குடியுரிமைச் சட்டம் | முஸ்லிம் எதிர்ப்புகள்

3
Indian Law குடியுரிமைச் சட்டம்

ந்தியா முழுவதும் ‘குடியுரிமைச் சட்டம்’ எதிர்த்துக் காங், இடது சாரிகள், எதிர்கட்சிகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

குடியுரிமைச் சட்டம்

உச்சநீதிமன்றமே இச்சட்டத்தை அங்கீகரித்த பிறகும் போராட்டம் செய்து கொண்டுள்ளார்கள். Image Credit

எதிர்ப்பைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமையுள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது ஆனால், அதற்காகத் தினமும் போராட்டம் செய்து கொண்டு இருப்பது எப்படிச் சரியாகும்?

சென்சிட்டிவான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது அவை வன்முறையிலேயே முடிகிறது. எடுத்துக்காட்டு ஜல்லிக்கட்டு போராட்டம்.

போராட்டங்கள் கை மீறி வேறு திசையில் செல்கிறது என்பது தெரியும் போது அதை முடித்துக்கொள்வதே நல்லது. பிடிவாதமாக மேலும் தொடர்வது போராட்டங்களின் மதிப்பைக் குறைத்து, நோக்கத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.

பொதுமக்களின் ஆதரவை இழக்கிறது.

ஷாஹின்பாக் & ஜாஃப்ரபாத்

மாதக்கணக்கில் ஷாஹின்பாக்கில் சாலையை மறித்து நடந்த போராட்டங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே, அதை வேறு இடத்தில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது ஆனால், போராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஷாஹின்பாக் போல ஜாஃப்ரபாத்திலும் போராட்டக்காரர்கள் குழுமி அங்கும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டதால், குடியுரிமைச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த கலவரத்தில் காவல் அதிகாரி கொல்லப்பட்டார்.

மாறிவரும் எதிர்ப்பு நிலை

குடியுரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் சராசரி இந்துக்கள் உட்பட ஆனால், தற்போது சூழ்நிலை மாறி வருகிறது.

முஸ்லிம்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் சராசரி இந்துவின் மனநிலை மாறி வருகிறது. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கருத்துகள் அதிகம் வருகின்றன, அதோடு தொடர் போராட்டங்கள் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றாலும், எதற்கு இது போலத் தொடர்ச்சியான போராட்டங்கள்?!

குடியுரிமைச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்குப் பாதிப்பில்லையா?

100% எவருக்கும் பாதிப்பில்லாத சட்டம் என்ற ஒரு சட்டத்தை இந்தியாவில் கொண்டு வரவே முடியாது. நிச்சயம் யாராவது இதில் பாதிக்கப்படலாம், பாதிக்கப்படுவார்கள்.

அவ்வாறு பாதிக்கப்பட்டால், அதை எதிர்த்துப் போராடலாமே தவிர, சட்டமே வேண்டாம் என்று போராடுவது எப்படிச் சரியாகும்?!

மக்கள் விகிதாச்சாரம்

ஒவ்வொரு நாட்டுக்கும் மக்களின் விகிதாச்சாரம், சமநிலை என்பது உள்ளது. இந்த விகிதாச்சாரம், சமநிலை மாறும்போது அது நிச்சயம் நாட்டுக்கு நல்லது அல்ல.

இந்தியா என்றல்ல, எந்த ஒரு நாட்டுக்கும் பொருந்தும்.

அது ஒரு நாட்டின் அடிப்படை அமைப்பையே கேள்விக்குறியாக்குகிறது. உள்நாட்டுக் குழப்பங்களை, பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

கருணை அடிப்படையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், ரோஹிங்கியா முஸ்லிம்களை அதிகளவில் அனுமதிக்கும் போது தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வரும்.

சூழ்நிலை, எண்ணங்கள் வேறு

அந்நாட்டு மக்கள் வளர்ந்த விதம், சூழ்நிலை, எண்ணங்கள் என்பது வேறு, இந்திய முஸ்லிம்கள் வளர்ந்த விதம், சூழ்நிலை, எண்ணங்கள் வேறு.

