மோடி தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியதை விட அதிகம் விரும்பியது மேற்கத்திய நாடுகள் என்றால், தெரியாத பலருக்கு வியப்பாக இருக்கலாம்.
மேற்கத்திய நாடுகள்
இந்தியாவின் வளர்ச்சி மேற்கத்திய நாடுகளுக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளது. மற்ற நாடுகள் GDP குறைந்து கொண்டு போகும் போது உலகளவில் இந்தியா மட்டுமே அதிகம் வளர்ந்துள்ளது. Image Credit
இது கற்பனை செய்தியல்ல நடந்த, நடக்கும் உண்மை.
காங்கிரஸ் இருந்தவரை மேற்கத்திய நாடுகளுக்கு எந்தக்கவலையும் இல்லை காரணம், இந்தியா அவர்களின் பேச்சைக்கேட்டு நடந்து கொண்டு இருந்தது.
சுருக்கமாக, அவர்களை முறைத்துக்கொள்ள விரும்பாது ஆனால், மோடி வந்த பிறகு சூழ்நிலையே முற்றிலும் மாறியது அவர்களைக் கடுப்படித்துள்ளது.
நேரடியாக வெளிக்காட்ட முடியாத அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களுடைய அதிகாரிகளை வைத்து விமர்சிக்கும், பின்னர் பைடன் நட்பாக பேசுவார்.
அனைத்து நாடுகளும் வாழ்த்துக் கூறியபிறகு தாமதமாக மோடிக்கு பைடன் வாழ்த்துக் கூறினார். ஏன் என்று தெரியுமா?
George Soros
இவர்களோடு உலக பைத்தியக்காரன், சைக்கோ சோரோஸ். இவனுக்கு என்ன பிரச்சனை என்றே புரியவில்லை, இந்தியா மட்டுமல்ல எந்த நாடும் நிம்மதியாக இருக்க கூடாது என்று நினைப்பான்.
மேற்கத்திய நாடுகள் மோடி தோற்கப் பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்துள்ளது. தோற்கடிக்க முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் பாஜக தனிப்பெரும்பான்மையைத் தடுத்துள்ளது.
மேற்கத்திய ஊடகங்கள் தங்களால் இந்தியாவை எவ்வளவு கேவலப்படுத்தி எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதி வருகிறார்கள்.
ஊடகங்களின் கட்டமைப்பு
பாஜக எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லையே தவிரத் தற்போதும் கூடுதல் பலத்துடனே உள்ளது ஆனாலும் பாஜக தோல்வியடைந்து விட்டதைப்போலவே காங்கிரஸ் மற்றும் அவர்களது ஊடகங்கள் கட்டமைக்கின்றன.
இதைப் பாஜக ஆதரவாளர்களும் நம்பி புலம்புகின்றனர். துவக்கத்தில் அதீத எதிர்பார்ப்பால் அதிர்ச்சியடைந்து இருக்கலாம், இப்போதும் அதையே தொடர்ந்தால் எப்படி?!
வளர்ச்சி
பாஜக நான்கு மாநிலங்களில் மட்டுமே எதிர்பார்த்த எண்ணிக்கையைப் பெறவில்லை ஆனால், தென் மாநிலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஒடிஷாவில் ஆட்சியைப் பிடித்துள்ளது.
அடுத்த தேர்தலில் தெலுங்கானாவில் பாஜக ஆட்சியைப்பிடிக்கவும் வாய்ப்புள்ளது காரணம், BRS விலகிக் காங் Vs பாஜக என்று மாறி விட்டது.
ஆந்திராவில் TDP யுடன் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த முறை செய்த தவறை TDP செய்யாமல், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியே பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு உதவியுள்ளது. எனவே, பாஜக ஆதரவாளர்கள் உலகமே இருண்டு விட்டது போல எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இந்தி கூட்டணி
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு ராகுல் மிக மிக உற்சாகமாக இருந்தார். இவரின் பேச்சுகள் நடவடிக்கைகள் ஆட்சியைப் பெற்று பிரதமர் ஆகி விடுவோம் என்பதைப்போலவே இருந்தது.
இந்தி கூட்டணியினர் நிதர்சனத்தை உணர்ந்து கொள்ளத் தயாராக இல்லை.
