சிங்கப்பூர் தைப்பூசம் | குவிந்த வெளிநாட்டினர் !

50
சிங்கப்பூர் தைப்பூசம் Singapore Thaipoosam

லகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்து பண்டிகையில் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் தைப்பூச திருவிழா முக்கியமானது. Image Credit

தமிழகத்தை விடச் சிறப்பாகச் சிங்கப்பூர் & மலேசியாவில் கொண்டாடப்படுகிறது.

அதுவும் மலேசியா அதகளப்பட்டு விடும் இந்த முறை 10 லட்சம் பேர் வந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் தைப்பூசம்

வருடாவருடம் சிங்கப்பூர் தைப்பூசம் திருவிழா கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை நான் கூறவில்லை சிங்கப்பூர் தமிழ்ச்செய்தி சேனலான வசந்தம் தொலைக்காட்சி கூறி இருக்கிறது.

என் வீட்டின் அருகே உள்ள சிங்கப்பூர் தமிழ் குடும்ப நண்பர் உறுப்பினர்கள் காவடி எடுத்ததால், எங்களை அழைத்து இருந்தார்கள். அவர்களுடன் கோவிலில் காவடியின் ஆரம்பகட்ட நிலையை முதன் முதலில் காணும் வாய்ப்பு கிடைத்தது.

சில சுவாரசியங்கள்

வீட்டில் இருந்து செல்லக் காவடியை எடுத்துச் செல்ல ஒரு லாரியை ஏற்பாடு செய்து இருந்தார்கள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு லாரியில் கிளம்பி சென்றது ரொம்ப சந்தோசமாக இருந்தது அதுவும் சிங்கப்பூரில்.

சிங்கப்பூர் தைப்பூசம் Singapore Thaipoosam

காவடி மரத்தில் செய்வது அந்தக் காலம், இங்கே பெரும்பாலும் அனைவரும் ஸ்டீல் காவடி தான் எடுக்கிறார்கள்.

மிகப்பெரியதாக உள்ளது.

5000 சிங்கப்பூர் டாலர்

ஒரு சில காவடி வேலைப்பாடுடன் செய்ய 5000 சிங்கப்பூர் டாலர் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 1,60,000 வரை(*2011) உள்ளது.

நிஜமாகவே.. நம்பினால் நம்புங்கள்.

காவடி ஊர்வலம் லிட்டில் இந்தியா பெருமாள் கோவிலில் துவங்கி டோபி காட் என்ற இடத்தில் உள்ள முருகன் கோவிலை அடைகிறது (தோராயமாக இரண்டு கிமீ)

என் மகனையும் அழைத்துச் சென்று இருந்ததால், காவடி புறப்படும் வரை இருந்து விட்டுக் கிளம்பி விட்டேன், இவனுக்குத் தூக்கம் வந்து விட்டதால், கடந்த முறை போல இந்த முறை ஊர்வலம் பார்க்க முடியாமல் போய் விட்டது 🙁 .

இருந்தாலும் முதன் முறையாக அலகு குத்துவதை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

வெளிநாட்டினர் பெருமளவில் குவிந்து விட்டனர். உயர்தர கேமராக்களை கொண்டு படமாகச் சுட்டுத்தள்ளிக்கொண்டு இருந்தனர். சீனர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் என்று ஏகப்பட்ட பேர்.

சிங்கப்பூர் தைப்பூசம் Singapore Thaipoosam

உள்ளே நுழைந்த போது மேளச்சத்தம் பட்டயகிளப்பிக்கொண்டு இருந்தது. ஒரு குழுவினர் அடித்த அடியைப் பார்த்து..

மவனே! தூக்குடா கிரி காவடிய! என்கிற ரேஞ்சுக்கு ஆகி விட்டேன். கை காலெல்லாம் பரபர என்று ஆகி விட்டது.

இந்தக்குழுவினர் அனைவரும் ஒரே மாதிரியாக உடை அணிந்து இருந்தனர், இவர்களுக்குப் பிறகு பலர் வந்தாலும் இவர்கள் அடிக்கு இணையாகக் கூட யாரும் இல்லை.

பட்டாசாக இருந்தது. இவர்கள் அடிக்கும் போது நமது உடலில் மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது.

