The Great Resignation | திணறும் ஐடி நிறுவனங்கள்

3
The Great Resignation

ந்தியா முழுக்க The Great Resignation பிரச்சனை அனைத்து ஐடி நிறுவனங்களிலும் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. Image Credit

The Great Resignation

தற்போது உலகம் முழுக்க டிஜிட்டல் பணிகளுக்கு அதிகரித்துள்ள தேவை, இந்தியாவில் உயர்ந்து வரும் Startup நிறுவனங்கள் எண்ணிக்கை, மற்ற நாடுகளிலிருந்து இந்தியாக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை காரணமாக ஐடி ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அதிகச் சம்பளம் கொடுத்துப் பணிக்கு ஆள் எடுத்து வருவதால், பணி புரியும் நிறுவனத்திலிருந்து விலகி வேறு நிறுவனத்துக்கு ஊழியர்கள் மாறி வருகிறார்கள்.

குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளது. 100%, 150% வரை கூடுதல் சம்பளம் கொடுத்து எடுப்பதால், பலரும் வாய்ப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் முன்னணி நிறுவனங்களான Infosys, CTS, Wipro, HCL, TCS உட்படப் பல நிறுவனங்கள் இந்த Mass Resignation பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

இதையே The Great Resignation என்று அழைக்கிறார்கள்.

சமீபத்தில் Infosys நிறுவனத்திலிருந்து விலகுபவர்கள் இவர்களது போட்டி நிறுவனங்களில் மூன்று முதல் ஆறு மாதம் வரை இணையக் கூடாது என்ற புதிய விதிமுறையைக் கொண்டுவந்தது சர்ச்சையாகியுள்ளது.

இது போலப் பல்வேறு நிறுவனங்களும் இப்பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன.

என்ன பிரச்சனை?

ஒருவரை பணிக்கு அமர்த்தினால், மூன்று / ஆறு மாதம் பயிற்சியளிக்கிறார்கள் ஆனால், ஆறு மாதம், ஒரு வருடத்துக்குப் பிறகு விலகி விடுகின்றனர்.

இதனால் திரும்ப ஒருவரை பணிக்கு எடுத்து அவருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதால், நேர, பண விரையம் ஏற்படுகிறது.

சில நிறுவனங்களில் புதிதாக இணைபவர்களுக்கு ஈடாகப் பலர் நிறுவனத்தை விட்டு விலகுகின்றனர்.

சில நேரங்களில் புதிதாக இணைபவருக்கு அனைத்து Access ம் வருவதற்கு முன்பே ராஜினாமா செய்து விடுகிறார். சிலர் இணைவதாகக் கூறி விட்டு வேறு நிறுவனத்தில் இணைந்து விடுகிறார்.

ஒரு நபரே மூன்று நிறுவனங்களின் Offer வைத்துள்ளார். இந்தச் சம்பளம் கொடுத்தால் இணைகிறேன் இல்லையென்றால், அடுத்த நிறுவனம் போகிறேன் என்கிறார்.

WFH கொடுத்தால் மட்டுமே தொடர்வேன் / இணைவேன் என்கிறார்கள்.

இதனால் மனிதவளத்துறை (HR) தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளது. ஒருவர் பன்னாட்டு நிறுவனத்தில் இணைந்தால் அதற்கு ஏராளமான நிலைகள் உள்ளன.

இவை அனைத்தையும் செய்து முடித்து அப்பாடா! என்று நிமிர்ந்தால் அவரோ இணைய மறுத்து விலகி விடுகிறார்.

இதோடு முடிவதில்லை, விலகினால் அதற்கு மிகப்பெரிய Process உள்ளது. எனவே, இவ்வாறு நூற்றுக்கணக்கில் நடக்கும் போது பைத்தியம் பிடித்தது போலாகி விடும்.

Oracle registration, AD Creation, ID Card & Training arrangement, Laptop & Desk allocation என்று ஏகப்பட்ட Process உள்ளது.

இதைவிடக்கொடுமையாகச் சேர்ந்த உடனே ராஜினாமா செய்வதால், (அலுவலகம் கூட வந்து இருக்க மாட்டார்) அவர் ராஜினாமா செய்தது கூடத் தெரியாமல் மின்னஞ்சல் பரிமாற்றம் நடந்து கொண்டு இருக்கும்.

கோவிட் ஏற்படுத்திய மாற்றங்கள்

கோவிட் பிரச்சனையால் ஐடி நிறுவனங்களின் பணி புரியும் முறையே மாறி விட்டது. WFH ல் பழகியவர்கள் திரும்ப அலுவலகம் வர மறுக்கிறார்கள்.

கட்டாயப்படுத்தினால், ராஜினாமா செய்வதாக மிரட்டுகிறார்கள்.

இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் உடனடியாக Hybrid முறை என்ற மூன்று நாட்கள் அலுவலகத்திலும் இரண்டு நாட்கள் வீட்டிலும் இருந்து (WFH) பணி புரியும் வாய்ப்பை வழங்கின.