அவர்கள் சீராக அதிகரிக்கும் போது நடைமுறை பிரச்னைகளைக் கொண்டு வரும்.

இன்று கருணைக்காக அனுமதிப்பது நாளை இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார, மதப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அனுமதிக்காமல் ஏற்படும் இழப்புகளை விட அனுமதித்தால் ஏற்படும் இழப்புகளே அதிகமாக இருக்கும்.

இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவதே ஒரு நாட்டுக்கு நல்லது.

சராசரி இந்துவின் எண்ணம்

துவக்கத்தில் இதை ஒரு மோடி எதிர்ப்பாகப் பார்த்து எதிர்த்தவர்கள், பின்னர் முஸ்லிம்களின் தொடர் போராட்டங்களால் பலர் அமைதியாகி உள்ளனர்.

குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறைந்த சதவீதமாக உள்ள போதே முஸ்லிம்கள் இது போல நடந்தால், குடியுரிமை சட்டம் இல்லையென்பதால், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நடக்கும் என்று ஒரு சராசரி இந்து யோசிக்கிறார், யோசிப்பார், யோசிக்க வைக்கப்படுகிறார்.

பாஜக க்கு சாதகம்

இது பாஜக க்கு தான் சாதகமாக மாறும்.

பாஜகவை ஆதரிக்கவில்லையென்றால், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற எண்ணத்துக்கு வருவார்கள், இது இயல்பு.

‘மம்தா’ போன்றவர்கள் வாக்கு வங்கிக்காகவே இச்சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். இதுவே எதிர்காலத்தில் இவர் கட்சி தோல்விடையவும் காரணமாக அமையும்.

ஏற்கனவே, வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற இதுவே காரணமாக உள்ளது. தற்போது இதை இன்னும் வலுப்படுத்துகிறார்கள்.

தமிழக முஸ்லிம்கள்

20 வருடங்களுக்கு முந்தைய தமிழக முஸ்லிம்களுக்கும் தற்போதைய முஸ்லிம்களுக்கும் ஏராளமான வித்யாசம்.

அப்போதைய தமிழக முஸ்லிம்கள், இந்துக்கள் எந்தப் பாகுபாடும் காட்டாதவர்கள். மதங்கள் வேறு என்றாலும் தமிழர்கள் என்ற புள்ளியில் ஒருங்கிணைந்து இருந்தார்கள்.

மாறிய வாழ்க்கைமுறை

முஸ்லிம்கள் வாழ்க்கை முறை தமிழக வாழ்க்கை முறையிலேயே இருந்தது ஆனால், கால மாற்றத்தில் அரபு நாடுகளுக்குச் சென்று வந்த முஸ்லிம்கள் அங்குள்ள பழக்க வழக்கங்களை இங்கும் செயல்படுத்த ஆரம்பித்தனர்.

இது தமிழகத்துக்குப் புதிது.

வஹாபியிசம் வந்த பிறகு ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது. இங்குள்ள மதத்தலைவர்கள் இதை மேலும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்று வருகின்றனர்.

இதனால் இந்துக்களுடன் முன்பு இருந்த நெருக்கம் குறைந்து கண்ணுக்குத் தெரியாத இடைவெளி அதிகரித்து வருகிறது.

இது நிச்சயம் தமிழ்நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல.

முஸ்லீம் போராட்டங்கள்

வடமாநிலங்களைப் போல ஒரு சிந்தனை தமிழ்நாட்டில் தற்போது வர வாய்ப்பில்லையென்றாலும், அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன.

தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் போல எந்த ஒரு தொடர்ச்சியான போராட்டமும் தமிழ்நாட்டில் முஸ்லிம்களால் நடந்தது இல்லை.

எப்பவாவது நடக்கும் ஆனால், அது அந்த நாளோடு முடிந்து விடும்.

தற்போது நடக்கும் தொடர்ச்சியான போராட்டங்கள், இந்து மக்களை எரிச்சலாக்கியுள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்தவர்கள் கூடத் தற்போது இப்போராட்டங்களைக் கண்டு குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கத் துவங்கியுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.

