ஐடி துறை காலத்துக்கு ஏற்ப மாறி வருகிறது. பொதுவாக ஐடி துறை என்று கூறப்பட்டாலும், அதிலும் உள் பிரிவுகள் உள்ளன. இக்கட்டுரையில் ஐடி சப்போர்ட் துறை எதிர்காலம் பற்றிக் கூறப்படுகிறது.
ஐடி சப்போர்ட்
ஒரு நிறுவனத்தின் Server, Network, Storage, Laptop, Desktop மற்றும் இவை தொடர்பான பணிகளைச் செய்பவர்கள் ஐடி சப்போர்ட் பிரிவைச் சார்ந்தவர்கள்.
இத்துறையில் Internal Support & Client Support என்ற இரு பிரிவுகள் உள்ளன.
Internal Support என்பது ஒரு நிறுவனத்தின் Server, Network, Storage, Laptop, Desktop களை பராமரிப்பவர்கள். Image Credit
Client Support என்பது தங்கள் நிறுவனம் சார்பாக Client க்களுக்கு மேற்படி சேவையை வழங்குபவர்கள். இவை பெரும்பாலும் Server & Storage சார்ந்ததாக இருக்கும்.
ஐடி துறை வளர்ச்சி
Windows 3.1, 286 Motherboard, 4 MB இருந்த (1998) காலத்தில் இருந்து இத்துறையில் அனுபவம் உள்ளது. துவக்கத்தில் ஒவ்வொரு வீடாக, நிறுவனமாகச் சென்று கம்ப்யூட்டர் பிரச்சனைகளைச் சரி செய்யும் Field Engineer.
பின்னர் தனியொரு நிறுவனத்துக்கு Internal Support பிரிவில் மாறி, தற்போது வரை தொடர்கிறது.
துவக்கத்தில் விண்டோஸ் இயங்குதளத்தில் பணி புரிந்தாலும், தற்போது இருப்பது UNIX / Linux மேலாண்மை பிரிவில்.
கடந்த 23 வருடங்களாக (2021*) ஐடி சப்போர்ட் துறையில் பணி புரிகிற அனுபவத்திலும், இதுவரை நடந்த ஒவ்வொரு மாற்றங்களையும் நேரடியாகக் கவனித்து வந்த அடிப்படையிலும் பின் வரும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
Stability
முன்பு இருந்த Hardware / Software Stability கிடையாது. அதாவது, ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கொடுக்கும்.
Windows 95 இருந்த போது ‘Windows Protection Error‘ பிரச்சனை அடிக்கடி வரும். சில நேரங்களில் சரி செய்ய முடியும், சில நேரங்களில் OS Reinstallation தான்.
Windows NT வந்த போது Abrupt ஆக Shutdown ஆகி விட்டால், திரும்ப OS Reinstall செய்வதைத் தவிர வேறு வழியில்லை, காரணம் OS corrupt ஆகி விடும்.
இதன் பிறகு வந்த Windows 2000, Windows XP, Windows 7 ஆகியவை படிப்படியாக நிலைத்தன்மை அடைந்தது.
தற்போது (*2021) Windows 10 மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது.
துவக்கத்தில் Computer Assemble செய்யும் போது பல்வேறு பிரச்சனைகளை, சவால்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
Mother Board, CPU, RAM போன்றவை தரமற்றதாக இருக்கும்.
ஆனால், தற்போது கிட்டத்தட்ட Assembled Computer என்பது மறைந்து வருகிறது. Branded Computer ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தற்போதும் பிரச்சனைகள் இருந்தாலும், ஒப்பிடும் போது பல படிகள் முன்னேற்றம்.
Jus One Click
இதே போல Server, Storage ஆகியவையும் Stability அதிகரித்து வருகிறது. அதாவது, Hardware தரம் உயர்ந்து வருகிறது.
தவறுகள் ஏற்பட்டால் Auto Support போன்றவை உடனடியாகக் கவன ஈர்ப்புச் செய்கின்றன. எனவே, பிரச்சனைகளைத் தவிர்க்க முடிகிறது.
