று தான் பலரும் நினைப்பார்கள் ஆனால், தொடர்ந்து திணிக்கப்படும் போது ஒருநாள் ‘சரி படிப்போம்’ என்று படிக்க தோன்றும்.
ஆறுதல் கூறும் நேரம் சரியாக அமையும் போது மூளைச்சலவை செய்து விடுகிறார்கள்.
இவர்கள் இன்னொரு குழுவின் முயற்சியை இவர்கள் அறுவடை செய்து விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் அவர்கள் செய்ய நினைத்தது நடந்து விடுகிறது.
பின்னர் பாட்டி கிளம்புவதாகக் கூறியதும் அவருக்கு கையில் பணத்தை கொடுத்து அனுப்பினேன். முன்னரே கூறியபடி எனக்கு வயதானவர்கள் என்றால் தனி அன்பு.
அதோடு அந்தப்பாட்டி பொய் எதுவும் சொன்னதாகக் கருதவில்லை, என்னிடம் மதத்தைத் திணிக்கவும் முயலவில்லை. அப்படி செய்து இருந்தால், கிளம்பக்கூறி இருப்பேன்.
பரப்புரை
தற்போது கிராமங்கள், நகரங்கள் என்று அனைத்து இடங்களிலும் இது போன்று பரப்புரை செய்து வருகிறார்கள், சில இடங்களில் துரத்தப்படுகிறார்கள்.
இதற்கென்றே பெரிய வலைப்பின்னல் வேலை செய்கிறது.
எனவே, இந்துக்களே! இனி எவனாவது, எவளாவது இந்த மாதிரி புத்தகத்தைத் தூக்கிட்டு வந்தால், துரத்துங்கள். இவர்களைச் சாதாரணமாக எண்ணாதீர்கள்.
இவர்களைப் பொறுத்தவரை பணம் கிடைக்கிறது எனவே, இதற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள், எந்த அவமானத்தையும் சந்திக்கத் தயாராக உள்ளவர்கள்.
சிறு புத்தகம்
எனவே, சிறு புத்தகம் தானே! சிறு பேச்சு தானே என்று நினைக்காதீர்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல, கொஞ்சம் கொஞ்சமாக மூளைச் சலவை செய்து விடுவார்கள்.
விஷயம் தெரிந்தவர்கள் தப்பித்து விடுவார்கள், இப்பாட்டி போல அப்பாவிகள் ஏமாந்து விடுவார்கள்.
இவர்கள் ஒரு பக்கம் என்றால், சுவிசேஷக் கூட்டம் என்று நடக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் மதமாற்றக் கூட்டங்கள் தனி. இதில் நடிப்பதற்கென்றே பெரும் நடிகர் தேர்வு நடைபெறுகிறது.
இவர்களின் போப் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டுள்ளார் ஆனால், அவருக்கு ரகசியத்தைக் கூறாமல், இங்கே சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளவர்களை நடக்க வைக்கின்றனர்.
பாவம், போப் இது தெரியாமல் இன்னும் சக்கர நாற்காலியிலேயே உள்ளார்.
இங்கிலாந்து அமெரிக்கா
இந்தியாவில் உள்ள இந்துக்களை மதம் மாற்றக் கோடிக்கணக்கில் நிதி வழங்கும் இங்கிலாந்து, அமெரிக்கா தற்போது நமக்கு கொடுத்த மருந்தைத் தற்போது அவர்களே சுவைத்து வருகிறார்கள்.
இந்நாடுகளில் அதிகரித்த முஸ்லீம் அகதிகளால் மிகப்பெரிய மத பிரச்சனையைச் சந்தித்து வருகிறார்கள்.
தற்போது X ல் ஐரோப்பா ஹேண்டில் வைத்துள்ளவர்கள் வேலையே இது போன்ற சம்பவங்களால் ஏற்படுவதைக் காணொளியாக வெளியிடுவது தான்.
இங்கிலாந்தில் 10% முஸ்லிம்களே உள்ளனர் ஆனால், இதற்கே அவர்கள் கிட்டத்தட்ட இங்கிலாந்தைக் கைப்பற்றியது போல நிலையைக் கொண்டு வந்து விட்டனர்.
கர்மா
கிறித்துவர்கள் எப்படி இந்துக்களை மதம் மாற்ற அனைத்து முயற்சிகளையும் இந்தியாவில் செய்கிறார்களோ, அவை அனைத்தையும் இங்கிலாந்தில் முஸ்லிம்கள் செய்து வருகின்றனர்.
