இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து?

25
இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து

மிகவும் பழமையான மதங்களில் ஒன்றான இந்து மதம் பல்வேறு காரணங்களால் ஆபத்தில் உள்ளது குறிப்பாகத் தமிழகத்தில். Image Credit

இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து? என்பதை இந்துக்களை மனதில் வைத்து எழுதப்பட்டுள்ளது.

இந்து மதம்

கால மாற்றத்துக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டே இருக்கும் மதம் இந்து மதம்.

பழமையான கருத்துகள், எண்ணங்கள் இருந்தாலும், பாத்திரத்தின் அளவுக்கு ஏற்பத் தன் வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் தண்ணீர் போலத் தன்னைக் காலத்துக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொண்டே வரும் சிறப்பு வாய்ந்த மதமாகும்.

எந்தத் தலைமையும் இல்லாமல் மதத்தில் உள்ள ஒவ்வொருவராலும் தொடர்ந்து அதன் சிறப்புக் குறையாமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டுள்ளது.

விமர்சனங்கள் இருந்தாலும் அதையும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது.

யாரால் ஆபத்து?

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்து மதத்துக்கு இரு வகையில் ஆபத்து வந்துள்ளது.

ஒன்று இந்து மதத்துக்கு ஏற்படும் ஆபத்துகளைப் புரியாமல், நடுநிலை என்ற பெயரில் இந்து மதத்தை அழிக்கத் துணை புரியும் நடுநிலை இந்துக்கள்.

இரண்டாவது, சிறுபான்மையினரின் வாக்குக்காக இந்துக்களை, வழக்கங்களை இழிவுபடுத்தி, மற்ற மதங்களை உயர்த்தி இந்து மதத்தைக் கீழிறக்கும் திமுக க்கு ஆதரவு தரும் இந்துக்கள்.

இவர்கள் இருவரே இந்து மதத்தைத் தமிழகத்தில் அழித்து வருகிறார்கள்.

நடுநிலை இந்துக்கள்

நடுநிலையாக உள்ளோம் என்று தங்களைக் கருதிக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல், இந்து மதத்துக்கு ஏற்பட்டு வரும் ஆபத்தைப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கை வாழ்பவர்கள்.

இவர்களைப் பற்றித் தனியாக விளக்க வேண்டியதில்லை. திமுக இந்துக்களைப் பற்றி விளக்கும் போதே இவர்களும் அப்பிரிவில் வந்து விடுவார்கள்.

திமுக குறித்த ஒரு விளக்கம்

எனக்குத் திமுக மீது எந்தத் தனிப்பட்ட கோபமோ, வெறுப்போ கிடையாது.

துவக்கத்தில் அவர்கள் செய்த ஊழல் மீது வெறுப்பு இருந்தது, பின்னர் அவர்களின் இந்து மத எதிர்ப்பு மீது கோபமானது. அவர்களின் செயல்களால் கோபம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்து மதத்தைப் போலத் தமிழகத்தை, இந்தியாவை அதிகம் நேசிக்கிறேன்.

giriblog தளத்தைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு, இக்கட்டுரைக்காக வெறும் வார்த்தையாக இல்லாமல் உள்ளார்ந்து கூறுகிறேன் என்பது புரியும்.

எனவே, எதனால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதற்கே இந்த விளக்கம். மற்றபடி திமுக மீது எனக்குத் தனிப்பட்ட கோபமில்லை.

திமுக

துவக்கத்தில் இருந்தே பகுத்தறிவு கொள்கையை முன்னிறுத்தி வந்த திமுக, நாளடைவில் அதை இந்துக்களுக்கு மட்டுமானது என்று சுருக்கிக்கொண்டது.

அதாவது பகுத்தறிவை, கடவுள் எதிர்ப்பை இந்துக்களிடம் மட்டுமே எதிர்பார்ப்பது, மற்ற மதங்களைக் கண்டுகொள்வதில்லை.

தற்போது சிறுபான்மையினரின் வாக்குக்காக இந்து மதத்தை முழுமையாக எதிர்க்க, இழிவுபடுத்த, அழிக்க முயற்சித்து வருகிறது.

இதற்குத் திமுக ஆதரவு இந்துக்கள் துணை போகிறார்கள். இவர்களே தற்போதைக்கு இந்து மதத்துக்கு ஆபத்தாக உள்ளார்கள்.

திமுக அல்லாத இந்து மதத்தை விமர்சிக்கும் திக, விசிக உட்படச் சில கட்சிகள் இருந்தாலும், அவர்கள் வால் தான், இவர்களுக்குத் தலை திமுக தான்.

திமுக இல்லையென்றால், இவர்களை எவரும் சீண்ட மாட்டார்கள்.

மூன்று முட்டாள்கள்

மதம் அல்லாத மூன்று மிகப்பெரிய கண்மூடித்தனமான முட்டாள்கள் உள்ளனர்.

ஒன்று நடிகரின் ரசிகர், இரண்டாவது விளையாட்டு வீரரின் ரசிகர், மூன்றாவது அரசியல் கட்சியின் ஆதரவாளர்.

இவர்களிடம் என்ன விளக்கம் கூறினாலும், தங்களுக்கே ஆபத்து என்றாலும் தாங்கள் ஆதரிக்கும் நபரை, கட்சியை விட்டுத்தர மாட்டார்கள்.

இதில் மூன்றாவது வகையாக வரும் அரசியல் கட்சி ஆதரவாளர்களான திமுக இந்துக்களைப் பற்றித்தான் இங்கே கூறப்போகிறேன்.

நியாயமான மத விமர்சனமாக இருந்தாலும் திமுக கட்சிப்பாசத்தில் அதைக் கண்மூடித்தனமாக சமூகத்தளங்களில் எதிர்க்கிறார்கள், கிண்டலடிக்கிறார்கள்.

கட்சி தன் சுயலாபத்துக்காக, கட்சியை வளர்க்க செய்கிறது என்ற அரசியல் புரியாமல் உள்ளார்கள்.

நாளை இந்து மதத்தை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், திமுக கவலையே படாமல் ஆதரிக்கும். அப்போது இவர்கள் எங்கு முகத்தை வைத்துக்கொள்வார்கள்.

சுயமரியாதை கட்சி!!

சுயமரியாதை கட்சி என்று பெருமை பீத்துபவர்களை, ‘நாங்க போட்ட பிச்சையால் திமுக ஆட்சிக்கு வந்தது‘ என்று ஜார்ஜ் பொன்னையா கூறிய போது ஒரே ஒரு திமுக நபர் கூட எதிர்க்கவில்லை.

எதிர்க்கவில்லை என்பதை விட எப்படி இதுபோலக் கூறலாம்? என்று கூடக் கேட்கவில்லை. இவர்கள் சுயமரியாதை மிக்கவர்களா?!

இதை விட ஆகப்பெரிய கொடுமை, கிறித்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘உங்களால் ஆட்சிக்கு வந்தோம்‘ என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.

ஆட்சியை பிச்சை போட்டோம் என்று ஜார்ஜ் பொன்னையா கூறியதை சரி என்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார்.

திமுக வாங்கிய 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குகள், அதிமுக வாங்கியதை விட 3% மட்டுமே அதிகம். எனவே, சுயமரியாதை கட்சி இதுபோலக் கூறுவதில் வியப்பில்லை.

அரசியலில் தன்னை நிலை நிறுத்த, வாக்குகளைப் பெற சிறுபான்மையினரை திமுக தீவிரமாக ஆதரித்து வருகிறது.

சிறுபான்மையினரை ஆதரிப்பது எனக்குப் பிரச்சனையில்லை அவர்களும் நம் மாநில / நாட்டு மக்கள் தானே! ஆனால், இந்து மதத்தை அழிக்க / இழிவுபடுத்த நினைப்பதேன்!

இந்து மதத்துக்கு மட்டும் ஏன் ஒரே வஞ்சனை?! இதுவே கேள்வி.

புறக்கணிப்பு

மற்ற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் ஸ்டாலின் இந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை.

இதற்கு முன் கட்சி சித்தாந்தம் என்ற அடிப்படையில் கூறாமல் தவிர்த்து இருக்கலாம் ஆனால், தற்போது ஒரு மாநிலத்தின் முதல்வர், அனைவருக்கும் பொதுவானவர்.

