T20 உலகக்கோப்பை 2024 | நெகிழ்ச்சி தருணங்கள்

1
T20 உலகக்கோப்பை 2024

T20 உலகக்கோப்பை 2024 சுவாரசியமான பல நிகழ்வுகளை அளித்துள்ளது.

T20 உலகக்கோப்பை 2024

உலகக்கோப்பை போட்டிகள் துவங்கிய போது எந்த ஆர்வமும் இல்லை, பாகிஸ்தானுடன் விளையாடிய போதும் ஆர்வம் வரவில்லை. Image Credit

எந்தப்போட்டியும் பார்க்கவில்லை. முதன் முதலாக ஆர்வம் வந்தது, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய போது தான்.

ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு தேர்வானதையே அவர்கள் நாட்டில் இறுதிப்போட்டியை வென்றது போலக் கொண்டாடினார்கள் ஆனால், மகிழ்ச்சி நீடிக்காமல் தென் ஆப்ரிக்காவுடன் பரிதாபமாகத் தோல்வியடைந்தார்கள்.

ஆப்கானிஸ்தான் யாருடன் விளையாடினாலும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு. அதே போல இந்தியா யாருடன் விளையாடினாலும் ஆப்கானிஸ்தான் ஆதரவு.

இரு நாடுகளின் ரசிகர்களுக்கும் அப்படியொரு நட்பு இருந்தது. இதில் யார் வெற்றி பெற்றாலும் அழுது கொண்டு இருந்தது பாகிஸ்தான் 😀 .

தென் ஆப்பிரிக்கா

இவர்களுக்கும் உலகக்கோப்பைக்கும் ராசியே இல்லை, ரொம்ப பாவம்.

இந்தியா 16 வது ஓவர் வரை தோற்பது போல இருந்ததால், ஆட்டத்தையே பார்க்கவில்லை ஆனாலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தாலும் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன்.

என்னைப்போலவே பலரும் நினைத்து இருப்பார்கள். யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி என்ற நிலை இப்போட்டியிலேயே வந்தது.

தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தால், கொஞ்சம் வருத்தம் இருக்குமே தவிர, நிச்சயம் பொறாமை, கோபம், எரிச்சல் இருக்காது.

இதே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை வெற்றி பெற்று இருந்தால், அவர்களைச் சமூக வலைத்தளத்தில் இந்தியர்கள் ட்ரோல் செய்து நொறுக்கியிருப்பார்கள்.

ஆனால், தென் ஆப்பிரிக்கா அணியினரை யாருமே கிண்டல் செய்யவில்லை என்பதே இந்தியர்கள் எந்த அளவுக்கு அன்பு, மரியாதை வைத்துள்ளனர் என்பதை அறியலாம்.

போட்டி துளிகள்

மேற்கூறிய நிகழ்வு மட்டுமல்ல, பலவகைகளில் இப்போட்டி நேர்மறையாக இருந்தது.

 • எந்தப் போட்டியிலும் இல்லாத அளவுக்குப் பல வீரர்களும் அழுது விட்டனர்.
 • வெற்றி பெற்றதும் ஆக்ரோஷமான முறையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை.
 • பலரும் உணர்ச்சிவசப்பட்டு இருந்தனர். கோலியால் ரோஹித்திடம் பேச முடியவில்லை.
 • மைதானத்தில் படுத்துத் தனது மன அழுத்தத்தை ரோஹித் இறக்கினார்.
 • கொண்டாட்டத்தின் இடையே தென் ஆப்பிரிக்கா வீரருக்கு அருகில் அமர்ந்து ரிஷப் பண்ட் ஆறுதல் கூறினார்.
 • டிராவிட் ஆர்ப்பரித்தது கிடையாது ஆனால், கோப்பையைக் கையில் வாங்கும்வரை அமைதியாக இருந்தவர், வாங்கிய பிறகு ஆரவாரமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
 • பதவியை விட்டு விலகும் போது ட்ராவிடுக்கு சிறப்பான வெற்றி.
 • டிராவிட்டைத் தூக்கி போட்டு விளையாட, கூச்சப்பட்டு மறுத்தும் விடாமல், அனைவரும் டிராவிடை மேலே தூக்கி வீசிப்பிடித்தது பலரையும் கவர்ந்தது.
 • இயந்திர மனிதன் போல ரோஹித் நடந்து வந்து கோப்பையை வாங்கியது உலகளவில் வைரலானது.
 • ரோஹித், கோலி, ஜடேஜா சிறப்பான T20 ஓய்வு அறிவிப்பு.
 • IPL ல் மும்பை அணியைச் சரிவர நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு, தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை என்று இருந்த ஹர்திக் யாருமே நம்ப முடியாத பங்களிப்பை வழங்கினார்.
 • பும்ராவின் அபாரமான பந்து வீச்சும், சூர்யகுமாரின் அற்புதமான கேட்சும் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.
 • இதில் குறிப்பிட்டு எவரையும் கூற முடியாது காரணம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
 • சரிவர விளையாடாத கோலி, முக்கியமான இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடினார்.
 • கோலி சரிவர விளையாட மாட்டேங்குறாரே என்று ரோஹித்திடம் கேட்டதற்கு, ‘இறுதிப்போட்டிக்காகச் சேமித்து வைத்து இருக்கலாம்‘ என்று கூறினார்.
 • ரோஹித் வாய் முகூர்த்தம் பலித்து அதே போல கோலி சிறப்பாக விளையாடினார்.
 • தென் ஆப்பிரிக்கா அணியினர் பேருந்தில் கிளம்பும் போது இந்திய ரசிகர்கள், வீரர்களைப் பாராட்டிக் கோஷம் எழுப்பியது வைரலானது.

