முத்ரா கடன் திட்டம் பயன்கள் என்ன?

3
முத்ரா கடன் திட்டம்

த்திய அரசின் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்று முத்ரா கடன் திட்டம் (Micro Units Development & Refinance Agency Ltd). Image Credit

முத்ரா கடன் திட்டம்

சிறு தொழில் செய்பவர்கள், சிறு கடை வியாபாரிகள் பயன்பெறுவதற்காகக் குறைந்த வட்டியில் மத்திய அரசால் வழங்கப்படும் கடனே முத்ரா கடன் திட்டம் என அழைக்கப்படுகிறது.

₹50,000 முதல் ₹10,00,000 இலட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ₹50,000 கடன் வாங்குபவர்களுக்கு.

2024 – 2025 நிதியாண்டில் ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

துவக்கம்

2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்திட்டம் துவங்கப்பட்டாலும், கொரோனா காலத்துக்குப் பிறகே பலரும் இக்கடனின் சிறப்பை உணர்ந்து பயன்பெற்றார்கள்.

2015 ஏப்ரல் முதல் 2023 முதல் காலாண்டு வரை 40.82 கோடி பயனாளர்களுக்கு ₹23.2 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

முத்ரா கடன் திட்டத்தை அதிகம் பயன்படுத்தியது தமிழகமாகும்.

என்ன வகைக் கடன்கள் உள்ளன?

சிசு (Shishu) – இத்திட்டம் மூலமாக ₹50,000 வரை கடன் பெறலாம்.

கிஷோர் (Kishore) – இத்திட்டம் மூலமாக ₹50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.

தருண் (Tarun) – இத்திட்டம் மூலமாக ₹5 லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.

இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்?

  • காய்கறி மற்றும் பழக்கடை.
  • தள்ளுவண்டி காய்கறி, பழக்கடைகள்.
  • பொருட்களைக் கொண்டு செல்ல உதவும் வாகனத்தை வாங்க.
  • சிறு அளவிலான துணிக்கடைகள்.
  • ஏற்கனவே உள்ள தொழிலைச் சிறு அளவில் விரிவுபடுத்த.
  • முடித்திருத்தகம்.
  • தள்ளுவண்டியில் விற்பவர்கள்.
  • பேக்கரி கடையை விரிவுபடுத்த.
  • அழகு நிலையம்.
  • பஞ்சர், இரு சக்கர வாகன பழுதுபார்க்கும் கடைகள்.
  • கைவினை பொருட்கள் உற்பத்தி.
  • மேற்கூறியவற்றில் புதிதாக அமைக்கவும், ஏற்கனவே இருப்பவற்றை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் கடனைப் பெறலாம்.

யார் கடன் வழங்குவார்கள்?

முத்ரா கடனை வழங்குவதற்கென்று தனியாக எந்த அமைப்பும் இல்லை. ஏற்கனவே உள்ள வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும் பெறலாம்.

  • பொதுத்துறை வங்கிகள்.
  • தனியார் துறை வங்கிகள்.
  • மண்டல கிராம வங்கிகள்.
  • கூட்டுறவு வங்கிகள்.
  • நுண் நிதி நிறுவனங்கள்.
  • வங்கி சாரா நிதி நிறுவனங்கள்.

மேற்கூறியவற்றில் முத்ரா கடனைப்பெறலாம். கடனைப்பெறுவதற்கான ஆவணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

எனவே, சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று அவர்கள் கேட்கும் ஆவணங்களைக் கொடுத்து, கடனைப் பெற தகுதியுடையவர்களாக இருந்தால் கடனைப்பெறலாம்.

முத்ரா கடனால் என்ன பயன்?

மேற்கூறிய சிறு தொழில் செய்பவர்கள் அன்றைய வியாபாரத்துக்காக வெளியில் கடன் வாங்குவார்கள். இதற்கான வட்டி மிக அதிகம்.

சில நேரங்களில் கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று அதிகளவில் கடனை வாங்கி மிகப்பெரிய சிக்கலில் மாட்டுவார்கள்.

சிலர் தினமும் கடன் வாங்குவார்கள்.

அதாவது ₹1000 க்கு ₹100, ₹200, ₹300 என்று ஒரு நாளைக்குக் கடனும் வட்டியும் இருக்கும். ₹1000 கடன் வாங்கினால் ₹1300 கொடுக்க வேண்டியதிருக்கும்.

சிலர் கொடுக்கும் போதே வட்டியைக் கழித்து ₹900, ₹800 என்று கொடுப்பார்கள்.

முத்ரா கடனால் பலர் கந்து வட்டி கொடுமையிலிருந்து தப்பித்துள்ளார்கள். அதோடு தங்களது சிறு தொழிலையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

பெண்கள் இத்திட்டத்தில் அதிகளவு (68%) கடனைப் பெற்றுள்ளார்கள். 51% SC / ST மற்றும் OBC பிரிவினர் (As on March 2023).

இதில் கடனைத் திருப்பித்தராமல் ஏமாற்றுபவர்களும் (3%) உள்ளனர் ஆனால், பெரிய நிறுவனங்களின் கடன்களை ஒப்பிடும் போது முத்ரா கடன் பெற்றவர்கள் சரியாகச் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.