கேரளாவின் ஓணத்துக்கு வாழ்த்து கூறும் போது இங்கே தவிர்ப்பதேன்?!

விஜயதசமிக்கு வாழ்த்துக் கூறவில்லை, மிலாடிநபிக்கு ஒரு நாள் முன்னதாகவே முதல் ஆளா வாழ்த்துக் கூறுகிறார்.

இதற்கும் முட்டுக்கொடுக்கிறார்கள் நம்ம நடுநிலை இந்துக்கள். இதையெல்லாம் பார்த்தால், அப்படியொரு கோபம், எரிச்சல் வருகிறது.

இந்துக்கள் மீது மதிப்பே இல்லாத ஒருவர் இந்துக்களை ஆட்சி செய்கிறார் என்பது ஆகப்பெரிய அவமானம்.

இதுல மதச்சார்பின்மை நியாயம் வேற பேசுவார் ஸ்டாலின்! இதற்கும் நடுநிலை இந்துக்கள் ஆஹா ஓஹோன்னு கைதட்டல்.

முட்டாள் மதத்தினர்

சிறுபான்மையினரின் வாக்கு மட்டுமே திமுக எண்ணமே தவிர வேறு ஒன்றுமில்லை.

இந்துக்களை எதிர்த்தால், புறக்கணித்தால், கிண்டலடித்தால் சிறுபான்மையினர் ஆதரிப்பார்கள் என்ற எண்ணம் மட்டுமே.

எப்படிக் கேவலமாகப் பேசினாலும் முட்டாள் இந்துக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரியும். எனவே, திமுக க்கு இரண்டுமே நடக்கும் போது ஏன் கவலை!

சிறுபான்மையினரின் மீது அக்கறையெல்லாம் ஒன்றும் கிடையாது.

கிறிஸ்துமஸ்க்கு கேக் சாப்பிடுவார்கள், குல்லா அணிந்து ரமலானுக்குக் கஞ்சி குடிப்பார்கள். ஆன்மீக பயணத்துக்கு உதவித் தொகை கொடுப்பார்கள்! அவ்வளவே.

இந்துக்களுக்கும் எதிர்ப்பு, சிறுபான்மையினருக்கும் கிள்ளி கொடுத்தால் போதும். மூவருமே முட்டாள்கள் என்று திமுக க்கு நன்றாகத் தெரியும்.

எனவே, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்களை வைத்துச் சிறப்பான அரசியல் செய்து வெற்றி பெற்றுள்ளது.

இந்து எதிர்ப்பு தொடருமா?

இந்துக்களைத் தொடர்ந்து எந்த நிலையிலும் திமுக எதிர்க்குமா?

ஆம் என்று நம்பினால் அடி முட்டாள் நீங்கள்.

2021 சட்ட மன்ற தேர்தலில் தற்போதைய (2021) இணை அமைச்சர் அப்போதைய தமிழகப் பாஜக தலைவர் L முருகன் வேல் யாத்திரை நடத்தினார்.

இவையல்லாமல் திமுக மீது இந்துக்களுக்கு எதிராக நடக்கிறார்கள் என்ற எண்ணமும் ஒரு சாராரிடம் வலுப்பெற்று இருந்தது.

இதனால் பயந்த திமுக, தேர்தல் சமயத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டது.

வேல் வைத்து மேடையில் ஸ்டாலின் பேசினார், போஸ் கொடுத்தார்.

திமுகவினர் கோவிலில் படியில் முட்டிபோட்டு ஏறிப் பிரார்த்தனை செய்தார்கள். இதுபோலப் பல சம்பவங்கள் தேர்தல் சமயங்களில் நடந்தது.

தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு பழைய நிலைக்குத் திரும்பி விட்டது. இந்தக் கிறுக்கனுக என்ன சொன்னாலும் நம்புவாங்க என்று உணர்ந்து கொண்டார்கள்.

இதே இந்துக்கள் புறக்கணித்து இருந்தால், இனி வரும் நாட்களில் காவடி எடுக்கவும் தயங்கி இருக்க மாட்டார்கள்.

தங்களுக்குப் பெரும்பான்மையினர் வாக்கு வராது என்றால், திமுக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது. இது தான் நிதர்சனம்.

திமுக புத்திசாலி

திமுகவை திட்டுவதால் பயனில்லை, அவர்கள் புத்திசாலிகள். இந்துக்கள் தான் முழு முட்டாள்கள்.

திமுக க்கு பயம் காட்டாதவரை இவர்கள் இந்து விரோதப் போக்கு, அவமதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

கட்சிப்பாசத்தில் இவர்களுக்கு வாக்களிக்கும் திமுக இந்துக்கள் இருக்கும் வரை இது தொடரும்.

ஒவ்வொரு முறை நீங்கள் திமுக க்கு வாக்களிக்கும் போதும் இந்து மதத்தை அழிக்க வாக்களித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.

தங்கள் அரசியல் வாழ்க்கை நன்றாக இருக்க அவர்கள் செய்கிறார்கள் ஆனால், அவர்கள் இழிவுபடுத்துவது நம் மதத்தை என்று அறிந்தும் துணை போவது கேவலமான செயல்.

திமுக என்ற கட்சிக் கண்ணாடியைக் கழட்டினால் மட்டுமே மற்ற விஷயங்கள் கண்களுக்குத் தெரியும். இதை இவர்கள் அடிபட்டு உணராதவரை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்லை.

திமுக தன்னை மாற்றிக்கொண்டால் ஆதரிக்கலாம் அவ்வளவு தான் கூற வருவது. முன்பே கூறியபடி திமுக மீது எனக்குத் தனிப்பட்ட கோபமில்லை.

இந்து மதம்

தமிழகத்தில் இந்து மதம் பெரும்பான்மையாக இருக்கும் வரையே தமிழகம் தமிழகமாக இருக்கும். இந்தியாவுக்கும் இது பொருந்தும்.

இன்று இந்துக்கள் என்ற பொது எதிரியை அழிக்க ஒருவருக்கொருவர் துணை நிற்கும் கிறித்துவ முஸ்லிம்கள், ஒரு காலத்தில் இந்து மதம் தன் பெரும்பான்மையை இழந்து, மற்ற போட்டி மதத்தின் நெருக்கடியை உணரும் போது இந்துக்களின் சகிப்புத்தன்மையைச் சிறப்பை உணர்வார்கள்.

இதைத் தமிழகத்தில் காண உயிரோடு இருக்க மாட்டோம் ஆனால், கேரளா, மேற்கு வங்கத்தில் காண வாய்ப்புக் கிடைக்கலாம்.

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் மதமாற்ற முயற்சிகள் நடைபெறுகிறது. அதற்கு ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மிகப்பெரிய அளவில் துணை புரிகின்றன.

இந்து என்றால் மட்டும் தவறு

இந்து மதம், இந்துக் கடவுள் அவமதிக்கப்பட்டால் ஊடகங்கள் பேசுவதே இல்லை.

இதே மற்ற மதங்களில் அவமதிப்பு நடந்து இருந்தால், என்ன நடந்து இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.

இந்துக்கள் தவறுகள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக்கப்படுகிறது, சிறுபான்மையினர் தவறுகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்து மதம் குறி வைத்துத் தாக்கப்படுகிறது. ஊடகங்களில், YouTube ல் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகள் பரப்பப்படுகின்றன.

ஊடகங்களில் உள்ளவர்கள் பெரும்பான்மையோர் இந்து மத எதிர்ப்பாளர்களாக உள்ளனர். எனவே, இந்துக்களுக்கு எதிரான வெறுப்புக் கருத்துகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.

அனைத்து தமிழக தொலைக்காட்சி ஊடங்களும் திமுக கட்டுப்பாட்டில் / ஆதரவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துக்களுக்கு எதிராக இவ்வளவு நடந்து கொண்டுள்ளது ஆனால், எதுவுமே கண்டுக்காமல், நடுநிலை இந்துக்கள் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டுள்ளார்கள்.

இந்து முன்னணி

பல வருடங்களாக (1980) இந்துக்களுக்காக என்று உள்ள அமைப்பு இந்து முன்னணி.

2010 ல் இந்த அமைப்பு மீது எந்த மரியாதையும் இல்லை. மதரீதியான அமைப்பு என்ற அளவில் தான் இந்த அமைப்பின் மீதான எண்ணம் இருந்தது.