துவக்கத்திலேயே ஆதரித்து இருந்தால், அது வேறு விஷயம் ஆனால், முதலில் எதிர்த்துப் பின்னர், முஸ்லீம் போராட்டங்களால் ஆதரிப்பது நல்லதுக்கு அல்ல.

சமூகத்தளங்கள்

முன்பு முஸ்லிம்கள் போராட்டங்களை ஆதரித்த சராசரி இந்துக்கள் தற்போது குடியுரிமை சட்டத்தை ஆதரித்து வருகிறார்கள்.

இதை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற எந்தச் சமூகத்தளத்தின் கருத்துப்பகுதியிலும் நீங்கள் காணலாம்.

முன்பு எப்படி இருந்தது தற்போது எப்படி மாறியுள்ளது என்பதைக் காண முடியும்.

WhatsApp ல் சமீபமாகப் பகிரப்படும் தகவல்கள், முஸ்லிம்கள் தொடர் போராட்டங்கள் சராசரி மக்களைக் கோபப்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

சமூகத்தளங்கள் அல்லாத பொதுவெளியிலும் இதுபற்றிப் பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது.

முஸ்லிம்கள் போல பெரும்பான்மை இந்துக்கள் மதரீதியாகச் சிந்திப்பதில்லை என்பதை முஸ்லிம்களே ஒத்துக்கொள்வார்கள் ஆனால், இந்நிலை மாறி வருகிறது.

அதிகரிக்கும் இடைவெளி

இதனால் தமிழகத்தில் பாஜக பயனடைய முடியாது.

காரணம், இருப்பதிலேயே முட்டாள்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சியாகத் தமிழகப் பாஜக உள்ளது.

எனவே, இவர்கள் இதை வைத்து ஓட்டெல்லாம் பெற முடியாது, அதற்கான அறிகுறியும் இல்லை.

தமிழகப் பாஜக பலன் பெற முடியாது என்றாலும், தமிழக முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாது.

வங்கிக்கணக்கில் பணத்தை எடுத்த முஸ்லிம்கள்

குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி ‘தேரிழந்தூர்’ கிராம இந்தியன் வங்கிக் கிளையில் உள்ள தங்கள் பணத்தை முஸ்லிம்கள் எடுத்துள்ளனர்.

பின்னர் மேலிடத்து அழுத்தம் காரணமாக, மேலாளர் மற்றும் ஊழியர்கள் ஜமாத்தார்களிடம் வந்து பேசிச் சமாதானப்படுத்தியுள்ளனர்.

இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ‘முஸ்லீம் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள்’ என்று கூறும் மதரீதியான கருத்துக்குச் சற்றும் குறைந்தது அல்ல இவர்கள் செய்தது.

இவர்களின் செயல் பலரை அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கும். இதனுடைய தீவிரம் புரிந்து தான் செய்கிறார்களா? இல்லை புரியாமல் செய்கிறார்களா என்பதே புரியவில்லை.

இது போன்ற செயல்கள் எல்லாம் தற்போதைய சமூகத்தள, WhatsApp காலத்தில் எது மாதிரி மக்களிடையே எடுத்துச்செல்லப்படும் என்பது புரியாதா?

அனைத்துக்கும் உணர்ச்சிவசப்படும் காலத்தில் இருக்கும் மக்களிடையே இது போன்ற செயல்கள் வெறுப்புணர்வையே கொண்டு வரும்.

இப்பணத்தை எடுத்து எவ்வளவு நாட்கள் இப்படியே தொடர முடியும்?

எதிர்காலம் மின்னணு காலம், பணத்தின் பயன்பாடு குறைந்து எல்லாமே மின்னணு பரிவர்த்தனை ஆகி விடும்.

வங்கி இல்லையென்றால் நம்மால் வாழ்க்கையே நடத்த முடியாத நிலை தான் உள்ளது. அப்படி இருக்கையில் இது போலச் செயல்கள் அறிவுப்பூர்வமானதா?