சீனர்கள் எடுத்த பால் குடங்கள்

சீனர்களும் அதிகளவில் காவடி பால்குடம் எடுத்து இருந்தனர், அவர்களில் ஒருவர் போட்ட ஆட்டம் இன்னும் கண்ணுக்குள் உள்ளது. நம்மவர்களுக்குச் சற்றும் சளைக்காமல் குஷியாக ஆட்டம் போட்டார்.

குடும்ப நண்பர் மகன் முதலில் அலகு குத்துவதை நினைத்துப் பயந்து கொண்டு இருந்தார் (கல்லூரி படிக்கும் வயது), முதல் முறை என்பதால். கடவுளை வணங்கி அலகு குத்தும் போதும் குத்திய பிறகும் எந்த பயமும் இல்லாமல் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்.

அவரது காவடியில் வித விதமாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது, அனைத்தும் முடிந்து தயார் ஆகி அங்கே அடித்த அடிக்கு ஒரு ஆரம்ப ஆட்டம் போட்டு குஷியாகக் கிளம்பி விட்டார்

மேளத்துக்கு தடை

இந்த முறை புறப்படும் இடமான பெருமாள் கோவிலில் மட்டுமே மேளச்சத்தத்திற்கு அனுமதி கொடுத்து இருந்தார்கள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து விட்டார்கள், காரணம் சென்ற முறை பிரச்சனை ஆனது என்பதால்.

மேளச்சத்தம் இல்லாத காவடி ஊர்வலத்தை நினைத்தால் சப்பென்று இருக்கிறது.

நான் ஊர்வலம் பார்க்கவில்லை என்பதால் மேளச்சத்தம் இருந்ததா! என்று தெரியவில்லை. பொதுவாக ஒருவரை களைப்படைய வைக்காமல் மற்றும் வலி தெரியாமல் இருக்க வைப்பது இந்த மேளச்சத்தம் தான்.

மேளச்சத்தத்துடன் காவடி ஊரவலத்தை பார்ப்பது ஒரு கண் கொள்ளா காட்சி.

சிங்கப்பூர் தைப்பூசம் Singapore Thaipoosam

அலகு குத்துவதை வெளிநாட்டினர் வளைத்து வளைத்துப் படம் எடுத்துக்கொண்டு இருந்தனர்.

ரொம்ப ஆர்வமாக அது பற்றிய விவரங்களை அங்கே இருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

ஒரு வெளிநாட்டுப்பெண் அலகு குத்துவதை மிக மிக ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

ஒரு வெள்ளைக்காரர் அவரது குடும்பத்தினரிடம் மேள சத்தத்திற்கு ஏற்ப ஆடி அவர்களை மகிழ்வித்துக்கொண்டு இருந்தார்.

குடும்ப நண்பர் மகன் அலகு குத்தி தயாராக இருந்த போது அங்கு வந்த அவரது உறவினர் பெண், அவரது கன்னத்தைத் தடவி பாசமாக ஒரு முத்தம் கொடுத்த போது அதைப் பார்த்துக்கொண்டு இருந்த வெளிநாட்டினர் கண்கள் வியப்பில் விரிந்து, சற்று தன்னை மறந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்தார்கள்.

இன்னொரு அவர்களது குடும்ப உறுப்பினர் 25 வருடமாகக் காவடி எடுக்கிறார், அவர் நெற்றியில் சிறிய அலகு குத்தினார்கள் (இது தான் அலகு குத்துவதில் ஆரம்பம் போல உள்ளது) அப்போது அவரது கண்கள் கடவுளை நினைத்துக் கண்கலங்கியது.

ஒருவித பரவசத்தில் என்னெவென்று விவரிக்க முடியாத படி அவர் அந்த ஒரு நிமிடம் மட்டும் வார்த்தைகளால் கூற முடியாதபடி உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

இந்த வருடத்தில் புதிதாகக் கண்டது, ஒரு கால் இல்லாத ஒருவர் (பார்க்க படம்) இதில் கலந்து கொண்டது.

இன்னொரு பெரியவர் ஃபுட்பால் விளையாடும் போது போடும் ஹேங்லெட் மாதிரி ஒன்றை அணிந்து காவடி எடுத்தது…. ஆச்சர்யமாக இருந்தது.

ஒவ்வொரு காவடி வெளியே செல்லும் போதும் அதில் அடையாளமாக டோக்கன் கட்டப்படுகிறது.

