UPI Lite என்றால் என்ன?

4
UPI Lite

ரிசர்வ் வங்கியின் கவர்னர் Shaktikanta Das, UPI Lite உட்பட மூன்று முக்கிய மின்னணு மாற்றங்களை அறிமுகம் செய்து வைத்தார். Image Credit

UPI Lite

UPI சேவையின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு UPI சேவையைத் தொடர்ந்து NPCI நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இம்மாற்றம்.

BHIM செயலியில் Wallet உருவாக்கி அதில் பணத்தைப் போட்டு வைத்துக்கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலே பணத்தைச் செலுத்தும் வசதியே UPI Lite ஆகும்.

எப்படிப் பயன்படுத்துவது?

  • BHIM செயலியின் புதிய பதிப்பை நிறுவ வேண்டும்.
  • நிறுவிய பிறகு அதிகபட்சம் ₹2,000 வரை Wallet ல் சேமித்துக்கொள்ளலாம்.
  • இதன் வழியாக இணைய இணைப்பு இல்லாத (Offline) நேரங்களில் கூட, கடைகளில் பணத்தைச் செலுத்த முடியும்.
  • ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ₹500 பயன்படுத்த முடியும்.
  • UPI பரிவர்தனைகளில் ₹200 க்கும் குறைவான தொகைக்கே 50% நடைபெறுகிறது.

என்ன பயன்கள்?

  • கட்டணம் செலுத்த இணைய இணைப்பு அவசியமில்லை (இதைப் பரிசோதிக்கவில்லை).
  • PIN கொடுக்க வேண்டியதில்லை.
  • வங்கிப்பிரச்னைகளால் தடங்கல் ஏற்பட வாய்ப்பில்லை.
  • NETWORK பிரச்சனைகளால் கவலைப்பட வேண்டியதில்லை.
  • மொபைலி Wallet ல் இருந்தே பணத்தை எடுப்பதால், வங்கிகளின் வழங்கிகளின் (Server) சுமை குறைகிறது.
  • Success Rate அதிகமாகிறது.
  • வேகமான பரிவர்த்தனைக்கு உதவுகிறது.
  • வங்கி ஸ்டேட்மென்ட்டில் UPI பரிவர்த்தனைகளின் கூடுதல் எண்ணிக்கையை UPI Lite தவிர்க்கும்.

என்னென்ன வங்கிகள் தயாராக உள்ளன?

Canara, HDFC, Indian, Kotak Mahindra, Punjab National, Union, SBI ஆகிய வங்கிகள் இச்சேவையை வழங்குகின்றன.

விரைவில் மற்ற வங்கிகளும் இச்சேவையில் இணையும்.

இவ்வங்கிகளின் வழியாக UPI Lite க்கு அதிகபட்சம் ₹2000 பணத்தை Wallet ல் சேர்க்கலாம்.

இதன் பிறகு செலவு செய்யும் போது இவ்வசதியை பயன்படுத்தித் தொகையைச் செலுத்தலாம்.

Wallet ல் சேர்க்க கூடுதல் கட்டணம் எதுவுமில்லை.

Credit Card UPI Payment

தற்போது வங்கிக்கணக்கு வழியாக UPI யில் கட்டணத்தைச் செலுத்துகிறோம். இதே வங்கி கணக்குக்குப் பதிலாகக் கிரெடிட் கார்டு வழியாகச் செலுத்தினால்..?

அது தான் இச்சேவை.

இனி கிரெடிட் கார்டு வழியாகவும் பணத்தைச் செலுத்தலாம். தொடக்கமாக RuPay அட்டைக்கு மட்டும் இவ்வசதி அளிக்கப்படுகிறது.

விரைவில் Visa, Master நிறுவனங்களும் இச்சேவையில் இணையும்.

தற்போதைக்கு Punjab National, Union, Indian வங்கிகளின் RuPay அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

விரைவில் மற்ற வங்கிகளின் RuPay கடனட்டைகளையும் பயன்படுத்தலாம்.

Bharat Pay

இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினரின் கட்டணங்களை NRI க்கள் அங்கே இருந்து செலுத்த இம்முறை உதவுகிறது.

Cross-border Inbound Payments System என்ற முறையின் மூலம் வியாபார, தனிப்பட்ட தேவைகளுக்காக எளிதாக கட்டணத்தைச் செலுத்த முடியும்.

இதுவரை 20,000 Billers இணைந்துள்ளார்கள்.

இதைப்பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காததால், விரிவாகக் கூற முடியவில்லை.

UPI 123Pay

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்கள் UPI பயன்படுத்திக் கட்டணங்களைச் செலுத்துகிறார்கள்.

ஆனால், சாதா ஃபோன் (Future Phone) பயன்படுத்துபவர்களுக்கு?

அவர்களுக்காக அறிமுகமானது தான் 123Pay. இம்முறையில் இணையம் இல்லாமலேயே UPI கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின்னணு பரிவர்த்தனையை மத்திய அரசு தொடர்ந்து எளிதாக்கி வருகிறது.

தொடர்புடைய கட்டுரைகள்

மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

ரொக்கமில்லா பரிவர்த்தனை நோக்கி இந்தியா

UPI கிரெடிட் கார்டு இணைப்பு

Paytm Postpaid பயன்படுத்துவது பயனுள்ளதா?

Paytm UPI Lite எப்படியுள்ளது?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. படிப்பதற்கு ஆச்சரியமாகவும், அதே சமயத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.. மிகக் குறுகிய கால இடைவெளியில் மிகவும் அசுரத்தனமான வளர்ச்சியை இந்தத் துறை கண்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    தனிப்பட்ட முறையில் மோடி அரசின் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும், இவர்களது ஆட்சியின் போது தான் இந்தச் சேவை மிகச் சிறப்பாக வளர்ந்து இருப்பதை ஏற்று கொள்கிறேன்.

    எதிர்காலத்தில் இன்னும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும்..எல்லாவற்றிற்கும் மேலைநாடுகளை ஒப்பீடும் நாம், நம்முடைய வளர்ச்சிக்கு முன் அவர்கள் ஒன்றுமே இல்லை என்று தான் கூற வேண்டும்.

  2. @யாசின்

    “எதிர்காலத்தில் இன்னும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.

    உண்மை யாசின்.

    UPI போல ONDC என்ற அமேசான் ப்ளிப்கார்ட் மாற்று அரசு நிறுவனம் விரைவில் வரப்போகிறது. இது குறித்து விரைவில் எழுதுகிறேன்.

  3. Giri Sir,FYI Many shops in Pondicherry stop Credit card because of Tax.Due to high failure rate many Petrol pumps stop online billing.

  4. @Vijayakumar

    “Many shops in Pondicherry stop Credit card because of Tax”

    means its accountable, so they are avoiding it?

    “Due to high failure rate many Petrol pumps stop online billing.”

    Not at all possible. Might be some other reasons.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!