YouTube ஒரு அற்புதமான தளம். இதில் கிடைக்காததே இல்லையெனும் அளவுக்குத் தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது. இதில் உள்ள History வசதி பற்றிப் பார்ப்போம்.
History
YouTube ல் காணொளியைப் பாதியில் நிறுத்தி விட்டு, வேறு வேலை பார்க்கவோ அல்லது வேறு காணொளி பார்க்கவோ சென்று இருப்போம். Image Credit
பின்னர் திரும்ப முன்பு பார்த்த காணொளியைப் பார்த்தால், எந்த இடத்தில் நிறுத்தி இருந்தோமோ அதே இடத்திலிருந்து துவங்கும்.
இது மிக வசதியாக இருப்பதால், துவக்கத்திலிருந்து பார்க்க வேண்டியதில்லை. நேரமிருக்கும் போது பார்க்கும் பெரிய காணொளிகளுக்கு மிகப் பயனுள்ளது.
ஆனால், கொஞ்ச மாதங்களுக்கு முன்னர் திடீரென்று இந்த வசதி எனக்கு நின்று விட்டது. திரும்பப் பார்த்தால், துவக்கத்திலிருந்து வந்தது.
முன்பு அதிகக் காணொளிகளைப் பார்ப்பதில்லை என்பதால், அதைப் பெரிய பிரச்சனையாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், தற்போது Oneplus Bluetooth Z2 Neckband வாங்கிய பிறகு பயண நேரத்தில் காணொளிகளைக் காண்பதால், இவ்வசதி தேவைப்பட்டது.
அதோடு பணி தொடர்பான காணொளிகளைத் தேர்வுக்குப் பார்த்து / படித்து வருவதால், முக்கியமான தேவையாக இருந்தது.
நானும் கூகுள் தேடலில் எங்கெல்லாம் தேடிப்பார்த்தும், சரியான பதில் கிடைக்கவில்லை, கடுப்பாகி விட்டு விட்டேன்.
Privacy checkup
கொஞ்ச நாட்களுக்கு முன் கூகுள் தனது வழக்கமான Privacy checkup பரிந்துரையைக் கொடுத்தது என்று பரிசோதித்துப் பார்த்தேன்.
அதில் History Off ல் இருந்தது. Privacy யில் கூடுதல் கவனம் எடுப்பேன் என்பதால், எப்போதோ Off செய்து வைத்துள்ளேன் போல.
தற்போது அதிகக் காணொளிகள் பார்ப்பதால், தேடுவதில் சிரமம் இருந்ததால், பார்த்த காணொளியைக் கண்டறிய இருக்கட்டும் என்று On செய்தேன்.
அதன் பிறகு மேற்கூறிய பிரச்சனை சரியாகி விட்டது. இரண்டுமே History சம்பந்தப்பட்டதால் பிரச்சனையாகியுள்ளது. கொஞ்சம் யோசித்து இருந்தால் முன்னரே பிரச்சனையைச் சரி செய்து இருக்கலாம்.
ஆனால், என்னவோ எனக்கு அப்போது தோன்றவில்லை. உங்களுக்கு இது போலப் பிரச்சனை இருந்தால், History யை On செய்து பாருங்கள்.
YouTube Premium
2021 ல் இருந்து YouTube Premium பயன்படுத்தி வருகிறேன். துவக்கத்தில் விளம்பர தொல்லைக்காகவே இதை Subscribe செய்து இருந்தேன்.
அதோடு டிவியில் வரும் தொடர் விளம்பரங்களைச் சகிக்க முடியவில்லை என்பதாலையே OTT / YouTube Premium / Android TV க்கு மாறி விட்டேன்.
மொபைலில் காணொளியை Minimize செய்தாலும் பின்னணியில் ஓடிக்கொண்டு இருப்பதால், Premium ல் கூடுதலாக இந்த வசதியும் பயனுள்ளதாக உள்ளது.
தற்போது நடந்து செல்லும் போது காணொளியைக் காணாமலே ஏதாவது ஒரு விவாதத்தை, பேச்சைக் கேட்க முடிகிறது.
கொசுறு
ஃபேஸ்புக் நிறுவனம் ட்விட்டருக்கு போட்டியாக ட்விட்டர் போலவே Threads என்ற நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.
இணைபவர்கள் எண்ணிக்கை கோடியைத் தாண்டி விட்டது.
தனது தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் மார்க் காபி அடித்துள்ளதாக எலன் மஸ்க் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளார்.
அனைத்து தளங்களிலும் giriblog தளத்தை இணைப்பது போல Threads தளத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.
முகவரி https://threads.net/giriblog
எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிறது என்பதைப் பொறுத்து கட்டுரைகள் பகிரப்படும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இந்த வசதி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.. காரணம் நான் அதிகம் youtube இல் பார்ப்பது.. என்னுடைய பள்ளி கல்லூரி வயதில் நான் பார்த்த / பார்க்க தவறிய கிரிக்கெட் போட்டிகளின் தொகுப்பை தான்.. இது தவிர்த்து சில சமயம் தமிழ் ஹிந்தி பாடல்கள்.. சிலரது விருப்ப காணொளிகள்.. சமையல் குறித்தும் சில நேரங்களில் பார்ப்பதுண்டு.. இந்த history வசதி இருப்பதால் சில நேரங்களில் தவறவிட்ட காணொளிகளை பின்பு காண்பதும் உண்டு..
தனிப்பட்ட முறையில் youtube இல் எனக்கு மிகவும் பிடித்தது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்.. அதற்கு அடுத்து தமிழ் பாடல்கள்..தமிழில் நிறைய பழைய விருப்ப பாடல்கள் உண்டு.. ஹிந்தி பாடல் என்றதும் என் முதல் விருப்பம்.. kismat konnection படத்தில் வரும்
Bakhuda Tumhi Ho – https://www.youtube.com/watch?v=-kI769Xigik
இந்த பாடலை நான் கேட்கும் ஒவ்வொரு தருணமும் “இன்று தான் பிறந்து போல ஒரு உணர்வு” மன்னிக்கவும்.. “இப்போது தான் பிறந்து போல” ஒரு உணர்வு என்னுள் எழும்.. காரணம் தெரியவில்லை.. 14 வருடங்களாக கேட்டு வருகிறேன்.. சலிக்கவே இல்லை..
Try newpipe
without ad
@யாசின்
உங்களுக்கு கிரிக்கெட் அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும் என்று தெரியும் ஆனால், அதிகம் கிரிக்கெட் மட்டுமே பார்ப்பது வியப்பு.
ஒரே கிரிக்கெட் பார்ப்பது சலிப்பதில்லையா? ஆர்வம் இருப்பவர்களுக்கு என்றுமே எதுவுமே பிடித்தவை சலிப்பதில்லை.
Bakhuda Tumhi Ho 🙂
@Gokul Not now but will try later if I’m interested.