இவர்கள் மட்டுமே காவடி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடந்த வருட தைப்பூச இடுகை சிங்கப்பூரை அதிர வைத்த தைப்பூசம். இதைப்படித்தால் சிங்கப்பூர் காவடி ஊர்வலம் எப்படி இருக்கும் என்று நீங்கள் உணர்ந்து கொள்ளலாம் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

50 COMMENTS

 1. பறவை காவடி , தூக்கு காவடி, செதில் காவடி குத்தி ஆடுபவர்கள் யாரும் வலிப்பதாக இதுவரை கூறவில்லை, ஆனால் பார்க்கும் எமக்குத்தான் வலிக்கும், இதுதான் தமிழனின் முப்பாட்டன் முருகனின் அருள் என்பது போல் இருக்கிறது.

  //நான் உள்ளே நுழைந்த போது மேளச்சத்தம் பட்டயகிளப்பிக்கொண்டு இருந்தது. ஒரு குழுவினர் அடித்த அடியை பார்த்து ..மவனே! தூக்குடா கிரி காவடிய! என்கிற ரேஞ்சுக்கு ஆகி விட்டேன். கை காலெல்லாம் பரபர என்று ஆகி விட்டது.//

  எந்த வாத்தியத்தாலும் நல்ல மேள சத்தத்தினால் மனதிலும் உடலிலும் உருவாகும் அந்த பரவசநிலை கொந்தளிப்பை கொண்டுவரமுடியாது.

 2. கிரி ,
  நல்ல பதிவு , தாள சத்தத்திற்கு இணை வேறு இல்லை !!!!!!!!!!!! அனுபவத்தில் சொல்லுகிறேன்

 3. சிங்கை தைப்பூசம் விழா பற்றி நிறைய தகவல்களை அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

 4. ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் சிங்கையில் இருந்தாலும் இந்த‌ கூட்ட‌ம் ம‌ற்றும் காதை கிழிய‌ வைக்கும் ச‌த்த‌ம் எல்லாம் என‌க்கு ஒவ்வாமை என்ப‌தால் க‌ல‌ந்துகொள்ள‌வில்லை.ஓரிரு முறை சிர‌ங்கூன் சாலையில் சிறிய‌ குழுவின‌ர்க‌ள் போவ‌தை ம‌ட்டும் பார்த்த‌துண்டு.

 5. பொங்கலுக்கு சிலதினம் முன்னர் திருச்செந்தூர் செல்லுகையில் பாதயாத்திரையாகவே வந்து கொண்டிருந்த ஒருசிலர், சாலையில் பாதியை அடைக்கும் நீளத்துக்கு ஆறு முதல் எட்டடி நீள அலகு குத்தி அதை இரு கைகளாலும் தாங்கியபடி வந்து கொண்டிருந்தார்கள். அத்தனை நீளமாய் அப்போதுதான் பார்த்தேன்.

  //நீண்ட வருடங்களுக்கு பிறகு லாரியில் கிளம்பி சென்றது ரொம்ப சந்தோசமாக இருந்தது அதுவும் சிங்கப்பூரில்.//

  :)!

 6. கடல் கடந்து சென்றாலும் நம் முப்பாட்டன் முருகனை மறக்காது அவர் தைப்பூசம் கொண்டாடும் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.

  அருமையான பதிவு கிரி. மிக்க நன்றி

 7. தங்களுடைய சென்ற வருட இடுகையையும் சென்று பார்த்தேன். கொங்கு வாடை வீசியது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அடியேனும் உடுமலைப்பேட்டைக்காரன்தான்.

 8. ஸ்வாமி ஓம்கார் மற்றும் அண்ணாமலையான் வருகைக்கு நன்றி

  ======================================================================

  // எப்பூடி … said…
  எந்த வாத்தியத்தாலும் நல்ல மேள சத்தத்தினால் மனதிலும் உடலிலும் உருவாகும் அந்த பரவசநிலை கொந்தளிப்பை கொண்டுவரமுடியாது.//

  அடி சரவெடியாக இருக்கும் 🙂

  ======================================================================

  // MANI said…

  கிரி ,
  நல்ல பதிவு , தாள சத்தத்திற்கு இணை வேறு இல்லை !!!!!!!!!!!! அனுபவத்தில் சொல்லுகிறேன்//