ஆனால், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இல்லையென்றால், தமிழகத்தில் இந்துக்கள் நிலை மிக மோசமாக மாறி விடும் என்று தற்போது (2021) புரிகிறது.

ஏராளமான மத மாற்றச் செயல்கள் நடைபெறுகின்றன, கோவில்கள் இடத்தில் மற்ற மதத்தினரின் ஆக்கிரமிப்புகள், இந்து கடவுள் சிலை உடைப்புகள் நடைபெறுகின்றன.

இவற்றையெல்லாம் இவர்கள் தான் தைரியமாகத் தட்டிக் கேட்கிறார்கள்.

என்னால் களத்தில் இறங்கி செய்ய முடியாததை இவர்கள் செய்கிறார்கள். இவர்களின் அருமை எனக்குத் தாமதமாகப் புரிந்தது போலப் பலருக்கு இன்னும் தாமதமாகப் புரியும்.

முன்பு இந்து முன்னணி அமைப்பை எதிர்த்த நான் தற்போது ஆதரிக்கிறேன் என்றால், தமிழகத்தின் சூழ்நிலை கடந்த காலங்களில் அவ்வாறு மாறி உள்ளது.

மற்ற மத அமைப்புகளில் சர்ச்சைகள் உள்ளது போல இவர்களிடமும் உள்ளது. எனவே, தேவையற்றதை ஒதுக்கி மற்றதை எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

மத ரீதியான அமைப்பில் 100% சரியாக நடந்து கொள்ளும் அமைப்பை நம்மால் எதிர்பார்க்க முடியாது.

சீரான மாற்றம்

தற்போது சீராக குறிப்பாக விமர்சனங்கள் இத்தளத்தில் அதிகரித்து வருவதை என்னால் உணர முடிகிறது. காரணம், இந்து மதத்துக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெறும் செயல்களே!

குறைந்த பட்சம் எனக்குத் தெரிந்த எழுத்தின் மூலம் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறேன்.

எனக்கு யாரையும் திருப்தி செய்ய வேண்டிய தேவையில்லை, யாருக்காகவும் நல்லவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மற்றவர்கள் நினைப்பதைப் பற்றிக் கவலையில்லை.

எனவே, எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக, தைரியமாக கூற / எழுத முடிகிறது.

எதிர்காலத்தில் இன்னும் தீவிரமாக எழுதலாம், அமைப்பில் இணையலாம். எதுவும் சூழ்நிலைகளைப் பொறுத்தே.

என்ன நடந்தாலும் மனசாட்சிக்கு விரோதமாக செய்ய மாட்டேன், முடியாது. அது மட்டுமே என்றும் மாறாதது.

மதத்தை மீட்க முடியாது

தற்போதைய நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் இந்து மதம் பிற்காலத்தில் வீழ்ச்சியடையும்.

இதெல்லாம் நடக்காது என்று முட்டாள்தனமாக எண்ணிக்கொண்டு இருக்காதீர்கள். கேரளா, மேற்கு வங்கத்தில் நடப்பது எதிர்காலத்தில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் நடக்கும்.

இதைப்பார்க்க நானோ நீங்களோ உயிரோடு இருக்க மாட்டோம் ஆனால், எதிர்காலச் சந்ததியினர் அனுபவிப்பார்கள்.

நடுநிலை பேசிக்கொண்டு, தாங்கள் சார்ந்த கட்சித் தலைவர், நடிகர் பேசுகிறார் என்று இந்து மதத்தை இழிவுபடுத்துவதை ஆதரித்துப் பேசாதீர்கள்.

அவர்கள் எதிர்காலத்துக்காக, வளர்ச்சிக்காக நடந்து கொள்கிறார்கள். நாளை எப்படியும் அவர்கள் மாறுவார்கள் ஆனால், அப்போதும் நீங்கள் முட்டாளாக இருப்பீர்கள்.

உங்களை அடுத்த மதத்தை இழிவுபடுத்தக் கூறவில்லை, அழிக்கக் கூறவில்லை ஆனால், நம் மதத்தை விட்டுக்கொடுக்காதீர்கள் என்று கேட்கிறேன்.

கிறித்துவ மதத்துக்கு 30 நாடுகள் உள்ளன, இஸ்லாம் மதத்துக்கு 50 நாடுகள் உள்ளன ஆனால், இந்துக்களுக்கு இந்தியா மட்டும் தான் உள்ளது.

மதவாதி

தற்போது என்ன ஆகி விட்டது என்றால், கோவிலுக்குப் போவதையே சங்கி என்று கூறுகிறார்கள். கடவுளைப் பற்றிப் பேசினாலே மதவாதி என்கிறார்கள்.

இதுவரை இந்து மதத்தைப் பெருமையாகப் பேசியுள்ளேன், விமர்சனத்தை முன் வைத்துள்ளேனே தவிர மற்ற மதங்களை இழிவுபடுத்தியதில்லை.

ஆனால், இதற்கே சில நேரங்களில் கடுமையான விமர்சனங்கள் வருகிறது.

இந்து மதத்துக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை முன் வைத்தால், அதற்கு பதிலளிக்காமல் சங்கி என்று கூறி கடந்து விடுகிறார்கள்.

ஒரு நியாயமான கேள்வியை, விமர்சனத்தை முன் வைக்கக் கூடத் தயங்கும் தொடை நடுங்கிகளாக இந்துக்களை மாற்றியதே தற்போதைய அரசியல் வெற்றி.

நம்மை மதவாதியாக விமர்சிப்பார்களோ என்ற எண்ணமே இந்துக்கள் பலரை சொரணையற்றவர்களாக மாற்றி விட்டது.

இப்படி எல்லோருக்கும் நல்லவராக!! இருந்து, சுயத்தை இழந்து, கோழையான வாழ்க்கை வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறீர்கள்?!

இந்துக்களுக்கு எதிரி இந்துக்களே

மற்ற மதத்தினர் அவர்கள் மதத்தைப் பேசினால் அது மதச் சுதந்திரம் ஆனால், இந்துக்கள் பேசினால் மதவெறியா?!

இந்து மதம் சார்ந்து எதைப் பகிர்ந்தாலும் மதவாதி என்று கூறும் விமர்சனங்கள் அதிகரித்து விட்டது.

இந்து மதத்துக்கு ஆபத்து என்றால், அதற்குக் காரணம் நடுநிலை என்ற பெயரில் பேசிக்கொண்டு இருக்கும் இந்துக்களும், திமுக வை வாழ வைக்கும் இந்துக்களும் மட்டுமே.

தற்போதைய நிலை தொடர்ந்தால், விழித்துக் கொள்ளவில்லையென்றால் தமிழகத்தில் இந்து மதம் அழிவதை தடுக்க முடியாது.

ஒரு மாநிலத்தின், நாட்டின் பொருளாதாரம் சரிந்தால், அடுத்து வரும் கட்சி மீட்டெடுக்க முடியும் ஆனால், மதம் அழிந்தால் எக்காலத்திலும் மீட்க முடியாது.

சிலர் சொன்னால் புரிந்து கொள்வார்கள், சிலர் அடுத்தவருக்கு நடந்தால் அதைப்பார்த்து தன்னை சரி செய்து கொள்வார்கள்.

ஆனால், நடுநிலை இந்துக்களுக்கு அவர்கள் குடும்பத்திலேயே சம்பவம் நடக்கும் போதும் புரியுமான்னு தெரியலை.

இந்து மதத்தையெல்லாம் அழிக்க முடியாது என்று வசனம் பேசிக்கொண்டு இருந்தால், இதற்கான பலனை எதிர்காலச் சந்ததியினர் அனுபவிப்பார்கள்.

மேற்கூறியது சிலருக்கு மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம் ஆனால், புரியும் போது, புரிந்து தவறுக்காக வருந்தும் போது காலம் கடந்ததாக இருக்கும்.

நன்றி, வணக்கம் 🙏

தொடர்புடைய கட்டுரைகள்

கர்ம வினையும் இந்து மதமும்

அர்த்தமுள்ள இந்து மதம்

ஸ்டாலினின் இந்து மத எதிர்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை தேவையா?

மதச்சார்பின்மை பற்றியெல்லாம் ஸ்டாலின் பேசலாமா?