ஆனாலும், வர மறுக்கிறார்கள். வராததுக்குப் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். இவை எதையுமே முன்னர் கூற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏராளமான வாய்ப்புகள் கிடைப்பதால், நிறுவனங்களை மிரட்டுவது நடக்கிறது. நிறுவனங்களும் வேறு வழியில்லாததால், கட்டாயப்படுத்தாமல் பக்குவமாகக் கூறி வருகிறார்கள்.

வெளிப்படையாகக்கூறினால், கெஞ்சிக்கொண்டுள்ளனர்.

நிறுவனங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், எக்கருணையும் இல்லாமல் உடனடியாக ஊழியர்களைப் பணிநீக்கம் (Layoff) செய்கிறார்கள். தற்போது அதை ஊழியர்கள் செய்து வருகிறார்கள் அவ்வளவே.

எனவே, அதிகச் சம்பளம் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. நாளை கஷ்டப்படும் போது இந்நிறுவனங்கள் உதவப்போவதில்லை.

மாறிய மனநிலை

புதிதாக வேலைக்குச் சேரும் 2K கிட்ஸ்களை சமாளிப்பது தான் நிறுவனங்களுக்கு, அதிகாரிகளுக்குப் பெரிய தலைவலியாக இருக்கிறது.

இன்னமும் கல்லூரி மனநிலையிலேயே கூட்டமாகச் சுற்றுவது, சத்தமாகப் பேசிக்கொண்டு இருப்பது என்று அடிப்படை நாகரீகம் அறியாமல் இருக்கிறார்கள்.

இது 70s 80s காலம் போல இல்லை. நேர்முகம் செய்பவரையே கேள்வி கேட்கிறார்கள்.

இவர்களுக்கு commitment கிடையாது. இவர்களை நம்பி பெற்றோர்கள் / குடும்பம் இல்லை. பொருளாதார ரீதியாக முன்னேறி இருப்பதால், கடன் போன்றவை இல்லை.

முந்தைய தலைமுறையினர் பெற்றோர் விவசாயிகள். எனவே, குறைந்த வருமானம், கடன் என்று இருந்தவர்கள் ஆனால், 2K கிட்ஸ் தலைமுறையினர் பெற்றோர் பெரும்பான்மையோர் பணியில் உள்ளனர்.

எனவே, 2K கிட்ஸ் சம்பாதித்து கொடுத்துத்தான் தான் அவர்கள் குடும்பம் நடக்க வேண்டும் என்ற கட்டாயம், நெருக்கடியில்லை.

வேலையில்லை என்றால் குடும்பம் சிரமப்படும் என்று நிலையில்லை. எனவே, நெருக்கடியில்லாததால் அலட்சிய மனோபாவமே உள்ளது.

இந்த வேலை இல்லையென்றால், அடுத்த வேலை. இவர்களால் வேலை இல்லாமல் 6 மாதங்கள் என்றில்லை ஒரு வருடமாக இருந்தாலும் காத்திருக்க முடியும்.

இது போன்ற நிலை முந்தைய தலைமுறையினருக்கு இல்லை. ஒரு மாதம் வேலையில்லை என்றாலும் நிலைமை படு மோசமாகி விடும்.

பெரும்பான்மை 2K கிட்ஸ்க்கு Professional Ethics, சென்டிமென்ட்ஸ் கிடையாது.

மேற்கூறியவை அனைவருக்கும் பொருந்தாது.

எனவே, இவர்களைச் சமாளிக்க நிறுவனங்கள் தங்கள் நீண்டகால விதிமுறைகளில் தளர்வுகளைக் கொடுத்து வருகின்றன.

சுருக்கமாக, தற்போதைய தலைமுறையினர் வெளிநாட்டினரை போல Quality Environment எதிர்பார்க்கின்றனர்.

இவர்களின் எதிர்பார்ப்புகள் / comfort எல்லாம் 2020 ம் ஆண்டுக்கு முன்பு கற்பனையில் கூட எதிர்பார்க்காதது. இரு வருடங்களில் தலைகீழ் மாற்றம்.

இதெல்லாம் தவிர்க்க முடியாதவை. காலமாற்றத்துக்கு ஏற்ப நிறுவனங்களும் தங்களை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும், வேறு வழியே இல்லை.

இப்படியே சென்றால், இதற்கு என்ன தீர்வு?

The Great Resignation இன்னும் ஒரு வருடத்துக்குத் தொடரும், இதன் பிறகே குறையத்தொடங்கும் என்கிறார்கள். இது ஒரு சுழற்சி.

தற்போது பணியாளர்களின் நேரம்.

ஆனால், கண்டிப்பாக நிறுவனங்களின் காலம் ஒன்று வரப்போகிறது. அன்று அனைவரையும் சேர்த்து வைத்துக் கதற விடப்போகிறார்கள்.

வரதுன்னா வா.. இல்லைனா போயிட்டே இரு‘ன்னு கூறும் காலம் வரும். அப்போது இதையெல்லாம் அனுபவித்து இராத புதிய தலைமுறையினர் தான் திணறி விடுவார்கள்.