  🙂 மணி தமிழ் தட்டச்சில் நல்லா தேறிட்டீங்க போல 😉

  ======================================================================

  // வடுவூர் குமார் said…

  ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் சிங்கையில் இருந்தாலும் இந்த‌ கூட்ட‌ம் ம‌ற்றும் காதை கிழிய‌ வைக்கும் ச‌த்த‌ம் எல்லாம் என‌க்கு ஒவ்வாமை என்ப‌தால் க‌ல‌ந்துகொள்ள‌வில்லை.ஓரிரு முறை சிர‌ங்கூன் சாலையில் சிறிய‌ குழுவின‌ர்க‌ள் போவ‌தை ம‌ட்டும் பார்த்த‌துண்டு.//

  என்னங்க கலந்துக்காம இப்படி தவற விட்டுட்டீங்களே! 🙁

  ======================================================================

  // செ.சரவணக்குமார் said…

  சிங்கை தைப்பூசம் விழா பற்றி நிறைய தகவல்களை அறிய முடிந்தது//

  நன்றி சரவணக்குமார்

  ===================================================================================

  // சிங்கக்குட்டி said…

  உங்கள் சென்ற வருட இடுகையும் அப்போது படித்தேன், அதனால் இதை நேற்று மீள்பதிவு என்று நினைத்தேன்.//

  🙂 ஆனால் ஒவ்வொருவருடமும் இதை எழுதினால் மீள் பதிவு போலவே இருக்கும். கொஞ்சமே வித்யாசம் காட்ட முடியும்.

  ======================================================================

  பட்டாப்பட்டி மற்றும் சபரிநாதன் வருகைக்கு நன்றி

  ======================================================================

  // குறை ஒன்றும் இல்லை !!! said…

  உங்கள் இஷ்ட தெய்வம் முருகன் தானே!!!!//

  வாங்க ராஜ் எப்படி இருக்கீங்க! ஆளையே காணோம்!

  ஆமாம் முருகன் என் இஷ்ட தெய்வம் மற்றும் எங்கள் குல தெய்வம்

  ======================================================================

  // ராமலக்ஷ்மி said…

  பொங்கலுக்கு சிலதினம் முன்னர் திருச்செந்தூர் செல்லுகையில் பாதயாத்திரையாகவே வந்து கொண்டிருந்த ஒருசிலர், சாலையில் பாதியை அடைக்கும் நீளத்துக்கு ஆறு முதல் எட்டடி நீள அலகு குத்தி அதை இரு கைகளாலும் தாங்கியபடி வந்து கொண்டிருந்தார்கள்.//

  அடேங்கப்பா! நினைத்தாலே தலை சுத்துதே!

  ======================================================================

  நாத்திகர் கோவி கண்ணனின் ஆத்திக பதிவா 😉

  ======================================================================

  // Kailashi said…

  தங்களுடைய சென்ற வருட இடுகையையும் சென்று பார்த்தேன். கொங்கு வாடை வீசியது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அடியேனும் உடுமலைப்பேட்டைக்காரன்தான்.//

  எங்கே சென்றாலும் நம்ம ஊரை மறக்க முடியுமா!

  நான் உடுமலை பேட்டை அருகே உள்ள கரட்டு மடத்தில் (காந்தி கலா நிலையம்) படித்தேன்..ஹாஸ்டலில் தங்கி உடன் தர்ம அடியும் வாங்கி 🙂

  ======================================================================

  // எம்.எம்.அப்துல்லா said…

  பழக்கதோசத்தில் அப்படியே ஓட்டும்போட்டு பிரியாணி பொட்டலம் கேக்காம விட்டீங்களே!!//

  ஹி ஹி ஹி உங்க அரசியல் நக்கலா! சரி உங்க தலைவர் தான் பொட்டலம் வாங்கலைனாலும் வாங்க வைத்து (திணித்தாவது) விடுகிறாரே! :-)))

 9. முதல் பாராவுக்கு அப்புறம் கண்னை மூடி படிச்சேன்

 10. நீண்ட வருடங்களுக்கு பிறகு லாரியில் கிளம்பி சென்றது ரொம்ப சந்தோசமாக இருந்தது அதுவும் சிங்கப்பூரில்.

  //

  பழக்கதோசத்தில் அப்படியே ஓட்டும்போட்டு பிரியாணி பொட்டலம் கேக்காம விட்டீங்களே!!