தெருக்களில் ஒலி பெருக்கி மூலம் பரப்புரை செய்கின்றனர். இதைக்கண்டு இவர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
அங்குள்ள பலரை மதம் மாற்றி விட்டார்கள் குறிப்பாக அறியாத இளம் வயதினரை மாற்றுகிறார்கள், இதனால், பெற்றோர்கள் பயத்தில் உள்ளார்கள்.
இங்கிலாந்து பள்ளியில் உடன் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் கூறியதைக் கேட்டு அவர்களைப்போலத் தன் மகனும் செய்வதாக X ல் ஒருவர் புலம்பியிருந்தார்.
பல சர்ச்சுகளை கைப்பற்றி விட்டார்கள். ஏராளமான மசூதிகள் வந்தும் அங்கேயும் தெருவில், சாலையில் நமாஸ் செய்யும் பிரச்சனை அதிகரித்து விட்டது.
இந்துக்களுக்கு என்ன செய்தார்களோ அதே சூழ்நிலை தற்போது அவர்களைப் புரட்டி எடுத்து வருகிறது.
உண்மையாகவே அவர்கள் புலம்புவதை, எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுவதை, அவர்களின் குடும்பத்தினரே சிக்கலுக்குள்ளாவதைப் பார்க்க வருத்தமாக உள்ளது.
‘எங்களை இப்படித்தான்டா செய்யறீங்க.. அனுபவிங்கடா‘ என்று ஒரு மனது கூறினாலும், இன்னொரு பக்கம் பாவமாகவும் உள்ளது.
அடிபட்டவனுக்குத் தானே இன்னொருவன் வலி புரியும்.
கொசுறு
மேற்கத்திய நாடுகள் கணக்கில்லா அகதிகளை அனுமதித்ததால் கற்பனையே செய்ய முடியாத அளவுக்குச் சிக்கலில் உள்ளது.
இதிலிருந்து இவர்கள் மீளவே முடியாது என்றே கருதுகிறேன்.
‘Welcome Refugees‘ என்றவர்கள் தற்போது ‘Mass deportations needed‘ என்கிறார்கள். Read : ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ]
சமீபமாக ஐரோப்பாவில் வலது சாரி அரசாங்கம் மாறி வருகிறது. எனவே, இதனால் எதுவும் மாற்றம் ஏற்படுமா என்பது தெரியவில்லை.
இது பற்றி விரிவாகப் பின்னர் எழுதுகிறேன். தலைப்பு ‘அழிவுப்பாதையில் மேற்கத்திய நாடுகள்‘.
ஈராக் (சதாம் உசேன்), சிரியா, லிபியா (கடாஃபி) ஆப்பிரிக்கா நாடுகள் உட்பட பல நாடுகளை அமெரிக்க, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகள் சீரழித்தார்கள்.
தற்போது கர்மா வேறு வகையில் அவர்களைத் தாக்குகிறது. தன் வினை தன்னைச்சுடும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
//இவர்கள் ஒரு பக்கம் என்றால், சுவிசேஷக் கூட்டம் என்று நடக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் மதமாற்றக் கூட்டங்கள் தனி. இதில் நடிப்பதற்கென்றே பெரும் நடிகர் தேர்வு நடைபெறுகிறது.
இவர்களின் போப் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டுள்ளார் ஆனால், அவருக்கு ரகசியத்தைக் கூறாமல், இங்கே சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளவர்களை நடக்க வைக்கின்றனர்.//
கிறித்துவதில் நிறைய பிரிவுகள் உள்ளது மதம் மாற்றம் செய்ய முயல்வது பெந்தேகோஸ்து பிரிவினர் மட்டுமே. எல்லோரும் பணத்திற்காகச் செய்யவதில்லை பைபிளின் சில கருத்துக்களை தவறாகப் புரிந்து கொண்டு கடவுள் கிறித்தவர் அல்லாதவர்களை மதம் மாற்றச் சொன்னதாக நினைத்து முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.
போப் கத்தோலிக்க பிரிவினரின் மதகுரு அவருக்கும் சுவிசேஷக் கூட்டம் நடத்துபவர்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
கிரி.. என் பார்வையில் நான் கண்ட அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்..
எங்கள் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன் இந்துக்களாக இருந்த பெரும்பான்மை மக்கள் தற்போது கிருத்துவர்களாக உள்ளார்கள்.. கிட்டத்திட்ட (20/30/35 வருடங்களில்) இந்த மாற்றம் சிறுக சிறுக நடந்து, தற்போது அந்த பகுதி முழுவதும் மதமாற்றம் நடந்து விட்டது.. ஒரு தலைமுறையில் உள்ளவர்களை மாற்றி விட்டால் அது போதும்.. பின்பு அடுத்த சந்ததியினர்கள் தானாகவே அந்த மாற்றப்பட்ட மதத்தை பின்பற்றுவார்கள்.. இந்த மாற்றம் விரும்பி நடந்தததா?? இல்லை வறுமைக்காக நடந்ததா?? அல்லது கட்டாய மத மாற்றமா?? இல்லை எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை.. ஆனால் இது நான் நேரில் கண்டது..