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

25 COMMENTS

  1. அருமை.நியாமான விளக்கங்கள்.இங்கு மதத்தைக் காப்பாற்ற இருக்கிறோம் என்று கூறிக்கொள்பவர்கள் சாதாரன இந்துமக்களுக்கு எதுவும் செய்யாமல் ஒருசார்ர்களுக்கு அடிமை ஆகிவிட்டார்கள். நீங்கள் என்னை முட்டடாள் நடுநிலை இந்துவாக நினைக்கலாம் இவர்களின் செயலால் வெறுப்படைந்து விட்டனர்.இவ்வளவு சிலை திருடப்பட்டது ஒரு பிராமனர் கூட கைது செய்யபடவில்லை.அவர்களுக்கு தெரியாமல் தவறு நடக்க வாய்பிள்ளை.இவர்கள் இந்துகளுக்காக பாடுபட்டிருந்தால் இந்து மத்த்தை காப்பாற்றவேண்டும் என்று குரல் கொடுக்க தேவையில்லை. .உங்கள் சித்தாந்தம் பலவற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் உங்கள் நேர்மையில் துளி அளவும் எனக்கு ஐயம் கிடையாது.

  2. கிரி,
    என் புரிதலின் படி நீங்கள் சொல்லவருவது கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகிவருகிறார்கள், அவர்களுக்கு திமுக போன்ற கட்சின் ஆதரவு இருப்பதால் அவர்கள் எளிதில் அதிகாரத்துக்கு வந்துவிடுவார்கள் அதனால் இந்து மதத்தை அளிக்க வாய்ப்பிருக்கிறது. இதை தான் சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன்.மக்களாட்சில் அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஆனால் அதிகாரத்துக்கு வருபவர்கள் கிறிஸ்துவ இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கம் இல்லாமல் இருந்தால் நல்லது.

    நீங்கள் சொல்லுவதில் ஓரளவு உண்மை போல தோன்றும். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பது என் புரிதல். முன்னூறு ஆண்டுகளாக நம் இந்திய மண்ணின் மேல் படையெடுத்து கொடுங்கொலை செய்து மதம் மாற்றிய இஸ்லாமிய மன்னர்களால் முடியாததை 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாறும் DMK விலோ, திக போன்ற ஜாதி பற்று கொண்ட சிறு குழுக்களாலோ , மதமாற்ற சக்திகளாலோ நிறைவேற்றமுடியாது என்பதே என் தின்னமான எண்ணம்.

    மக்கள் practicing hindu வாக இருப்பது தான் மிக பெரிய தவறு. மதத்தை இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பது போல இந்துக்கள் அளிப்பதில்லை. வெறும் வேண்டுதல்கள் சாங்கியங்கள் மட்டும் தான் அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் கிடைப்பதால் இந்த போலி நடுநிலை வாதிகள் மதம் மாற்றும் குழுக்கள் கேட்கும் எளிய கேள்விக்கு கூட பதில் சொல்ல முடிவதில்லை. ஹிந்து வாக இருப்பது அவலம் என எண்ணம் கூட தோன்றும். பிற மத நண்பர்களால் எனக்கு கல்லூரி நாட்களில் சில அனுபவங்கள் உண்டு. நாம் இந்து மதத்தின் மெய்யியலை தரிசனங்களை கற்று அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட்டாலே இந்து மதம் இந்த மத மாற்ற கும்பல்களிடமும் மதத்தை காத்து கொண்டு இருப்பதாக சொல்லும் குழுவிடம் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்.

    மெய்யியல், பண்பாடு, ஆசாரங்கள் இணைத்தது தான் மதம். இந்து மதம் என்ற ஒன்று இல்லை என்று சொல்லிவரும் போலிகளுக்கு இந்த எளிய புரிதல் கூட இருக்காது. இந்து மதம் என்பது –

    வேதங்கள்
    6 மதங்கள்: சைவம்(சிவன்),வைணவம்(விஷ்ணு), சாக்தம்(சக்தி), காணாபத்யம்(பிள்ளையார்), கௌமாரம்(முருகன்), சௌரம் (சூரியன்)
    6 தரிசனங்கள் : சாங்கியம், யோகம், வைசேஷியம்,நியாயம், பூர்வமீமாம்சம்,உத்திரமீமாம்சம்(வேதாந்தம்)
    3 தத்துவ நூல்கள்: பிரம்ம சூத்திரம்,கீதை,உபநிடதங்கள்

    இது ஒரு தொகை மதம். பன்முகை தன்மையே இதன் அழகு. குல தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள், பெரு தெய்வங்கள் இருக்கும் வரை மதம் இருக்கும். இன்னும் பல தெய்வங்களை, வழிபாட்டு முறைகளை உள்ளிழுத்துக்கொண்டு வளருமே தவிர வீழ்ச்சி அடைய வாய்ப்பில்லை. ஒரு வேலை அனைத்து கோவில்களை அழித்தாலும் கூட மடங்களின் வழியாக இந்து மத மெய்யியல்களை மீட்டு எடுக்கமுடியும். இதை நம் முன்னோர்கள்(ரிஷிகள் மற்றும் ஞானிகள்) சிறந்த முறையில் கட்டமைத்து இருக்கிறார்கள்.

    இந்து மதத்தை யாரும் காப்பாற்ற வேண்டாம் , காப்பாற்ற எந்த ஒரு அமைப்பின் தேவையும் இல்லை. அமைப்பு இருந்தால் அது சுரண்டலுக்கும் அழிவுக்கும் தான் இட்டு செல்லும் (பௌத்தம் இலங்கையில் இருப்பது போல).

  3. உங்கள் வேதனையும் கவலையும் மிகச் சரியானது. இந்த பாதிப்பை மிக பலமாக உணருகிறேன். என்ன செய்யலாம்…

  4. மத நல்லிணக்கம், சகோதரத்துவம் நல்ல விடயம், ஆரோக்கியமான விடயம், ஆனால் அதை ஒரு தரப்பிடமிருந்து மட்டும் எதிர் பார்ப்பதுதான் அபத்தமானது, அது இந்துக்களை பொறுத்தவரை ஆபத்தானது.

    இந்துக்களில் எங்காவது ஒரு இடத்தில் எவராவது ஒருவர் அடிப்படைவாதக் கருத்தை, செயலை முன்வைத்தால்; அதை ஊதிப் பெரிதாக்கி நெருப்பாக்கும் ஊடகங்கள்; தினமும் அனைத்தையும் மதத்தை தாண்டி சிந்திக்காத அடிப்படைவாதிகளிடம் இதை பார்ப்பதில்லை, பேசுவதில்லை.

    உதாரணமாக பைபிளை, குர்ரானை தாண்டி வெளிவராத 90 சதவீதமானவர்களை விட்டுவிட்டு; பகவத்கீதையோ மனுநீதியோ 90 விழுக்காடு அறியாத இந்துக்களை மனுநீதியை முன்வைத்து விமர்சிப்பது.

    அதிலும் இந்துக்கள் மட்டும் சாதிய பாகுபாடு பார்ப்பதாக இன்னும் ஒரு உருட்டு. அன்பு, அமைதி மார்க்கம் என்று இரத்தத்தில் மதம் பரப்பிரயவர்கள் உள்பாகுபாடு, ஏற்ற இறக்கம் பார்க்காத மாதிரி ஒரு பெரிய உருட்டு.

    இதில் சிறுபான்மை வாக்குக்களை குறிவைத்து திமுக மற்றும் தோழமைகள் வகுக்கும் டிசைனில் கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனும் பித்தலாட்டத்தில் இருக்கும் இந்துமத எதிர்ப்பை மட்டும் பல அப்பாவி / முட்டாள் இந்துக்கள் புரிந்து கொள்ள தயாரில்லை.

    இதில் கொடுமை என்னவென்றால் இந்த அரசியல் நோக்கம் புரியாமல் தங்களை மட்டும் மத நல்லிணக்க தூதுவர்களாக, இன்னும் பச்சையாக சொன்னால் தங்களை ஏதோ பெரிய **** நினைத்து வாழ்ந்து வரும் முட்டாள் இந்துக்கள் இருக்கும் வரை இதை மாற்றுவது கடினம்.

    மத நல்லிணக்கம் சகோதரத்துவம் பேசும் மாற்றுமத முற்போக்கு ****கூட தங்களுக்கு ஒன்றென்றால் தங்கள் நிஜ முகத்தை காட்டி விடுவார்கள்.

