மன அழுத்தம் எப்படி இருக்கும்?!

2
over-thinking மன அழுத்தம் mental pressure

ல்லோரும் மன அழுத்தம் என்று சொல்றாங்களே! அது எப்படி இருக்கும்? என்று அவ்வப்போது யோசிப்பேன்.

ஏனென்றால், அது மாதிரி எனக்கு நடந்த நினைவு இல்லையென்பதால் அது எப்படிபட்ட உணர்வு என்று தெரியவில்லை.

மன அழுத்தம்

ஒரு நாள் எதோ யோசித்துக் கொண்டு இருந்த போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. வருடம் சரியாக நினைவில்லை, தோராயமாக 15+ வருடங்கள் இருக்கலாம்.

என்ன பிரச்னை என்று நினைவில்லை, எதோ பிரச்சனையால் எனக்குக் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது.

அது எப்படி இருக்கும் என்றால், ஒரு மாதிரி தலைமீது, உடலுக்குள் பாரமாக எதையோ சுமந்து கொண்டு இருப்பது போல இருக்கும்.

தலைவலி அல்ல ஆனால், சுமை இருக்கும்.எனக்கு அப்படித்தான் இருந்தது. யாரிடமும் எதையும் பேச முடியவில்லை, பேசப் பிடிக்கவில்லை. Image Credit

பின்னர் என்னுடைய அம்மா என்று நினைக்கிறேன்.. “ஏன் ஒரு மாதிரி இருக்கே“ன்னு கேட்ட போது பிரச்னை குறித்துக் கூறினேன்.

அதன் பிறகு அப்படியே டக்குனு பாரம் குறைந்து விட்டது. அப்போது இதன் தாக்கம் எனக்குத் தெரியவில்லை. தற்போது யோசித்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.

அந்தப் பாரம் எங்கே இருந்தது? எப்படிப் போனது? ஒன்றுமே புரியவில்லை.

Virtual Weight

மெய்நிகர் (Virtual) எடையாக இருந்தது. நம்மால் காண முடியாது, உணரத்தான் முடியும். வலி என்றால், வீக்கத்தைக் காட்டலாம், வலியை எப்படிக் காட்டுவது?

மன அழுத்தம் இருந்தால், நம்பகமானவரிடம் அது பற்றிப் பேச வேண்டும்.

தவறினால், வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும், நிலைமை இன்னும் மோசமாகும்.

தங்கல்” படத்தில் நடித்த இரு சிறுமிகளில் ஒருவருக்கு (Zaira Wasim) இது போல மன அழுத்தப் பிரச்சனை இருந்து, கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தார்.

மன அழுத்தத்தைக் குறைக்கச் சிலர் மாத்திரை எடுத்துக்கொள்வதும் அதனால் சரியானதாகவும் கூறுகிறார்கள்.

மருந்து எப்படிப் பதட்டத்தை, மன அழுத்தத்தைக் குறைக்கிறது? இது எனக்குக் குழப்பமாகவே உள்ளது.

உடல் பிரச்சனைக்கு மருந்து சரி, மன பிரச்சனைக்கு எப்படி மருந்து கொடுக்கிறார்கள்? ஆனால் நடந்து கொண்டு இருக்கிறது.

மன நல ஆலோசனை

மன அழுத்தத்துக்கு மன நல ஆலோசனையே சரியானதாகும்.

if-you-are-depressed-you-are-living-in-the-past-if-you-are-anxious-you-are-living-in-the-future-if-you-are-at-peace-you-are-living-in-the-present

இதெல்லாம் ஒரு பக்கம் என்றாலும், எதற்கு மன அழுத்தம் ஆகுறீங்க? எப்பவுமே எதையாவது யோசித்துட்டே இருக்காதீங்க!

நடப்பது நடக்கப்போகிறது, நடக்காதது நடக்கப்போவதில்லை. இதில் நம் பங்கு என்ன? எதற்குத் தேவையற்ற கவலை, பயம், பதட்டம்?