கூட்டணி பெரும்பான்மை இருவருக்கும் கிடைக்கவில்லை என்றாலாவது இவர்களின் கொண்டாட்டத்துக்கு நியாயம் கூறலாம்.
‘யாராவது ராகுலிடம் இந்தி கூட்டணி தோற்றுவிட்டது என்பதை எடுத்துச் சொல்லுங்கள்‘ என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறியது தான் நினைவுக்கு வருகிறது.
ராகுலின் செயல்கள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது ஆனால், மக்களிடையே தவறான தகவல்களைக் கொண்டு சேர்ப்பதை மட்டும் சரியாக செய்கிறார்.
புலம்பும் ஊடகங்கள்
பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாததால், திணறும் என்று நினைத்த இந்தி கூட்டணியினருக்கு அப்படி எந்த வாய்ப்பையும் பாஜக கொடுக்கவில்லை.
துவக்கத்திலிருந்தே எந்தச் சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொண்டது. இந்தி கூட்டணி ஆதரவு ஊடகங்கள் ஆளுக்கொரு கற்பனை கதையை எழுதிக்கொண்டு இருந்தனர்.
அதிலும் சன் டிவி மற்றும் திமுக ஆதரவு YouTube சேனல்கள் நான் ஸ்டாப்பாக எதையாவது கூறி தங்கள் அரிப்பைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.
கூட்டணியில் சிக்கல், திணறிய மோடி, மாட்டிக்கொண்ட மோடி என்று தலைப்பு வைத்து எழுதித் திருப்தி பட்டுக்கொண்டதோடு சரி, ஒன்றுமே நடக்கவில்லை.
தற்போதைய சர்ச்சையான தமிழிசைக்கு வரிந்து கட்டி பேசுபவர்களுக்கு தமிழிசை மேல் அக்கறை இல்லை, பாஜக மீது காண்டு அவ்வளவே!
இதுவரை உருவக்கேலி செய்தவர்கள் இன்று நல்லவர்கள் ஆகி விட்டனர் 🙂 .
முக்கியத்துறைகள்
ஏற்கனவே, இருந்த முக்கிய இலாக்காக்கள் அனைத்தையும் பாஜகவே வைத்துக்கொண்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில், பாதுகாப்பில், பெருமையில் இத்துறைகள் மிக முக்கியப்பங்காற்றுவது. எனவே, இத்துறைகளை பாஜகவே வைத்துக்கொண்டது எதிர்க்கட்சிகளைக் கடுப்படித்துள்ளது.
இவர்கள் நினைத்தது நடக்கவில்லையென்பதால், அறிக்கை மேல் அறிக்கை விடுவதும், ஊடகங்களில் புலம்புவதுமாக உள்ளனர்.
தற்போது தான் தாங்கள் தோற்றதையே இந்தி கூட்டணியினர் உணர்ந்துள்ளனர்.
எதிர்காலத்தில் ஒருவேளை நிதிஷ், நாயுடு பிரச்சனை செய்தாலும், மோடி திறமையாகச் சமாளிப்பார் என்றே கருதுகிறேன்.
குழப்பங்கள் சாதாரணம்
ஒரு கட்சி தோற்றுவிட்டால், அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள், பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இது ஒரு சாதாரணமான நிகழ்வு.
ஒரு பேச்சுக்குத் திமுக கூட்டணி 30 தொகுதிகளைப் பெற்றது, பாஜக 10 தொகுதிகளைப் பெற்றது என்றால், தற்போது பாஜகவில் என்னென்ன நடந்து கொண்டுள்ளதோ அது போன்று அங்கும் நடக்கும்.
மாவட்ட தலைவர்களை மாற்றி இருப்பார்கள், சிலரின் பதவி பறிக்கப்பட்டு இருக்கும். ஆளாளுக்கு அதைச் செய்து இருக்கலாம், இதைச் செய்து இருக்கலாம் என்று அறிவுரை மழையாக இருக்கும்.
இதோடு ‘நான் தான் அப்பவே சொன்னேனே!‘ என்ற ராகம் பாடும் தொல்லைகளும் இருக்கும். இதையெல்லாம் சகித்துச் செல்வதைத்தவிர, பின்னடைவைச் சந்தித்த கட்சிக்கு வேறு வழி கிடையாது.
தமிழக பாஜக 81 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை, கொங்கு, தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.
