ஜெய்ஸ்ரீராம் ஞானவாபி மதுரா சர்ச்சைகள்

5
ஜெய்ஸ்ரீராம் ஞானவாபி மதுரா

ந்துக்களின் 500 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்து ஜனவரி 22 2024 ல் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. Image Credit

ராமர்

பெருமாளின் அவதாரமாக ராமர் கருதப்படுகிறார். அதோடு அவர் இருந்ததற்கான சான்றுகளும், இடங்களும் உள்ளன. எனவே, மக்கள் இதை கற்பனைக் கதாப்பாத்திரமாக எடுத்துக்கொள்ளவில்லை.

பலருக்கு ராமர் இராமாயணக் காவியமாகவும், கதையாகவும் அறியப்பட்டுள்ளது. எனக்கும், ராமர் கற்பனை கதாப்பாத்திரமாகவே இருந்துள்ளார்.

ஆனால், கற்பனை கதாபாத்திரமல்ல உண்மையாகவே இருந்துள்ளார் என்பது பல சான்றுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்காதவர்கள் பலர் இருப்பினும், நம்புபவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். எனவே, ராமர் கோவில் என்பது உணர்வுகளின் அடிப்படையில் அமைந்தது.

பாபர் மசூதி

ராமர் கோவிலை அழித்துக் கட்டியது தான் பாபர் மசூதி என்பது சான்றுகள், ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதியைக் கட்டியிருந்தாலும், அப்போது இருந்த சர்ச்சையின் காரணமாகவோ என்னவோ இம்மசூதி செயல்படாத, கைவிடப்பட்ட மசூதியாகவே இருந்துள்ளது.

பாபர் மசூதி ஒரு கைவிடப்பட்ட, யாரும் பயன்படுத்தாத மசூதி என்பதே ராமர் கோவில் திறக்கப்படும் போது வெளியான தகவல்களை வைத்தே தெரியும்.

ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்ட பாபர் மசூதியைக் கைப்பற்ற நடைபெற்ற கரசேவர்கள் போராட்டத்தில் 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இதன் பின்னர் ராமர் கோவில், பாபர் மசூதி தொடர்பாக நடைபெற்ற கலவரங்கள், விவாதங்கள் அனைவரும் அறிந்தது.

ஞானவாபி

ஞானவாபி மசூதி வழக்கில், இங்கே இருந்த சிவன் கோவில் சிதைக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது என்று தொல்லியல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தொல்லியல்துறை உறுதிப்படுத்தி இருந்தாலும், மசூதி வடிவமைப்பைப் பார்த்தாலே அது கோவிலை மாற்றி மசூதியைக் கட்டியது தெரியும்.

எதிர்க்கும் முஸ்லிம்களுக்கும் தெரியும் அதுவொரு இந்துக்கோவிலை இடித்துக் கட்டப்பபட்ட மசூதி என்று, ஆனாலும் ஈகோ காரணமாக எதிர்த்து வருகிறார்கள்.

பார்த்தாலே தெரியும் என்றாலும், சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டாலே பெற முடியும் என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

எனவே, வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முலாயம்சிங் அரசு

முன்பு ஞானவாபியில் முஸ்லிம்கள், இந்துக்கள் இருவருமே வணங்கி வந்துள்ளனர் ஆனால், முலாயம்சிங் அரசு இந்துக்களுக்குத் தடை விதித்த பிறகு முஸ்லிம்கள் மட்டுமே 30 வருடங்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.

அப்போது இருந்த உத்திரப்பிரதேச அரசுகள் இந்துக்கள் எதிர்ப்பாக இருந்ததாலும், இந்து மக்களும் எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லாததாலும் அப்படியே தொடர்ந்துள்ளது.

தற்போது ஞானவாபி தொடர்பாக வழக்கு நடக்கும் போது தான் இந்துக்கள் வணங்கக் கூடாது என்ற எந்த அதிகாரப்பூர்வத் தடையும் விதிக்கப்படவில்லையென்ற உண்மையே தெரிய வந்துள்ளது.

