இந்திய ரயில்வே பயணியருக்கும் தரும் காப்பீடு பற்றிய கட்டுரையே இது.
பயணியர் ரயில்வே காப்பீடு
ரயில் பயணத்தில் விபத்துக்களால் ஏற்படும் இழப்புகளுக்கு அரசு நிதி தரும் ஆனால், காப்பீடு செய்து இருந்தால், கூடுதல் பணம் பெற முடியும். Image Credit
பலருக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லை ஆனால், முன்பதிவு செய்யும் போது காப்பீடு By Default ஆக தேர்வாகி இருக்கும் என்பதால், பலர் கவனிக்காமலே முன்பதிவு செய்வார்கள்.
காரணம், காப்பீடு கட்டணம் பைசாவில் இருப்பது தான்.
எவ்வளவு கட்டணம்?
முன்பதிவு செய்யும் போது நமக்கு கிடைக்கும் காப்பீட்டுக்கான கட்டணம் 45 பைசா மட்டுமே!
எனவே, விபத்து தான் அடிக்கடி நேர்வதில்லையே அதனால் எதற்கு இந்த 45 பைசா கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தவிர்க்க வேண்டாம்.
நமக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ மருத்துவச் செலவுகளுக்கு பயணியர் ரயில்வே காப்பீடு பயனளிக்கும்.
காப்பீட்டில் என்ன உள்ளது?
Accidental Death –> ₹10,00,000
Permanent Total Disablement –> ₹10,00,000
Permanent Partial Disablement –> Up to ₹7,50,000
Hospitalization Expenses for Injury –> Max upto ₹2,00,000
Transportation of mortal remains –> Max upto ₹10,000
ரயில் விபத்தால் ஒருவர் மரணமடைந்தாலோ, உறுப்புகளை இழந்தாலோ, அடிபட்டாலோ அதற்குத் தகுந்த இழப்பீட்டுத்தொகையை ரயில்வே துறை மற்றும் அரசு கொடுக்கும்.
ஆனால், இந்தக்காப்பீட்டைச் செய்து இருந்தால், கூடுதலாக மேற்கூறிய இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும். எனவே, இது முக்கியமானதாகிறது.
ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு என்றால் ₹2 கூட வரவில்லை.
எனவே, இதைப் பயனற்றதாகவோ, வீண் செலவாகவோ! கருதி புறக்கணிக்காமல் முன்பதிவு செய்யும் போது மறக்காமல் காப்பீடை இணைக்கவும்.
தகவல் சேர்ப்பு
முன்பதிவு செய்த பிறகு காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பை க்ளிக் செய்து பயணிப்பவர்கள் Nominee யைச்சேர்க்க வேண்டும்.
இவ்வாறு சேர்ப்பதை ரயில்வே எளிமைப்படுத்த, முன்பதிவு செய்யும் போதே காப்பீட்டைத் தேர்வு செய்தால் Nominee பேரையும் குறிப்பிடும்படி மாற்றலாம்.
காரணம், 99% மக்கள் லிங்க் க்ளிக் செய்து சென்று விவரங்களைக் கொடுத்து Nominee யைச்சேர்க்க மாட்டார்கள்.
இவ்வாறு சேர்க்கவில்லையென்றால், ஒருவேளை விபத்து ஏற்பட்டால், இழப்பீட்டுத்தொகையைக் கொடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் இருக்கலாம், பெறுவதில் கால தாமதம் ஏற்படலாம்
எனவே, முன்பதிவு செய்யும் போதே Nominee பெயர்களையும் குறிப்பிடும் வசதியை IRCTC கொண்டு வர வேண்டும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
உண்மையில் இது ஒரு பயனுள்ள பதிவு.. இதுவரை இதை பற்றி தெரியாதவர்கள் அல்லது தெரிந்தும் அலட்சியத்தால் காப்பீட்டை செய்யாதவர்கள், இனி மேல் நிச்சயம் இதன் பலனை உணர்ந்து கண்டிப்பாக இதை மேற்கொள்வார்கள் என நம்புகிறேன்..
காரணம், 99% மக்கள் லிங்க் க்ளிக் செய்து சென்று விவரங்களைக் கொடுத்து Nominee யைச்சேர்க்க மாட்டார்கள். இது உண்மை என நானும் நினைக்கிறேன்.. நிச்சயம் NOMINEE யை சேர்த்தால் தேவையற்ற கால தாமதத்தை தவிர்க்கலாம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
பலரும் க்ளிக் செய்து உள்ளீடு செய்ய மாட்டார்கள். எதிர்காலத்தில் IRCTC இதை மாற்றும் என்று நினைக்கிறன்.