அரசியல்

இந்திய அணி தோற்க வேண்டும் என்று மிக எதிர்பார்ப்புடன் இடது சாரியினர் இருந்தனர். தோற்றால், மோடி அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கூற மீம் தயார் செய்து வைத்து இருந்தனர்.

மோடி எதிர்ப்பு என்பது தற்போது இந்தியாவே தோற்க வேண்டும், உலகரங்கில் இந்தியா அசிங்கப்பட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு வன்மமாகச் சென்று கொண்டுள்ளது.

என்ன தான் ஒருவர் மீது வெறுப்பு இருந்தாலும், தன் சொந்த நாட்டு அணியினரே தோற்க வேண்டும் என்று நினைப்பது மிகக்கேவலமான கேடுகெட்ட எண்ணமே!

ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் இந்தியா அபார வெற்றி பெற்று அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டது.

இது போன்ற உணர்ச்சிகரமான, பெரியளவில் ஆர்ப்பாட்டமில்லாத, சமூகத்தளங்களில் எதிரணியை ட்ரோல் செய்யாத, நேர்மறையான போட்டியை இதுவரை கண்டதில்லை.

ஒட்டு மொத்தமாக மிகத்திருப்தியான போட்டியாக அமைந்தது. இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

 1. கிரி.. கிரிக்கெட் மீது எனக்கு உள்ள ஆர்வம் உங்களுக்கு தெரியும்.. ஆனால் T 20 போட்டிகளை மட்டும் வைத்து ஒரு வீரரின் திறனையோ / அணியின் திறனையோ மதீப்பீடு செய்ய முடியாது.. ஆனால் இந்தியாவின் இந்த வெற்றி உண்மையில் தரமான மிக சிறப்பான வெற்றி..கிரிக்கெட் ரசிகர்கள் பல வருடங்களுக்கு நினைவில் வைத்து கொள்ள கூடிய அளவிற்கான இறுதிப்போட்டி இது.

  இந்தியாவின் முந்தைய சில போட்டிகளின் தோல்விகளுக்கும் கணக்கை நேர் செய்தது இன்னும் சிறப்பு.. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, குறிப்பாக இங்கிலாந்து (ஒரு வேலை மழை வந்து இந்தியா உள்ளே வந்து இருந்தாலும், காலத்திற்கும் இதையே சொல்லி கொண்டு இருப்பார்கள்). இந்தியாவின் மீது மேற்க்கு நாடுகளுக்கு என்னதான் பிரச்சனையோ தெரியவில்லை.. நமது வெற்றியை அவர்களால் முற்றிலும் ஏற்று கொள்ளமுடியவில்லை.. குறிப்பாக வர்ணனையாளர்களின் பேச்சிலே தெளிவாக இது தெரியும்..

  வீரராக கோஹ்லியை பிடிக்கும், ஆனால் அவரின் கேப்டன்சி சுத்தமாக பிடிக்காது.. அந்த வகையில் ரோஹித் சர்மா தன்னை மெருகேற்றி கொண்டார்.. இந்த வெற்றி ஒட்டு மொத்த அணிக்கான வெற்றி.. இந்த வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்க வேண்டிய ஒரு வெற்றி.. காரணம் நிறைய நாக் அவுட்இல் இந்தியா தோல்வி அடைந்து விட்டது..

  குறிப்பாக இறுதி போட்டிகளில்.. ஒரு கட்டத்தில் போட்டி இந்தியாவின் கையை விட்டு சென்ற போது குல்த்தீப்ன் கேட்ச், பும்ராவின் ஓவர், சிங்கின் ஓவர், சூரியாவின் கேட்ச், பாண்டியாவின் ஓவர், ரோஹித் பதட்டம் இல்லாமல் அணியை வழி நடத்தியது என பல அம்சங்கள் வெற்றிக்கு பின்னால் இருந்தது.. டிராவிட் க்கு இது உண்மையில் மகிழ்வான தருணம் இது..

  ரவி சாஸ்திரி / கோஹ்லியின் இணக்கத்தை கங்குலி உடைக்க முடிவு செய்து டிராவிட்டை பயிற்சியாளராக தொடர நியமித்தார்.. இவர் பயிற்சியாளராக இருந்த மூன்று ஆண்டுகளுமே மிகவும் சோதனையான காலகட்டம்..50 ஓவர் போட்டி உலக்கோப்பை தோல்விக்கு பிறகு டிராவிட் தன் பதவியை துறக்க முடிவு செய்த போது, அவரை T 20 உலகக்கோப்பை வரை தொடர கேட்டு கொண்டது ரோஹித் சர்மா.. இதை டிராவிட் வெற்றி பெற்ற பிறகு குறிப்பிட்டு இருந்தார்.. விளையாட்டில் எப்போதும் அரசியல் இல்லாமல் இருந்தால் நாம் இன்னும் பல உயரங்களை தொடமுடியும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here