முன்பு பல நாட்களாகப் பயன்பாட்டில் உள்ள UNIX சர்வரை Shutdown / Reboot செய்தால், Boot ஆகுமா என்பது சந்தேகம் ஆனால், தற்போது அந்நிலையில்லை.
OS, Applications என்று தனித்தனியாக 50 கம்ப்யூட்டருக்குச் செய்து கொண்டு இருந்ததை, SCCM (System Center Configuration Manager) எளிதாக முடித்து விடுகிறது.
Reboot, Next, Yes, Options, Login என்று எதையும் செய்ய வேண்டியதில்லை.
முன்பு சர்வர் Configure செய்ய நாள் ஆகும் ஆனால், தற்போது Excel file ல் IP, Vlan, Host Name, etc கொடுத்தால், அதுவே configure செய்து Duplicate இருந்தாலும் கூறுகிறது.
இனி Readymade script, Automation process வந்து (ஏற்கனவே, சிலவற்றுக்கு வந்து விட்டது), Manual ஆகச் செய்வது குறைந்து விடும்.
தலைமுடிய பிச்சுக்கிட்டு, ஏதாவது மறந்துட்டு, எதனால் இப்படி ஆனதுன்னே தெரியலையேன்னு விழிக்காமல், Jus one click அவ்வளோ தான்.
மேற்கூறியது Cloud ல் பணி புரிபவர்களுக்கு எளிதாகப் புரியும்.
Audit
கார்ப்பரேட் நிறுவனங்களின் Audit அனைவரின் பொறுப்பையும் அதிகரித்துத் தவறுகளைச் சரியாக்குகிறது.
அதாவது கவனக்குறைவாக இருப்பது இயலாது. இருந்தால், Audit நடக்கும் போது Findings என்று Escalation எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
முன்பு ஏனோ தானோவென்று இருந்த வழக்க முறைகள் (Process) தற்போது தரமானதாக மாறி வருகிறது.
சுருக்கமாக, சரியான முறையில் பராமரிப்பு, முன்னேற்பாடுகளைச் செய்தால், எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் கிட்டத்தட்ட 95% தவிர்த்து விடலாம்.
இதையும் மீறி நடப்பது இயல்பு, இதை எக்காலத்திலும் சரியாக்க முடியாது.
உலகின் சிறந்த மேலாண்மை கொண்ட நிறுவனங்களில் ஒன்றான கூகுள் சர்வர் செயல் இழப்பே இந்த 5% ல் வருகிறது.
Cloud & Automation
- Cloud & Automation வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன குறிப்பாக Server, Storage பிரிவில்.
- Stability, Quality of Products காரணமாகத் தொழில்நுட்ப பிரச்சனைகள் குறைகிறது.
- பிரச்சனைகள் குறைவது மட்டுமல்ல, பணி எளிதாகிறது, 5 பேர் செய்யும் பணியை இருவர் செய்ய முடிகிறது.
- Microsoft Office 365 வந்தது, Exchange Mail Server பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் வேறு துறைக்கு மாற வேண்டிய நிலையானது.
- பல பணிகள் Outsource ஆகவும் வாய்ப்புகள் அதிகம்.
- Microsoft OneDrive ல் சேமித்து இருந்தால், எந்த டேட்டா இழப்பும் ஏற்படாது. எனவே, Hard Disk செயலிழந்தால் என்ன செய்வது? என்ற கவலையில்லை.
- Office 365 OneDrive கணக்குக்கு 1 TB மைக்ரோசாஃப்ட் தருகிறது.
Virtualizaion & Centralized Management
- ஊழியர்கள் அதிகரித்தாலும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சமாளிக்க முடிகிறது.
- Laptop & Desktop பார்ப்பவர்களுக்குக் கூடுதல் பணி சுமை அதிகரித்துள்ளதில் மாற்றுக்கருத்தில்லை.
- Server, Storage பார்ப்பவர்களுக்குச் சமாளிக்க முடிகிறது. அதோடு இவ்வகையில் உள்ளவர்களுக்கு ஊழியர்களுடனான நேரடி தொடர்பில்லை.
