PhonePe Google Pay Paytm எது சிறந்தது?

7
PhonePe Google Pay Paytm

ற்போது UPI பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் முக்கிய நிறுவனங்களின் சேவையைப் பற்றிய கட்டுரையே இது. Image Credit

PhonePe

இந்திய நிறுவனமாகத் துவக்கத்தில் Flipkart PhonePe UPI அறிமுகமானது. செய்தித்தாளில் ஒரு பக்க விளம்பரம் கொடுத்துப் பலரின் கவனம் ஈர்த்தது.

இதுவரை பயன்படுத்தியதில் ஒருமுறை கூடப் பிரச்சனையைச் சந்தித்தது இல்லை.

நாம் பணம் அனுப்பும் வங்கி அல்லது பெறும் வங்கியில் பிரச்சனை இருந்தால், எச்சரிக்கைப்படுத்திப் பணம் செலுத்த அனுமதிக்காது.

பணம் செலுத்தி SMS வரவில்லை என்றால், திரும்ப SMS அனுப்ப வசதியுள்ளது.

Wallet வசதியுள்ளது.

தற்போது Flipkart நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனம் கையப்படுத்தியதால், PhonePe நிறுவனமும் தற்போது அவர்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டது.

சமீப சுவாரசியமான விளம்பரங்கள், தரமான சேவையால் முதலிடத்தில் உள்ளது.

Google Pay

கூகுள் என்றாலே எளிமை என்பது அனைவரும் அறிந்தது. மற்றவருக்குப் பணம் அனுப்புவது, தகவல் பகிர்வது ஆகியவை மிக எளிது.

Wallet இல்லாமலே நேரடியாக வங்கியில் இருந்து செலுத்தக்கூடிய வசதியைக் குழப்பம் இல்லாமல் கொண்டு வந்தது அனைவரிடையே வரவேற்பை பெற்றது.

தற்போது (Visa) கிரெடிட் கார்டு சேர்க்கவும் வசதியைக் கொடுத்துள்ளது.

மொபைல் எண் மூலம் அடுத்தவருக்குப் பணம் செலுத்தும் வசதியால் எவருக்கும் எளிதாகப் பணத்தை அனுப்ப முடிகிறது.

Google Pay மூலம் பணம் அனுப்பும் போது சரியாகச் செல்லுமா என்ற சந்தேகம் உள்ளது. ஓரிரு முறை பிரச்சனையாகியுள்ளது.

பணம் திரும்ப வந்து விட்டாலும், அனுப்பும் போது பயம் இருப்பது உண்மையே.

எனவே, பெரிய தொகையை இதில் நம்பி அனுப்புவதில்லை, குறிப்பாகப் புதிய நபருக்கு.

சிலர் பணம் அனுப்பிப் பிரச்சனையாகி திரும்பக் கிடைக்காமலே போய் உள்ளது.

Paytm

சக்கை போடு போட்டுக்கொண்டு இருந்த Paytm சேவை, UPI வருகைக்குப் பிறகு திணறிக்கொண்டுள்ளது.

PhonePe & Google Pay போட்டியைச் சமாளிக்க முடியவில்லை.

துவக்கத்தில் Wallet உடன் இருந்ததால், என்ன தான் UPI என்று விளம்பரப்படுத்தினாலும் மக்களுக்கு Google Pay போலத் தெளிவாக இல்லை.

எனினும், கடைகள், பெட்ரோல் நிலையங்களில் மக்களின் விருப்பத்தேர்வாக உள்ளது.

Paytm UPI Lite எப்படியுள்ளது?

Amazon Pay

Cashback கொடுத்தே வாடிக்கையாளர்களைக் கூட்டியது Amazon Pay. தற்போது குறைத்ததால், பயன்படுத்துபவர்களும் குறைந்துள்ளார்கள்.

Amazon Pay ல் பணம் அனுப்பி இதுவரை பிரச்சனையானதில்லை. பெரிய தொகையைப் பெரும்பாலும் இதில் அனுப்புவேன்.

Amazon Pay தைரியத்தைக் கொடுப்பதற்கு இன்னொரு காரணம், இவர்களுடைய சிறப்பான வாடிக்கையாளர் சேவை.

பிரச்சனையானாலும் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்க முடியும் என்பது நம்பிக்கையளிக்கிறது.

இதில் உள்ள மிகப்பெரிய குறைபாடு Google Pay & PhonePe போல வங்கி கணக்குகளை எளிதாக மாற்றிக்கொள்ள முடியாது.

இந்த வசதியை ஏன் Amazon Pay கொண்டுவராமல் உள்ளது என்பது புதிராக உள்ளது.

விரைவில் கொண்டு வரும் என நம்பலாம்.

