War Zone | உக்ரைனை உருக்குலைத்த ஜெலன்ஸ்கி

3
War Zone

க்ரைன் ரஷ்யா போர் முடிவதற்கான அறிகுறியே தெரியாத அளவுக்குச் சென்று கொண்டுள்ளது. பலர் அகதிகளாக வேறு ஐரோப்பா நாடுகளுக்குச் சென்று விட்டார்கள். Image Credit

War Zone

ரஷ்யாவுடன் உக்ரைனில் நடக்கும் சண்டையில் என்ன நிலைமை, என்னென்ன பாதிப்புகள் நடந்துள்ளன என்பதை War Zone ஆவணப்படமாக Discovery சேனல் காட்டியுள்ளார்கள். Bear Grylls பங்கேற்றுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் காண்பிக்கப்படும் காட்சிகள் உக்ரைன் எவ்வளவு மோசமாக உருக்குலைத்து அழிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

செய்திகளில் அவ்வப்போது தெரிந்தவற்றைக் காட்சிகளாக இதில் காண முடிகிறது.

பழம்பெரும் கட்டிடங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், பூங்காக்கள் என்று ஏராளமான இடங்கள் அழிந்துள்ளன. இவற்றை மறுசீரமைப்பது எளிதல்ல.

ஏராளமான நிதி உதவியும், காலமும் தேவை.

முட்டாள் ஜெலன்ஸ்கி

எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஜெலன்ஸ்கியை போன்ற ஒரு நாட்டின் ஜனாதிபதியைக் கண்டதில்லை. தங்கள் நாட்டு மக்களைச் சீரழித்து விட்டார்.

எந்த முட்டாள் ஜனாதிபதியும் தவறைச் செய்தால், அவர்கள் நாடு மட்டுமே பாதிக்கப்படும் ஆனால், இவரால் ஒட்டுமொத்த ஐரோப்பாவே சிக்கலில் உள்ளது.

அதை விடக் கொடுமை, மொத்த ஐரோப்பாவும் வலித்தாலும் பரவாயில்லையென்று தங்கள் தலையைக் கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொண்டுள்ளனர்.

ஜெலன்ஸ்கி பேசுவதெல்லாம் உணர்ச்சிமிகு பேட்டிகளாக, ஃபோட்டோ ஷூட் விளம்பர நிகழ்ச்சிகளாக உள்ளதே தவிர, மக்களின் மீதுள்ள அக்கறையாக இல்லை.

NATO வில் இணையக் கூடாது என்பது தான் ரஷ்யா கூறுவது. ஜெலன்ஸ்கி கூறுவது, ‘நாங்கள் NATO வில் இணைவதே எங்களுக்குப் பாதுகாப்பு‘ என்கிறார்.

எது நடக்கக் கூடாது என்பதற்காகப் போர் செய்கிறாரோ அதை அவரே செய்து விட்டாரே! இதன் பிறகு NATO வில் இணைந்தும் என்ன பயன்?

ஆயிரக்கணக்கில் தனது மக்கள் இறக்க காரணமாகி விட்டார், பல லட்சம் மக்கள் அகதிகளாகி விட்டனர். தற்போது என்ன சாதித்து விட்டார்? எதைத் தடுத்து விட்டார்?!

மேற்கத்திய நாடுகளின் பொறாமை

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளுக்கு ரஷ்யா மீதுள்ள பொறாமையால், உக்ரைனுக்கு ஆயுதம் தொடர்ச்சியாக வழங்கிக்கொண்டுள்ளார்கள்.

இதுவே போர் முடியாமல் தொடர காரணமாக உள்ளது.

போலந்து சமீபத்தில் ஹெலிகாப்டர்களை வழங்கியது, தடை செய்யப்பட்ட குண்டுகளை வழங்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யாவை அழிக்க நினைத்து, அவர்களது பொருளாதாரத்தை அழித்துக்கொண்டுள்ளார்கள்.

Recession

குறிப்பாக ஜெர்மனி Recession அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காரணம், இரண்டாவது முறையாக ஜிடிபி மைனஸில் சென்று விட்டது.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் ஜிடிபி இரு முறை தொடர்ந்து மைனஸில் சென்றால், அது Recession க்கு வந்து விட்டது என்று அர்த்தம்.

