டிஜிட்டல் இந்தியா சாதித்தது என்ன?

5
டிஜிட்டல் இந்தியா

றிமுகப்படுத்தப்பட்ட போது பலராலும் கிண்டலடிக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம் தற்போது மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா ஆரம்பம் என்றால் அது குறைந்தபட்ச இருப்பு வைக்கத் தேவையில்லாத ஜன்தன் வங்கிக்கணக்கு அறிமுகமாகும் (2014).

இத்திட்டம் துவங்கப்பட்ட போதும் பலராலும் விமர்சிக்கப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றியைக் தனிக்கட்டுரையில் காண்போம்.

மின்னணு பரிவர்த்தனைக்காக 11 ஏப்ரல், 2016 UPI அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுகப்படுத்தப்பட்ட போது வரவேற்பை பெறவில்லை ஆனால், தற்போது (2023) UPI இல்லாமல் ஒரு தனிமனிதரின் தின வாழ்க்கையை கடக்க முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டது என்றால் மிகையல்ல.

துவக்கத்தில் மின்னணு பரிவர்த்தனையில் ஆர்வமுள்ளவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா காலத்தில் UPI பயன்பாடு அதிகரித்தது.

UPI எளிமைக்கு பழகிய மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியா மட்டுமல்லாது உலகநாடுகள் பலவும் UPI முறையை ஏற்றுக்கொண்டு வருகின்றன.

தற்போது (2003) வரை France, UAE, Malaysia, Bhutan, Oman, United Kingdom, Nepal, Myanmar, Vietnam, Singapore, Sri Lanka, Saudi Arabia, South Korea, Bahrain நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

சிதம்பரம்

டிஜிட்டல் இந்தியாவை குறிப்பிடும் போது தவிர்க்க முடியாதவர் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம்.

டிஜிட்டல் இந்தியாவை மோடி குறிப்பிட்ட போது பாராளுமன்ற விவாத நேரத்தில்,

சாலையோர காய்கறி கடை வைத்துள்ள சாதாரண நபர் எப்படி பயன்படுத்த முடியும்? அங்கே POS இயந்திரம் உள்ளதா? மின்சாரம் இருக்குமா? WiFI உள்ளதா? இணையம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், அவர் விமர்சித்த அனைத்துமே தற்போது நடந்துகொண்டுள்ளது. எனவே, அவர் பேசியதை வைத்து இணையத்தில் வைரல் ஆகிறது.

எப்போதெல்லாம் ஒரு மைல்கல்லை டிஜிட்டல் இந்தியா அடைகிறதோ அப்போதெல்லாம் சிதம்பரம் பேசியது வைரல் ஆகும்.

UPI பரிவர்த்தனை எண்ணிக்கை 10 பில்லியனை ஆகஸ்ட் 2023 மாதம் தாண்டிச் சாதனை புரிந்துள்ளது.

சாலையோர காய்கறி கடை வைத்துள்ள பெண், Paytm அட்டையைக் காண்பிக்கும் காணொளி வைரல் ஆகி வருவதை சிதம்பரம் பேசியதோடு ஒப்பிட்டு வருகிறார்கள். தொலைநோக்குப்பார்வையே இல்லாத நிதியமைச்சராக இருந்துள்ளார்.

2025 ம் ஆண்டு இறுதிக்குள் 20 பில்லியன் பரிவர்த்தனைகளை NPCI எதிர்பார்க்கிறது.

UPI சாதித்தது என்ன?

UPI பரிவர்த்தனை வளர்ச்சி ஆண்டுக்காண்டு 61% மற்றும் பரிவர்த்தனை தொகை 47% வளர்ச்சி தோராயமாக அடைந்து வருகிறது.

2019 ம் ஆண்டு (அக்டோபர்) 1 பில்லியன் பரிவர்த்தனையும் 2023 ம் ஆண்டு (ஆகஸ்ட்) 10 பில்லியன் வளர்ச்சியையும் எட்டியுள்ளது.

P2M (Peer to Merchant) எனப்படும் கடைகளில் QR code மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை ஆண்டுக்காண்டு 100% வளர்ச்சி அடைந்து வருகிறது.

தற்போது UPI இல்லாத கடைகளே இல்லையெனும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. வெகு சில மளிகைக்கடைகள் மட்டுமே தவிர்த்து வருகின்றன. இவர்களும் தள்ளிப்போடலாமே தவிர தவிர்க்க முடியாது.

UPI பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் UPI Lite முறை 200% வளர்ச்சி அடைந்து வருகிறது.

IMPS, NEFT, RTGS முறைகள் பெரியளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் NEFT, RTGS பரிவர்த்தனைகள் கட்டணமில்லா பரிவர்த்தனை முறைகளாகும்.

காசோலை பயன்பாடு மிகப்பெரியளவில் குறைந்து விட்டது. IMPS, NEFT, RTGS பரிவர்த்தனையில் சீரான வளர்ச்சி இல்லாமல் ஏற்றம் இறக்கத்துடன் உள்ளது.

ஏனைய மின்னணு பரிவர்த்தனைகளின் வளர்ச்சி

குறிப்பிடத் தக்க மாற்றம், காங்கிரஸ் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பாஜக காலத்தில் பெரும் வளர்ச்சியடைந்த RuPay Debit / Credit card ஆகும்.