சில நேரங்களில் அவமானப்பட வேண்டியதிருக்கும், உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்காதிருக்கும், எதிர்பார்ப்பு ஏமாற்றமடைய வைத்து இருக்கும்.
பலரின் அறிவுரைகள், நக்கல்கள், மட்டன் பிரியாணி பார்சல் கிண்டல்கள் ஆகியவற்றை சகித்துத்தான் ஆக வேண்டும். காரணம், நேரம், சூழ்நிலை அப்படி.
அனைவருக்கும் ஒரு காலம்
அனைவருக்கும் ஒரு காலம் இருக்கும். இன்று திமுக கூட்டணியின் காலம், தலைகீழாக நின்றாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
நேரம் சரியில்லை என்றால், ஓரிரு மாதங்களுக்கு அமைதியாக இருப்பதே நல்லது. இல்லையென்றால், என்ன செய்தாலும், பேசினாலும் சிக்கலையே கொண்டு வரும்.
பாஜகவுக்கான காலமும் வரும் அப்போது யார் நினைத்தாலும் தமிழக பாஜகவின் வெற்றியைத் தடுக்க முடியாது.
Read : நேரம் சரியில்லையென்றால் என்ன செய்வது?
குறைத்து மதிப்பிட வேண்டாம்
ஒரு நாட்டை 10 வருடங்களாக ஆண்ட, பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாஜக தலைமைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதா!
இந்த முறை எதோ சறுக்கி விட்டது, இருப்பினும் ஆட்சி அமைத்து விட்டார்கள். இத்தவறுகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதைச் சரி செய்ய நிச்சயம் முயற்சி எடுப்பார்கள். பாஜக தலைமையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
அதோடு இது போன்ற ஒரு நிலையும் மத்தியில் பாஜகக்கு அவசியமே! மேலும் கவனமாக இருக்கவும், தவறுகளைச் சரி செய்யவும் இம்மாற்றம் உதவும்.
தலைவர் சொன்ன மாதிரி, மேலே போன ஒருத்தர் கீழே வந்து தானே ஆக வேண்டும், மேலேயே இருக்க முடியாது.
இது சின்ன சறுக்கல் தானே! நிச்சயம் மீண்டு வருவார்கள். நடப்பவை நன்மைக்கே!
கொசுறு
ஒரு கட்டுரை எழுத நினைத்து, நான்கு கட்டுரைகள் வந்து விட்டது.
மோடி என்ன செய்தார்? தொடரை விட இத்தொடரையே அதிகம் பேர் படித்துள்ளார்கள் என்பது நல்லதோ கெட்டதோ பாஜக பற்றிப் பலர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
தொடர்ந்து பயணித்த அனைவருக்கும் நன்றி 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. கடந்த நான்கு பதிவுகளுமே விரிவாக, தெளிவாக மிகவும் நேர்த்தியாக இருந்தது. அதே சமயம் படிப்பதற்கு சுவாரசியமாகவும், பல தெரியாத தரவுகளை தெரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது மிகவும் சிறப்பு.. பொதுவாக அரசியல் / மதம் குறித்து எந்த விதமாக கருத்துகளையும், விவாதங்களையும் யாருடனும் விவாதிப்பதில்லை..
காரணம் நான் இந்த கட்சியின் ஆதரவாளன் என்ற வட்டத்தில் என்னை பொறுத்தி பார்க்க விரும்பவில்லை.. பாஜகவின் / காங்கிரஸ் மீது சில அதிருப்திகள் இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகள் சரியாக இருக்கும் சமயத்தில், என் அறிவுக்கு சரி என்று தோன்றினால் நிச்சயம் அவர்களை பாராட்டுவேன்.. அதே நிலை தான் மற்ற கட்சிகளுக்கும்..அது யாராக இருந்தாலும் சரி..
மதத்தை பொறுத்தவரை நான் யாரிடமும் விவாதித்தில்லை.. காரணம் எல்லா மதங்களும் அவரவர்களுக்கான வழிமுறைகள், கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் உண்டு.. இவைகள் எல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பின்பற்றுபட்டு வருபவைகள். சிலது தற்போது காலகட்ட சூழலுக்கு பொருந்தாத வகையிலும் இருக்கலாம்.. ஆனால் அது வேண்டுமா? வேண்டாமா? என்று தீர்மானிக்கும் அதிகாரம் தனி மனிதனின் விருப்பம்.. யாரும் அவனை கட்டாய படுத்த முடியாது.. கட்டாயப்படுத்தினாலும் அது முற்றிலும் தவறு..