என்னுடைய மேனிலை பள்ளி /இளங்கலை கல்லூரி இவை இரண்டும் கிறித்துவ நிறுவன்களில் படித்ததால் இயல்பாகவே எனக்கு இதன் மீது ஒரு நாட்டம் இருந்தது.. உண்மையை சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் நிறைய கூட்டங்களில் கலந்து கொண்டேன்.. நிறைய புத்தகங்கள் படித்து இருக்கிறேன்.. கிருத்துவத்தை (யாரும் சொல்லாமலே) தழுவி விடலாமா?? என்று கூட பல முறை யோசித்து இருக்கிறேன்.. அடிப்படையில் எனக்கு பல கேள்விகள் இருந்ததாலும், அவற்றிக்கு சரியான பதில் இல்லாததாலும் நான் அதை அப்படியே விட்டு விட்டேன்..
முதுகலை கல்லூரி பருவத்தில் கம்யூனிசத்தின் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டதால் நிறைய புத்தகங்கள் படிக்க தொடங்கினேன்.. அந்த பருவத்தில் தான் காரல் மார்ஸ் பற்றி முழுமையாக படித்தேன்.. என்னை பொறுத்தவரை மதமாற்றம் என்பது மிகவும் தவறான ஒன்று..தானாக விரும்பி முழு புரிதலோடு ஒரு மதத்தை விரும்பி ஏற்று கொள்வது என்பது வேறு..
அதை விட்டு வறுமைக்காகவோ, என்னவென்றெ தெரியாமல், சரியான புரிதல் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு (அந்த பாட்டியை) போல் ஒரு மதத்தை துறந்து இன்னொரு மதத்தை தழுவுவது சரியா என்று தெரியவில்லை. 25 வயதில் மதமாற்றம் என்பது பக்குவப்பட்ட வயது தான்.. ஒரு வேலை அந்த சமயத்தில் கணவரின் வற்புறுத்துதலோ அல்லது வேறு காரணம் இருந்திருக்கலாம்..
முஸ்லீம் மதத்தை பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருந்தததால், நான் தெளிவு படுத்துகிறேன்.. கட்டாய மத மாற்றத்தை எந்த உண்மையான முஸ்லீமும் ஆதரிக்க மாட்டன்.. காரணம் அடுத்த மதங்களை நேசிக்க சொல்கிறது.. குரானில் எங்குமே மதமாற்றம் செய்தாக வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.. எல்லா மதத்தினரோடு அன்பு பாராட்ட வேண்டும் என்று தான் கூறுகிறது இஸ்லாம்.. பணத்தை கொடுத்தோ அல்லது வேறு காரணகளுக்காக மதம் மாற்றப்படுவதை ஒரு முஸ்லீமாக நான் என்றும் ஆதரிக்க மாட்டேன்..
மேற்கத்திய நாடுகளில் ஏற்படும் மதமாற்றத்தை பற்றி உண்மையில் எனக்கு தெரியவில்லை.. மேற்கத்தியர்களை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்ய முடியுமா? என்பது கேள்வி குறி தான்.. இந்தியாவின் சூழல் வேறு.. ஐரோப்பாவின் சூழல் வேறு.. அவ்வாறு கட்டாய மத மாற்றம் அங்கு நடந்தாலும் தவறு தான்..
விருப்பம் என்பது வேறு திணிப்பு என்பது வேறு.. தமிழ்நாட்டில் நான் பிறந்ததால் இட்லியையோ / தோசையையோ காலை உணவாக எடுப்பது என் விருப்பம்.. நான் ரொட்டியை தான் காலையில் உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தான் திணிப்பு.. இந்தியை நான் விரும்பியோ அல்லது என் சொந்த தேவைக்கோ கற்று கொள்ள நினைப்பது என் விருப்பம்.. நான் தமிழை துறந்து இந்தியை அவசியம் கற்று கொண்டு தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தான் திணிப்பு..
@Tony
“கிறித்துவதில் நிறைய பிரிவுகள் உள்ளது மதம் மாற்றம் செய்ய முயல்வது பெந்தேகோஸ்து பிரிவினர் மட்டுமே.”
நீங்க நம்புறீங்களோ இல்லையோ…
“இதற்கென்றே பெரிய வலைப்பின்னல் வேலை செய்கிறது.”