- முன்பு 20 தனித்தனி Server Hardware இருந்தால், தற்போது Virtualization என்ற முறையில் 20 சர்வர்களை ஒரே சர்வர் Hardware ல் வைக்க முடிகிறது.
- பராமரிப்பு, மின்சாரம், இடத்தேவை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.
- 20 தனித்தனி சர்வர் பராமரிப்புக்கும், 1 சர்வர் பராமரிப்புக்கும் Hardware அளவில் மிகப்பெரிய வித்யாசம்.
- கூடுதல் சர்வர்கள் எண்ணிக்கை மெய்நிகர் (Virtual) அளவில் வந்தாலும் Centralized Management என்ற அளவில் சமாளிக்க முடிகிறது.
Thankless Job
எந்த நிறுவனமாக இருந்தாலும் ஐடி சப்போர்ட் துறையைச் செலவு தரும் துறையாக மட்டுமே பார்க்கும். அதாவது இத்துறையால் நிறுவனத்துக்குப் பண வரவு கிடையாது.
குறிப்பிட்ட நிறுவனத்துக்கு Client Support என்ற அளவில் Billable முறையில் நிறுவனத்துக்கு வருமானம் வரும் ஆனாலும், ஊழியர்கள் நிலை அதே தான்.
ஐடி சப்போர்ட் இல்லையென்றால், நிறுவனமும் நடக்காது ஆனால், இவர்களுக்கு முக்கியத்துவமும் இருக்காது.
எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் ஒப்பீட்டளவில் புறக்கணிப்பட்டவர்களாகவே இருப்பர். பாராட்டுகள் குறைவாகவும், விமர்சனங்கள் அதிகமாகவும் இருக்கும்.
எடுத்துக்காட்டு
காவல்துறை இல்லையென்றால், ஒரு மாநிலத்தை நடத்த முடியாது ஆனால், காவல்துறைக்குக் கிடைக்கும் மரியாதை என்ன?
RTO, பொதுப்பணித்துறை, வரித்துறை போன்றவற்றை மற்ற மென்பொருள் துறைகளாகவும், காவல்துறையை ஐடி சப்போர்ட் துறையாகவும் ஒப்பிடலாம்.
பிரச்சனையான நேரத்தில் ஐடி சப்போர்ட் துறை 30 நிமிடங்கள் இல்லையென்றால், நிறுவனமே பற்றி எரியும் ஆனால், அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்காது.
மற்ற துறைகளுக்குக் கிடைக்கும் கவனிப்பு, மரியாதை, ஊக்கம் காவல்துறை போலவே ஐடி சப்போர்ட் துறைக்கு இருக்காது.
இது எதார்த்தம். இதைப் புரிந்து தான் இங்குள்ளவர்கள் பணிபுரிகிறார்கள், பணி புரிய வேண்டும். புரிந்து கொண்டால் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.
ஐடி சப்போர்ட் துறை என்பது Thankless Job தான்.
OS, Application & Hardware Stability
தற்போது மேற்கூறிய OS, Application & Hardware stability காரணமாகக் குறைந்த நபர்களை வைத்தே சமாளிக்க முடிகிறது.
எனவே, 10 பேர் வேலை பார்த்த இடத்தில் 4 பேரை வைத்துச் சமாளிக்க முடிகிறது. இதற்கு முக்கியக் காரணம், Centralized & Virtual Management.
இந்நிலை 10 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது குறிப்பாக Server & Storage.
எனவே, Internal Support என்று வரும் போது, ஊழியர்களை எவ்வளவு குறைக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உள்ளவர்களை வைத்து எப்படிச் சமாளிப்பது என்று தான் யோசிக்கப்படும்.
அனைத்து துறைக்கும் பொருந்தும் என்றாலும், இத்துறையைக் குறிப்பிட காரணம் உள்ளது.
ஒரு மென்பொருள் நிறுவனத்தில் 3000 பேர் பணி புரிகிறார்கள் என்றால், அதில் ஐடி சப்போர்ட் துறையில் அதிகபட்சம் 15 – 25 பேர் தான் இருப்பார்கள்.