மதங்களை குறித்து பொது வெளியில் பேசி அதை ஒரு விவாத பொருளாக மாற்றுவதை என்னால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.. என்னுடைய நட்பு வட்டரத்தில் ஒரு முறை கூட நான் இவைகளை குறித்து பேசியது இல்லை.. 18 வருட நட்பில் சக்தியுடன் கூட இருவரும் ஒரு முறை கூட இதை பற்றியெல்லாம் பேசியது இல்லை.. சொல்ல போனால் யோசித்தது கூட இல்லை.. என்னை விட சக்தி நிறைய செயல்களில் மிகவும் சரியாக இருப்பார்..
உறவுகளை பேணுவது, நாள் கிழமை எல்லாம் தவறாமல் பார்த்து அது போல முறையாக நடந்து கொள்வார்.. இத்தனை ஆன்டுகளில் சக்தி என் வீட்டுக்கு வந்த சமயத்தில் ஒரு முறை கூட அசைவம் சாப்பிட்டதில்லை.. காரணம் இவர் வரும் சமயமெல்லாம் ஏதேனும் ஒரு விசேஷ தினமாக இருக்கும்.. இவரின் வருகை என்றாலே சைவம் தான்..
கிரி எப்படி இருக்கீங்க, உங்கள் கட்டுரைகள் வர வர கடுமையாகிக்கொண்டே போகின்றன. முன்பு நீங்கள் இவ்வளவு கடுமையாக இல்லை. கொஞ்சம் மென்மை தான்.
நீங்களும் பாஜக வுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக எழுதினீர்கள். பயனில்லை. ஆனால் இறைவன் நாடினால் தமிழகத்தில் பாஜக வளரும். அதில் சந்தேகம் இல்லை.
என்னைப் பொறுத்தவரை இறைவன் மோடிக்கு 10 வருடம் பெரும்பான்மையான ஆட்சியை கொடுத்தான். அதில் நீதியான முறையில் நடந்து இருந்தால் இனிமேல் மோடி புகழின் உச்சியில் ஏறுவார். அநீதி இழைத்து இருந்தால் இனிமேல் தான் கெட்ட காலம் ஆரம்பமாகும்.
தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் பாஜக ஆதரவு ஊடகமோ ஏனைய ஊடகமோ செய்திகளை முழுவதும் நம்புகுறீர்கள். சரி பிழை பாருங்கள்.
சில உதாரணங்கள்
1)எக்சிட் போல் கணிப்புகள் பாஜக 400+ இடங்களில் வெற்றி பெறும் என்று பொய்யான தகவல்களை கூறி பங்கு சந்தையில் முதலீடு செய்யும் படி (மோடி அமித்ஷா )கூறினார்கள்.
ஒரே நாளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணம் ஏமாற்றப்பட்டது.
2)இலங்கையில் இருந்து வந்த முஸ்லிம் வாலிபர்கள் ஐஎஸ்ஐஎஸ் என்று அண்டப்புலுகு கூறினார்கள். அவர்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ் இற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது.
கொசுறு
தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று பேசிய ஆடியோ கசிந்தது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
@யாசின்
“கிரி.. கடந்த நான்கு பதிவுகளுமே விரிவாக, தெளிவாக மிகவும் நேர்த்தியாக இருந்தது. அதே சமயம் படிப்பதற்கு சுவாரசியமாகவும், பல தெரியாத தரவுகளை தெரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது மிகவும் சிறப்பு..”
நீங்கள் ஆர்வமாக கருத்திடும் போதே உணர்ந்தேன்.
ஒவ்வொரு கட்டுரைக்கும் நீங்கள் விரிவாக கருத்திட்டது மகிழ்ச்சி 🙂 . சுவாரசியமாக எழுதியதாக கூறியது, எனக்கு மகிழ்ச்சியை அளித்தது 🙂 .