மேற்கூறிய இடத்தில் “இதை செய்வது பெரும்பாலும் பெந்தகொஸ்தே பிரிவினர் தான்” என்றே எழுதியிருந்தேன். இறுதியில் மேற்கூறியபடி மாற்றினேன்.
இதை நான் மட்டுமல்ல விஷயம் தெரிந்தவர்கள் அறிவர்.
“எல்லோரும் பணத்திற்காகச் செய்யவதில்லை”
ஏற்றுக்கொள்கிறேன்.
பெரும்பாலானவர்கள் பணத்துக்காக செய்கிறார்கள், சிலர் அவர்களாக விருப்பப்பட்டு செய்கிறார்கள்.
பணம் அளிக்காமல் ஒருவரை கிறித்துவ மதத்துக்கு மாற்ற முடியாது அல்லது கடினம். அவர்கள் உதவித்தொகை போல வழங்குகிறார்கள், உணவுப்பொருட்களை வழங்குகிறார்கள்.
இதற்கான நிதி வெளிநாட்டு நிதி.
கிறித்தவத்தில் சாதியில்லை என்று கூறி வரவைத்து அங்கேயும் தாழ்த்தப்பட்ட பிரிவினராக உள்ளனர். அவர்களுக்கான மரியாதை கிடைப்பதில்லை.
இந்து, கிறித்துவம், முஸ்லீம், சீக் என்று அனைத்து மதங்களிலும் சாதி / பிரிவினர் உள்ளனர், உயர்ந்தவர் இரண்டாம் நிலை மக்கள் என்று உள்ளனர்.
“பைபிளின் சில கருத்துக்களை தவறாகப் புரிந்து கொண்டு கடவுள் கிறித்தவர் அல்லாதவர்களை மதம் மாற்றச் சொன்னதாக நினைத்து முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.”
இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.
“போப் கத்தோலிக்க பிரிவினரின் மதகுரு அவருக்கும் சுவிசேஷக் கூட்டம் நடத்துபவர்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.”
இன்னும் பலருக்கு கிறித்துவர்களின் ப்ரொடஸ்டண்ட் பிரிவினர் சிலுவையை மட்டுமே வணங்குவர் என்பதே தெரியாது. மேரியை வணங்குவர் என்று நினைக்கிறன்.
ஆனால், பொதுமக்களுக்கு அனைவருமே கிறித்துவர் என்பது மட்டுமே புரியும். காரணம் அனைவருமே இயேசு அழைக்கிறார் என்று கூறுகிறார்கள்.
@யாசின்
“இந்த மாற்றம் விரும்பி நடந்தததா?? இல்லை வறுமைக்காக நடந்ததா?? அல்லது கட்டாய மத மாற்றமா?? இல்லை எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை.. ஆனால் இது நான் நேரில் கண்டது..”
நீங்கள் கூறிய அனைத்து முறைகளிலும் நடந்துள்ளது.
“கிறித்துவ நிறுவன்களில் படித்ததால் இயல்பாகவே எனக்கு இதன் மீது ஒரு நாட்டம் இருந்தது.”
உங்களுக்கு மட்டுமல்ல கிறித்துவ பள்ளியில் படித்த பலருக்கும் இந்த எண்ணம் வந்து சென்று இருக்கும்.
“நிறைய புத்தகங்கள் படித்து இருக்கிறேன்.. கிருத்துவத்தை (யாரும் சொல்லாமலே) தழுவி விடலாமா?? என்று கூட பல முறை யோசித்து இருக்கிறேன்”
ம்ம் அப்பவே உங்களுக்கு தோன்றியது என்றால், தற்போதெல்லாம் நினைக்கவே முடியவில்லை.
“அடிப்படையில் எனக்கு பல கேள்விகள் இருந்ததாலும், அவற்றிக்கு சரியான பதில் இல்லாததாலும் நான் அதை அப்படியே விட்டு விட்டேன்..”
நல்ல முடிவு.
“என்னை பொறுத்தவரை மதமாற்றம் என்பது மிகவும் தவறான ஒன்று..தானாக விரும்பி முழு புரிதலோடு ஒரு மதத்தை விரும்பி ஏற்று கொள்வது என்பது வேறு..”
மாற்றுக்கருத்தில்லை, ஏற்றுக்கொள்கிறேன் ஆனால், எங்கோ யாரோ எப்படியோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ Influence செய்து இருப்பார்கள்.