  :))

 11. தமிழ் மொழி,கலை,மதம்,கலாச்சாரம் தேசம் விட்டு தேசம் பரவுது.தமிழகம் மட்டும் தங்கிலிஷுக்கு பரக்குது.நல்லவேளை ஜல்லிக்கட்டு மட்டும் இன்னும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்குது.

  இந்த வருசம் முருகன் அடிவாரம் படத்தைக் காணோமே!

 12. பட்டாபட்டி பின்னூட்டத்துல அடக்கி வாசிக்கிற மாதிரி தெரியுது:)

 13. //முதல் பாராவுக்கு அப்புறம் கண்னை மூடி படிச்சேன்//

  வால்பையன்!மனப்பாடம்ன்னு அர்த்தம்:)

 14. //வால்பையன்!மனப்பாடம்ன்னு அர்த்தம்:) //

  அப்போ பள்ளிகூடத்தில் அப்படி தான் படிச்சிங்களா!?

 15. புது ஆபீஸ், புது பொறுப்பு கொஞ்சம் வேலைகள் அதான் அடிக்கடி வர முடிவதில்லை..

  நான் எல்லாம் இப்போ ரொம்ப பிஸி ன்னு நம்ம கவுண்டர் சொல்றது உங்க நியாப்கத்துக்கு வந்தா நான் பொறுப்பில்லே!!!

 16. மவனே! தூக்குடா கிரி காவடிய! என்கிற ரேஞ்சுக்கு ஆகி விட்டேன். கை காலெல்லாம் பரபர என்று ஆகி விட்டது.

  இவர்கள் அடிக்கும் போது நமது உடலில் மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது.

  ஆஹா….

  ஆயிரத்தில் ஒருவனில் வரும் சப்ததிட்கும் அவர்கள் வெறியோட ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதை பார்ததட்கும் ஒரு ப்ரூப் உங்க மூலமா கிடைச்சுருச்சு

  நல்ல கட்டுரை

 17. சிங்கப்பூர் தை பூசம் பற்றிய பதிவு நேரில் பார்ப்பது போல் இருந்தது
  நன்றி கிரி

 18. மவனே! தூக்குடா கிரி காவடிய! என்கிற ரேஞ்சுக்கு ஆகி விட்டேன். கை காலெல்லாம் பரபர என்று ஆகி விட்டது.

  முருகா என் அப்பனே சரணம்

  பக்தி பரவசம் ஆகிட்டேன்

 19. ஆமாம் கிரி நீங்கள் அந்த சுட்டியை தந்தால்தான்…,,

 20. கிரி
  என் பெயர் ஷங்கர் ,மணி அல்ல ,அது என் அப்பாவுடையது….

 21. // வால்பையன் said…
  முதல் பாராவுக்கு அப்புறம் கண்னை மூடி படிச்சேன்//

  :-)) அருணின் ஞானக்கண் மூலமாவா! 😉

  ======================================================================

  // ராஜ நடராஜன் said…

  தமிழ் மொழி,கலை,மதம்,கலாச்சாரம் தேசம் விட்டு தேசம் பரவுது.தமிழகம் மட்டும் தங்கிலிஷுக்கு பரக்குது.//

  எப்பவுமே இருக்கும் போது அதன் அருமை தெரியாது இல்லாத போது தான் அதனை கொண்டாடத்தோணும்.. அது போல வேற நாட்டுக்கு வந்தால் தான் நம்ம நாட்டோட பாசம் பொங்குது :-)))

  //நல்லவேளை ஜல்லிக்கட்டு மட்டும் இன்னும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்குது.//

  உண்மையாகவே!

  //இந்த வருசம் முருகன் அடிவாரம் படத்தைக் காணோமே!//

  அது மலேசியா பத்து மலை..இது சிங்கப்பூர்.

  //பட்டாபட்டி பின்னூட்டத்துல அடக்கி வாசிக்கிற மாதிரி தெரியுது:)//

  🙂

  //வால்பையன்!மனப்பாடம்ன்னு அர்த்தம்:)//

  :-)))

  ======================================================================

  // குறை ஒன்றும் இல்லை !!! said…

  புது ஆபீஸ், புது பொறுப்பு கொஞ்சம் வேலைகள் அதான் அடிக்கடி வர முடிவதில்லை..//

  ஓ! அப்படியா கலக்குங்க. வாழ்த்துக்கள்.