“பாஜகவின் / காங்கிரஸ் மீது சில அதிருப்திகள் இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகள் சரியாக இருக்கும் சமயத்தில், என் அறிவுக்கு சரி என்று தோன்றினால் நிச்சயம் அவர்களை பாராட்டுவேன்.. அதே நிலை தான் மற்ற கட்சிகளுக்கும்..அது யாராக இருந்தாலும் சரி..”
இது தான் சரியான நிலைப்பாடு யாசின். இதையே நான் பின்பற்றுகிறேன்.
எனக்கு திமுக, காங் பிடிக்காது. இருப்பினும் அவர்கள் நன்றாக செய்து இருந்தால் பாராட்டுவதில் எனக்கு தயக்கம் இருந்ததில்லை.
“18 வருட நட்பில் சக்தியுடன் கூட இருவரும் ஒரு முறை கூட இதை பற்றியெல்லாம் பேசியது இல்லை.. சொல்ல போனால் யோசித்தது கூட இல்லை.. என்னை விட சக்தி நிறைய செயல்களில் மிகவும் சரியாக இருப்பார்..”
உங்கள் நட்பு மேலும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.
சக்தியிடம் பேசியதை வைத்து நீங்கள் கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. நீங்கள் கூறுவதைப்போலவே தான் அவரின் பேச்சும் இருக்கும்.
@Fahim
“கிரி எப்படி இருக்கீங்க,”
ரொம்ப நல்லா இருக்கேன் Fahim. நீங்களும் அதே போல இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 🙂 .
“உங்கள் கட்டுரைகள் வர வர கடுமையாகிக்கொண்டே போகின்றன. முன்பு நீங்கள் இவ்வளவு கடுமையாக இல்லை.”
திமுக கூட்டணியினரும், அவர்களது ஊடகங்களும் மிக மோசமாக போகும் போது ஏற்படும் ஆத்திரம், கோபம் ஆகியவையே என் எழுத்துக்களாக வருகின்றன.
நான் இப்படி எழுதுவதற்கு காரணம் அவர்களின் நடவடிக்கைகளே. மற்றபடி எனக்கு இப்படி எழுத வேண்டும் என்ற விருப்பம் இல்லை.
சொல்லப்போனால் இவற்றை வெறுக்கிறேன் ஆனால், என் கோபத்தை காட்ட இத்தளம் மட்டுமே உள்ளது. நான் சமூகத்தளங்களில் இல்லை.
“நீங்களும் பாஜக வுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக எழுதினீர்கள். பயனில்லை. ”
😀 நான் எழுதித்தான் மோடி வெல்கிறாரா? என் தளத்தைத் தினமும் சராசரியாக 500 பேர் படிப்பார்கள். அதில் உங்களைப் போன்ற மோடிக்கு வாக்களிக்காத நபர்களும் அடங்குவர்.
அப்படி இருக்கையில் நான் எழுதி என்ன நடக்க போகிறது?
சிறப்பான நலத்திட்டங்களை மோடி செய்கிறார், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார். அதை எழுதுகிறேன் அவ்வளவே.
நான் எழுதுவது என் திருப்திக்கு தான். அது என் தனிப்பட்ட விருப்பம்.
“நீதியான முறையில் நடந்து இருந்தால் இனிமேல் மோடி புகழின் உச்சியில் ஏறுவார். அநீதி இழைத்து இருந்தால் இனிமேல் தான் கெட்ட காலம் ஆரம்பமாகும்.”
மாற்று கருத்தில்லை. அனைவருக்கும் பொருந்தும்.
“நீங்கள் பாஜக ஆதரவு ஊடகமோ ஏனைய ஊடகமோ செய்திகளை முழுவதும் நம்புகுறீர்கள். ”
எப்படி கூறுகிறீர்கள்? நான் அனைத்தையும் படிக்கிறேன் அதனால் தான் என்னால் தெரிந்து எழுத முடிகிறது.
ஒருவேளை நான் தவறு என்றால், சுட்டிக்காட்டலாம். திருத்திக்கொள்வேன்.
100% சரியாக யாராலும் இருக்க முடியாதே!
நீங்கள் கூறிய இரு உதாரணங்களையும் நான் என் தளத்தில் எழுதவில்லை.
“ஒரே நாளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணம் ஏமாற்றப்பட்டது.”
ராகுல் போல கூறுகிறீர்கள் 🙂 .
அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. சந்தை முன்பு இருந்ததை விட அதிகம் தான் ஆகியுள்ளது.