    ஆனால் இந்து மத முற்போக்கு **** உண்மையில் இவர்கள் மாற்று மதத்து மதம் பரப்பிகளின் ஜாக்பாட்…..! சொந்த தலையில் சூனியம் வைக்கும் அடி முட்டாள்கள்.

    தங்கள் மண்டை கழுவப்பட்டு தங்கள் அடையாளத்தையே இன்னொருவன் இவர்களை கொண்டே அழிக்கிறான் என்பதை அறியாமல் இயங்கும் இவர்களை வேறு என்ன சொல்ல முடியும்?

  5. நானும் இந்து தான். இந்துக்களின் எதிரி திமுக இல்லை.உயர்சாதி இந்துக்கள் தான். திமுக அரசினால் எந்த பிரச்னையும் இன்றி, எந்த கோவிலுக்கும் சென்று வர முடிகிறது தாழ்த்தப்பட்ட இந்துக்களால். உங்கள் கருத்துப்படி, ஒருவேளை உயர்சாதியினர் என்று மெஜாரிட்டி ஆகி அவர்கள் அரசு ஆள தொடங்குகிறதோ, அன்று தாழ்த்தப்பட்ட இந்துக்கக்ளுக்கு குறிப்பிட்ட கோவிலுக்கு செல்ல தடை செய்வார்கள். ஏனென்றால் அவர்களுடைய வரலாறு அப்படி. அதனால், என் வாக்கு திமுக விற்கு தான். ஆனால்,நான் தொடர்ந்து இந்துவாக தான் இருப்பேன்.

  6. @செந்தில், உயர் ஜாதி இந்துக்கள் என்று எந்த ஜாதியை குறிப்பிடிக்கீறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. பிராமணர்கள் என்றால் உங்கள் புரிதல் தவறு. 90% கோவில்களின் அறங்காவலர்கள் இடைநிலை சாதியினரே. அடுத்த முறை ஆலயங்களுக்கு செல்லும் போது ஆலயத்தை நிர்ணயிக்கும் குழு அல்லது நன்கொடை தந்த அறிவிப்பு பலகையை பார்த்தாலே எந்த சாதியினரின் பங்கு அதிகம் என்று புரியும்.

    பிராமணர்கள் நிர்வகிக்கும் ஆலயங்கள் சொற்பமே. பெரும் தெய்வங்கள் ஆலயங்களில் பிராமணர்கள் பூசாரிகளாவும் பட்டர்களாக உள்ளனர். பெரும்பாலானா மடங்கள் அதன் கீழ் உள்ள ஆலயங்களும் இடை நில ஜாதியினரால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.

    ஆலய நுழைவு போராட்டத்தை திமுக வோ திக வோ முன்னெடுத்து நடத்தவில்லை. ஈ வே ரா தலைமையில் தமிழகத்தில் எத்தனை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று தேடி படிக்கவும். வைக்கம் போராட்டம் T.K மாதவன் தலைமையில் முன்னெடுக்க பட்டு காந்தியின் வழிகாட்டுதலின் படி வெற்றியடைத்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினராலும் நீங்கள் சொல்லும் மேல் ஜாதி தலைவர்களாலும் முன்னெடுக்க பட்டு தலித் மக்களின் உரிமை நிலை நிறுத்தப்பட்டது. நீங்கள் தி மு க வுக்கு வாக்களியுங்கள் அது உங்கள் தெரிவு. ஆனால் தி மு க வினால் தான் தலித் மக்கள் ஆலய நுழைவு உரிமையை பெற்றார்கள் என்பது தவறு.

    தலித் மக்கள் வாழும் இடங்களிலே ஏன் இரண்டு மூன்று மாரியம்மன் ஆலயங்கள் இருக்கிறது என்று அம்மக்களிடம் கேட்டு பாருங்கள். அவர்களுக்குள்ளே ஏன் பிரிவினை, தீண்டாமை இருக்கிறது என்பது புலப்படும். இதே நிலைமை தான் இடை நிலை ஜாதி ஹிந்துக்களிடமும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை நான் ஆதரிக்கவில்லை, ஆனால் இது தான் நிதர்சனம்.

  7. @ஜோதிஜி நன்றி

    @விஜயகுமார்

    சிலை திருட்டு என்பது ஒரு சம்பவம். அதை இதோடு ஒப்பிட்டுப் பேசுவது சரியாக இருக்காது.

    நீங்கள் கூறும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறேன். நிச்சயம் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

    “இவர்கள் இந்துகளுக்காக பாடுபட்டிருந்தால் இந்து மத்த்தை காப்பாற்றவேண்டும் என்று குரல் கொடுக்க தேவையில்லை.”

    இரு பிரச்சனைகளும் வேறு விஜயகுமார்.

    இவர்கள் ஒருவேளை பாடுபட்டு இருந்தாலும், தற்போதைய மத மாற்றம், கடவுள் சிலை அழிப்பு, அவமதிப்பு போன்றவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

    காரணம், சிலை திருட்டு என்பது வேறு பிரச்சனை, இந்து மத அழிப்பு என்பது வேறு பிரச்சனை.

    உங்களுடைய மைய கருத்தில் உடன்படுகிறேன் அதாவது சிலை திருட்டில் கோவில் சம்பந்தப்பட்ட பிராமணர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதையும், அதற்கு அவர்கள் துணை என்பதையும்.

    “உங்கள் சித்தாந்தம் பலவற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் உங்கள் நேர்மையில் துளி அளவும் எனக்கு ஐயம் கிடையாது.”

    நன்றி விஜயகுமார் 🙂 . நேர்மையாக இருக்கிறேனோ இல்லையோ ஆனால், மனசாட்சிக்கு பயப்படுபவன்.

  8. @மணிகண்டன்

    “அதிகாரத்துக்கு வருபவர்கள் கிறிஸ்துவ இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கம் இல்லாமல் இருந்தால் நல்லது.”

    கண்டிப்பாக அப்படித்தான் நடக்கும். இவர்கள் சட்டம் தான் முன்னெடுக்கப்படும்.

    அப்படி தான் இப்பவே பேசிக்கொண்டுள்ளார்கள். சமூகத்தளங்களில் ஒவ்வொருவரும் பேசுவதை பார்த்தால், இந்தியர்களே இல்லை என்பது போல பேசிக்கொண்டு உள்ளார்கள்.

    “முன்னூறு ஆண்டுகளாக நம் இந்திய மண்ணின் மேல் படையெடுத்து கொடுங்கொலை செய்து மதம் மாற்றிய இஸ்லாமிய மன்னர்களால் முடியாததை 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாறும் DMK விலோ, திக போன்ற ஜாதி பற்று கொண்ட சிறு குழுக்களாலோ , மதமாற்ற சக்திகளாலோ நிறைவேற்றமுடியாது என்பதே என் தின்னமான எண்ணம்.”

    இது போன்ற எண்ணங்கள் அக்காலத்துக்கு சரியானது ஆனால், இக்காலத்துக்கு ஏற்றதல்ல.

    அதே போல நாளைக்கே நடக்கும் என்று கூறவில்லை. எதிர்கால சந்ததியினர் என்று தான் கூறியுள்ளேன். காலம் எடுக்கும்.

    “மதத்தை இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பது போல இந்துக்கள் அளிப்பதில்லை. ”

    மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்றுக்கொள்கிறேன். தவறு இந்துக்களிடம் தான் ஆனால், இது தான் இந்து மதத்தின் ஒரு பகுதி எனும் போது தவிர்க்க முடியாத செயலாகத்தான் காண்கிறேன்.

    பிராமணர்கள் இதை (குறைந்தபட்சம்) செய்கிறார்கள், மற்றவர்கள் செய்வதில்லை.

    இந்து மதம் தன் மதத்தைத் திணிப்பதில்லை, வற்புறுத்துவதில்லை. இதுவே இதன் சிறப்பு ஆனால், இதுவே ஆபத்தாகவும் உள்ளது.

    “நாம் இந்து மதத்தின் மெய்யியலை தரிசனங்களை கற்று அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட்டாலே இந்து மதம் இந்த மத மாற்ற கும்பல்களிடமும் மதத்தை காத்து கொண்டு இருப்பதாக சொல்லும் குழுவிடம் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்.”

