தருமபுரி MP செந்தில்குமார், அவர் பகுதியில் நடந்த நீர்நிலை சீரமைப்பு பூமி பூஜைக்குத் திராவிட மாடல் இல்லை என்று எதிர்ப்புத் தெரிவித்தார். Image Credit
சர்ச்சை
செந்தில்குமார் கேட்டதில் நியாயம் உள்ளது என்றாலும், ஒரு கேள்வி கேட்கும் போது அது தொடர்பான மற்ற கருத்துகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை மறந்து! அப்பாவி அதிகாரியைக் காய்ச்சி எடுத்து விட்டார்.
MP யை எதிர்த்து என்ன பேச முடியும்? என்று அதிகாரியும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
என்ன தவறு?
மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள் இல்லையென்று பொங்கிய செந்தில்குமார், அதை மற்ற நிகழ்வுகளுக்கும் பொருத்திப்பார்க்க வேண்டும் அல்லவா?!
ஒரு விஷயத்தில் மத நல்லிணக்கத்தைப் பின்பற்றவில்லையென்றால், மற்ற விஷயங்களுக்கும் அதே போலக் கேள்வி வருவது இயல்புதானே.
‘இது திராவிட மாடல், திராவிட மாடலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா?‘ என்று அதிகாரியை விளாசித் தள்ளினார்.
அவர் பாவம், அனைத்து இடங்களிலும் வழக்கமாக அனைவரும் செய்ததைத்தானே நாம் செய்தோம். இதற்கேன் நம்மிடம் கோபித்துக்கொள்கிறார் என்று குழம்பியிருப்பார்.
திராவிட மாடல்
ஸ்டாலின் தமிழக முதல்வரான நாள் முதல் திராவிடன், திராவிடன் ஸ்டாக், திராவிட மாடல் என்று எதற்கெடுத்தாலும் கூறிக்கொண்டுள்ளார்.
இதையொட்டி செந்தில்குமாரும் கூறியதில் வியப்பில்லை.
பூமி பூஜையில் ஏன் இந்து மத வழக்கம் மட்டும்? ஏன் கிறித்துவ, முஸ்லீம் சடங்குகள் இல்லை என்று கேட்டார். இதையும் கடந்து ஏன் திராவிடக் கழகம் இல்லையென்று கேட்டுக் கிறுகிறுக்க வைத்தார்.
திராவிட மாடலில் அனைத்தும் சமம் என்றால்…
- ஏன் இந்துப்பண்டிகைகளுக்கு மட்டும் முதல்வர் வாழ்த்துக் கூறாமல் தவிர்க்கிறார்?
- ஏன் இந்து மதச் சடங்குகளைக் கிண்டல் செய்கிறார்?
- இந்து மதத்தை, கடவுள்களை இழிவுபடுத்தும் போது ஏன் எந்தச் சட்ட நடவடிக்கையும் இல்லை?
- ஏன் இந்து மதக் கோவில்களை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்?
திராவிட மாடலில் இவையெல்லாம் ஏன் வித்யாசம் காட்டப்படுகிறது என்பதற்குச் செந்தில்குமார் விளக்கம் கூறுவாரா?
பூமி பூஜை
முதலில் பூமி பூஜை என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ளது.
பூமி பூஜை மட்டுமல்ல, விவசாயத்தில் உழைக்கும் கால் நடைகளுக்கு, குழந்தைகளால் படிக்கப்படும் புத்தகங்களுக்கு, சோறு போடும் இயந்திரங்களுக்கென்று பல்வேறு பூஜைகள் உள்ளது.
காரணம், இந்து மதம் என்பது மதம் மட்டுமல்ல, வாழ்வியல்.
இது போன்ற பூஜைகள் வழக்கங்கள் மற்ற மதங்களில் இல்லை. எனவே, காலம் காலமாகப் பின்பற்றப்படும் வழக்கமே பூமி பூஜை.
செய்யப்போகும் செயல் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்து மதத்தில் உள்ள நம்பிக்கையில் பூமி பூஜை நடத்தப்படுகிறது.
இது தற்போதல்ல பல ஆயிரம் ஆண்டுகளாக நடத்தப்படும் வழக்கம் அதன் மீதுள்ள நம்பிக்கை.
மற்ற மதங்களில் வழக்கம் இல்லையென்பதால், அதற்காக நம்பிக்கையுள்ள மதத்தினரும் புறக்கணிக்க வேண்டுமா? இது என்ன நியாயம்?
திராவிட மாடல் என்றால் இந்து மத நம்பிக்கைகளை மட்டும் எதிர்ப்பது, அவற்றைத் தூற்றுவது, கிண்டலடிப்பதா?
திமுக கட்சியினரும், ஸ்டாலினும், செந்தில்குமாரும் தெளிவுபடுத்தினால் நலம்.
