ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளில் குறிப்பாகப் பணவீக்கம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார மந்தம் ஏற்பட்டது.
இதனால் நிறுவனங்களுக்கு வருமான பாதிப்பு ஏற்பட்டதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. Image Credit
ஆட்குறைப்பு
Recession காரணமாக ஒவ்வொரு பெரிய நிறுவனமாக ஆட்குறைப்பு அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் நிறுவனங்கள் (குறிப்பாக ஐடி) அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் பாதிப்பு மெதுவாக இந்தியாவையும் வந்தடையும் காரணம், இந்திய நிறுவனங்கள் மேற்கூறிய நாடுகளைப் பெருமளவு சார்ந்துள்ளன.
2001, 2009 என்று இரு Recession ளைச் சந்தித்து இருந்தாலும், பெரியளவில் பாதிக்காமல் தப்பித்து விட்டேன் ஆனால், இந்த முறை சந்தேகமே!
நீக்கப்படுபவர்களில் முக்கியமானவர்களாக சரியாக பணி புரியாதவர்கள், WFH லியே பல காலமாக இருந்து, அலுவலகம் வராமல் புறக்கணிப்பவர்கள் உள்ளனர்.
பணியிழப்பு எதிர்பார்த்தால், அதற்கு எப்படித்தயாராவது என்று பார்ப்போம்.
செலவுகள் குறைப்பு
ஒருவேளை வேலை பறிபோனால், அடுத்த வேலை கிடைக்கும் வரை சமாளிக்க வேண்டும் அல்லவா! அதற்குப் பணம் தேவை.
பலரும் எதையும் சேமிக்காமல் செலவு செய்வதையே விரும்புகிறார்கள். தற்போது இது போன்று இருக்க முடியாது என்பதை உணர வேண்டும்.
எனவே, தேவையற்ற செலவுகளைக் குறைத்தே ஆக வேண்டும்.
குறைந்த பட்சம் மூன்று / நான்கு மாதங்களுக்குச் சம்பளம் இல்லையென்றால் சமாளிக்கக்கூடிய சேமிப்பை வைத்து இருப்பது அவசியம்.
காரணம், தற்போதைய சூழ்நிலையில் வேலை பறிபோனால், மீண்டும் கிடைப்பது எளிதல்ல. காரணம், மற்ற நிறுவனங்களும் இதே நிலையில் இருக்கும் என்பதால், புதிய ஊழியர்களைகளை எடுப்பதைக் குறைப்பார்கள்.
எனவே, போட்டி அதிகமிருக்கும். வயது அதிகம் என்றால், கூடுதல் சிக்கல். இதன் காரணமாகச் செலவுகளைக் குறைப்பதே தற்போது முடிந்த செயல்.
சில நிறுவனங்கள் ஆட்குறைப்பில், ஊழியர்களையே இராஜினாமா செய்ய வைத்து 3 மாத Basic கொடுக்கிறார்கள், அவ்வாறு கொடுக்கப்பட்டால் நல்லது.
திட்டமிடுதல்
- அத்தியாவசிய மாத செலவுகளைத் தவிர்க்க முடியாது. குறிப்பாக வீட்டு வாடகை, உணவு மற்றும் இதர செலவுகள் (தொலைபேசி, இணையம்).
- எனவே, புதிதாக ஏதாவது பொருள் வாங்கத் திட்டமிருந்தால், ஒத்தி வையுங்கள்.
- கிறித்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தள்ளுபடியில் நிறுவனங்கள் வலை விரிப்பதில் விழுந்து விடாதீர்கள்.
- SIP கட்டுபவராக இருந்தால், அடுத்த வேலை கிடைக்கும் வரை நிறுத்தலாம்.
- உணவகம் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே சாப்பிடுங்கள்.
- சுற்றுலாக்களை / பயணங்களைத் தவிர்க்கலாம்.
- புதிதாக முதலீடு செய்வதாக இருந்தால், ஒத்தி வையுங்கள்.
- செலவைச் செய்யும் முன்பு இச்செலவு அவசியமா என்று யோசியுங்கள்.
- முடிந்தவரை செலவுகளைத் தவிர்த்துச் சேமித்து வைக்கவும்.
ஆலோசனை
வேலை பறிபோனால் மனம் தளர்ந்து விடாதீர்கள்.
பிரச்சனை உங்களுக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்காவர்களுக்கு இதுபோலப் பிரச்சனைகள் உள்ளது.
எனவே, நமக்கு மட்டும் தான் பிரச்சனை என்று மனஉளைச்சல் அடையாதீர்கள்.
இதற்கு முன்பும் இது போன்ற நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய் விட்டார்களா!
எனவே, தைரியமாக இருங்கள். எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான் 😀 .