தற்போதுள்ள யோகி போன்ற உறுதியான தலைவர் அங்கு இல்லாதது, எதையும் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருந்தது.

ஞானவாபி மசூதி / கோவிலில் இந்துக்கள் வணங்கக் கூடாது என்று முஸ்லிம்கள் குரல் எழுப்பி வருகின்றனர், போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறி வருகின்றனர்.

இது எந்த வகையிலும் நியாயமில்லை. காரணம், நீதிமன்றம் அனுமதித்த பிறகே இந்துக்கள் வணங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

என்னதான் பார்த்தாலே கோவில் என்று தெரிந்தாலும், முறையான வழக்கைத் தொடர்ந்து, ஆதாரங்களைச் சமர்ப்பித்து சட்ட ரீதியாகப் போராடியே அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் உறுதியாக இருப்பதால், நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் இந்துக்களுக்கு ஆதரவான தீர்ப்பாகவே வரும் என்று நம்புகிறேன்.

மதுரா

கிருஷ்ணரை வணங்குபவர்களுக்கு இருக்கும் மிகப் புனிதமான இடம் மதுரா. இங்கே தற்போதும் வணங்குகிறார்கள் என்றாலும், பாதி இடம் மட்டுமே உள்ளது.

ஒரே ஒரு சுவர் மட்டும் கோவிலுக்கும் மசூதிக்கும் இடையில் உள்ளது. மதுராவும் இந்துக்களின் புனிதப் பூமி என்பதை அனைவரும் அறிவார்கள்.

கிருஷ்ணர் வாழ்ந்த இடமாகவும், அது தொடர்பான சாட்சிகளுடனான சிறை உட்பட இடங்களுடன் மதுரா உள்ளது.

ராமர், சிவன் பக்தர்கள் பெரும்பாலான சதவீதம் இந்துக்கள் மட்டுமே! ஆனால், கிருஷ்ணருக்கு உலகம் முழுக்க மாற்று மதத்தினரும் பக்தர்களாக உள்ளனர்.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா‘ இயக்கம் உலகம் முழுக்க பரவியுள்ளது. இவர்களின் இயக்கம் இந்துக்களின் எந்த இயக்கத்தையும் விடப் பலமானது.

சட்ட உதவியுடன் மதுரா மீட்கப்பட்டு கோவில் விரிவுபடுத்தப்பட முடிவு செய்யப்பட்டு நிதி உதவி கோரப்பட்டால், இதுவரை எந்தக் கோவிலுக்கும் கிடைக்காத நிதி உதவி கிடைக்கும் என்பது என் அனுமானம்.

காரணம், கிருஷ்ணருக்கான பக்தர்கள் என்பது அளவிட முடியாதது, குறிப்பாக வெளிநாட்டினர். ராமர் கோவிலுக்குச் சில நாட்களிலேயே கோவில் கட்ட ₹2000 கோடி நிதி வசூலானதை அறிந்து இருப்பீர்கள்.

சென்டிமென்ட்

முஸ்லிம்களுக்கு இல்லாத சென்டிமென்ட் இந்துக்களுக்கு இந்த இடங்களில் உள்ளது ஆனால், முஸ்லிம்களுக்கு இதுவும் ஒரு மசூதி அவ்வளவே!

இந்தியா என்பது இந்து தேசமாக இருந்தது. பின்னர் முகலாயர் படையெடுப்பு, பிரிட்டிஷ் படையெடுப்பு காரணமாக இஸ்லாம், கிறித்துவம் இந்தியாவில் வந்தது.

எனவே, இதற்கு முன் இருந்தவை அனைத்துமே கோவிலாக இருக்கும் இல்லையென்றால், புத்த விகாரமாக இருக்கும். பௌத்தமும் இந்து மதத்திலிருந்து பிரிந்ததை அறிவீர்கள்.