முந்தைய தலைமுறையினருக்கு ஏற்கனவே Recession அனுபவங்கள் உள்ளன. எனவே, அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு இளைப்பாறல் காலமாக நினைத்துக் கடந்து விடுவார்கள்.

சந்தானம் ஆர்யா படத்தில், ‘மச்சான்! அவன் அப்புறமா கடன் திரும்ப வாங்க நம்ம கிட்ட அலைவான்‘னு சொல்ற மாதிரி, நிறுவனங்களுக்கு ஒரு நேரம் வரும், அப்போது அவர்கள் வச்சு செய்யப்போகிறார்கள்.

அதுவரை அனைவரும் பயன்படுத்திக்க வேண்டியது தான்.

தொடர்புடைய கட்டுரைகள்

ஐடி துறை | 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!

WFH ஏற்படுத்தப்போகும் சமூக மாற்றங்கள்!

ஐடி சப்போர்ட் துறை எதிர்காலம் எப்படியுள்ளது?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. இந்த பிரச்சனை ஐடி ல மட்டும் இல்லை.. எல்லா இடங்களிலும். Startup கள் நிலமை இன்னும் மோசம், ethics சுத்தமா இல்லை. என்கிட்ட ஒருத்தன் office வந்து 8 மாதம் ஆகுது, மாசம் மாசம் பாதி சம்பளம் மட்டும் போட்டுட்டு இருக்கேன், எப்ப வருவான்ன்னும் தெரியல.

  2. பதிவை படிக்கும் போது உண்மையில் அதிர்ச்சியாகவும், மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.. கல்லூரி படிக்கும் போது இளங்கலை பட்டப்படிப்பில் வகுப்பில் முதல் இடம் பெற்றதால், நன்கொடை இல்லாமல் (30,000 ரூபாய்) இலவசமாக கிடைத்த MCA சீட்டின் மதிப்பு அப்போது தெரியவில்லை..

    தெரியவில்லை என்பதை விட MCA அப்பிளிகேஷன் வாங்க கூட பணம் இல்லை என்பது தான் நிஜம்.. பின்பு எப்படி செமஸ்டர் பீஸ் கட்டுவது..?? என சற்றும் யோசிக்காமல் வேணாம் என கூறி, எனக்கு அடுத்த மதிப்பெண் எடுத்த வகுப்பு தோழன் மதுசூதனனுக்கு MCA வாய்ப்பு கிடைத்தது.. சில சமயம் எப்போதாது இந்த நினைவுகள் வந்து போகும்… வாழ்க்கை 12B படம் போல தான் என்னவோ????

    படிக்க நினைத்த போது பணம் ஒரு மிக பெரிய தடையாக இருந்தது.. பணம் நிறைய வந்த போது நேரம் மிக பெரிய தடையாக மாறி போனது.. SAP படிக்க வேண்டி பல வகையில் முயற்சி செய்தும் எதுவும் நடைபெற வில்லை.. 2 மாதம் ஊரில் இருந்த போது கூட ஒன்றும் செய்ய முடியவில்லை… எல்லாவற்றையும் காலத்தில் செய்ய வேண்டும் என்பது சத்தியமான உண்மை.. காலம் தவறும் போது எல்லாம் தடை பெறுகிறது…

    தற்போது எப்பவாது நான் படிக்க போகிறேன் என்று மனைவியிடம் கூறினாலே “கலகலப்பு [படத்தில் அமிதாப் மாமா (இளவரசு) சிரிப்பது போல் நமட்டு சிரிப்பு சிரிப்பார்”.. திருமணமான புதிதில் மனைவியின் உறவினர் ஒருவர் விருந்துக்கு அழைத்த போது மாப்பிள்ளை மிடுக்கில் “நான் ரொம்ப பிஸி” (கவுண்டமணி சார் போல) என கூறி “நான் ஒரு கல்லூரி விரிவுரையாளரை பார்க்க வேண்டும், படிப்பை பற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டும், எனக்கு மதியம் 1 மணிக்கு APPOINTMENT இருக்கு என கூறி விருந்துக்கு போகவில்லை..

    விருந்துக்கு அழைத்தவர்கள் மாப்பிள்ளை திருமணம் ஆகியும் படிக்கிறார்.. என பெருமையாக எண்ணினார்.. நமக்கு ஒரு APPOINTMENT இல்லை ஒன்னும் இல்லை, சுருங்க கூறின் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போவது நமக்கு செட்டாகாது…அதற்காக பொய் சொன்னேன்.. மறுநாள் மதியம் வீட்டில் எங்கும் போகாமல் தூங்கி எழுந்த போது என் சுயரூபம் மனைவிக்கு தெரிந்து போனது.. அன்றிலிருந்து நான் படிக்கச் போறேன் என்றாலே மனைவிக்கு சிரிப்பு தான்!!!!

  3. @சக்திவேல் உண்மை தான். பலரும் இப்பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    @யாசின்

    உங்க அனுபவங்கள் எப்போதும் சுவாரசியம் 😀 உங்களுக்குன்னே நடக்கும் போல 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here