கொசுறு
அனைவருக்கும் போல எனக்கும் இதே பிரச்னைகளை எதிர்பார்ப்பதால், இதற்கான திட்டமிடுதல்கள் யோசனைகளில் உள்ளேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
The Great Resignation | திணறும் ஐடி நிறுவனங்கள்
ஐடி சப்போர்ட் துறை எதிர்காலம் எப்படியுள்ளது?
ஐடி துறை | 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!
எண்ணம் போல் வாழ்க்கை என்றால் என்ன?
நேரம் சரியில்லையென்றால் என்ன செய்வது?
கிரி.. 2001 இல் நடந்த Recession பற்றி எனக்கு பெரிய அளவில் தெரியவில்லை.. காரணம் நான் அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன்.. ஆனால் 2009 ம் ஆண்டு நான் வெளிநாட்டுக்கு வந்து ஒரு வருடம் கடந்த பின் நிகழ்ந்தது.. நிறைய துறைகள் பாதிப்பை சந்தித்தது, குறிப்பாக இங்கு கட்டுமான துறையும், அதை சார்ந்த நிறுவங்களும் பிரச்சனையை சந்தித்தது.. பின்பு மெல்ல மெல்ல பிரச்சனை சரியானது..
ஆனால் அந்த சமயத்தில் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய வளர்ச்சியை அடைந்தது.. எங்கள் நிறுவனமும் (அந்த துறையில் தான் பணி புரிகிறேன்) எதிர்பாராத வளர்ச்சியை அடைந்தது.. அதற்கான காரணம் எனக்கு ஏன் என்று அப்போது தெரியவில்லை..
செலவுகள் குறைப்பு : எப்ப இதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்போது எதிர்பாராத செலவு தவிர்க்க முடியததாக வந்து விடுகிறது.. என்னோட கான்செப்ட் (படையப்பா படத்தில் வரும் பாடல் வரி போல் தான் : யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்…) நாம நல்ல இருக்கும் போது நம்மை சார்ந்தவர்களுக்கும் நல்லா இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.. So தப்போ, சரியோ இதை நான் ரொம்ப வருடமா பின்பற்றி வருகிறேன்..
சொல்லாததும் உண்மையே புத்தகத்தில் படித்த ஒரு வரி என்னை ரொம்ப யோசிக்க வைக்கும்.. (நான் செலவு செய்யிற எல்லாமே என் சுய சம்பாத்தியத்தில் சம்பாரித்தவை.. நான் என் அப்பா, தாத்தாவின் பரம்பரை சொத்துக்களிலிருந்து எதையும் செலவு செய்ய வில்லை.. அப்படி செய்தால் அது தவறு..) so நாம சரியான பாதையில் தான் பயணப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று எண்ணி கொள்வேன்.. நம்மல சுற்றி இருப்பவர்கள் பசியோட இருக்கும் போது, நாம மட்டும் பிரியாணியை FULL கட்டு கட்டவேண்டும் என்று நினைப்பது சரியா தோணல கிரி..
நீங்கள் கூறியவைகளை ஏற்று கொள்கிறேன்.. குறிப்பாக குடும்பத்தினர் இது குறித்து கூடுதல் அக்கறையும் , கவனமும் எடுத்து கொள்வது மிக அவசியம்.. கடினமான தருணங்களில் குடும்பத்தின் ஆதரவும், உண்மையான நண்பர்களின் கனிவான வார்த்தைகளுமே நல்ல தெம்பை தரும். பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“கிரி.. 2001 இல் நடந்த Recession பற்றி எனக்கு பெரிய அளவில் தெரியவில்லை..”
நான் கார்பரேட்டுக்கு அறிமுகம் ஆனதே Recession உடன் தான் 🙂
“ஆனால் அந்த சமயத்தில் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய வளர்ச்சியை அடைந்தது..
உண்மை தான். அந்த சமயத்தில் ஐடி துறை தான் அதிகம் பாதிக்கப்பட்டது.
“நாம நல்ல இருக்கும் போது நம்மை சார்ந்தவர்களுக்கும் நல்லா இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.. So தப்போ, சரியோ இதை நான் ரொம்ப வருடமா பின்பற்றி வருகிறேன்..”
மிகச்சரியான முடிவு. தொடர்ந்து பின்பற்றுங்கள்.
“குறிப்பாக குடும்பத்தினர் இது குறித்து கூடுதல் அக்கறையும் , கவனமும் எடுத்து கொள்வது மிக அவசியம்.. கடினமான தருணங்களில் குடும்பத்தின் ஆதரவும், உண்மையான நண்பர்களின் கனிவான வார்த்தைகளுமே நல்ல தெம்பை தரும்.”
உண்மையே!