பிரிட்டிஷார் கோவிலைப் பெரியளவில் அழிக்கவில்லை ஆனால், மதமாற்றம் செய்தார்கள் ஆனால், முகலாயர்கள் கோவிலை அழிப்பதிலும், அழித்த இடத்தில் மசூதியைக் கட்டுவதிலும் ஆர்வம் காட்டினார்கள்.

அழித்துக் கட்ட முடியாத கோவிலை, மசூதியாக மாற்றி அமைத்துள்ளார்கள். அதிலொன்று தான் ஞானவாபி.

எனவே, முஸ்லிம்களுக்கு பாபர் மசூதி, ஞானவாபி, மதுரா ஆகியவை எந்தவித முக்கியத்துவமும் இல்லாத மசூதிகளே! மற்ற மசூதிகளுக்கு என்ன மதிப்புள்ளதோ அதே மதிப்பு தான் இவற்றுக்கும்.

ஆனால், இந்துக்களுக்கு இவை மூன்றும் புனிதமான இடங்கள் என்று ராமர் கோவிலை ஆராய்ந்த தொல்லியல் துறையை அதிகாரி KK முகமது கூறியுள்ளார்.

புரியும்படி கூற வேண்டும் என்றால், முஸ்லிம்களுக்கு மெக்கா, மதினா எப்படிப் புனிதமான இடங்களோ அது போன்ற இடங்கள் தான் ராமர் கோவில் இடம், ஞானவாபி (காசி) மற்றும் மதுரா.

எனவே தான் இன்றுவரை இந்த இடங்களைத் திரும்பப் பெற்றாக வேண்டும் என்ற இந்துக்களின் சட்டப்போராட்டம் தொடர்ந்து வருகிறது.

நிச்சயம் ஞானவாபி (காசி), மதுரா இடங்களைச் சட்டத்தின் உதவியுடன் பெறுவார்கள்.

மற்ற இடங்களிலும் இது போன்ற நிலையுள்ளது ஆனால், மற்ற இடங்களுக்கு இல்லாத முக்கியத்துவம் இந்த மூன்று இடங்களுக்கும் உள்ளது.

எனவே, இந்துக்களும் இதைப் பெறாமல் விட மாட்டார்கள்.

ஏன் முஸ்லீம் எதிர்க்கிறார்கள்?

ஈகோ மட்டுமே! வேறு எதுவும் காரணமில்லை.

என்னதான் மக்கள் நம்பிக்கை என்றாலும், ராமர் கோவில் ஆதாரங்களையாவது தொல்லியல் துறை தோண்டி எடுத்து நிரூபிக்க வேண்டியிருந்தது.

பார்த்தாலே கோவில் என்று தெரிவதை, பல வருடங்களாக மசூதியாகப் பயன்படுத்தி வந்ததாலையே அது மசூதி என்று கூறி விட முடியுமா? அதுவும் இந்துக்கள் புனிதமாக கருதும் இடங்களை.

இதில் எந்தவொரு நியாயமும் இல்லை. எனவே தான் இது ஈகோ மட்டுமே என்று கூறுகிறேன். இருப்பினும், அரசியலமைப்புச் சட்டத்தின்படியே செல்ல வேண்டியுள்ளது.

இந்தியாவிலுள்ள 90% முஸ்லிம்களின் மூதாதையர் இந்துக்களே! எனவே, நியாயமாக முஸ்லிம்களே மூன்று இடங்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும்.

சில முஸ்லிம்கள் இதை உணர்ந்துள்ளார்கள், ஆமோதிக்கிறார்கள்.

யார் என்ன எதிர்த்தாலும், ஆதரித்தாலும் சட்டம் என்ன கூறுகிறதோ அதையே பின்பற்றி ஆக வேண்டும். இது இந்துக்கள், முஸ்லிம்கள் இருவருக்குமே பொருந்தும்.

ஞானவாபி, மதுரா இடங்களும் இந்துக்களுக்குரியது என்ற தீர்ப்பு வரும் என்று ஒரு இந்துவாக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டுள்ளேன்.