    மிகச்சரியாகக் கூறினீர்கள் ஆனால், நடைமுறையில் நிகழ்கால வாழ்க்கை முறையில் இது சாத்தியமில்லாதது என்பதே கசப்பான உண்மை.

    “ஒரு வேலை அனைத்து கோவில்களை அழித்தாலும் கூட மடங்களின் வழியாக இந்து மத மெய்யியல்களை மீட்டு எடுக்கமுடியும்.”

    கோவில்களை அழிப்பார்கள் என்று கருதவில்லை. அப்படி நிலை வந்தால், கை மீறி போய்விட்டதாகவே அர்த்தம். அதன் பிறகு இது போன்ற விவாதத்துக்கே வேலையில்லை.

    இந்து மதம் இருக்கும் ஆனால், பெரும்பான்மையாக இருக்காது. இது தான் நான் கூற வருவது.

    10% இந்துக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், இந்து மதம் அழியவில்லை என்று கூறுவது பெருமையில்லை.

    “இந்து மதத்தை யாரும் காப்பாற்ற வேண்டாம், காப்பாற்ற எந்த ஒரு அமைப்பின் தேவையும் இல்லை.”

    தவறு மணிகண்டன்.

    தற்போதே பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இருப்பதாலே எதோ ஓரளவு கட்டுக்குள் உள்ளது. இவர்களும் இல்லையென்றால், இந்துக்கள் நிலை படு மோசம் ஆகி விடும்.

    நீங்கள் செய்திகளைப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தினமும் ஏராளமான அழிப்பு வேலைகள், மதம் மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    ஒருவேளை இது குறித்த செய்திகள், சம்பவங்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் இருக்க வாய்ப்புள்ளது.

    இந்த அமைப்புகளாலே இவை தடுக்கப்பட்டு வருகிறது. நீங்களோ நானோ களத்தில் இறங்கி செய்ய மாட்டோம்.

    “அமைப்பு இருந்தால் அது சுரண்டலுக்கும் அழிவுக்கும் தான் இட்டு செல்லும்”

    ஒரு அமைப்பு இருப்பதாலே அனைவரும் அதை பின்பற்றி விடுவார்கள் என்பது அர்த்தம் ஆகாது.

    அதே போல இயக்கங்கள் இருக்கும், விரும்புபவர்கள் இணைவார்கள், மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.

    கட்டுரையிலே கூறியபடி மத அமைப்பில் 100% நேர்மையை எதிர்பார்க்க முடியாது ஆனால், இயக்கங்கள் இல்லையென்றாலும் சிக்கல்.

  9. @பத்மநாபன் வெ

    இதற்கு மணிகண்டன் கூறியுள்ளது போல இந்து மதத்தின் சிறப்பை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதே சரியான வழி.

    ஆனால், இதைப் பெரும்பாலான இந்துக்கள் செய்ய மாட்டார்கள் என்பது கசப்பான உண்மை.

  10. @தலைவிதி

    “இந்துக்களில் எங்காவது ஒரு இடத்தில் எவராவது ஒருவர் அடிப்படைவாதக் கருத்தை, செயலை முன்வைத்தால்; அதை ஊதிப் பெரிதாக்கி நெருப்பாக்கும் ஊடகங்கள்; தினமும் அனைத்தையும் மதத்தை தாண்டி சிந்திக்காத அடிப்படைவாதிகளிடம் இதை பார்ப்பதில்லை, பேசுவதில்லை.”

    காரணம் ஊடகங்கள் முழுக்க இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

    “கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனும் பித்தலாட்டத்தில் இருக்கும் இந்துமத எதிர்ப்பை மட்டும் பல அப்பாவி / முட்டாள் இந்துக்கள் புரிந்து கொள்ள தயாரில்லை.”

    ஏன் என்று யோசிக்க கூட மாட்டேன் என்கிறார்கள்! இதுவே கடுப்பாகிறது.

    “தங்கள் மண்டை கழுவப்பட்டு தங்கள் அடையாளத்தையே இன்னொருவன் இவர்களை கொண்டே அழிக்கிறான் என்பதை அறியாமல் இயங்கும் இவர்களை வேறு என்ன சொல்ல முடியும்?”

    உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது.

    கண் முன்னாடி அனைத்தும் நடக்கிறது ஆனால், எதுவும் செய்ய முடியவில்லை.

    வெளிப்படையாக ஏமாற்றுகிறார்கள் ஆனால், புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் 🙁 .

  11. @செந்தில்

    “திமுக அரசினால் எந்த பிரச்னையும் இன்றி, எந்த கோவிலுக்கும் சென்று வர முடிகிறது தாழ்த்தப்பட்ட இந்துக்களால்”

    இதற்கு மணிகண்டன் நான் கூற நினைத்ததை விட சிறப்பான விளக்கம் அளித்துள்ளார்.

    திமுகவும் தனது பங்களிப்பை அளித்து இருக்கலாம் ஆனால், திமுக மட்டுமே என்பதே தவறு.

    “உங்கள் கருத்துப்படி, ஒருவேளை உயர்சாதியினர் என்று மெஜாரிட்டி ஆகி அவர்கள் அரசு ஆள தொடங்குகிறதோ, அன்று தாழ்த்தப்பட்ட இந்துக்கக்ளுக்கு குறிப்பிட்ட கோவிலுக்கு செல்ல தடை செய்வார்கள்.”

    இதெல்லாம் இனி வரும் காலங்களில் வாய்ப்பில்லை. யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.

    நீதிமன்றம் உள்ளது, ஊடகங்கள் உள்ளன. அவ்வளவு சீக்கிரம் நடந்து வந்த ஒன்றை சிலர் நிறுத்தி விட முடியாது.

    காலம் மாறிக்கொண்டுள்ளது. இந்து மதமும் மாறிக்கொண்டுள்ளது, இனியும் மாறும்.

    சில இடங்களில் நடக்கலாம் ஆனால், அது சரி செய்யப்படும்.

    உயர்சாதியினர் யார் என்று தெளிவுபடுத்துங்கள். பிராமணர்களா அல்லது ஆதிக்க சாதியினரா?

    உயர்சாதியினர் பெரும்பான்மை பற்றிப் பேசுகிறீர்கள் ஆனால், உங்கள் கட்சியிலேயே ஆதிக்க சாதியினருக்கு தானே பெரும்பான்மை இடங்கள் கொடுக்கப்படுகிறது.

    திமுக சாதியை எதிர்க்கிறது என்றால், ஏன் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்த வேண்டும்?

    கொங்கு பகுதியில் கவுண்டரையும் தென் மாவட்டங்களில் முக்குலத்தோரையும் ஏன் நிறுத்த வேண்டும்?

    திமுக எண்ணம் சம உரிமை என்றால், பட்டியல் இனத்தவருக்கு, சிறுபான்மையினருக்கு 10% தானே வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

    உங்கள் கட்சி தலைவர் பதவியையே ஒரு பட்டியில் இனத்தவருக்குக் கொடுத்தால், சிறப்பாக இருக்குமே.

    நீங்கள் வெறுக்கும் பாஜக தன் மாநில கட்சி தலைவர் பதவியை L முருகனுக்குத்தானே கொடுத்தது.

    பாஜக தானே கலாமுக்கும், ராம் நாத் கோவிந்துக்கும் பதவி கொடுத்தது. காங் அரசோ, திமுக அரசோ கொடுக்கவில்லையே.

    “என் வாக்கு திமுக விற்கு தான்”

    அதைத்தான் கட்டுரையிலும் கூறியுள்ளேன்.

    “நான் தொடர்ந்து இந்துவாக தான் இருப்பேன்.”

    நீங்களும் நானும் இருப்போம் செந்தில் ஆனால், மற்றவர்கள் இருப்பார்களா? இந்து மதம் இருக்குமா? என்பது தான் கட்டுரை.

    கட்சிக்காக நீங்கள் உங்கள் தலைவர் செய்வதை சகித்து / ஏற்றுக் கொள்கிறீர்கள். சம்பந்தமில்லாத என்னைப்போன்றவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

    உங்கள் கட்சித் தலைவரிடம் தலைவரே! இந்துக்களை அவமானப்படுத்த வேண்டாம், அனைவருக்கும் பொதுவானவராக இருங்கள் என்று கூறுங்கள்.