“மதத்தை துறந்து இன்னொரு மதத்தை தழுவுவது சரியா என்று தெரியவில்லை. ”
என்னைப்பொறுத்தவரை ஒரு இடத்தில் மரியாதை கிடைக்கவில்லையென்றால், இன்னொரு இடத்துக்கு செல்வது தவறு என்று கூற முடியவில்லை ஆனால், அங்கேயும் கிடைக்காது என்பதை மாறுபவர்கள் உணர்வதில்லை.
“25 வயதில் மதமாற்றம் என்பது பக்குவப்பட்ட வயது தான்.. ஒரு வேலை அந்த சமயத்தில் கணவரின் வற்புறுத்துதலோ அல்லது வேறு காரணம் இருந்திருக்கலாம்”
அவர்கள் அனைவருமே இந்துக்கள் தான். இந்த பாட்டி மட்டுமே கிறித்துவராக மாறியுள்ளார்.
“கட்டாய மத மாற்றத்தை எந்த உண்மையான முஸ்லீமும் ஆதரிக்க மாட்டன்.. காரணம் அடுத்த மதங்களை நேசிக்க சொல்கிறது.. குரானில் எங்குமே மதமாற்றம் செய்தாக வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.. எல்லா மதத்தினரோடு அன்பு பாராட்ட வேண்டும் என்று தான் கூறுகிறது இஸ்லாம்.”
யாசின் இப்போது பிரச்சனை என்னவென்றால், 20 – 25 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இவ்வாறு இல்லை.
ஆனால், சவூதி சென்று வந்தவர்கள் அங்கே இருந்து வாகாபியிசத்தை தமிழகத்தில் புகுத்த ஆரம்பித்த பிறகு சூழ்நிலை மாறி விட்டது.
இவர்களே தமிழகத்தில் இருந்த முஸ்லிம்களின் எண்ணவோட்டத்தை மாற்றி தற்போது அது இயல்பாகி விட்டது.
அடிப்படைவாத முஸ்லிம்கள் அதிகரித்து விட்டனர். இவர்களே மதமாற்றம் செய்வது, இந்தியாக்கு எதிராக பேசுவது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களை செய்கிறார்கள்.
இது பற்றி ஐரோப்பா பற்றி எழுதும் போது குறிப்பிடுகிறேன். உலகம் முழுக்க அடிப்படைவாத இஸ்லாம் பெருகி வருகிறது, இது ஆபத்தான போக்காக உள்ளது.
“பணத்தை கொடுத்தோ அல்லது வேறு காரணகளுக்காக மதம் மாற்றப்படுவதை ஒரு முஸ்லீமாக நான் என்றும் ஆதரிக்க மாட்டேன்..”
யாசின் நீங்க ஒரு தனிப்பிறவி 🙂 . உங்களை எல்லாம் இதில் பொருத்திப்பார்க்கவே முடியாது. நீங்க ஒரு Rare Gem.
உங்களைப்போல அனைவரும் எண்ண ஆரம்பித்து இருந்தால், இந்தியாவில் மத பிரச்சனைகளே வந்து இருக்காது.
“மேற்கத்தியர்களை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்ய முடியுமா? என்பது கேள்வி குறி தான்.”
கட்டாயம் இல்லை, மூளைச்சலவை செய்து தான். அதோடு ஒரு நெருக்கடியைக் கொடுப்பது.
அதாவது மாறி விட்டால் சில பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவது.
“இந்தியை நான் விரும்பியோ அல்லது என் சொந்த தேவைக்கோ கற்று கொள்ள நினைப்பது என் விருப்பம்.. நான் தமிழை துறந்து இந்தியை அவசியம் கற்று கொண்டு தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தான் திணிப்பு..”
தற்போது திணிப்பு என்பது குறைந்து விட்டது. புதிய கல்விக்கொள்கையில் கூடத் திணிப்பு இல்லை, விருப்பம் தான்.
ஆனாலும் சில இடங்களில் அரசு திட்ட பெயர்களில் நடக்கவே செய்கிறது. இது தவறு தான்.
இதற்கு பிரிட்டிஷ் வெள்ளைக்காரனின் ஆங்கிலத்தை பயன்படுத்துவதை விட இந்திய மொழியை பயன்படுத்தலாமே என்று அரசு கேட்கிறது.
எனக்கு பிடிக்கவில்லையென்றாலும், அவர்கள் கூறுவதில் ஒரு நியாயம் இருப்பதாகவே உணருகிறேன்.
எடுத்துக்காட்டுக்கு சமீபத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் பெயர் இந்தியில் மாற்றப்பட்டது. இதற்கு மேற்கூறிய காரணங்களைக் கூறினார்கள்.
எனவே, எனக்கு பிடிக்கிறது பிடிக்கலை என்று எதையும் உறுதியாக கூற முடியவில்லை.