தற்போது கடுப்பான ஐரோப்பா நாடுகள் தங்கள் கொடுக்கும் உதவித்தொகைக்கு உக்ரைனிடம் கணக்கு கேட்டு வருகிறார்கள், சிலர் உதவியைக் குறைத்து விட்டார்கள்.

காரணம், அவர்கள் நாடே பொருளாதாரத்தில் பின் தங்குகிறது.

சமீப சர்ச்சை, உக்ரைனுக்குக் கொடுத்த ஆயுதங்கள் பிரான்சில் நடந்த கலவரத்தில் கலவரக்காரர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கைகளுக்குச் சென்றதை ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.

உலகப்பொருளாதாரம்

அமெரிக்காவை நம்பி ஐரோப்பாவும், ஜெலன்ஸ்கியும் தங்களை அழித்துக்கொண்டது மட்டுமல்ல, உலகப்பொருளாதாரத்தையும் சிக்கலில் நிறுத்தியுள்ளார்கள்.

இப்போரால், உலகமே நிச்சயமற்ற நிலையில் உள்ளது. இதனால், பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, ஆட்குறைப்பு நடைபெறுகின்றன.

பல நாடுகளில் பணவீக்கம் ஏற்பட காரணமாகியுள்ளது.

பைத்தியக்காரன் கையில் ஆயுதம் கிடைத்தால் மிக ஆபத்தானது என்று கூறுவார்கள். தற்போது அந்தப் பைத்தியக்காரன் ஈகோ ஜெலன்ஸ்கி தான்.

தனது முட்டாள்தனத்தால், உலகை சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறார். வாய்ப்புக்கிடைத்தால் Discovery War Zone பார்க்கவும்.

தொடர்புடைய கட்டுரை

ஜெலன்ஸ்கி என்ற கோமாளி

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. கிரி, மொத்தத்தில் இந்த போர் தேவையில்லாத ஒன்று.. பாதிப்படுவது சொந்த நாட்டின் மக்கள் தான்.. யாரோ ஒரு சிலரின் சுய நலனுக்காக ஒட்டு மொத்த நாடே இன்று பாதிப்படைந்து விட்டது.. அதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வாறு இப்படி சிந்தித்து முடிவெடுக்கிறார்கள் என்று புரியவில்லை.. எப்படியோ போரில் உக்கிரைன் வெற்றி பெற்றாலும் வெற்றியை கொண்டாட சொந்த நாட்டு மக்கள் யாருமே நாட்டில் இருக்க மாட்டார்கள்.. பின்பு எதற்கு இந்த போர்?

    வெகு சமீபத்தில் Sisu (film) இந்த ஆங்கில (finland) படத்தை பார்த்தேன்.. மிகவும் ரசித்து பார்த்தேன்..

    https://www.youtube.com/watch?v=2NnPzpuU5ao

    படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது.. கண்டிப்பாக பார்க்கவில்லை யென்றால் பார்க்கவும்.. படத்தின் மேக்கிங் அருமையாக இருந்தது.. வெறும் 90 நிமிடம் மட்டுமே.. ஆனால் விறுவிறுப்பிற்கு சிறிதும் குறைவில்லை..

  2. @யாசின்

    “மொத்தத்தில் இந்த போர் தேவையில்லாத ஒன்று.. பாதிப்படுவது சொந்த நாட்டின் மக்கள் தான்.”

    மிகச்சரி.

    “போரில் உக்கிரைன் வெற்றி பெற்றாலும் வெற்றியை கொண்டாட சொந்த நாட்டு மக்கள் யாருமே நாட்டில் இருக்க மாட்டார்கள்.. பின்பு எதற்கு இந்த போர்?”

    இதே கேள்வி தான் எனக்கும். மற்ற ஐரோப்பா நாடுகள் இதை வளர்க்கவே முயல்கிறார்களே தவிர நிறுத்த முயற்சிக்கவில்லை.

    இந்தக் கோமாளியும் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.

    Sisu நிச்சயம் பார்க்க முயற்சிக்கிறேன்.

    எனக்கு Video வரவில்லை. இந்தியாக்கு தடை செய்யப்பட்டு இருக்கலாம்.

    @Magesh Thank you for your suggestion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!