500 பேர் உள்ள பிரிவில் கிடைக்கும் வாய்ப்புக்கும், 15 – 25 பேர் உள்ள பிரிவில் கிடைக்கும் வாய்ப்புக்கும் வித்யாசமுள்ளது.
எனவே, இதில் நெருக்கடி, போட்டி அதிகம்.
IT Security
இத்துறையில் இருந்து பிரிந்த IT Security க்குத் தற்போது மிகப்பெரிய வரவேற்புள்ளது.
எதிர்காலத்தில் நிறுவனங்கள் பாதுகாப்புக்கு அதிக முதலீட்டைச் செய்யும், செய்தே ஆக வேண்டும். ஏனென்றால், எதிர்காலத்தில் பாதுகாப்புக்கான தேவைகள் அதிகம்.
இதற்கும் வேறு வகையில் பிரச்சனைகள் வரலாம் என்றாலும், தற்போதைக்கு இல்லை.
Skilled Resource
எதிர்கால Stability, Artificial Intelligence, Automation, Cloud ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது ஐடி சப்போர்ட் துறையில் Highly Skilled Resource ஆக இருப்பவர்கள் மட்டுமே சமாளிக்க முடியும்.
ஏனென்றால், முன்னரே கூறியபடி 500 பேர் உள்ள இடத்துக்கும், 15 – 25 பேர் உள்ள இடத்துக்குண்டான போட்டிக்கும் பெரியளவு வித்யாசம் உள்ளது.
Automation, Cloud, Centralized Management மூலம் அனைத்து பணிகளும் செய்யப்படும். எனவே, இவை இயல்பாகவே ஊழியர்களின் தேவையைக் குறைக்கும்.
எனவே, Highly Skilled ஆக இருந்தால் மட்டுமே போட்டியைச் சமாளிக்க முடியும்.
பரிந்துரை
ஏற்கனவே, இத்துறையில் உள்ளவர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது அவசியம்.
அப்போது தான் எதிர்காலத்தில் போட்டிகளைச் சமாளிக்க முடியும்.
வேறு துறைக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால், சென்று விடப் பரிந்துரைக்கிறேன். வயதுள்ளது என்றால், பிடிவாதமாக இதிலேயே தொடர வேண்டாம்.
புதிதாக இத்துறைக்கு வர விரும்புவர்கள், வேறு துறைக்கு முயற்சிக்கலாம்.
இத்துறைக்கு எதிர்காலமுள்ளது ஆனால், Highly Skilled Resource ஆக இருந்தால் மட்டுமே Survive ஆக முடியும்.
இது தான் Passion, இதில் மிகப்பெரிய அளவில் வர முடியும் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே வரலாம்.
மற்றபடி இத்துறையைத் தவிர்த்து, இத்துறை தொடர்பான மற்ற துறைகளில் (AI, Automation, Cloud, IT Security) கவனம் செலுத்தலாம்.
குறிப்பு
இத்துறை சார்ந்த, இணைந்து பணி புரிந்த பல நண்பர்களுடன் விவாதித்து, கருத்துகளைப் பெற்று இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
கம்ப்யூட்டர் எஞ்சினியர் அனுபவங்கள்
ஐடி துறை | 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!
ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?
Cloud Computing | மேகக் கணினி என்றால் என்ன?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
அருமையான பதிவு.
கிரி, சமீபத்தில் படித்த பதிவுகளில் மிக நேர்த்தியான பதிவாக இதை உணர்கிறேன்.. ஆனால் எனக்கு கருத்தை புரிந்து கொள்ள 2 / 3 முறை படிக்க வேண்டியதாயிற்று.. தெளிவான அலசல்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
@சுரேஷ் நன்றி
@யாசின் இதே துறையில் இருப்பவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். வேறு துறையினருக்கு கொஞ்சம் சிரமம் தான். முடிந்தவரை எளிமையாகக் கூற முயற்சித்துள்ளேன்.