  //நான் எல்லாம் இப்போ ரொம்ப பிஸி ன்னு நம்ம கவுண்டர் சொல்றது உங்க நியாப்கத்துக்கு வந்தா நான் பொறுப்பில்லே!!//

  :-)))

  ======================================================================

  // Sadhasivam said…

  ஆயிரத்தில் ஒருவனில் வரும் சப்ததிட்கும் அவர்கள் வெறியோட ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதை பார்ததட்கும் ஒரு ப்ரூப் உங்க மூலமா கிடைச்சுருச்சு //

  :-)))

  //நல்ல கட்டுரை//

  நன்றி சதா

  ======================================================================

  // r.v.saravanan said…

  சிங்கப்பூர் தை பூசம் பற்றிய பதிவு நேரில் பார்ப்பது போல் இருந்தது//

  நன்றி சரவணன்

  ======================================================================

  வனுர் நன்றி

  ======================================================================

  // கிருபாநந்தினி said…

  வருவான் வடிவேலன்ல இந்த அலகு குத்துற சீனெல்லாம் பார்த்திருக்கேங்க!//

  🙂 நான் நேர்லயே பார்த்துட்டேன்

  ======================================================================

  // Mahatma said…

  Nallla errukugnagga Giri.!. I really enjoyed reading this. Thanks for writing twice about "Thaipusam" since last year. I will talk/chat you soon. :)//

  காந்தி நன்றி. இப்ப நீங்க ரொம்ப பிசி போல 🙂

  ======================================================================

  // shankar said…

  கிரி
  என் பெயர் ஷங்கர் ,மணி அல்ல ,அது என் அப்பாவுடையது….//

  ஓ! மணி என்ற பெயரில் கமெண்ட் வந்ததால் அப்படி நினைத்துட்டேன்.. இனி ஷங்கர் என்றே அழைக்கிறேன்.

 22. // அருப்புக்கோட்டை பாஸ்கர் said…
  எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி //

  நன்றிக்கு நன்றி 🙂

  ======================================================================

  // Arun said…

  giri,
  thala oru pathiva podurathu romba naal wait pannurom la:)//

  சொல்வதை கேட்டு டென்ஷன் ஆகிடாதீங்க! ஹி ஹி ஹி ஒரு சர்டிபிகேசன் எழுத படித்துக்கொண்டு இருக்கிறேன். அதனால் நானும் எழுதவில்லை எதையும் படிப்பதும் இல்லை.

  உங்கள் அன்பிற்கு நன்றி அருண் [நீங்க ஒருத்தர் தான் கேட்டு இருக்கீங்க :-)))) ]

 23. சர்டிபிகேசன் nalla panna vazthukal

  appadiye konjum thayavu panni oru pathiva podunga.. mokkai topic ka irunthalum parava illai.. unga yeluthu nadaike athai padikalam

 24. // Arun said…

  சர்டிபிகேசன் nalla panna vazthukal //

  நன்றி அருண்

  //appadiye konjum thayavu panni oru pathiva podunga.. mokkai topic ka irunthalum parava illai.. //

  ரொம்ப குஷ்டம் 🙂

  ======================================================================

  // Tech Shankar said…

  சான்றிதழ் படிப்பை நல்லபடியாக நிறைவேற்ற வாழ்த்துகள் தோழரே!//

  நன்றி தமிழ்நெஞ்சம்

 25. "ரொம்ப குஷ்டம் :-)"

  Rajini ku rasigan na irupathu kashtam nu solluvanga..antha mathiri ippa Giri Thalayoda yeluthuku rasikan aanalum kashtam than pola.. Pathiva vanga romba kashta paduromm… just kidding.. please write up something in ur spare time thala.. thanks

 26. // Arun said…
  giri thala nalla prepare pannitu irupeenga nu namburen… irunthalum konjum time kidaicha oru pathiva podunga//

  அருண் உங்களின் என் (எழுத்துக்களின்) மீதான அன்பு என்னை வியக்க வைக்கிறது. எழுத பலர் இருக்கையில் என்னை நீங்கள் கேட்பது எனக்கு ரொம்ப ஆச்சர்யம். நான் கண்டிப்பாக அடுத்த (மாதம்) வாரம் திங்கள் எழுதுகிறேன், அதற்குள் என் தேர்வை முடித்து விடுவேன். ஒரு பதிவு எழுதினால் ஏனோ தானோவென்று எழுத முடியாது, அதுவும் இந்த நேரத்தில் இந்த ஜாக்குவார் ஈயம் பித்தளை பேரிச்சம் பழம் இம்சை தாங்கலை..இதை வேற எழுத தோணும் அப்புறம் அதற்க்கு ஏதாவது கமெண்ட் வரும் அதற்க்கு என் பதில் என்று நேரம் சென்று விடும். அதனால் கண்டிப்பாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.