நானே இதனால் இலாபம் அடைந்துள்ளேன்.
அவர் பொதுப்படையாக தானே கூறினார். எந்தப் பங்கையும் குறிப்பிட்டு கூறவில்லையே.
நீங்கள் கடன் வாங்குங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்து விடுகிறோம் என்று கூறி விட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கண்டுகொள்ளாமல் விட்ட திமுக போல செய்யவில்லையே.
சொன்னபடி நடந்து விட்டது. எதிர்பார்த்த இலாபத்தில் குறைவு இருக்கலாம் ஆனால், நட்டம் கிடையாது.
இலங்கை செய்தி என்னவென்று தெரியவில்லை. நான் இச்செய்தியை படிக்காததால் கருத்து கூற விரும்பவில்லை.
“தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று பேசிய ஆடியோ கசிந்தது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?”
இந்தியாவை 2047 ல் முஸ்லீம் நாடாக மாற்றப்போவதாக முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டு வருவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உங்கள் பதிலுக்கு நன்றி.
அதில் உங்களைப் போன்ற மோடிக்கு வாக்களிக்காத நபர்களும் அடங்குவர்
நாம் தெரிவு செய்யும் நபர்/அரசு செய்யும் நலவுகளுக்கு எங்களுக்கும் பங்கு உண்டு. தீமைகளுக்கும் எங்களுக்கு பங்கு உண்டு.
அதனால் நன்மை செய்யாவிட்டால் பரவாயில்லை.குறைந்தளவு தீமைகள் செய்யும் நபருக்கு/கட்சிக்கு வாக்களிக்கிறேன். அநியாயம் செய்யப்பட்டவரின் சாபத்தை நானோ எனது குடும்பமோ வாங்கி விடக்கூடாது என்று பயம். நான் வாக்களித்த நபர் தோற்றாலும் எனக்கு மகிழ்ச்சி தான்.
இந்தியாவை 2047 ல் முஸ்லீம் நாடாக மாற்றப்போவதாக முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டு வருவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை. உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு எங்கள் மார்க்கம் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.
முகலாயர்கள் செய்த தவறுகளோ வேறு யார் செய்த தவறுகளோ உங்களுக்கு முஸ்லிம்கள் மீது கோபம். அவர்கள் செய்த தவறுகளுக்கு நாங்கள் எப்படி பொறுப்பு? அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக சண்டை மூட்டி விடுகிறார்கள். அவர்கள் கட்டாயம் அந்த பாவத்தை சுமப்பார்கள் . நீங்கள் ஏன் அந்தப் பாவத்தில் பங்காளியாக விரும்புகிறீர்கள்?
உங்கள் தளத்தை 2007 இல் இருந்து பார்வையிட்டு வருகிறேன். சில கட்டுரைகள் நிச்சயமாக எங்கள் மனதை புண்படுத்துகின்றது.
நன்றி
வணக்கம் கிரி அவர்களே
அருமையாக எழுதி இருக்கிறீர்கள்
எனக்கு இந்த தேர்தல் முடிவுகள் மிக ஆச்சரியமாக இருக்கிறது
தெரிந்த நண்பர்கள் இருவர் திமுக அபிமானிகள், பேசும் போது எவ்வளவு திமுக கொள்ளை அடித்தாலும் அவர்களுக்கு மட்டுமே ஓட்டு போடுவோம் என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு அறிவாளி கூட்டம் இருக்கும் வரை திமுகவுக்கு கொண்டாட்டம் தான்
அப்புறம் என்னுடைய முஸ்லீம் நண்பர்கள், கிருஸ்துவ நண்பர்கள் பலருக்கும் மோடி என்று சொன்னாலே இரத்த கொதிப்பு வந்து விடுகிறது. மோடி செத்தால் நாடு உருப்படும் என்றும், இந்து வெறியர் என்றும் பைத்தியக்கார தனமாக பேசுகிறார்கள். ஏன் என்று புரிய வில்லை. இந்துவாக இருப்பது தவறா?
ஸ்டாலின் என்ற சுடலை எவ்வளவு இந்துக்களை கேவலப்படுத்தி பேசினாலும் இந்துக்கள் இவர்க்கே ஓட்டு போடுவது மக்கள் மன நோயில் உள்ளனர் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் இப்படி லூசு கூட்டம் இருக்கிறதா?
