தென் மாநிலங்களை ஒப்பிடும் போது வட இந்தியர்கள் முரட்டுத்தனமாகவும், எதையும் ஆவேசமாகக் கையாள்பவர்களாகவும் உள்ளனர். Image Cedit
வட இந்தியர்கள்
இந்தியாவில் வட இந்தியா ஒரு பகுதி என்றாலும், வட கிழக்கு மாநிலங்கள் தவிர்த்துத் தென் மாநில மக்களுக்கு மஹாராஷ்ட்ரா உட்பட அனைவருமே வட இந்தியர்களே.
அப்போதைய வட இந்தியர்களுக்குத் தென் இந்தியர்கள் என்றால் மதராஸி என்பது போல.
பெரும்பான்மையானோர் இந்தி பேசுவதாலும், இந்தி பேசினால் வட இந்தியர்கள் என்று இயல்பாகவே தமிழக மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது.
இருப்பினும், இவ்வாறு கூறப்படுகிறவர்கள் அனைவருமே வட கிழக்கு மாநிலங்கள் தவிர்த்துக் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் வருகிறார்கள்.
இக்கட்டுரையும் இதை வைத்தே எழுதப்பட்டுள்ளது.
போர்
மங்கோலிய மன்னன் தைமூர், முகலாயர் படையெடுப்பு நடந்த காலத்தில் போர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது வட மாநிலங்கள் தான்.
தமிழகம் கடைக்கோடியிலிருந்ததால், தூரம் காரணமாக படைகளைத் திரட்டி முகலாயர் இங்கே வராததால் பாதிப்பு குறைவு. இங்கேயும் நடந்துள்ளது ஆனால், வட மாநிலங்களில் நடந்த அளவுக்குத் தொடர்ச்சியாக இல்லை.
குறிப்பாகத் தென் மாநிலங்களில் கர்நாடகா, ஒருங்கிணைந்த ஆந்திரா, போர்களால், முகலாய ஆட்சியால் பாதிக்கப்பட்டது.
எனவே, தொடர்ச்சியாகப் போர்கள் போன்றவை அதிகம் என்பதாலும், பல தலைமுறைகள் இது போலச் சண்டைகளிலேயே தொடர்ந்ததால், இயல்பாகவே மூர்க்கத்தனம் அவர்களிடையே வந்து விட்டது.
இளம் வயது போல முதலே ஒருவர் என்ன மாதிரியான சூழ்நிலையில் வளர்கிறார், எதைப்பார்த்து வளர்கிறார் என்பதைப் பொறுத்தே ஒருவரின் குணம் அமைகிறது.
அது பல தலைமுறைகளாகத் தொடரும் போது அது ஜீன்லையே இணைந்து விடுகிறது.
மதச்சண்டைகள்
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மேற்கூறிய காரணங்களால் இந்து முஸ்லீம் இரு தரப்பிலும் எண்ணிக்கை காரணமாகப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தன.
முகலாயர் ஆட்சியில் பலர் மதமாற்றம் செய்யப்பட்டதே, எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம். அது தலைமுறை கடக்கும் போது கட்டாயத்திலிருந்து இயல்பாகி விடுகிறது.
எனவே தான் தமிழகத்தை ஒப்பிடும் போது சுதந்திரத்துக்கு முன்பு இருந்தே இந்து முஸ்லீம் சண்டைகள் வட மாநிலங்களில் மிகப்பெரியளவில் நடந்தன.
பிரிவினைக்குப் பிறகு இடம் பெயர்வால் எண்ணிக்கை குறைந்ததால், சண்டைகள் குறைந்தது ஆனாலும் வன்முறை தொடர்ந்து கொண்டே உள்ளது.
தற்போது திரும்ப எண்ணிக்கை காரணமாக அதிகரித்து வருகிறது.
சுதந்திரத்துக்குப் பின்
தற்போதைய இந்து முஸ்லீம் பிரச்சனைகளை விடச் சுதந்திரத்துக்கு முன்னர் மிகப்பெரிய கலவரங்கள், சண்டைகள், வன்முறைகள் நடந்துள்ளது.
