Home அரசியல் நடராஜரை இழிவுபடுத்திய திராவிடன் ஸ்டாக்குகள்

நடராஜரை இழிவுபடுத்திய திராவிடன் ஸ்டாக்குகள்

5
திராவிடன் ஸ்டாக்குகள்

YouTube சேனலில் ஒரு திராவிடன் ஸ்டாக், கடவுள் நடராஜரை இழிவுபடுத்தியது சர்ச்சையாகியுள்ளது ஆனால், இது குறித்து ஊடகங்களோ தமிழக அரசோ கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளவில்லை. Image Credit

மதச்சார்பின்மை

எவனாவது மதச்சார்பின்மைனு தூக்கிட்டு வந்தால் இருக்குற கடுப்புல எல்லோரையும் போட்டு வெளுக்கணும்னு தாறுமாறாகக் கோபம் வருகிறது.

இவன் பேசி ஒரு வாரம் ஆகுது, பலர் புகாரும் கொடுத்து விட்டார்கள் ஆனால், இன்று வரை தமிழக அரசிடமிருந்து எந்த நடவடிக்கையுமில்லை.

இதே வேறொரு மதக்கடவுளை இவ்வாறு பேசிவிட்டு அரை நாள் இருந்து விட முடியுமா?! இல்ல இருக்கத்தான் விட்டுடுவாங்களா!

இன்றைக்கு ஒண்ணுமே நடக்காத மாதிரி வேற செய்திகளையே தொடர்ந்து ஒளிபரப்பும் ஊடகங்களை எவ்வளவு தான் காறித்துப்புவது.

மற்ற மதத்தினர் விழாக்களுக்கு முதல் ஆளாகச்சென்று வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின் இது போன்ற செயலுக்குச் சிறு கண்டனம் கூட இல்லை.

ஸ்டாலின் கூடவே நின்று நிழற்படம் எடுத்து இருக்கான். இந்தத் தைரியத்தில் எவன் என்ன செய்ய முடியும்னு தெனாவெட்டா திரிந்துட்டு பேசிட்டு இருக்கான்.

ஏன்டா இப்படிச் செய்தேன்னு கேட்டால், எதோ புத்தகத்தில் எழுதி இருந்ததாம் அதனால் அதை வைத்துப் பேசினானாம். எப்படி இருக்கு பாருங்க!

அப்படின்னா வேறொரு மதத்தை / கடவுளைப் பற்றி யாரோ எதையோ எழுதினார்கள் என்று அதையும் கிண்டலடித்து காணொளியாக வெளியிட்டால் இந்த ஊடகங்களும் அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்குமா?

இதற்கும் முட்டுக்கொடுத்து, மற்றவர்கள் இப்படி எழுதி இருக்கிறார்கள் என்று மேலும் சில தகவல்களைத் திராவிடன் ஸ்டாக்குகள் கூறி வருகிறார்கள்.

வேறொரு மதத்தை / கடவுளை விமர்சித்தால் வாயை உடைத்து விடுவார்கள் என்று தெரியும் அதனால், இந்துக்கள் கடவுளை விமர்சித்தால் கேட்க நாதியில்லை என்ற திமிரே இது போல நடக்கக் காரணம்.

இவனுகளைச் சொல்லித்தவறில்லை காரணம், இந்து மதத்தை இழிவுபடுத்தி என்ன பேசினாலும் அதற்கு மறைமுக ஆதரவு கொடுக்கும் அரசு இருக்கும் வரை இது போன்ற கழிசடைகள் இப்படித்தான் பேசுவார்கள்.

இந்துக்கள்

எனக்கு இவர்கள் மேல் உள்ள கோவத்தை விட எருமை மேல மழை பேஞ்ச மாதிரி சொரணையே இல்லாமல் இருக்கும் இந்துக்கள் மேலே தான்.

இதற்கு முட்டுக்கொடுக்கும் திமுகவில் இருக்கும் இந்துக்கள் மேல அதை விடக் காண்டாகுது. இருக்குற கடுப்பில் கண்டபடி எழுதி விடுவேன் என்பதால் தவிர்க்கிறேன்.

கண்டுக்காம இருப்பவர்களைக் கூடக் கடந்து செல்ல முடிகிறது ஆனால், இதையும் நியாயப்படுத்திச் சிலர் பேசுகிறார்கள்.

என்னங்கடா இப்படிப் பேசுறீங்கன்னு கேட்டால், செக்குலர் / கருத்துரிமை என்று கூறுகிறார்கள். வர கோபத்துக்கு…

இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், மொத்த ஊடகங்களும், அரசும் வாயை மூடி எதுவுமே நடக்காத மாதிரி நடந்து கொள்கிறார்கள் ஆனால், விமர்சிப்பதற்கு மட்டும் வரிசைகட்டி நிற்கிறார்கள்.

என்ன நடந்தாலும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் சாப்பிட்டுட்டு இந்துக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது இவர்களுக்கு வசதியாகி விட்டது.