    எனக்கும் திமுக மீது தனிப்பட்ட கோபமில்லை. திமுக திட்டங்கள் முயற்சிகளைப் பாராட்டி நிறைய எழுதியுள்ளேன்.

  12. திரு மணிகண்டன்,
    நன்றி.

    திரு கிரி,
    //இதெல்லாம் இனி வரும் காலங்களில் வாய்ப்பில்லை. யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.//
    இப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்து உங்கள் கருத்து உள்ளது. அவர்கள் மெஜாரிட்டி ஆகி இருக்கும்போது, நிலைமையே தலை கீழாக மாறி இருக்கும். அப்போது அவர்களுக்கு மைனாரிட்டி ஆகியிருக்கும் கீழ் சாதியினர் தேவையில்லை. பழைய அடக்குமுறை திரும்பவும் நிச்சயம் திரும்பும். H ராஜா போன்ற தலைவர்களுக்கு, கிறிஸ்தவமும் முஸ்லிம்மும் இருக்கும் வரை தான், இந்து இந்து என்று கூறுவார். ஒருவேளை, கிறிஸ்தவமும் முஸ்லிம்மும் இல்லாத இந்தியா நாளை வந்தால், அவருக்கு இந்து என்கிற கோஷம் தேவையில்லை. இனிமேல் அவருக்கு, கீழ் ஜாதி இந்துக்களை (மாமிசம் சாப்பிடுகிற) ஒழிக்க பாடு பட்டு கொண்டிருப்பார். இதனால் தான் நான் சொன்னேன். இந்துக்களின் எதிரி, இவர்களை போன்றவர்கள் தான்.

    நீங்கள் கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுவதை குறிப்பிடுகிறீர்கள். இதெல்லாம் ஒரு குறுகிய கால Bubble மட்டும் தான். நீண்ட நாட்களை எடுத்துக்கொண்டால், கிறிஸ்தவமும், மேற்கத்திய நாடுகளில் தேய்வதை போல தேயவே செய்யும்.

    நான் திமுக கட்சிக்காரன் என்று முடிவு செய்து விட்டர்கள். அது உங்கள் உரிமை. ஆனால், நான் கட்சிகாரன் இல்லை. என் வாக்கு மட்டும் தான் திமுகவிற்கு, கடந்த முறை ஜெ. க்கு வாக்கு, இந்த முறை ஸ்தாலினுக்கு, என்ன பொறுத்தவரை. திமுக அல்லது அதிமுக போதும். இந்து மதத்திற்கு எதிரி, மத பிரச்னை பண்ணுகிற, கலகம் பண்ணுகிற கட்சிகள் தான்.

    நாமும் இந்து மதத்தில் ஏராளமாக உள்ள நல்ல விஷயங்களை சொல்லி இந்து மதத்தை (மத மாற்றம்) வளர்க்கலாம். அவர்கள் செய்வதை போல. இதை விட்டுவிட்டு, கலக காரர்களை ஆதரித்தால், நாடும் முன்னேறாது, இந்து மதமும் முன்னேறாது.

  13. கிரி, மதம் சார்ந்த பதிவுகளில் நான் பொதுவாக என் கருத்துக்களை பகிர்வதில்லை.. ஏனென்றால் எல்லா மதங்களிலும் அடிப்படையில் சில பிரச்சனைகள் இருக்கின்றது.. ஒரு சிலரின் சுயநலனுக்கான உருவாக்கப்பட்டவைகள் இது.. ஆனால் அதற்கான தீர்வு எப்போது என்று தெரியவில்லை.. கட்டுரையை ஆழமாக படிக்கும் போது உங்களின் கருத்துக்களும் , மணிகண்டன் அவர்களின் கருத்துக்களும் என்னை கவர்ந்தது..(மிகவும் அலசி விவரமாக எழுதி இருக்கிறார், வயதும், அனுபவமும் கொண்ட நபராக தெரிகிறார்.. உண்மையில் மிகவும் ரசித்து படித்தேன்..அவர் கருத்துகளையும் உள்வாங்கி கொண்டேன்.. நன்றி மணிகண்டன்..) பகிர்வுக்கு நன்றி கிரி..

  14. @செந்தில்

    “இப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்து உங்கள் கருத்து உள்ளது. அவர்கள் மெஜாரிட்டி ஆகி இருக்கும்போது, நிலைமையே தலை கீழாக மாறி இருக்கும்.”

    நீங்கள் இன்னமும் அவர்கள் என்பதை யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை.

    பிராமணர்கள் என்றால், அவர்கள் பெரும்பான்மை கிடையாது.

    “பழைய அடக்குமுறை திரும்பவும் நிச்சயம் திரும்பும்.”

    எனக்குத்தெரிந்து இதைச் செய்வது ஆதிக்க சாதியினரே!

    “H ராஜா போன்ற தலைவர்களுக்கு, கிறிஸ்தவமும் முஸ்லிம்மும் இருக்கும் வரை தான், இந்து இந்து என்று கூறுவார். ”

    நீங்கள் தேவையற்று H ராஜாக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அவரை அவரது கட்சிக்காரர்களே மதிப்பதில்லை.

    நானே அவரை விமர்சித்து எழுதி இருக்கிறேன்.

    “இதனால் தான் நான் சொன்னேன். இந்துக்களின் எதிரி, இவர்களை போன்றவர்கள் தான்.”

    இவரை இந்துக்கள் யாரும் பொருட்டாக மதிக்கவில்லை என்பதே உண்மை.

    “நீண்ட நாட்களை எடுத்துக்கொண்டால், கிறிஸ்தவமும், மேற்கத்திய நாடுகளில் தேய்வதை போல தேயவே செய்யும்.”

    கிறித்துவமே தேயும் போது இந்து மதம் என்ற ஒன்றே இல்லாமல் போய் இருக்கும்.. அப்படித்தான் தற்போதைய நிலையுள்ளது.

    “நான் திமுக கட்சிக்காரன் என்று முடிவு செய்து விட்டர்கள். அது உங்கள் உரிமை. ஆனால், நான் கட்சிகாரன் இல்லை. ”

    மன்னிக்க செந்தில்.

    என் தள ஃபேஸ்புக் பேஜில் செந்தில் என்ற திமுக ஆதரவாளர் எப்போதும் திமுக க்காக வாதாடுவார். நான் அந்த செந்தில் தான் நீங்கள் என்று நினைத்துப் பேசி விட்டேன்.

    அப்போதும் சந்தேகம் இருந்தது, ஃபேஸ்புக் ல தானே கருத்திடுவார் என்று.

    “என்ன பொறுத்தவரை. திமுக அல்லது அதிமுக போதும். ”

    இவர்கள் சரியாக நடந்து கொண்டு இருந்தால், மக்கள் ஏன் மூன்றாவது கட்சிக்குப் போக வேண்டிய நிலை வருகிறது!

    “இந்து மதத்திற்கு எதிரி, மத பிரச்னை பண்ணுகிற, கலகம் பண்ணுகிற கட்சிகள் தான்.”

    எந்த கட்சிகளை கூறுகிறீர்கள்?

    “நாமும் இந்து மதத்தில் ஏராளமாக உள்ள நல்ல விஷயங்களை சொல்லி இந்து மதத்தை (மத மாற்றம்) வளர்க்கலாம். அவர்கள் செய்வதை போல”

    சரியாகக் கூறினீர்கள். நம்மால் தற்போது செய்யக்கூடிய காரியம் இதுவே.

    என்னைப்பொறுத்தவரை மதமாற்றம் என்பது விருப்பத்தில் நடக்க வேண்டும், இயலாமையை பயன்படுத்தியோ ஏமாற்றியோ நடக்கக்கூடாது.

    “இதை விட்டுவிட்டு, கலக காரர்களை ஆதரித்தால், நாடும் முன்னேறாது, இந்து மதமும் முன்னேறாது.”

    நான் பாஜக வை ஆதரிக்கிறேன் ஆனால், கலக காரர்களை ஆதரிக்கவில்லை. கடந்த 7+ வருடங்களில் பாஜக ஆட்சியில் எந்த மதக்கலவரமும் நடக்கவில்லை.

  15. @யாசின் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால், நான் உங்களை எப்போதும் மற்றவர்கள் தட்டில் வைத்து நினைப்பதில்லை, நினைக்கவும் போவதில்லை.