இப்பெல்லாம் நானே நினைத்தாலும் கவலைப்பட முடியாத அளவுக்கு ஆகிட்டேன். கவலையே பட முடியவில்லையே என்று கவலைப்படவும் முடியல 😀 .

என் அதிகபட்ச பதட்டம், கவலை எல்லாம் 3 – 5 நிமிடங்கள் இருக்கலாம், அவ்வளவே! ஓரமாக இருந்தாலும், தூங்கி எழுந்தால் அதுவும் காணாமல் போய் விடும்.

இது கூட எப்பவாவது வருடத்தில் ஓரிரு முறை அவ்வளவே!

நடக்கும் போது பார்த்துப்போம்… என்ன ஆகிடப்போகுது?” என்ற மந்திரமே நான் பின்பற்றுவது. சொன்னா கேளுங்க.. செமையா வேலை செய்கிறது 🙂 .

படுத்த 2 – 10 நொடிகளில் தூங்கி விடுவேன் என்றால், நம்பித்தான் ஆகணும். மன அழுத்தமெல்லாம் நாமே உருவாக்கிக் கொள்வது தான், அதனால் பிரச்சனை மட்டுமே!

எல்லாமே சரியாகி விடும் என்று நினைத்துட்டே கடமையைச் செய்துட்டு இருங்க.

வாழ்க்கை, மேடு பள்ளம் இல்லாத சாலையில் சீரா போவது போல இருக்கும், பிரச்சனைகள் இருந்தாலும்.

எல்லாமே நம்ம மனசு தான் காரணம்! மன அழுத்தமோ, கவலையோ, பதட்டமோ, நிம்மதியோ, மகிழ்ச்சியோ எல்லாமே நாமே உருவாக்கிக் கொள்வது தான்.

நடந்து முடிந்ததை நினைத்துக் கவலைப்படுவதாலும், நடக்கப்போவதை நினைத்துப் பயப்படுவதாலும் பயனில்லை. பின் நம்மை ஏன் நாமே வருத்திக்கணும்?

எனவே, நிகழ்காலத்தில் மகிழ்ச்சியா இருங்க..! 🙂 .

தொடர்புடைய கட்டுரை

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

2 COMMENTS

  1. கிரி, கிட்டத்தட்ட உங்களை போல தான் நானும், நிறைய விஷியங்களை குறித்து கவலை படமாட்டேன்.. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ்.. என்னை சுற்றி பல நிகழ்வுகள் நடக்கின்றன, இதில் எனது எனக்கு சாதகமாகவும், பாதகமாகவும் நடக்கின்றன..

    குறிப்பாக பணம் கொடுக்கல், வாங்கல் நிகழ்வுகளில் நிறைய மோசமான அனுபவங்களை சந்தித்து இருப்பதால், சில சமயம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.. என்னுடைய குணம் நீங்கள் எனக்கு 100 கெடுதல் செய்தாலும், ஒரு நல்லது செய்து இருந்தாலும் நல்லது தான் என் கண் முன் வரும்.. இதை என்னை சுற்றி இருப்பவர்கள் தவறாக புரிந்து கொண்டு என்னை என் கண் முன்னே ஏமாற்றும் சம்பவமும் தற்போது நடக்கிறது..இதில் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.. சக்தியை தவிர வேறு யாரிடமும், எந்த விஷியமும் பகிர்வதில்லை.. சக்தியிடம் பகிர்ந்தால் ஆறுதலாக இருக்கும்..(ரகசியமும் பாதுகாக்கப்படும்..) பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. அதையே நினைத்துக்கொண்டு இருப்பதால், மனஉளைச்சல் ஏற்படும். தவிர்க்க முயலுங்கள்.

    “சக்தியை தவிர வேறு யாரிடமும், எந்த விஷியமும் பகிர்வதில்லை.. சக்தியிடம் பகிர்ந்தால் ஆறுதலாக இருக்கும்..(ரகசியமும் பாதுகாக்கப்படும்..)”

    உண்மையே! 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here