ப சிதம்பரம்

முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்கள், முத்ரா கடன் திட்டத்தைக் கடுமையாக விமரிசித்து இருந்தார். ‘₹50,000 கடனைப் பெற்று எப்படித் தொழில் நடத்த முடியும்?‘ என்று கேட்டு இருந்தார்.

ஆனால், முத்ரா கடன் திட்டத்தில் பெரும்பகுதி (83%) ₹50,000 கடன் தான்.

முத்ரா கடன் திட்டத்தால் பல சிறு குறு தொழில் செய்பவர்கள் வாழ்வு மேம்பட்டுள்ளது. பிறரை சார்ந்து இருக்காமல், நம்பிக்கையுடன் சுயமாகத் தொழிலைச் செய்ய முடிகிறது.

பெண்கள் பலர் சிறு / குறு தொழில்முனைவோர் ஆகியுள்ளார்கள்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப் போது, ‘சாலையோர காய்கறி கடை வைத்துள்ளவர்கள் எப்படிப் பணத்தை வாங்குவார்கள்?‘ என்று பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டுக் கிண்டலடித்தார்.

ஆனால், தற்போதைய நிலையே வேறு. இது பற்றித் தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்.

பிற்சேர்க்கைடிஜிட்டல் இந்தியா சாதித்தது என்ன?

ஏழை மக்களின் மனதை புரிந்து கொள்ளாமல், அவர்களின் தேவைகளைக் கண்டு கொள்ளாமல் நிதியமைச்சராக சிதம்பரம் எப்படி இருந்தார்? என்று வியப்பாக உள்ளது!

ஒரு காலத்தில் சிதம்பரம் அவர்கள் நிதி மேலாண்மையில் மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்து இருந்தேன் ஆனால், மாறாக உள்ளது.

அமைதிப்புரட்சி

இணையத்தில் கடுமையாக மத்திய அரசை விமர்சிப்பவர்களுக்குச் சராசரி மக்கள் எந்த அளவு பயனைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை உணராமல் உள்ளார்கள்.

மோடி திரும்பத்திரும்ப வெற்றி பெறுகிறார் என்றால், அது மத ரீதியாக இருப்பதால் அல்ல. அவர் செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களாலே!

பெரு நிறுவனங்களுக்கு மோடி உதவிக்கொண்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து கொண்டுள்ளார்கள் ஆனால், நிதர்சனம் களத்தில் எதிராக உள்ளது.

மத்திய அரசு திட்டங்களின் பயன்கள் நேரடியாக மக்களுக்குக் கிடைக்கிறது குறிப்பாக அடித்தட்டு மக்கள் பெருமளவில் பயன் பெறுகிறார்கள். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகச் செல்கிறது. இதுவொரு அமைதிப்புரட்சியாகும்.

மக்கள் எந்த அளவுக்கு அவர்களுடைய தின வாழ்க்கையில் பயனைப்பெற்று வருகிறார்கள் என்பதை இன்றுவரை எதிர்க்கட்சியினர் உணரவே இல்லை.

மோடிக்கு வாக்களிக்கிறார்கள் என்றால் சும்மா யாரும் வாக்களித்துவிடுவதில்லை, நேரடியாகப் பயனைப் பெறுகிறார்கள், நன்றியாக வாக்கைச் செலுத்துகிறார்கள்.

மதத்தை வைத்தெல்லாம் உணர்ச்சிகளைத்தூண்டி எதோ ஒரு முறை வெல்லலாம் ஒவ்வொரு முறையும் வெல்ல முடியாது.

சிறு குறு தொழில் செய்பவராக இருந்தால், இதுவரை தெரியவில்லையென்றால், முத்ரா கடன் திட்டத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுப் பயனடையுங்கள்.

கொசுறு

மேற்கூறியவை அனைத்துமே மத்திய அரசின் அதிகாரப் பூர்வ புள்ளி விவரங்களே. சந்தேகம் இருப்பவர்கள் https://pib.gov.in/ தளம் சென்று உறுதி செய்துகொள்ளலாம்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. முத்ரா கடன் திட்டம் பயன்கள் என்ன? என்பதை தெளிவாக விளக்கமாக எழுதி இருக்கீங்க!! நன்றி கிரி.

  2. என்னது மோடி திரும்ப திரும்ப வெற்றி பெறுகிறாரா
    மோடி பின்னால் இருப்பது பார்ப்பன கூட்டமும் அதானி அம்பானி போன்றவர்களும்தான் . மோடி ஒரு படிப்பறிவில்லாத பொம்மை . வித விதமாக உடையணிந்து உலகம் சுற்றி அனைவரையும் கட்டிப்பிடித்து தான் ஒரு சிறந்த தலைவர் என்று பார்ப்பன மீடியாவால் நிலை நிறுத்தப்படுகிறார் . மணிப்பூர் வன்முறையை கண்டும் காணாமல் விட்ட மோடி சீக்கிரமே பதவியை இழப்பான் . வருபவர்கள் மோடிக்கு அப்பனாக இருப்பார்கள் . திருட்டுத்தனமும் கேடித்தனமும் இந்தியர்கள் ஜீனில் இருப்பதால் சிங்கப்பூர் லீகுவான் போன்ற தலைவர்கள் இந்தியாவில் வரும் சாத்தியம் குறைவு

  3. @நன்றி யாசின்

    @anand வாட்சப் பல்கலை கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!