    எனக்கு எப்போதுமே நீங்கள் தனித்தன்மையானவர் தான்.

    உங்களைப்போன்றவர்களே அனைத்து மதங்களிலும் மிகுந்து இருந்தால், இது போன்ற கட்டுரை எழுதவே அவசியம் இருக்காது.

    மணிகண்டன் கருத்துகள் விரிவாக, ஆழமாக உணர்ச்சிவசப்படாமல் இருக்கும்.

  16. கிரி,

    சிறு திருத்தம் practicing hindu அல்ல, நான் கூற வந்தது cultural hindu.

    செய்தி பார்ப்பதை வெகுவாக குறைத்து கொண்டேன். ஆளும் கட்சி இந்து மக்கள் மேல் நடக்கும் அடக்குமுறையை கண்டுகொள்ளாமல் இருந்தால் தமிழ்நாட்டில் பிஜேபி வளர அவர்களே வழி விட்டுவிடுவார்கள். கடந்த சில வருடங்களாவே படித்தவர்களிடம் மதம் பற்றிய விழிப்புணர்வும் விவாதங்களையும் காணமுடிகிறது. இது வெறுப்பாகவும் வசையாகவும் மாறாது ஒரு எல்லைக்குள் இருந்தால் அனைவருக்கும் நல்லது.

    இந்து அமைப்பின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. பொதுப்படையாக நாம் அவர்கள் என்ற வெறுப்பு யுக்தியை கையில் எடுக்கிறார்கள். RSS யின் சமூக பணி பற்றி நண்பர்களிடம் கேட்டு தெரிந்திருக்கிறேன். அவர்களின் சமூக தொண்டு பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களின் மேல் சில வன்முறை புகார்களும் உண்டு.

    நன்றி Yasin. இதுவரை 32 தீபாவளியை கொண்டாடியிருக்கிறேன். ஜெயகாந்தன், ஜெயமோகனின் தீவிர வாசகன். என் கருத்துக்கள் பெரும்பாலும் அவர்களிடமும் இருந்து பெற்றுக் கொண்டவை. காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதன் படி வாழ முயற்சி செய்து வருகிறேன்.

    • தங்கள் பதிலுக்கு நன்றி.. இதுவரை 32 தீபாவளியை கொண்டாடியிருக்கிறேன். (உங்கள் வயதை குறிப்பிடுகிறீர்களா என்று தெரியவில்லை).. ஆரம்பத்தில் நானும் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன்.. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னால் என்னால் அவரை பின் தொடர முடியவில்லை.. காரணம் அவர் எழுத்துக்களை வாசிக்க சரியான தருணமும், அவற்றை உள்வாங்கி கொள்ள ஒரு வித மனநிலையும் தேவை.. இது இரண்டும் எனக்கு பிரச்சனையானதால் அவரை தொடர முடியவில்லை.. தற்போதும் எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம் எழுத்துக்களை வாசித்து வருகிறேன்.. உங்களுக்கு விருப்பம் இருப்பின் இவர்கள் எழுத்துக்களை வாசித்து பார்க்கவும்.. நன்றி..

      • ஆம் யாசின், என் வயதைத்தான் குறிப்பிட்டேன். அ முத்துலிங்கம் அய்யா எழுத்துக்கள் பரிச்சயம் தான். அவருடைய சில சிறுகதைகளை வாசித்துஇருக்கிறேன்.அவருடைய வலைப்பூ வை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

        எஸ் ரா எழுத்தும் பிடிக்கும். அவருடைய நீண்ட உரைகள் எனக்கு இன்னும் அணுக்கமானவை.

  17. @மணிகண்டன்

    “செய்தி பார்ப்பதை வெகுவாக குறைத்து கொண்டேன்.”

    நான் தொலைக்காட்சியே பார்ப்பதில்லை 🙂 .

    “ஆளும் கட்சி இந்து மக்கள் மேல் நடக்கும் அடக்குமுறையை கண்டுகொள்ளாமல் இருந்தால் தமிழ்நாட்டில் பிஜேபி வளர அவர்களே வழி விட்டுவிடுவார்கள்.”

    இது தான் நடந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் ஒத்த ஓட்டு பாஜக என்று கிண்டலடித்துக்கொண்டு இருக்க, அவர்கள் கிராமங்களிலும் கிளை பரப்பிக்கொண்டுள்ளார்கள்.

    “கடந்த சில வருடங்களாவே படித்தவர்களிடம் மதம் பற்றிய விழிப்புணர்வும் விவாதங்களையும் காணமுடிகிறது.”

    நானும் காண்கிறேன் ஆனால், தேர்தல் முடிவுகளே எந்த அளவுக்கு இதன் தாக்கம் இருக்கும் என்று கூற முடியும்.

    நகராட்சி தேர்தல்களில் ஓரளவு தெரியும் என்று நினைக்கிறேன்.

    மத அமைப்புகள் என்றாலே பிரச்சனை இருக்கும், இது தவிர்க்க முடியாதது.

    Survival of the fittest தானே இங்கே பார்க்கப்படுகிறது.

  18. Good article.
    Wonderful analysis & Hindu munani created because of Christians dominants in Kanyakumari district.
    This is indirect war from overseas from freedom period.
    One day people of Tamilnadu will understand the real face of crises then they will open their mouth.
    Kerala now facing the problem like love jigath etc.
    Neutral Hindus are dangerous than Christians & Muslims.
    Not long time, Very soon we will face……………

  19. அண்ணா வணக்கம்!

    உங்களின் நிறைய பதிவுகளை நான் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் நன்றாக இருப்பதை நகலெடுத்து எனது பேஸ்புக் பதிவில் போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் அதில் தவறு ஏதேனும் இருந்தால் மன்னித்து விடுங்கள், எனது மனதில் உள்ள அனைத்து குமுறல்களையும் நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள் இந்த மக்கள் இதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை புரிந்து கொள்ளமாட்டார்கள் புரிந்துகொள்ள விடமாட்டார்கள் திராவிடர்கள் அதுதான் இங்கு உண்மை இந்தப் பதிவை இதுவரை இரண்டு முறை படித்து விட்டேன் படிக்கும்போதெல்லாம் என் மனதில் இருந்து கொட்டுகின்ற
    குமுறலாகவே தோன்றுகின்றன நன்றி அண்ணா!!!

  20. @சரவணன் சில விஷயங்கள் பலருக்கு தாமதமாகவே புரிகிறது ஆனால், காலம் கடந்ததாக இருக்கும்.

    @ராமலிங்கம்

    “நன்றாக இருப்பதை நகலெடுத்து எனது பேஸ்புக் பதிவில் போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் அதில் தவறு ஏதேனும் இருந்தால் மன்னித்து விடுங்கள்”

    தவறு எதுவுமில்லை.. பகிரும் போது giriblog.com தளத்துக்கு ஒரு கிரெடிட் கொடுத்து விடுங்கள்.

    பலரின் நிலை இது தான். இன்னமும் இப்பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் உள்ளார்கள். கூறினாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

    மாற்றம் வரும் என்று நம்புவோம்.

  21. “ஜாதி” என்கின்ற ஒரு அருவருப்பை முதன்முதலில் உருவாக்கி முதன்முதலில் தன் தலையில் மண்ணையள்ளி போட்டுக்கொண்டதும்…. இன்னும் அதை தொடர்ந்துவருவதும் இதே இந்துமதம்தான்.. அடுத்தவர்களை குறைசொல்லி பயனில்லை….

  22. பல்லாயிரம் வருசமா யாரோட உதவியும் இல்லாம இப்போ வரைக்கும் இந்து மதம் வாழ்ந்துட்டே இருக்கு… தண்ணி நெருப்பு காத்து நிலம் ஆகாயம் னு எல்லாத்தயும் கடவுள் வணங்கி மதிச்சு எந்த மதத்தையும் கஷ்ட படுத்தாம என் மததுக்கு வா னு கட்டாய படுத்தாம பெருந்தன்மையா போய்ட்டு இருக்க மதம் நீங்க நெனைக்குற மாதிரிலாம் மனுஷனா ல அழிக்க முடியாது… அப்டியே அது முடிவுக்கு வருங்கிற நிலைமைக்கு வந்தாலும் கண்டிப்பா அது விஸ்வரூபம் எடுக்கும்…. நமசிவாயம் 🔥🙏🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!