ஜன்தன் வங்கிக்கணக்கு ஏற்படுத்திய மாற்றங்கள்

1
ஜன்தன் வங்கிக்கணக்கு

ன்தன் வங்கிக்கணக்கு பாஜக அரசால் துவங்கப்பட்டது. இத்திட்டம் சாதித்தது என்னவென்று பார்ப்போம். Image Credit

ஜன்தன் வங்கிக்கணக்கு

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 28th ஆகஸ்ட் 2014 ம் ஆண்டு ஜன்தன் திட்டம் துவங்கப்பட்டது.

குறைந்தபட்ச இருப்பு இல்லாமல், அனைவருக்கும் வங்கிக்கணக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்டதே ஜன்தன் வங்கிக்கணக்கு திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் ஆனால், அதற்குப் பணம் இல்லாததாலேயே பலர் வங்கிக்கணக்கைத் துவங்காமலிருந்தார்கள்.

இதை மனதில் வைத்தே Zero Balance கணக்கு துவங்கப்பட்டது.

இத்திட்டம் துவங்கப்பட்ட போது வெற்றிபெறும் என்று பெரும்பான்மையானவர் எண்ணவில்லை. காரணம், ஆட்சிக்கு வந்தவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்.

எனவே, ஒரு விளம்பரத்துக்காகச் செய்யப்பட்டது என்று கருதினார்கள்.

இதற்குத் தகுந்த மாதிரி இவ்வங்கிக் கணக்குகளின் இருப்பு மிக மோசமாக இருந்தது. எல்லோரும் வங்கிக்கணக்கு துவங்கியிருந்தார்கள் ஆனால், பயன்படுத்தவில்லை.

ஆனால், நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் பரிவர்த்தனைக்கு இக்கணக்கைப் பயன்படுத்த நடுவண் அரசு நெருக்கடி கொடுத்தது.

அதாவது, மானியம், அரசு உதவித்தொகை போன்றவற்றைச் செலுத்த. இதன் பிறகு தொடர்ந்து மக்கள் பயன்படுத்தத் துவங்க ஆரம்பித்தார்கள்.

எண்ணிக்கை

இது வரை 50+ கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.

துவக்கத்தில் ₹1000 கோடி கூட இல்லாத வங்கிக்கணக்குகளின் இருப்பில் ₹2.05 லட்சம் கோடி தொகை (அக்டோபர் 2023) இருப்புள்ளது.

67% கணக்குகள் கிராம மற்றும் நகர்ப்புற மக்களால் துவங்கப்பட்டுள்ளது. மொத்தக்கணக்குகளில் 56% பெண்களுடையது என்பது சிறப்பான செய்தி.

இதன் ஒரு பகுதியாக RuPay Debit Card அறிமுகப்படுத்தப்பட்டு, மிகப்பெரிய வெற்றி பெற்றது. 37% சந்தை மதிப்பைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

Zero Balance வங்கிக்கணக்கைப் பராமரிக்கச் செலவாகிறது என்று புலம்பிய வங்கிகளின் இருப்பு தற்போது ஜன்தன் வங்கிக்கணக்குகளால் உயர்ந்துள்ளது.

Source https://pib.gov.in/

என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது?

டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்காக பாஜக அரசு தொலைநோக்குடன் சிந்தித்து ஜன்தன் திட்டத்தைத் துவங்கியதா?! அல்லது இயல்பாக நடந்ததா என்று தெரியவில்லை.

டிஜிட்டல் இந்தியாவை எளிதாகச் செயல்படுத்தி விட முடியாது. காரணம், அதற்கான அடிப்படைத் தேவையான வங்கிக்கணக்கு அனைவருக்கும் அவசியம்.

டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி அடையப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணம் என்றாலும், அதற்கு அடிப்படை வங்கிக்கணக்கு.

எனவே, லாஜிக்காக யோசித்தால், பாஜக தொலைநோக்கு திட்டம் இல்லாமல் ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தை ஆரம்பித்து இருக்க முடியாது.

எனவே, அனைத்து தரப்பு மக்களும் UPI பயன்படுத்துகிறார்கள் என்றால், அதற்கு ஜன்தன் வங்கிக்கணக்கு முக்கியமான காரணம்.

ஒரு சாலையோர காய்கறி கடைக்காரர் UPI வைத்துள்ளார் என்றால், அக்கணக்கு ஜன்தன் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டம் முக்கியமானது.

மானிய இழப்பைத் தடுத்தது

மக்களின் வரிப்பணம் வீணாவது முக்கியமாக மானியமாகக் கொடுக்கப்படும் பணத்தில் தான்.

அதாவது ஒருவருக்கு ₹100 ஒதுக்கப்பட்டால், பலரைக் கடந்து வரும் போது பயனாளிக்குக் கிடைப்பது ₹30 ஆகக் குறைந்து விடுகிறது.

பயனாளிகள் முழுமையான பயனைப் பெறுவதில்லை.

தற்போது மானியம் நேரடியாகப் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதால், இடைத்தரகர்களால், அரசு ஊழியர்களால், அரசியல்வாதிகளால் திருடப்படுவது தடுக்கப்படுகிறது.

ஆதாரும் கட்டாயப்படுத்தப்பட்டதால், போலி பயனாளிகள் நீக்கப்பட்டு, இதுவரை ₹2 இலட்சம் கோடிக்கு மேல் மக்கள் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது.

மக்களும் வரிசையில் நின்று, அவசியமற்று நேரத்தைச் செலவழித்து, பல அவமானங்களைத் தாண்டி, உதவித்தொகையைப் பெறும் நிலை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதால் தவிர்க்கப்பட்டுள்ளது.

சாதித்த ஜன்தன் வங்கிக்கணக்கு

மக்களின் சேமிப்பை வங்கி மூலம் நடுவண் அரசு திருடுகிறது, கட்டாயப்படுத்துகிறது என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

ஆனால், ஜன்தன் வங்கிக்கணக்கு இந்தியாவின் இருதயத்தையே உறுதியாக்கியுள்ளது. இருதயம் வேறு யாருமல்ல நடுத்தர, அடித்தட்டு மக்களே!

சாதாரண மக்களும் வங்கிக்கணக்கு துவங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றுகிறார்கள்.

கள்ளப்பணம் உருவாவதை ஜன்தன் திட்டம் குறைக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்துவதில் ஜன்தன் வங்கிக்கணக்குகள் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உதவியுள்ளன என்றால் மிகையல்ல.

தொடர்புடைய கட்டுரை

டிஜிட்டல் இந்தியா சாதித்தது என்ன?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

  1. முன்பு ஆட்சியில் இருந்த அரசு செய்த தவறை மட்டும் மிகை படுத்தி கூறுவதை விட்டு , ஆக்க பூர்வமான திட்டங்களை அமைத்து அதை திறம்பட செயலாற்றுவதே ஒரு சிறந்த அரசின் நிர்வாகத்துக்கு உதாரணம். இது மத்திய / மாநில இரண்டிற்கும் பொருந்தும்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்துவதில் ஜன்தன் வங்கிக்கணக்குகள் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உதவியுள்ளன என்றால் மிகையல்ல.

    ஏற்று கொள்கிறேன் கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here