இந்து மதக் கடவுள்களை அநாகரீகமாக விமர்சிப்பவர்களைச் சட்டரீதியாகச் சுளுக்கெடுத்தால் எவனும் பேசத் துணிய மாட்டான் ஆனால், திமுக ஆட்சியில் இருக்கும் வரை நடக்காது.

அதுவரை இதுபோன்ற திராவிடன் ஸ்டாக்குகள் சில்லறைகள் பேச்சைச் சகித்துக்கொண்டு இருக்க வேண்டியது சொரணையுள்ள இந்துக்கள் தலையெழுத்து.

தொடர்புடைய கட்டுரை

இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து?

5 COMMENTS

 1. திமுகவிற்கு ஓட்டு போட்ட முட்டாள் மக்களுக்கு எப்போது தான் புத்தி வருமோ. திமுக வந்துவிட்டது மின்வெட்டும் வந்துவிட்டது என்று தினமும் புலம்பும் தமிழக மக்கள் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட்டனர். . இன்னும் நிறைய இருக்கிறது. ஓராண்டு தானே ஆகிறது. ஆனால் ஒன்று நிச்சயம் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும் அது உறுதி. ஒரு வருடத்திலேயே இவ்வளவு அதிருப்தியை மக்களிடம் இந்த விடியாத அரசு சம்பாதித்து விட்டது. 2024 பாராளுமன்ற தேர்தலில் திமுக 40/40 இழந்தால் தான் செருப்படி கொடுத்தா போல இருக்கும். மக்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தல் வாக்கு தான். அன்று மட்டும் தான் மக்கள் கோபத்தை காட்ட முடியும். இனியாவது தமிழக மக்கள் திருந்த கடவுளை வேண்டுகிறேன். அதிமுக ஆட்சி சிறந்த ஆட்சி என்பது திமுக ஆட்சியை பார்த்தே மக்கள் புரிந்து கொண்டனர். ஆனால் என்ன பயன். இன்னும் 4 வருடம் பொறுத்துக்கொண்டு தான் ஆகவேண்டும்

 2. உங்கள் கருத்துடன் எனக்கு நூற்றுக்கு நூறு உடன்பாடு கிரி. கொஞ்சம் கூட சொரணை இல்லாத இந்த எருமை மாட்டு இந்துக்கள் உள்ள வரையில் இந்த விடியாத அரசின் கொடுமைகள் தொடரும். ஸ்டாலினின் கள்ள மௌனம் கண்டிக்கத் தக்கது. அமைதி மதத்தின் மீது இது மாதிரி ஏதாவது சொல்லி இருந்தால் கையை காலை வெட்டி இருப்பார்கள். அந்த நடராஜர் தான் இந்த திராவிட கும்பலில் இருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

 3. நம் இன மக்களையும் அவர்களைப் போல சூடு சொரனையற்றவர் களாகவும் பணத்திற்காக எதையும் தியாகம் செய்ய பழக்கி விட்டார்கள். இதிலிருந்து மீள்வது இப்போது நடக்கும் என்று தோன்றவில்லை.

 4. @ஹரிஷ்

  “நிச்சயம் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும் அது உறுதி. ஒரு வருடத்திலேயே இவ்வளவு அதிருப்தியை மக்களிடம் இந்த விடியாத அரசு சம்பாதித்து விட்டது. 2024 பாராளுமன்ற தேர்தலில் திமுக 40/40 இழந்தால் தான் செருப்படி கொடுத்தா போல இருக்கும். ”

  அதிமுக பாஜக கூட்டணி இல்லாமல் திமுகவை வீழ்த்துவது கடினம். இரு கட்சிகளும் தனித்து நின்றால் வாக்கு பிரிந்து விடும்.

  @ஸ்ரீநிவாசன் முதல் முறையாக நீங்கள் கோபப்பட்டு கருத்திடுவதை பார்க்கிறேன்.. கிட்டத்தட்ட 13 / 14 வருடங்களுக்குப் பிறகு.

  @பத்மநாபன் வெ

  காலம் தான் பதில் கூற வேண்டும். மக்கள் வாக்களிப்பதால் தான் தெனாவெட்டாக நடந்து கொள்கிறார்கள். மக்கள் மாறும் போது இவர்களும் மாறுவார்கள்.

  அதுவரை இந்த கொடுமையை சகித்துத்தான் ஆக வேண்டும்.

 5. கோவமா வருது கிரி. அதுலயும் நம்ம இந்துக்களே நம்ம மத பழக்க வழக்கங்களை பகுத்தறிவு புண்ணாக்குங்கற பேர்ல எதிர்க்குறத பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு கிரி. நம்ம மதத்தை அவ்ளோ சீக்கிரமா அழிச்சிற முடியாது. ஆனா இவனுங்க பெரியார் மண் , மூ* னு சொல்லிக்கிட்டு திரியாரத தான் ஏத்துக்க முடியல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here