Google RCS என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம். Image Credit
Google RCS
Rich Communication Services என்பதே RCS என்று அழைக்கப்படுகிறது. கூகுள் இதை Messages செயலியில் வழங்குகிறது.
மொபைல் வந்த புதிதில் தகவல்களை உடனடியாகப் பகிர்ந்து கொள்ள SMS (Short Message Service) பயன்படுத்தப்பட்டது ஆனால், WhatsApp வந்த பிறகு இதன் பயன்பாடு குறைந்து விட்டது.
காரணம், SMS கட்டணம் என்பதாலும், WhatsApp இலவசம் என்பதோடு பல்வேறு வசதிகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம் என்பதும் இதன் சிறப்பு.
தற்போது இதையே கூகுள் கொஞ்சம் மேம்படுத்தி RCS ஆகத் தருகிறது.
Google RCS பயன்படுத்த இணையம் அவசியம்.
புரியவில்லையே!
iPhone பயன்படுத்துபவர்களுக்கு iMessage என்ற வசதியுள்ளது. இணையம் இருந்தால், இன்னொரு iPhone பயனாளருடன் SMS செயலி (App) வழியாக இலவசமாகத் தொடர்பு கொள்ள முடியும்.
இணையம் இல்லையென்றால், அனுப்பும் தகவல் வழக்கமான SMS முறையில் செல்லும் அதாவது கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
இதே வழி முறையில், Google Messages பயன்படுத்துகிறவர்களுக்கு RCS தொழில்நுட்பத்தில் வழங்குகிறது.
இந்த வசதி அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும், சாதனங்களுக்கும் வழங்கப்படவில்லை ஆனால், பெரும்பாலானவர்களுக்கு வேலை செய்கிறது.
ஒருவேளை உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால், மேற்கூறிய காரணமே.
என்ன சிறப்புகள்?
வழக்கமான SMS செயலியை விட Google Messages செயலி மேம்பட்டது.
- Emoji களை பயன்படுத்தி SMS அனுப்பலாம்.
- How are you, I’m fine, Thank You, Okay, Call you back later போன்ற Smart Reply பதில்கள் உள்ளன.
- வழக்கமான அளவு இல்லாமல் கூடுதல் எழுத்துக்களில் அனுப்பலாம்.
- Google Gemini AI உள்ளதால், இதை வைத்து என்ன கேள்வியையும் கேட்டு உடனடியாகப் பதில் பெறலாம்.
- ChatGPT போலவே செயல்படும்.
- குறிப்பிட்ட Message யை Pin செய்து கொள்ளலாம்.
- OTP களை 24 மணிநேரங்களுக்குப் பிறகு தானாகவே Delete செய்து விடச் செயல்படுத்தலாம்.
- SMS யைத் திறந்து OTP யை COPY செய்யாமல் Notification பகுதியிலேயே COPY செய்யும் வசதி.
- நிழற்படங்களை, காணொளிகளை 100 MB வரை அனுப்பலாம்.
- வரும் SMS ல் Link இருந்தால், அத்தளத்தின் Preview காண்பிக்கப்படும்.
- WhatsApp போன்று Read Receipt Enable / Disable செய்து கொள்ளலாம்.
- Group Message அனுப்பலாம்.
- RCS Message செல்லவில்லையென்றால், வழக்கமான முறையில் SMS செல்லும்படி மாற்றலாம்.
Google RCS கட்டாயமா?
கிடையாது.
தேவையில்லையென்றால், Settings –> RCS Chat சென்று Turn Off செய்து கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள், சிறப்பான அனுபவமாக இருக்கும்.
RCS Enable செய்த பிறகு நிதிசார்ந்த Offers குறுந்தகவல்கள் அதிகம் வருகின்றன காரணம், இதற்கு கட்டணம் இல்லையென்பதாக இருக்கலாம்.
தேவையில்லையென்றால் Block செய்யலாம்.
கொசுறு
IRCTC, Bank, Airtel, Amazon SMS யை (AD-HDFCBK) எளிதாக அடையாளப்படுத்த contact ல் சேர்த்து அதற்கு DP வைத்து விடுவேன்.
