இணையப் பரிவர்த்தனையில் கிரெடிட் & டெபிட் கார்டுகளுக்கு Tokenization என்ற பாதுகாப்பு வசதியை RBI (Reserve Bank Of India) கொண்டு வந்துள்ளது.
Tokenization
இணையம் மக்களின் தேவைகளை எளிதாக நிறைவேற்றி வந்தாலும், இன்னொரு வகையில் பேராபத்துகளையும் கொண்டு வருகிறது. Image Credit
பொதுமக்களின் பணத்தை ஏமாற்றி இணையத் திருடர்கள் திருடி விடுகிறார்கள்.
இணையத்தில் பொருட்களை வாங்கும் போது கிரெடிட் & டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறோம்.
அவ்வாறு பயன்படுத்தும் போது அடுத்த முறை எளிதாகப் பணம் செலுத்த திரும்ப 16 இலக்க எண்களைப் பதிவு செய்ய விரும்பாமல் அதிலேயே சேமித்து விடுகிறோம்.
ஒருவேளை அத்தளத்தின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக யாராவது ஹேக் செய்து விட்டால், நம் விவரங்களும் சேர்ந்து திருடு போகிறது.
இப்பிரச்சனையைத் தீர்க்க RBI கொண்டு வந்தது தான் Tokenization.
Tokenization செயல்படுவது எப்படி?
RBI அறிவுறுத்தல்படி இந்திய நிறுவனங்கள் அனைத்தும் இதுவரை ஏற்கனவே சேமித்து வைத்துள்ள கிரெடிட் & டெபிட் கார்டு விவரங்களை நீக்க வேண்டும்.
2021 டிசம்பர் 31 க்குள் நீக்கக் கூறி இருந்தாலும், பல நிறுவனங்களின் வேண்டுகோளுக்காக 2022 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tokenization வசதியை அனைத்து இணையத் தளங்களும் செயல்படுத்த வேண்டும்.
அதாவது நாம் கொடுக்கும் 16 இலக்க எண்கள் Mask செய்யப்பட்டு வேறு எண்களாகச் சேமிக்கப்பட வேண்டும்.
சேமிக்கப்படும் எண்கள் அத்தளத்துக்கு மட்டுமே பொருந்தும், வேறு தளம் அல்லது இதே தளத்தில் திரும்பச் சேமித்தால் வேறு எண்களாகச் சேமிக்கப்படும்.
ஒருவேளை இத்தளம் ஹேக் செய்யப்பட்டாலும் இதில் உள்ள விவரங்களை வைத்து யாரும் எதுவும் செய்ய முடியாது, நம் விவரங்கள் பாதுகாக்கப்படும்.
இச்சேவையை Google, Amazon, Flipkart, Bigbasket, MakeMyTrip, JioPay, Paytm & PhonePe உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் செயல்படுத்தி விட்டன.
மேற்கூறிய நிறுவனங்களில் தற்போது பொருட்கள் வாங்கும் போது இப்பாதுகாப்பு வசதியைக் கூறி சேமிக்க அறிவிப்பு வருவதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.
எனவே, இனி தைரியமாகக் கிரெடிட் / டெபிட் கார்டு விவரங்களைச் சேமிக்கலாம்.
சேமிக்க விரும்பவில்லையென்றால் தவிர்க்கலாம் ஆனால், ஒவ்வொரு முறையும் பொருட்களை வாங்கும் போது 16 இலக்க எண்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
மிகச்சிறந்த பாதுகாப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்த RBI க்குப் பாராட்டுகள்.
தொடர்புடைய கட்டுரைகள்
Enhanced Protection | கூகுள் க்ரோம் கூடுதல் பாதுகாப்பு
ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?
Authenticator App அவசியம் ஏன்?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.