சுதந்திரத்துக்குப் பின்னரும் பிற்போக்கு மாநிலங்களாகவே இருந்தன. சாதிகள், அரசியல், அதிகாரங்கள் ஆகியவை வட மாநிலங்களை முன்னேற்ற விடவில்லை.
ஆதிக்கச் சாதிகளால் நடத்தப்பட்ட அடக்குமுறைகள், விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை அம்மக்களை ஒரே நிலையில் சிந்திக்க விடாமல் இருக்க வைத்தன.
இதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் இவர்களை அடிமைகளாகவே வைத்து இருந்ததாலும், சாதி ரீதியாக ஒடுக்கியதாலும், வளர விடாததாலும் நாகரீகம் உணராதவர்களாகவே இருந்தனர்.
அரசியல்வாதிகளும் மக்களை விழிப்புணர்வு அடைய விடாமல், அவர்களுக்கிடையே இருந்த பிரச்சனைகளை வைத்தே பொருளாதார ரீதியாக வளர விடாமல் பார்த்துக்கொண்டனர்.
எனவே, அவர்களுக்கு வளர்ச்சி, உரிமை, நாகரீகம், வாழ்க்கை மேம்பாடு, அடிப்படை வசதி போன்றவற்றில் எந்த விழிப்புணர்வும் இல்லை.
இது தான் வாழ்க்கை என்றே பழகி விட்டார்கள்.
பொருளாதார வளர்ச்சி முற்றிலும் இல்லை. நகரங்களிலிருந்தவர்கள் மட்டும் முன்னேற்றம் அடைந்து இருந்தார்கள்.
தலைமுறை மாற்றம்
முன்னரே குறிப்பிட்டது போலப் பல தலைமுறையாகத் தொடர்ந்த ஜீன் காரணமாக இயல்பாகவே வட மாநிலத்தவரிடையே முரட்டுத்தனம் உள்ளது.
கால மாற்றத்தில் மாறி வருகிறது என்றாலும், இவை முழுவதும் மாற பல தலைமுறைகளாகும். அதற்கு முக்கியமாக இவர்களின் தனி நபர் வருமானம் உயர வேண்டும், ஏற்றத்தாழ்வுகள் குறைய வேண்டும்.
மதச்சண்டைகள் அதிகளவில் அங்கு நடப்பதற்கு அங்குள்ள சூழ்நிலையும், வாய்ப்புகளுமே காரணம். எனவே, இவற்றைத் தமிழகத்துடன் ஒப்பிட முடியாது.
அங்குள்ள பிரச்சனைகளில் தமிழகம் 5% கூட இருக்காது. காரணம், இங்குள்ள மக்களின் எண்ணங்கள், எண்ணிக்கை, வளர்ந்த சூழ்நிலை ஆகியவையே காரணம்.
இதைப்புரிந்து கொள்ளாமல் வட மாநிலத்தவரைத் திட்டிக்கொண்டு இருப்பதால் பயனில்லை. இங்கும் சூழ்நிலை மாறும் போதே அங்குள்ளவர்கள் சூழ்நிலை புரியும்.
நடவடிக்கைகள்
நம் வாழ்க்கையில் நடப்பதை வைத்தே எளிதாகப் புரிந்து கொள்ளலாம், இச்சூழ்நிலையை பெரும்பாலும் சந்தித்து இருப்போம்.
ஒரு பூங்காவில் தமிழ் குழந்தை விளையாடுவதற்கும், வட மாநில குழந்தை விளையாடுவதற்கும் அதற்கு அவரவர் பெற்றோர் நடந்து கொள்ளும் நடவடிக்கைகளைப் பார்த்தாலே வித்தியாசம் புரியும்.
வட மாநில குழந்தைகள் தைரியமாகவும், முரட்டுத்தனமாகவும் இருப்பார்கள் ஆனால், தமிழக குழந்தைகள் பயந்த, அமைதி சுபாவத்துடன் இருப்பார்கள்.
தங்கள் குழந்தை என்ன செய்தாலும் வட மாநில பெற்றோர் கொஞ்சக் கூடக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் ஆனால், அதே நம் குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோர் கண்டிப்பார்கள். இது தான் வித்தியாசம்.