  நான் எழுதலைனா கேட்க யாரும் இல்லைன்னு இனி யாரும் சொல்ல முடியாது! நீங்க இருக்கீங்க ஹி ஹி ஹி நன்றி.

 27. இன்னா தல இப்படி சொல்லி புட்டே , //நான் எழுதலைனா கேட்க யாரும் இல்லைன்னு இனி யாரும் சொல்ல முடியாது!///
  ம்ம்ம் Certification நல்ல படி முடிய வாழ்த்துக்கள் ,மேலும் ஒன்று ,

  நான் இணையத்தை திறந்தவுடன் முதலில் போவது கூகிள் இல்லை ,www .giriblog .com தான் என்பது தெரியுமோ ,நம்புன்கோள்

 28. நன்றி giri எப்பவுமே நீங்க தலைவர் பக்கமே இருக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு. Sundar sir blog la naan ippa than romba varuthama ithai post ponnen.. ungalukaga athai inga paste pannuren

  =======
  சத்தியமா சொல்லுறேன் இவங்க அதனை பெரும் நிச்சயம்ம்ம் நல்லாவே இருக்க மாட்டாங்க. என் தலைவன் என்ன தப்பு பன்ன்னார் நீங்க எல்லாம் இப்படி பேசுறீங்க நீங்க எல்லாரும் காசு பாகனும் நு ஆசை படுற ரொம்ப ரொம்ப நல்ல ஒரு மனுசன எப்படி உங்களுக்கு தப்பபா பேச மனசு வருது ?
  ராமநாராயண் "ரஜினி ஒரு மாணிக்கம்" நு சொன்னார். குகநாதன் நெத்தில கடவுள் ல நம்பி பூசிட்டு வரார் பாருங்க.. சிர்ரிப்பு தான்யா வருது உன்னை பாதா எனக்கு.. ஏன் அடி மனசு ல இருந்து சொல்லுறேன்ன்ன் "jaquar, Guganathan" – சத்யம் நு காந்திஜி சொன்ன அந்த வார்த்தை உண்மை யா இருக்கும் நா .. நான் கும்பிடுற கடவுள் நம்பி சொலுறேன் சத்தியமா நீங்க கஷ்டப்பட தான் போறீங்க. தயவு செஞ்சு அப்போ என் தலைவன் கிட்ட போகாதீங்க என்ன ஏன் தலைவன் நிச்சயமா உங்களுக கடவுள் கிட்ட பாவம் நு சொல்லுவார்ர்ர்.. ஏன்னா அவர் என்னிக்கும் "Mr.Rajinikanth" தான்

  நீங்க இந்த மாதிரி ஈன பிறவியா இருக்குறது நால தாண்டா என் தலைவன் 75 yrs போதும் நு சொல்லுறார்.
  சத்தியமா ஏன் கண்ணுல இருந்து கண்ணீர் வருது இதை எழுதும் போது .. சத்தியமே வெல்லும்

 29. Giri,
  nichyaam sekkaram oru pathiva podunga.. nichayam antha Guhanathan, Jaquar yellam neenga thittanum athu thann correct ta irukum.. yenna piravi thala ivanga yellamm..

 30. // shankar said…
  நான் இணையத்தை திறந்தவுடன் முதலில் போவது கூகிள் இல்லை ,www .giriblog .com தான் என்பது தெரியுமோ ,நம்புன்கோள்/

  ஐயையோ! இது நெம்ப ஓவரா இருக்கே! 😉 ஷங்கர் நான் வாரத்திற்கு இரண்டு பதிவு தான் அதிகமா எழுதுவேன்.. இருப்பினும் உங்கள் அன்பிற்கு நன்றி 🙂

  ======================================================================

  // Arun said…

  Giri,
  nichyaam sekkaram oru pathiva podunga.. nichayam antha Guhanathan, Jaquar yellam neenga thittanum athu thann correct ta irukum.. yenna piravi thala ivanga yellamm.//