இந்துக்கள்

'Hindus also have fundamental rights to profess and practice their religon freely and propagate their religion without interfering in their way of practice' என்று பழனி கோவில் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.'

இதைப்படிக்கும் போதே மனது வலிக்கிறது. பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாட்டில் அவர்களுக்குண்டான வழிபாட்டு உரிமை இன்னும் கிடைக்கவில்லை, அதைப்பெறவே போராட வேண்டியுள்ளது என்பதையே இத்தீர்ப்பு உணர்த்துகிறது.

இது போன்ற மோசமான நிலை உலகில் பெரும்பான்மையாக வாழும் எந்த நாட்டு மக்களுக்கும் நடக்காது, நடக்கவும் விட மாட்டார்கள் ஆனால், இந்தியாவில் செக்குலர் என்ற பெயரில் இந்த அவலம் இந்துக்களுக்கு நடந்து வருகிறது.

இந்துக்கள் விழிப்புணர்வு மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. இந்து மதத்தை இழிவுபடுத்தும் அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்காதவரை இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. கிரி.. இது போல பதிவுகளில் பொது வெளியில் நான் என் கருத்துக்களை தெரிவிப்பதில் உடன்பாடு இல்லை.. என்னை பொறுத்தவரை பிறப்பால் அனைவரும் சமம்.. ஜாதி / மதங்கள் / வழிபாட்டு முறைகள் / கொள்கைகள் அது அவரவரின் தனிப்பட்ட உரிமைகள்.. அதில் இன்னொருவர் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை.. என்னுடைய கருத்தையும் யார் மீதும் திணிப்பது கிடையாது..

    ஜனநாயக நாட்டில் எல்லோரும் சுதந்திரம் இருப்பது போல எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று தான் கருதுகிறேன்.. என்னுடைய முன்னோர்கள் இந்த தேசத்தில் தான் பிறந்தார்களா ? என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் என் தந்தையும் /பாட்டனும் / பூட்டனும் இந்த மண்ணில் தான் பிறந்தார்கள் & இறந்தார்கள்.. நானும் என் குழந்தைகளும் இங்கு தான் பிறந்தோம்.. இந்த மண்ணை நேசிக்கிறோம்.. என்றும் நேசிப்போம்..

    சட்டம் அனைவர்க்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.. நீங்கள் கூறியது போல் பாபர் மசூதியில் பிராத்தனைகள் நடந்து பல வருடம் இருக்கும்.. அதை இடிக்கும் போது அது ஒரு பயன்படுத்தாத மசூதி மட்டுமே.. ஒரு முஸ்லீமாக நீதி மன்ற தீர்ப்பை ஏற்கிறேன்.. ஞானவாபி மதுரா சர்ச்சைகள் குறித்து எனக்கு தகவல்கள் தெரியவில்லை..

  2. @யாசின்

    “என்னுடைய கருத்தையும் யார் மீதும் திணிப்பது கிடையாது..”

    திணிப்பது எனக்கும் உடன்பாடில்லை ஆனால், நாம் என்ன நினைக்கிறோம் என்பதை கூறுவதில் தவறில்லை என்று நினைக்கிறன்.

    எதிரில் உள்ளவர் புரிந்து கொள்பவர் என்றால் கூறலாம், இல்லையென்றால் தவிர்க்கலாம்.

    “ஜனநாயக நாட்டில் எல்லோரும் சுதந்திரம் இருப்பது போல எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று தான் கருதுகிறேன்..”

    இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    “சட்டம் அனைவர்க்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்”

    நிச்சயமாக. ஒரு சில தீர்ப்புகளில் இந்துக்களுக்கு எதிராகவும் தீர்ப்பு வந்துள்ளது. ஒரு இந்துவாக எனக்கு ஆத்திரமாக இருந்தது ஆனால், தீர்ப்பை மதித்துத் தானே ஆக வேண்டும்.