இது பெரியவர்கள் ஆன பிறகும் மாறுவதில்லை. சிறு வயதிலிருந்தே அவர்கள் ஜீனுடன் வருகிறது, சூழ்நிலையால் வளர்க்கப்படுகிறது.
எடுத்துக்காட்டுக்கு, ஐடி பணிகளில் வட மாநிலத்தவர் மேலாளராகவும், தமிழர்கள் அவர்களின் கீழ் பணிபுரிபவர்களாகவும் பல இடங்களில் இருப்பார்கள்.
வட இந்தியர்களிடம் ஒரு தலைமைப்பண்பு, ஆளுமை இருக்கும்.
வெளிநாடுகளிலும் மாற்றமில்லை
வெளிநாடுகளிலும் தமிழர்கள் அமைதியாக இருப்பார்கள் ஆனால், வட மாநிலத்தவர் தனியாக இருந்தாலும், கும்பலாக இருந்தாலும் சத்தமாக இருக்கும்.
அவர்களின் நடவடிக்கையே முரட்டுத்தனமாக இருக்கும், பேச்சு உட்பட. இந்த வித்தியாசத்தை வெளிநாட்டு டாக்சி ஓட்டுநரிடம் கேட்டாலே கூறுவார்கள்.
மேற்கூறியவர்கள் நன்கு படித்தவர்கள், நாகரீகம் அறிந்தவர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனாலும், அவர்களின் மாறாத அடிப்படை குணம் இது.
இதனாலையே இவ்வாறு நடந்து கொள்பவர்களைப் பிடிக்காது.
தொடர்ந்து புத்தகங்கள் படிப்பதாலும், செய்திகளைப் படிப்பதாலும் அவர்களின் உளவியல் சிக்கலை, புறச்சூழலை உணர முடிகிறது.
ஒவ்வொரு மாநில மக்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும், எண்ணங்களும் இடத்துக்கு இடம் மாறுபடும். அதில் வட மாநிலத்தவர் ஒருவகை.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. நீங்கள் குறிப்பிட்ட பல விஷியங்களை யோசித்து பார்க்கும் போது இந்த சூழல் தற்போது மாறுவதற்கான காரணிகள் மிக குறைவு.. மாறாக காலங்கள் செல்ல செல்ல பிரச்சனையின் வீரியம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது..
மிர்சாபூர் வெப் சீரிஸ் பார்க்கும் போது தான் அந்த மாநிலத்தின் முழுமையான வளர்ச்சியும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சியும் புரிகிறது. அந்த சுழலில் வாழும் மக்களை பார்க்கும் போது, நாமெல்லாம் உண்மையில் அதிஷ்டசாலிகள் என இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்..
சுதந்திரத்தை குறித்து இணையத்தில் முன்பு படித்தது!!!!
“இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை..
இதன் தொடர்ச்சியாக மற்றொரு கவிஞர் எழுதியது…
விடிந்தாகி விட்டது நீ தான்
இன்னும் விழிக்கவில்லை…
இதன் தொடர்ச்சியாக இன்னொரு கவிஞர்….
விடிந்தாகியும் விட்டது
விழித்தாகியும் விட்டது
இன்னும் போர்வைக்குள்
என்ன புலம்பல்?
@யாசின்
“இந்த சூழல் தற்போது மாறுவதற்கான காரணிகள் மிக குறைவு.. மாறாக காலங்கள் செல்ல செல்ல பிரச்சனையின் வீரியம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.”
உண்மை தான் யாசின்.
“மிர்சாபூர் வெப் சீரிஸ் பார்க்கும் போது தான் அந்த மாநிலத்தின் முழுமையான வளர்ச்சியும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சியும் புரிகிறது. ”
தற்போது யோகி ஆட்சிக்கு வந்த பிறகு உபி வளர்ச்சி பாதையில் செல்லத்துவங்கியுள்ளது. அதோடு குற்றங்கள் குறைந்து வருகிறது.
இன்னும் 10 வருடங்களில் வளர்ச்சியில் தமிழகத்தை மிஞ்சி விட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
“விடிந்தாகியும் விட்டது
விழித்தாகியும் விட்டது
இன்னும் போர்வைக்குள்
என்ன புலம்பல்?”
மொபைல் பார்த்துட்டு இருந்தேன் 😀