  அருண் தேர்வு முடிந்து விட்டது.. பதிவு எழுதி குகனாதனையும் ஜோக்குவாரையும் டரியல் ஆக்கலாம். ஆனா பிரச்சனை அடங்கி விட்டது..இனி எழுதினா ரொம்ப போர் அடிக்கும் அது தான் யோசிக்கிறேன்.. இல்லைனா உங்களுக்கு தனியாக வேணா அனுப்பி வைக்கிறேன் :-)))

  ======================================================================

  //
  ராஜ நடராஜன் said…
  படிக்கிறீங்களா?வாழ்த்துக்கள்!//

  நன்றி ராஜ நடராஜன் 🙂 தேர்வாகி விட்டேன் 🙂

  ======================================================================

  // ஈ ரா said…

  அருமை…

  அந்த லாரி படம் எங்கே?//

  லாரியை படம் எடுக்க முடியல.. என்னோட கேமரா என் பக்கத்து வீட்டினரிடம் இருந்தது 🙂

  ======================================================================

  // வருண் said…

  Giri: I know you are a big cricket fan and so, please check this //

  அழைத்தமைக்கு நன்றி அருண் அடுத்த வாரம் எழுதி விடுகிறேன் 🙂

  10:51 AM, February 26, 2010

 31. காவடி,பெரும்பாலும் மேட்டுக்குடிமக்கள் எடுப்பதில்லை,எடுத்தாலும்
  அலகுகாவடி எடுப்பதில்லை, மற்றவர்களின் கவனத்தைக் கவர
  வேண்டும் என்பதற்காகவே அச்சுறுத்தும் தோற்றத்தில் பலவண்ணக்
  காவடிகள் எடுக்கிறார்கள்.கேட்க,அருவருப்பான இசைகளுக்கு கூத்தும்
  கும்மாளமுமாக ஆண்,பெண் கலந்துகட்டிச் செல்கின்றனர்.வெளிநாட்டினர்க்கு
  பார்க்கவும் கேட்கவும் நகைச்சுவை உணர்வை ஊட்டுவதால் அதைப்
  படமெடுத்துச்செல்கிறார்கள்.காவடி எடுப்பவனிடம்,”காவடி,என்றால் என்ன,
  அதைஎடுக்கும்நோக்கம் என்ன”என்று கேட்டுப்பாருங்கள்,”என்பாட்டன்
  எடுத்தான் நான் எடுக்கிறேன்”என்பார்கள்.

 32. சிங்கப்பூரில் தை பூசம் சிறப்பாக இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கேன். இந்த பக்கத்தை படித்த பின்புதான் தெரியுது உண்மைதான் என்று. இந்த வருடம்(௨௦௧௧) தான் பார்க்க போகிறேன். ஏன்னா நான் ஊருக்கு புதுசு..

 33. நான் பகுத்தறிவாளியோ கடவுள் நம்பிக்கை அற்றவனல்ல, நானும் கடவுள் நம்பிக்கையுள்ள உங்களில் ஒருத்தன். ஆனல் உண்மை ஒரு நாளைக்கு தெறியவரும் யார் உண்மையான வணக்கத்துக்குறிய நம்மை படைத்து முழு உலகத்தையும் நிர்வகிக்கும் கடவுள் என்பது தெறியவரும் அப்போது நாம் கடவுளுக்கு இணையாக யாரை யாரோடு வணங்கினோம் என்பது தெளிவாகும் அப்போது ஏற்படும் நஸ்டம் வேறு யாராலும் அதற்கு பகரமாக எதுவும் செய்யமுடியாது ஆகையால் உண்மையான கடவுளை வணங்குங்கள். இது எனது அன்பு கட்டளை. எப்படி உண்மையான கடவுளை கண்டறிவது? படித்துபார் கடவுள் இருக்கு என்று சொல்லபட்ட அத்தனை மார்க்க ஏடுகளை, பைபில், அல் குர்ஆன், சமக்ஷ்கிரிதம், இன்னும் பல. உண்மையைக்கொண்டு உனது கடவுளை தேடினால் நிச்சயமாக அதனை கண்டுகொள்வாய். அவனுக்குத்தெறியும் யாரை நேர்வழிபடுத்துவது என்பது. இப்படிக்கு, உங்கள் நலன்விரும்பி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here