செல்வ மகள் சேமிப்பு திட்டம் | சுகன்யா சம்ரிதி யோஜனா

3
செல்வ மகள் சேமிப்பு திட்டம்

பெண் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியது செல்வ மகள் சேமிப்பு திட்டம். இந்தியில் சுகன்யா சம்ரிதி யோஜனா. Image Credit

செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்பட்டதாலே பலருக்கு இதன் பலன் தமிழகத்தில் அனைவரையும் சென்றடைந்தது.

சுகன்யா சம்ரிதி யோஜனா என்று அழைக்கப்பட்டு இருந்தால், இத்திட்டம் பற்றிப் பலர் அறியாமலே தவற விட்டு இருப்பார்கள்.

மத்திய அரசுத் திட்டங்களை மாநில மொழியில் மாற்றாமல் இருப்பது தவறான செயல். இந்திப்பெயரால் திட்டம் என்னவென்றே பலருக்கு தெரிவதில்லை.

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

மத்திய அரசின் திட்டம் என்பதாலும், தமிழகத்தில் சேமிப்புத் திட்டங்களுக்கு எப்போதும் பலத்த வரவேற்பு இருக்கும் என்பதாலும், செல்வ மகள் சேமிப்புத்திட்டம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றுள்ளது.

யார் இணையலாம்?

 • 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்குப் பெற்றோர் / பாதுகாவலர் (guardian) மூலமாகக் கணக்கைத் துவங்கலாம்.
 • ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகளுக்கும், ஒருவேளை முதல் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தாலும் கணக்குத் திறக்கலாம்.
 • NRI யாக உள்ளவர்கள் இணைய முடியாது. முழுக்காலமும் இந்தியக் குடியுரிமையில் உள்ளவர் மட்டுமே முழுப்பயனை அடைய முடியும்.
 • இடையில் குடியுரிமை மாறினால் கணக்குக்கான வட்டியைப் பெற முடியாமல், கணக்கை முடிக்க வேண்டும்.

எங்கே துவங்கலாம்?

 • தபால் நிலையத்தில் துவங்கலாம்.
 • SBI போன்ற தேசிய வங்கிகளிலும், ICICI, HDFC போன்ற தனியார் வங்கிகளிலும் கணக்கைத்துவங்கலாம்.

எத்தனை வருடங்கள் பணம் செலுத்த வேண்டும்?

 • 15 ஆண்டுகள்.
 • முதிர்வு காலம் 21 ம் வயது வரை.
 • குழந்தையின் முதல் வயதில் துவங்கப்பட்டு இருந்தால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முடித்துக்கொள்ளலாம் அல்லது 21 வயது வரை தொடரலாம்.
 • ஆறு (16 – 21) ஆண்டுகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை ஆனால், முதிர்வு காலம் (21) வரை வட்டி கிடைக்கும்.

எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?

 • ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ₹250 செலுத்த வேண்டும்.
 • இடையில் பணத்தைச் செலுத்தத் தவறினால் வழக்கமான குறைந்த வட்டி 15 ம் ஆண்டு இறுதியில் வழங்கப்படும்.
 • இடையில் நிறுத்தியதை திரும்பத் தொடர நினைத்தால், ₹50 அபராதம் செலுத்தி துவங்கலாம்.
 • அதிகபட்சம் வருடத்துக்கு ₹1,50,000 தொகை செலுத்தலாம்.
 • நேரடியாகச் செல்ல வேண்டியதில்லை, இணையம் வழியாகவும் (Mobile & Internet Banking) பணத்தைச் செலுத்தலாம்.

இடையில் பணத்தை எடுக்க முடியுமா?

பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்பட்ட காரணங்களுடன் எடுக்கலாம்.

வருமான வரி விலக்கு உண்டா?

 • ஆம்.
 • 80C பிரிவின் கீழ் ஆண்டுக்கு ₹1,50,000 வரை வருமானவரி விலக்கு பெற முடியும்.
 • முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை.

வட்டி என்ன கொடுக்கப்படுகிறது?

 • சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப வட்டி மாறும் ஆனால், வங்கி வட்டியை விட அதிக வட்டி கொடுக்கப்படுகிறது.
 • 2020-21 (ஏப்ரல் – ஜூன்) முதல் 7.6% வட்டியாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தால் என்ன பயன்?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், சேமிக்கப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும்.

இத்திட்ட இறுதிக்காலம் பெரும்பாலும் கல்லூரியில் இணையும் காலத்தை அடையும். அக்காலத்தில் ஏற்படும் செலவுகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

அல்லது வேறு முக்கியச் செலவுகளுக்கு இப்பணத்தைப் பயன்படுத்தலாம்.

சிறுசேமிப்புத் திட்டம் என்பதால், சிரமம் இல்லாமல் பெரிய தொகை சேர்ந்து விடும்.

கொசுறு

செல்வ மகள் சேமிப்புத்திட்டம் மிகச்சிறந்த திட்டம் என்றாலும், Mutual Fund போன்ற ரிஸ்க் எடுக்கக்கூடியவற்றில் சேமித்தால், இதில் கிடைப்பதை விடக் கூடுதல் பணத்தைப் பெற முடியும்.

ஆனால், இது குறித்த சரியான புரிதல் உள்ளவர்கள் மட்டும் Mutual Fund ல் தொடரலாம், மற்றவர்கள் விலகி இருப்பதே நல்லது.

செல்வ மகள் சேமிப்புத்திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது என்பதால், ஓட்டை கையாக உள்ளவர்கள் இத்திட்டத்திலேயே தொடர்வது நல்லது.

ஏற்கனவே, Mutual Fund ல் அதிகமாக முதலீடு செய்தவர்கள், மாற்று முதலீடாகச் செல்வ மகள் திட்டத்தை அணுகலாம்.

காரணம், ஒரே இடத்தில் அனைத்து முதலீட்டையும் முடக்குவது தவறு.

தொடர்புடைய கட்டுரைகள்

PPF கணக்கு துவங்குவதால் என்ன நன்மைகள்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

Sovereign Gold Bonds வாங்கலாமா?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. இதுவரை அறியாத ஒரு புதிய தகவலை பகிர்ந்தமைக்கு கிரி.

 2. மத்திய அரசுத் திட்டங்களை மாநில மொழியில் மாற்றாமல் இருப்பது தவறான செயல். இந்திப்பெயரால் திட்டம் என்னவென்றே பலருக்கு தெரிவதில்லை.

  -True

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here