இதன் மூலம் DP வைத்தே யாரிடமிருந்து வந்தது என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், Google Messages பயன்படுத்தினால் சிலவற்றுக்கு DP தெரியாமல் இருந்தது.
இதன் காரணமாக, Oneplus Message செயலி பயன்படுத்தி, பின்னர் எதனால் Google Messages செயலியில் DP வரவில்லை என்று Troubleshoot செய்தேன்.
செயலியின் Cache Clear செய்த பிறகு இப்பிரச்சனை சரியானது.
‘அட! இது தெரியாமல் பல வருடங்களாக Google Messages செயலியைப் பயன்படுத்தாமல் போனோமே‘ என்று கடுப்பாகி விட்டது.
தற்போது பக்காவாக உள்ளது, பயன்படுத்த விருப்பமாக உள்ளது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Small correction “ChatGBT – ChatGPT”
கிரி.. கைப்பேசி அறிமுகமான காலகட்டங்களில் நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை தற்போது எண்ணி பார்த்தாலும் சிரிப்பாக இருக்கிறது.. என்னுடைய நண்பன் 2003/2004 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்தான்.. அவனுக்கு இன்னொரு நண்பனின் கைபேசியிலிருந்து SMS வெளிநாட்டிற்கு அனுப்புவேன்..
அந்த சமயத்தில் AIRCEL sms இலவச சேவை இருந்தது. ஒரு sms அனுப்பிய பின் வெளிநாட்டில் டெலிவரி ஆன பின்பு ஒரு sms வரும் போது இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. உண்மையில் அது ஒரு மகிழ்ச்சியான தருணம்.. இப்போதும் அதன் நினைவுகள் அப்படியே இருக்கிறது.. ஆனால் நண்பனின் நட்பு மட்டும் இல்லாமல் போகி விட்டது.. 2007 ஜூன் மாதம் தான் முதன் முதலில் கைப்பேசி நோக்கியா 1100 பயன்படுத்த தொடங்கினேன்.. தற்போதும் நினைவுக்காக அதை வைத்து இருக்கிறேன்..
இதுவரை ஐபோன் பயன்படுத்தியது இல்லை.. அதனால் இவற்றை குறித்து எனக்கு தெரியவில்லை. Google Messages இதுவரை இந்த சேவையை குறித்து தெரியாது.. பொதுவாக தான் புதிய தொழில்நுட்பத்தில் வருபவைகளை அதிகம் பயன்படுத்தவில்லை என்றாலும் அதை குறித்து தெரிந்து கொள்வதில் எப்போதும் ஆர்வம் அதிகம் இருக்கும்.. எனக்கு தெரியாத புதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி கிரி..
@சுரேஷ்
இப்படி ஏதாவது ஒரு தவறு இருந்தால் தான் எட்டிப்பார்ப்பேன் என்று ஏதாவது சபதம் செய்துள்ளீர்களா? 🙂 .
@யாசின்
“அந்த சமயத்தில் AIRCEL sms இலவச சேவை இருந்தது. ”
ஆமாம் Aircel & SkyCell
“2007 ஜூன் மாதம் தான் முதன் முதலில் கைப்பேசி நோக்கியா 1100 பயன்படுத்த தொடங்கினேன்.. தற்போதும் நினைவுக்காக அதை வைத்து இருக்கிறேன்..”
மாதம் முதற்கொண்டு நினைவு வைத்துள்ளீர்களே 😮 .
நானும் ஞாபகார்த்தமாக 1100 வைத்துள்ளேன் 🙂 .
“பொதுவாக தான் புதிய தொழில்நுட்பத்தில் வருபவைகளை அதிகம் பயன்படுத்தவில்லை என்றாலும் ”
புதிதாக ஏதாவது வந்தால், என்னால் பயன்படுத்த முடியும் என்றால், அதை உடனே பயன்படுத்திப்பார்த்து விட்டுத்தான் மறுவேலை 🙂