    “நீங்கள் கூறியது போல் பாபர் மசூதியில் பிராத்தனைகள் நடந்து பல வருடம் இருக்கும்.. அதை இடிக்கும் போது அது ஒரு பயன்படுத்தாத மசூதி மட்டுமே.”

    30 வருடங்களுக்குப் பிறகு இது எனக்கு கடந்த மாதம் தான் தெரியும். பயன்படுத்தாத மசூதிக்கு இவ்வளவு பெரிய சண்டை நடந்துள்ளதா என்று வியப்பாக இருந்தது.

    “ஒரு முஸ்லீமாக நீதி மன்ற தீர்ப்பை ஏற்கிறேன்”

    🙏

    “ஞானவாபி மதுரா சர்ச்சைகள் குறித்து எனக்கு தகவல்கள் தெரியவில்லை..”

    இதுவும் ராமர் கோவில் போன்ற சர்ச்சையே. இந்து அமைப்புகள், தலைவர்கள் மீதியுள்ள இடங்களையும் பிரச்சனைகள் இல்லாமல் ஒப்படைத்து விடக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    ஆனால், ஈகோ காரணமாக முஸ்லிம்களும் மறுத்து வருகிறார்கள். எனவே, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

    தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக வந்தாலும் நாங்கள் மசூதியை ஒப்படைக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் கூறி வருகிறார்கள்.

    பிரச்சனைகள் இல்லாமல் முடியும் என்று நம்புகிறேன். பார்ப்போம்.

  3. Giri

    As far as know, many Jain temples too have been converted to Hindu temples. Even now there is a big fight going on for Jain sites like Girnar (Gujrat) Looks like the majority always want to oppress the minority. Your thoughts on samanam (jains) how different or same are to Hinduism would be deeply appreciated

  4. @மனோஜ்

    இந்து மதம் அனைத்து மதங்களுக்கும் முன்னோடி எனவே, ஜெயின் மத கோவிலை இடித்து இந்து மதக் கோவில் கட்டப்பட்டு இருக்க வாய்ப்பில்லை.

    அது போன்ற செயலை, இந்து மன்னரோ, தலைவர்களோ செய்ய மாட்டார்கள்.

    ஒருவேளை அப்படி செய்து இருந்தால், கண்டிப்பாக ஜெயின் மதத்தினருக்கே கொடுக்கப்பட வேண்டும். நீதி மன்றம் சென்று தீர்ப்பு வந்தால், இதில் கேள்விக்கே இடமில்லை.

    நிரூபிக்கப்பட்டால் இந்துக்கள் கொடுப்பதே நியாயம். இதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை.

    ஆனால், அப்படி மாற்றியிருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், நிரூபிக்கப்பட்டால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

    இந்து மதம் ஜெயின் மதம் பெரிய வித்யாசம் இல்லை. வழிபாட்டு முறைகள் உட்பட அனைத்துமே ஒரே மாதிரி தான் இருக்கும்.

    ஜெயின் மதத்தினரை நான் என்றுமே இந்துக்களாகவே கருதி வந்துள்ளேன், தற்போதும் அவர்கள் வேற்று மதத்தினர் என்று என்னால் நினைக்க முடியவில்லை.

    ராமர் கோவில் வழக்கை நடத்தி வெற்றி பெற்று கொடுத்ததே ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த அப்பா மகன் தானே! இவர்களே ஞானவாபி வழக்கிலும் போராடி வருகிறார்கள்.

    சீக்கிய மதித்தினரே வேற்று மதத்தினர் என்று 10 வருடங்களுக்கு முன்பு தான் தெரியும். சீக்கியமும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று நினைத்து இருந்தேன்.

    காரணம், ஜெயின் மதத்தைப் போலவே, அவர்கள் வழிபாட்டு முறைகளும் இந்து மதத்தைப் போலவே இருக்கும்.

    சீக்கிய மதத்தினரை ஒப்பிடும் போது ஜெயின் மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் பெரிய வித்யாசம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!