இது போன்ற திராவிட மாடலை வைத்துக்கொண்டு சமூக நீதி, மதச்சார்பின்மை என்று வடை சுட்டுக்கொண்டு அடுத்தவரைக் கேள்வி கேட்பது நியாயமா?
இந்துக்கள் மிக்ஸர் தின்று கொண்டு இருக்கும் வரை திராவிட மாடலுக்குப் பிரச்சனை இருக்காது.
என்ன வடை சுட்டாலும் அதையும் வாங்கி ‘ஆகா அருமை‘ என்று திங்க தயாராகச் சொரணையற்ற இந்துக்கள் இருக்கிறார்கள்.
திராவிட மாடல் என்பது ஒரு திருட்டு மாடல் என்பது புரியும் காலமும் வரும் அப்போது சூழ்நிலைகளும் மாறும்.
தொடர்புடைய கட்டுரைகள்
நடராஜரை இழிவுபடுத்திய திராவிடன் ஸ்டாக்குகள்
இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
You were so silent during the ADMK rule. They were much worse than DMK. You didn’t say much. When it comes to DMK, you do all the research and complain. For other parties, you were so silent.
Nyama ezhudhungs Giri anna
கிரி, நீங்கள் குறிப்பிட்ட நீர்நிலை சீரமைப்பு பூமி சம்பவத்தை பற்றி நான் செய்திகளில் பார்க்கவில்லை.. அதனால் அந்த நிகழ்வு குறித்த தகவல்கள் எனக்கு தெரியவில்லை.. திமுக தமிழ்நாட்டில் ஆட்சி புரிய இந்து சகோதர / சகோதரிகளின் வாக்குகள் தேவை என்னும் போது அவர்களின் மனது புண்படும் வகையில் எந்த நிகழ்வுகளும் ஏற்படாமல் பார்த்து கொள்வது ஆட்சியாளர்களின் முக்கிய கடமை ..
முக்கியமாக மிகவும் பழமையான கலாச்சாரத்தை கொண்ட பூமியில் நாம் வாழும் போது, இங்கு உள்ள மக்களின் இறை நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.. ஒரு மதத்தை, உயர்த்தியோ / இன்னொரு மதத்தை தாழ்த்தியோ பார்க்க வேண்டியதில்லை.. அனைவரையும் சமமாக பார்த்தாலே போதும்.
மக்களின் நம்பிக்கை / கலாச்சாரத்தை / பாரம்பரியத்தை மதிக்காமல் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில் இருந்தால், இதற்கான பாடத்தை மக்கள் நிச்சயம் கற்பிப்பார்கள்.. இது எல்லா ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்..
@Nachinaarkkuiniyan
நான் என்றாவது நியாயமாக, நடுநிலையாக எழுதுவேன் என்று கூறி உள்ளேனா?!
வலதுசாரி ஆதாரவாளனாக இருக்கும் என்னிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்? நான் இது போலத்தான் எழுதுவேன். இதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.
இக்கட்டுரையில் என்ன தவறு என்று கூறாமல், அதிமுக அப்படி செய்து இருக்கிறது திமுக செய்தால் என்ன என்பதே உங்கள் தொனியாக உள்ளது.
திமுக செய்தது தவறு என்று உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே. அதிமுக இதே போல செய்து இருந்தால், கூறுவதில் எனக்கென்ன பிரச்சனை?
இக்கட்டுரையின் கருத்தில் என்ன தவறு என்று கேளுங்கள், விளக்கம் அளிக்கிறேன்.
எந்த மதத்தையாவது திமுக போல இழிவு படுத்தி எழுதியுள்ளேனா?
நான் நியாயமாக நடக்க வேண்டுமா? திமுக / ஸ்டாலின் / செந்தில்குமார் நியாயமாக நடக்க வேண்டுமா?
சவாலாகவே கூறுகிறேன். இத்தளத்தில் ஒரே ஒரு கட்டுரையாவது மற்ற மதங்களை இழிவு செய்துள்ளேன் அல்லது அதற்கு துணை போய் உள்ளேன் என்று காட்டுங்கள் பார்ப்போம்.
விமர்சனங்களை முன் வைத்துள்ளேன், இந்து மதத்தை பெருமையாக கூறி இருப்பேன் ஆனால், ஒரு இடத்திலும் மற்ற மதங்களை இழிவு செய்தது இல்லை.
செய்து கொண்டு இருப்பது திமுக ஆனால், என்னை நியாயமாக எழுதுங்கள் என்று கேட்கிறீர்களே!
ஒரு மாநிலத்தின் முதல்வர் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டியவர், தன் நடவடிக்கைகளை நியாயமாக அமைத்துக்கொள்ள வேண்டியவர் நியாயமாக நடந்து கொள்ளாமல் உள்ளார் என்று ஆதாரத்துடன் கூறுகிறேன்.
ஆனால், அவரை கேள்வி கேட்காமல், சாமானியனான என்னை நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறுவது நியாயமா?