எது எப்படியோ, ராகுல் வர வில்லை.. சந்தோசம்..
நன்றி.. இந்துக்களுக்கு எப்போது உரைக்கும்.என்று பார்ப்போம்
@Fahim
“நன்மை செய்யாவிட்டால் பரவாயில்லை.குறைந்தளவு தீமைகள் செய்யும் நபருக்கு/கட்சிக்கு வாக்களிக்கிறேன். அநியாயம் செய்யப்பட்டவரின் சாபத்தை நானோ எனது குடும்பமோ வாங்கி விடக் கூடாது என்று பயம்.”
அதே தான் எனக்கும் Fahim. அதனால் தான் திமுகவுக்கு வாக்களிப்பதில்லை, பாஜகவுக்கு வாக்களிக்கிறேன்
“முகலாயர்கள் செய்த தவறுகளோ வேறு யார் செய்த தவறுகளோ உங்களுக்கு முஸ்லிம்கள் மீது கோபம்.”
முகலாயர்கள் செய்தது தவறு அது முடிந்து விட்டது. அதைப் பேசிப் பயனில்லை.
வேறு யாரோ அல்ல, அதுவும் பல முஸ்லிம்கள், அரசியல்வாதிகள் தற்போது செய்வதே கோபம்.
“அவர்கள் செய்த தவறுகளுக்கு நாங்கள் எப்படி பொறுப்பு? அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக சண்டை மூட்டி விடுகிறார்கள்.”
நீங்கள் முந்தைய கருத்தில் கேட்ட கேள்விக்கும் என் பதிலும் இதுவே. எவனோ செய்வதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?
“உங்கள் தளத்தை 2007 இல் இருந்து பார்வையிட்டு வருகிறேன். சில கட்டுரைகள் நிச்சயமாக எங்கள் மனதை புண்படுத்துகின்றது.”
2008*
இந்தியாவை 2047 ல் முஸ்லீம் நாடாக்க திட்டமிடுதல்.
ஆட்டின் மீது ராம் என்று எழுதி பக்ரீத்துக்கு பலி.
முஸ்லிம் பெரும்பான்மை பகுதியில் இந்துக்கள் வசிக்க முடியவில்லை.
முஸ்லீம் ஆண் இந்து பெண்ணைத் திருமணம் செய்தால், மதம் எனப் பிரிந்து போதும், இனம் எனப் பிரிந்தது போதும் என்று பாடுகிறார்கள். ஆனால், அதே இந்து ஆண் முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்தால், கொலை செய்கிறார்கள்.
இந்துக் கடவுளை விமர்சனம் செய்து படம் எடுத்தால், If you don’t like, don’t watch என்கிறார்கள், முஸ்லிமை விமர்சித்துப் படம் எடுத்தால் I don’t like, you don’t watch என்கிறார்கள்.
மற்ற முஸ்லீம் நாடுகளிலிருந்து முஸ்லிம்களை இந்தியாவில் கள்ளத்தனமாக குடியமர்த்தி இந்துக்களை சிறுபான்மையினர் ஆக்குகிறார்கள்.
காபிர் என்று கூறி கொலை செய்கிறார்கள்.
ஜூஸில், உணவு பொருட்களில் எச்சையை துப்பி விற்பனை செய்கிறார்கள்.
இந்து பெண்களை குறி வைத்து லவ் ஜிகாத் செய்கிறார்கள்.
வக்பு வாரியம் என்ற பெயரில் பல நிலங்களை வளைத்து விட்டார்கள்.
பாஜகக்கு வாக்களித்தற்காக கொலை செய்கிறார்கள், தாக்குகிறார்கள்.
இது மாதிரி கூறிக்கொண்டே செல்ல முடியும். இதையெல்லாம் பார்த்து நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்களா?
என் மனதும் இவற்றையெல்லாம் பார்த்து கொந்தளிக்கிறது.
உங்களுக்கு உலகில் 50 நாடுகள் உள்ளன. இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே உள்ளது.
இங்கேயும் எங்களுக்கு பாதுகாப்பில்லை, நிம்மதியில்லை, உரிமையில்லை, பாரபட்சம் காட்டப்படுகிறது என்றால் கோபம் வரும் தானே!