அரசியல் கட்சிகள், அமைப்புகளின் சுய இலாபம்

தமிழகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் தங்கள் சுயலாபத்துக்காக முஸ்லீம் மக்களைத் தூண்டி வருகிறார்கள்.

இதைப்புரிந்து கொள்ளாமல் குடியுரிமைச் சட்டம் எதிர்த்துத் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவது யாருக்குமே நல்லதல்ல.

நாளை பிரச்னையானால் அதையும் அவர்கள் இலாபத்துக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.

NPR (National Population Register) க்கும் இதே போல எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

ஒரு நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எந்த வகையில் சரி?

ஆதார்

‘ஆதார்’ வந்த போது எல்லோரும் கண்டபடி விமர்சித்தார்கள் ஆனால், தற்போது ஆதாரால் எவ்வளவு சேமிக்கப்பட்டுள்ளது.

முகவரி, இறப்பு, பிறப்புச் சான்றிதழ் உட்பட அரசுச் சேவைகளை எவ்வாறு எளிதாகப் பெற முடிகிறது என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.

இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் எதற்குமே துவக்கம் தேவைப்படுகிறது. முடியாது, முடியாது என்று அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தால், எதையுமே செயல்படுத்த முடியாது.

உச்சநீதிமன்றம் கூறியது போல எவருக்கும் தன் எதிர்ப்பைப் பதிவு செய்ய உரிமையுள்ளது ஆனால், உச்சநீதிமன்றம் சட்டத்தை அங்கீகரித்த பிறகும் தொடர்ச்சியான போராட்டங்களைச் செய்து கொண்டு இருப்பது சரியல்ல.

தொடர்ச்சியான போராட்டங்கள், மோசமான விளைவுகளையே கொண்டு வரும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழக பாஜக ஏன் வெற்றி பெற முடியவில்லை?

ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ]

https://www.facebook.com/giriblog

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. குடியுரிமை சட்டம் ஆஸாமில் உள்ளவர்களுக்காக கொண்டுவரப்பட்டது என்றால் ஏன் அதை ஆசாமிற்கும் மட்டுமே பொருந்தும் என்று சட்டத்தில் குறிப்பிடவில்லை? ஏன் முஸ்லிம்களுக்கு குடியுரிமை நிராகரிப்பு வெளிப்படையாக சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது?சட்டம் என்பதுஅனைவருக்கும் பொது என்று சொல்லியே ஓரு பிரிவினரை தாழ்த்துவது ஏன்? தலைவர் எப்படி அப்படியே நீங்களும் என்று நிரூபித்து விட்டீர்கள். 
  கேட்பது எல்லாம் ஒரு திருத்தமே. மூன்று தேசங்களை குறிப்பிட்டு அதில் வாழும் இந்து, சமணம், புத்தம், கிறிஸ்துவம் சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற தகுதி குறிப்பது நீக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டவர் எவராயினும் அவருக்கு குடியுரிமை வசங்களாம் என்பதே. மத அடிப்படை ஏன்? Jayakumar

 2. 1. supreme court DIDN’T validated it, haven’t started hearing on this matter.
  2. there is something called “CONSTITUTION”. Does it matter? That’s the question.
  3. Agree on vahabiyisam… the export from saudi is more harm to us… coincidentally good for bjp.
  4. on npr, hindu ram’s view is right… he gets it correct.
  npr alone is harmless, but combo with nrc is lethal.

  you do great work in writing on various topics…a delight to read.
  but when comes to social and constitutional issues like this or neet,
  you need little more depth.
  coincidentally for thalaivar as well (no pun intended) 🙂

 3. கிரி நீங்கள் உங்க தலைவர் போல அரைவேக்காடாய் சிந்திக்க வேண்டாம், இதர மத மக்களுக்கு குடியுரிமை கொடுத்தாள் மக்கள் தொகை விகிதத்தில் பாதிப்பு ஏற்படுத்தாத? முஸ்லிம்களுக்கு குடுத்த மட்டும் விகிதாச்சார பிரச்சினை வருமா? ரஜினி ரசிகர்கன் என்னமா சிந்திக்கிறாம்ப?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here