எதிர்க்கட்சியாக இருந்த போது அரசைத் திட்டி விட்டு, தற்போது அதே தவறை திமுக செய்யும் போது, நீங்கள் செய்வது நியாயமா என்று ஸ்டாலினை கேட்க உங்களுக்குத் தோன்றியதா?
யாருக்கு நியாயமாக நடந்து கொள்வதில் தார்மீக ரீதியான பொறுப்பு உள்ளது?
நீங்கள் நியாயத்தை எதிர்பார்க்க வேண்டியது என்னிடமா வாக்கு செலுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரிடமா?
ஸ்டாலின் போல மேடைக்கு ஒன்று பேசாமல், என் நிலையைத் தெளிவாக இங்கே கூறியுள்ளேன். என்னைப்போய் நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்களே!
https://www.giriblog.com/neautral-is-possible-or-not/
நீங்களே ஒரு நியாயத்தைக் கூறுங்கள் 🙂 .
@யாசின்
“திமுக தமிழ்நாட்டில் ஆட்சி புரிய இந்து சகோதர / சகோதரிகளின் வாக்குகள் தேவை என்னும் போது அவர்களின் மனது புண்படும் வகையில் எந்த நிகழ்வுகளும் ஏற்படாமல் பார்த்து கொள்வது ஆட்சியாளர்களின் முக்கிய கடமை ..”
ஆட்சி புரிவதற்கோ அல்லது இல்லையோ எந்த மதத்தையும் புண்படும் படி பேசுவது தவறு.
வாக்குத் தேவை என்றாலும் தேவையில்லை என்றாலும் அவமரியாதையாக பேசக் கூடாது என்பது என் கருத்து.
“ஒரு மதத்தை, உயர்த்தியோ / இன்னொரு மதத்தை தாழ்த்தியோ பார்க்க வேண்டியதில்லை.. அனைவரையும் சமமாக பார்த்தாலே போதும்.”
இதைத்தான் கேட்கிறேன் யாசின்.
இந்து மதத்தைத் தூக்கி வைத்துப் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.
அனைத்து மதங்களுக்கும் ஒரே மாதிரி மதிப்பு கொடுங்கள், அக்கறை காட்டுங்கள் என்பது மட்டுமே என் எதிர்பார்ப்பு.
ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைக்காதீர்கள் என்கிறேன்.
எனக்கு என்ன திமுக கூட வாய்க்கா வரப்பு தகறாரா.. இவர்களிடம் சண்டை போட எனக்கென்ன காரணம் இருக்கப்போகிறது?
இவர்கள் சரியாக நடந்து கொண்டால், நான் கண்டுகொள்ளாமல் போகப்போகிறேன். எழுதுவதற்கு எவ்வளவோ உள்ளது.
“மக்களின் நம்பிக்கை / கலாச்சாரத்தை / பாரம்பரியத்தை மதிக்காமல் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில் இருந்தால், இதற்கான பாடத்தை மக்கள் நிச்சயம் கற்பிப்பார்கள்.. இது எல்லா ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்..”
மிகச்சரி யாசின்.
இன்று தங்களுக்கு சாதகமாக உள்ளது என்று ஆடுகிறார்கள். நாளை காட்சி மாறும்.. ஆனால், அப்போது வெட்கமே இல்லாமல் மாறுவார்கள். ஏனென்றால், இவர்கள் அரசியல்வாதிகள்.
திராவிட மாடலில் இப்படி தான் நடந்துகொள்வார்கள் போல…இவருக்கு சொரணை அற்ற ஹிந்துக்களின் ஆதரவு வேறு.
மேலும் @Nachinaarkkuiniyan அவர்களுக்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலும் சரியானதே….
எந்த ஒரு அரசாங்கம் அனைத்து மக்களையும் மதத்தினரையும் நம்பிக்கைகளையும் சமமாக மதிக்கிறதோ அதுவே மக்களின் அரசு…
@payapulla
“திராவிட மாடலில் இப்படி தான் நடந்துகொள்வார்கள் போல…இவருக்கு சொரணை அற்ற ஹிந்துக்களின் ஆதரவு வேறு.”
கடுப்பேத்துறார் மைலார்ட் 🙂
“எந்த ஒரு அரசாங்கம் அனைத்து மக்களையும் மதத்தினரையும் நம்பிக்கைகளையும் சமமாக மதிக்கிறதோ அதுவே மக்களின் அரசு”
இதுவே என் கருத்தும்.
I am not left wing supporter. But you are an arrogant right wing supporter. Right wing always spreads lies without any basis. Zero Truth in right wing. Have some rationalist thinking atleast for the sake of your education.
@asfs
You guys are simply complaining without any proper arguments. If you have a valid question, then share it here.
I can answer you. If I have mistakes, then I don’t have a problem accepting them.
Don’t play the game with the right wing and left wing. Let me know what is the issue in the article, and I will explain you.
Don’t generalize.