WhatsApp Pay

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட WhatsApp Pay பெரியளவில் மக்களைக் கவரவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான பயனாளர்களே பயன்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் ஏற்பட்ட தனியுரிமை (Privacy) கொள்கை பிரச்சனையால், பலரும் WhatsApp Pay பயன்படுத்தத் தயங்குகிறார்கள்.

UPI சேவையில் எது சிறந்தது?

பலதரப்பட்ட UPI சேவைகள் இருந்தாலும், பயன்படுத்திய வரையில், தரத்தில், எளிமையில், சேவையில், நம்பிக்கையில் முதலிடத்தை PhonePe பிடிக்கிறது.

பயன்படுத்த எளிமையாக இருந்தாலும், பணம் போய்ச் சேருமா என்ற நம்பிக்கையை கொடுக்காததால், Google Pay இரண்டாம் இடம் பிடிக்கிறது.

கடைகளில் பயன்படுத்த Paytm வசதியாகவும், எளிதாகவும் உள்ளது. Cashback பெறவும், வாடிக்கையாளர் சேவைக்காகவும் Amazon Pay வசதியாக உள்ளது.

WhatsApp Pay அதிகம் பயன்படுத்தவில்லை, மற்றவர்களும் அதிகளவில் பயன்படுத்துவது போலத் தெரியவில்லை.

2021 பிப்ரவரி ஒட்டுமொத்த UPI பயன்பாட்டில் 42% பயன்பாட்டுடன் PhonePe முதலிடத்திலும், 36% பயன்பாட்டுடன் Google Pay இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இதன் பிறகு முறையே Paytm, Amazon Pay போன்றவை வருகின்றன.

உங்களுக்குப் பிடித்த UPI சேவையாக எது உள்ளது?

கொசுறு

கடைகளில் பணம் செலுத்தும் போது எந்த நிறுவன UPI அட்டை வைத்துள்ளார்களோ அதையே பயன்படுத்துவது நல்லது.

பொதுவானதாக இருந்தால், உங்கள் விருப்ப UPI சேவையைப் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

UPI பரிவர்த்தனை பரிந்துரைகள் | மிரட்டும் வளர்ச்சி

மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

ICICI Vs HDFC Vs SBI வங்கிகளில் சிறந்தது எது?

கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. கிரி, எளிமையாக புரியும் படி விளக்கமாக எழுதி இருக்கீங்க.. நான் இங்கு இருப்பதால் இதுவரை இந்த செயலியையும் பயன்படுத்தியது இல்லை.. இந்தியா வந்த பின் தான் பயன்படுத்த வேண்டும்.. மிக குறுகிய காலத்தில் அபரிதமான வளர்ச்சி அடைத்து உள்ளது.. எதிர்காலத்தில் இன்னும் வேகமாக வளரும் என்பதில் ஐயமில்லை.. நண்பர் சக்தி எல்லா செயலியையும் பயன்படுத்துவர் என்று நினைக்கிறேன்.. ஆரம்பத்தில் கோவையில் பணி புரிந்த போது, கணிப்பொறியில் எதாவது சந்தேகம் என்றால் என்னை கேட்பார்.. (நானே அரைகுறை தான்) ஆனால் தற்போது அவரின் வளர்ச்சியை கண்டு நான் வியப்பதுண்டு.. நல்ல முன்னேற்றம்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @ஸ்வாமிராஜன் 🙂

    @யாசின் UPI தற்போது பட்டையைக்கிளப்பிக்கொண்டுள்ளது. மளிகைக்கடைகள் தவிர பெரும்பாலான கடைகளில் UPI வந்து விட்டது.

    எதிர்காலத்தில் UPI முறை தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.

    சக்திக்கு இதில் மிக ஆர்வம். என்னிடம் கேட்டுப் பயன்படுத்திக்கொள்வார். சமீபத்தில் எழுதிய CRED பற்றித் தகவல்கள் சேகரித்து, சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறார்.

    புதிதாகப் பரிந்துரைப்பவற்றை ஆர்வமாகப் பயன்படுத்துவார்.

  3. Google Pay வந்த பிறகு சிறு வியாபாரிகளிடம் Paytm பயன்படுத்துவது குறைந்தும் நின்றும் கூட போயுள்ளது. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல அவசரத்திற்கு Google Pay கை கொடுப்பதில்லை. பல முறை சிக்கலாகியுள்ளது. PhonePe பயன்படுத்தியதில்லை.

  4. @ராமலக்ஷ்மி ஆமாம், தற்போது Paytm ஒப்பிடும் போது கடைகளில் Google Pay அதிகம் காணப்படுகிறது.

    Amazon Pay மிக எளிது. அதோடு சலுகைகளும் ஏராளம் உள்ளன.

    @முத்துசாமி நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here