RuPay வளர்ச்சியால் அமெரிக்காவின் Master மற்றும் Visa நிறுவனங்கள் பெரும் கலக்கத்தில் உள்ளன.

தற்போது RuPay கடனட்டைக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள UPI வசதி காரணமாக பலரும் Visa / Master நிறுவனங்களிலிருந்து RuPay க்கு மாறி வருகிறார்கள்.

இவற்றோடு விரும்பும் நிறுவனத்துக்கு மாறும் வசதியையும் RBI கொண்டு வரப்போகிறது. அதாவது Mobile Number Portability போல. இவ்வசதி மூலம் பலரும் RuPay க்கு மாறுவார்கள் என்று NPCI நம்புகிறது.

பாஸ்போர்ட், வாகன உரிமம் பெறுதல் உட்பட பல்வேறு நடுவண் அரசின் சேவைகள் மின்னணு முறைக்கு மாறி, பயனர்களுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது.

நம் சான்றிதழ்களை DigiLocker ல் வைத்துக்கொள்வதன் மூலம் அடையாளத்துக்கு எங்கும் காண்பிக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. அதாவது அசல் (Physical card) அவசியமில்லை.

போக்குவரத்து காவலர்களிடம், ரயிலில் பயணிக்கும் போது DigiLocker ல் உள்ள அடையாள அட்டையைக் காண்பித்தாலே போதுமானது.

Credit / Debit card விவரங்களைப் பாதுகாப்பாக இணையக்கணக்கில் சேமிக்கும் Tokenization முறை மிகச்சிறந்த வழிமுறையாக அமைந்துள்ளது.

மேற்கூறியவை சராசரி நபரின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.

ஆதார்

இவையெல்லாவற்றையும் விட ஒரு சாதாரண குடிமகனின் வாழ்க்கையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியது ஆதார் என்றால் மிகையல்ல.

முன்பெல்லாம் எந்த அடையாள அட்டையை எடுத்துச்செல்வது என்ற குழப்பம் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடையாள அட்டையைக் கூறுவார்கள்.

இதனால், அரசு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தால், சாமி பட விவேக் போல அனைத்தையும் கையில் வைத்து இருக்க வேண்டியதாக இருக்கும்.

தற்போது ஆதார் இருந்தால் போதுமானது.

போலி குடும்ப அட்டைகள், எரிவாயு கணக்குகள், மானியக்கணக்குகள் கோடிக்கணக்கில் நீக்கப்பட்டதால், அரசுக்குப் பல ஆயிரம் கோடி சேமிப்பானது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மிக முக்கியமான பயன் என்னவென்றால், இடைத் தரகர்கள் இல்லாமல், முழுமையான தொகை, மானியம், உதவித்தொகை மக்களை நேரடியாகச் சென்றடைகிறது.

வாழ்க்கை எளிதானது

டிஜிட்டல் இந்தியா என்று கூறப்பட்ட போது கிண்டலடித்த அனைவரும் மேற்கூறிய அனைத்து சேவைகளின் பலனையும் தினமும் அனுபவித்து வருகிறார்கள்.

மேற்கூறிய சேவை ஒன்று பழைய முறையில் இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு வாழ்க்கை முறை பழகி விட்டது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் துவக்க காலங்களில் ஜியோ நிறுவனம் முக்கியப்பங்காற்றியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

மின்னணு பரிவர்த்தனைகளில் மோடி அரசு புரட்சி செய்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது என்பதே இதன் சாதனை.

மின்னணு திட்டத்தில் உலகுக்கே இந்தியா முன்னோடியாக உள்ளது.

கொசுறு 1

டிஜிட்டல் இந்தியா / UPI திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது இத்திட்டம் வெற்றி பெறும் என்று கட்டுரை எழுதி இருந்தேன். அதில் கூறியுள்ளவற்றில் பெரும்பான்மை நடந்துள்ளது மகிழ்ச்சி 🙂 .

மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

கொசுறு 2

மேற்கூறியவை அதிகாரப்பூர்வ தகவல்களே. சந்தேகம் உள்ளவர்கள், NPCI தளத்திலோ அல்லது கூகுள் செய்தோ சரிபார்த்துக்கொள்ளலாம்.

கொசுறு 3

நடுவண் அரசின் திட்டங்களில் எனக்குப் பிடித்தவற்றையும், மக்களுக்கு அதிகம் பயன்படும் திட்டங்களைப் பற்றியும் அவ்வப்போது எழுதப்போகிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? | FAQ

UPI Lite என்றால் என்ன?

PhonePe Google Pay Paytm எது சிறந்தது?

அசல் ஓட்டுநர் உரிமம் இனி தேவையில்லை!

RuPay வளர்ச்சியால் கதிகலங்கும் Master & Visa நிறுவனங்கள்

DigiLocker | அரசு சேவைகள் உங்கள் கைகளில்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. டிஜிட்டல் இந்தியாவை குறித்த பல விளக்கமான தகவல்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றி கிரி.

  2. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் UPI இல்லாததும் Digital ID ஏற்கப்படாததும் கடினமாக உள்ளது

  3. @Kanagaraj நானும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன். அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்கள் ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை.

    வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!