வணிக எரிவாயு கட்டணக் குறைப்பால் என்ன பயன்?

3
வணிக எரிவாயு

ணிக எரிவாயு கட்டணத்தை அவ்வப்போது மத்திய அரசு குறைக்கிறது. இதனால் என்ன பயன் உள்ளது? Image Credit

வணிக எரிவாயு

வீட்டு உபயோக எரிவாயு, வணிக எரிவாயு என்று இரு வகை எரிவாயு வகைகள் உள்ளன. இதில் வணிக பயன்பாடு எரிவாயு கட்டணங்கள் வீட்டு உபயோக எரிவாயு உருளையை விட அதிகம்.

உயர்த்தும் போது சில நேரங்களில் அதிகளவில் மத்திய அரசு உயர்த்துகிறது, சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலையை அவ்வப்போது குறைக்கிறது.

கட்டண உயர்வு

வாகன எரிபொருள் (பெட்ரோல் / டீசல்), வணிக எரிவாயு கட்டணத்தை உயர்த்தி விட்டால், வழக்கமாக அதைச் சார்ந்துள்ள அனைத்தின் கட்டணங்களும் உயரும்.

வாகன எரிபொருள் உயர்ந்தால், அதன் தாக்கம் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனத்தின் வாடகை, காய்கறி, மற்ற வாடகை ஊர்திகளின் கட்டணம் உயர்த்தப்படும்.

வணிக பயன்பாடு சிலிண்டர் கட்டணம் உயர்த்தப்பட்டால், உணவகம், உணவுப்பொருட்கள் சார்ந்துள்ள அனைத்தின் கட்டணமும் உயரும்.

ஆனால், எரிபொருள், எரிவாயு கட்டணம் குறைக்கப்பட்டால், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறைக்கப்படுவதில்லை.

மாறாகத் திரும்ப எரிவாயு கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், காஃபி, டீ, உணவுக் கட்டணங்களை உயர்த்துவார்கள்.

கட்டணக்குறைப்பால் வணிக நிறுவனங்கள், கடைகள் இலாபம் சம்பாதிக்கின்றன ஆனால், மக்களுக்கு என்ன பயன்?

இதனால் விலைவாசி தான் போலியாக உயர்த்தப்படுகிறது.

இதுவரை கவனித்ததில் விலை குறையும் ஒரே பொருள் காய்கறி மட்டுமே! காரணம், அதை நீண்ட காலம் சேமிக்க முடியாது என்பதால்.

மற்றபடி ஒரு கட்டணம், விலை உயர்ந்தால், மீண்டும் குறையாது.

இது பணவீக்கத்தினை ஏற்படுத்துகிறது.

வீட்டு உபயோக எரிவாயு

வணிக எரிவாயு கட்டணங்களைக் குறைப்பதற்குப் பதிலாக வீட்டு உபயோக எரிவாயு கட்டணங்களைக் குறைத்தால், அனைவருக்குமே பயன் தரும்.

பொதுமக்களின் மாத செலவில் குறையும் போது அதையும் செலவு தான் செய்வார்கள். எனவே, பொருளாதாரத்தை உயர்த்தவே செய்யும்.

அதில் மிச்சமாவதை சிலர் சேமிக்கவும் செய்யலாம்.

ஒரு உருளைக்கு ₹200 குறைக்கப்பட்டால், குறைந்தது வருடத்துக்கு ₹1200 ஒரு குடும்பத்தில் சேமிக்கப்படும். தோராயமாக ஒரு உருளை (தனிக்குடும்பத்துக்கு) இரு மாத பயன்பாட்டுக்கு வருகிறது.

கட்டண குறைப்பு அவசியமில்லை

உயர்த்திய கட்டணங்களைக் குறைப்பதால், எந்தப் பெரிய மாற்றமும் நடந்து விடப்போவதில்லை.

காரணம், ஒருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டால் அதற்கான வாழ்க்கை முறைக்கு, கட்டண உயர்வுக்கு மக்கள் பழகி விடுகிறார்கள்.

எனவே, தற்போது எரிபொருள் கட்டணம் 450+ நாட்களாக உயர்த்தாமல் இருப்பதைப் போன்றே இருந்து விடலாமே!

திரும்பக் குறைத்து உயர்த்துவதால் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு (fluctuation) விலை / கட்டண சமநிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

450+ நாட்களாக எரிபொருள் கட்டணம் சர்வேதேச சந்தையில் அதிகளவில் உயர்ந்த போதும், பின்னர் குறைந்த போதும் கட்டணத்தில் மாற்றமில்லை.

இது ஒரு சீரான நிலையைக் கொடுப்பதாக உணர்கிறேன்.

அடிக்கடி ஏற்றிக் குறைத்து பொருட்களின் விலையில் குழப்பமே ஏற்படுவது பொதுமக்களையே பாதிக்கிறது.

பைசாக்களில் ஏற்றம் குறைவு எப்பாவது நடப்பது பிரச்சனையில்லை ஆனால், பெரியளவில் ₹3 / ₹4 என்று உயரும் போது நிச்சயம் தனிபரின் பொருளாதாரச் சமநிலையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

சந்தேகம்

மேற்கூறியதே என் புரிதல், இவை தவறாகவும் இருக்கலாம்.

எதனால் வீட்டு உபயோக சிலிண்டர் கட்டணத்தைக் குறைக்காமல், வணிக எரிவாயுவின் கட்டணத்தை அவ்வப்போது குறைக்கிறார்கள்?

நண்பர்களிடம் விசாரித்த வரை யாருக்கும் இதுபற்றித் தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கம் கூற முடியுமா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. ஆனால், எரிபொருள், எரிவாயு கட்டணம் குறைக்கப்பட்டால், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறைக்கப்படுவதில்லை.

    உண்மை கிரி.. அரசு கடுமை காட்டாத வரை இந்த சூழல் இன்றும் மாற போவதில்லை.
    ==================================

    கட்டணக்குறைப்பால் வணிக நிறுவனங்கள், கடைகள் இலாபம் சம்பாதிக்கின்றன ஆனால், மக்களுக்கு என்ன பயன்?

    இவர்கள் மிக பெரிய ஒரு இலாபத்தை அடைகிறார்கள் என்பது மறுக்க முடியாதது..
    ==================================

    வணிக எரிவாயு கட்டணங்களைக் குறைப்பதற்குப் பதிலாக வீட்டு உபயோக எரிவாயு கட்டணங்களைக் குறைத்தால், அனைவருக்குமே பயன் தரும்.

    சரியான பார்வையாக நான் கருதுகிறேன்..
    ==================================

    எதனால் வீட்டு உபயோக சிலிண்டர் கட்டணத்தைக் குறைக்காமல், வணிக எரிவாயுவின் கட்டணத்தை அவ்வப்போது குறைக்கிறார்கள்?

    இதுவரை நான் யோசிக்காத ஒன்று!!! சரியான கேள்வி இது.
    ==================================

  2. என்ன கிரி. ரொம்ப நாளா எந்த கட்டுரையும் காணோம். உடம்பு சரியில்லையா?

  3. @யாசின் நன்றி

    @ஹரிஷ் certification தேர்வுக்காகப் படித்துக்கொண்டு இருந்ததால், எழுத முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here