நான் அனைவரையும் திருப்தி செய்ய எழுதுவதில்லை. என் மனசாட்சிக்கு சரி / தவறு என்று படுவதை எழுதுகிறேன்.
நான் எழுதுவது புண்படுத்துகிறது என்றால், எழுதியதில் என்ன தவறு என்று குறிப்பிட்டால் அதற்கு விளக்கம் அளிப்பேன் மாறாக அனைவருக்கும் பிடிப்பதை எழுத நான் இங்கில்லை.
என்னிடம் எப்போதும் அதை எதிர்பார்க்காதீர்கள்.
பொய் பேசுகிறவன், வேண்டும் என்றே எழுதுபவன், தவறான தகவல்களைத் தெரிவிப்பவனால் எப்படி அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும்?
பலர் கடுமையான விமர்சனம் வந்தால், Block செய்து விடுவார்கள் அல்லது கருத்தை நீக்கி விடுவார்கள். இங்கே அப்படி எதுவுமே இவ்வளவு வருடங்களாக இல்லை.
இன்று வரை Comment Moderation கிடையாது.
மனசாட்சிக்கு நேர்மையாகவே எழுதுபவரால் மட்டுமே அனைத்து கருத்துகளையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.
உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பதால் தான், நீங்களே கருத்து வேறுபாடு இருந்தாலும் பல காலமாக தொடர்கிறீர்கள்.
தனிப்பட்ட நபர்களுடன் எனக்கு பிரச்சனையில்லை, யார் தவறு செய்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறதோ அவர்களே எனக்கு பிரச்சனை.
இந்து மதத்துக்கு யாரால் ஆபத்தோ, யாரால் பிரச்சனையோ அவர்களையே விமர்சிக்கிறேன்.
மேலும் தொடர்ந்து எழுதுவேன். எழுதுவதற்கு ஏராளமானவை உள்ளன. எனவே, தவறு இருந்தால் சுட்டிக்காட்டுக்கொள்ளுங்கள்.
@கிருத்திகா
நன்றி 🙂
“தெரிந்த நண்பர்கள் இருவர் திமுக அபிமானிகள், பேசும் போது எவ்வளவு திமுக கொள்ளை அடித்தாலும் அவர்களுக்கு மட்டுமே ஓட்டு போடுவோம் என்று சொல்கிறார்கள்.”
இதே சந்தேகம் தான் எனக்கும்.
கடன் ரத்து செய்கிறேன், நீட் ரத்து செய்கிறேன், மின்சார கட்டணம் மாதமொருமுறை, பழைய ஓய்வூதிய முறை உட்பட ஏராளமான விஷயங்களை ஏமாற்றியும் வாக்களிக்கிறார்களே என்று வியப்பாக உள்ளது.
கட்டுரையில் கூறியுள்ளபடி திமுகவுக்கான நேரம். ஒன்றும் செய்ய முடியாது.
“என்னுடைய முஸ்லீம் நண்பர்கள், கிருஸ்துவ நண்பர்கள் பலருக்கும் மோடி என்று சொன்னாலே இரத்த கொதிப்பு வந்து விடுகிறது.”
இதே நிலை என் பக்கமும் உள்ளது.
“ஸ்டாலின் என்ற சுடலை எவ்வளவு இந்துக்களை கேவலப்படுத்தி பேசினாலும் இந்துக்கள் இவர்க்கே ஓட்டு போடுவது மக்கள் மன நோயில் உள்ளனர் என்று தான் நினைக்க தோன்றுகிறது.”
இதை பேசி, நினைத்து எனக்கு சலிப்பே வந்து விட்டது. இந்துக்களை பொறுத்தவரை அவர்களுக்கே ஒரு சம்பவம் நடந்தாலும் உணர்வார்களா என்பது சந்தேகமே!
“இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் இப்படி லூசு கூட்டம் இருக்கிறதா?”
நம்மை விட மோசமாக மேற்கு வங்கத்தில் உள்ளார்கள். அதனால் நாம் கொஞ்சம் நிம்மதி அடையலாம்.
“எது எப்படியோ, ராகுல் வர வில்லை.. சந்தோசம்..”
உண்மை. வந்து இருந்தால் இந்துக்கள் நிலைமை மட்டுமல்ல, இந்தியாவின் நிலையும் மோசமாகி இருக்கும்.