தடுப்பூசி சான்றிதழ் வாட்சப்பில் பெறுவது எப்படி?

0
தடுப்பூசி சான்றிதழ்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பல்வேறு மின்னணு முறை வசதிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன் வரிசையில் தற்போது தடுப்பூசி சான்றிதழ் கோப்பை WhatsApp மூலமாக வழங்குகிறது. Image Credit

தடுப்பூசி சான்றிதழ்

தற்போது பல்வேறு இடங்களில் தடுப்பூசி சான்றிதழைக் கேட்கிறார்கள்.

இதை https://www.cowin.gov.in/ தளத்தில் பெற முடியும் என்றாலும், இதன் வழிமுறைகள் கூடுதல் மற்றும் அனைவருக்கும் எளிதான ஒன்றல்ல.

ஆனால், அனைவரும் பயன்படுத்தும் வாட்சப்பில் கிடைக்கிறது என்றால் எளிது தானே!

WhatsApp ல் தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி?

  • 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • WhatsApp சென்று என்ன பெயரில் பதிவு செய்தீர்களோ அப்பெயருக்கு செல்லவும்.
  • Certificate‘ என்ற தட்டச்சு (Type) செய்து Enter அழுத்தவும்
  • Generating an OTP for the number 99********. You will receive an OTP from Cowin‘ என்று வரும்.
  • Please enter the 6 digit OTP below within 3 minutes‘ என்று வந்தவுடன் உங்கள் மொபைலுக்கு வந்த OTP எண்ணைப் பதிவு செய்யவும்.
  • வரவில்லையென்றால் Resend அழுத்தவும்.
  • பின்னர் ‘Type 1 for downloading Cowin Certificate or type Menu to view the Main Menu‘ என்று வந்த பிறகு எண் 1 அழுத்தவும்.
  • பின்னர் ‘Here is your COVID 19 Vaccination Certificate. 😊’ என்று உங்கள் சான்றிதழ் (PDF) வந்து விடும்.

இது அரசின் அதிகாரப்பூர்வ WhatsApp Business Account (MyGov Corona Helpdesk) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வே

உள்ளூர் ரயில்களில் தடுப்பூசி சான்றிதழைக் கட்டாயமாக்கி உள்ளார்கள்.

தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்று 2000 க்கு மேற்பட்டவர்களை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை.

குறிப்பாகக் கூட்டமாக உள்ள ரயில் நிலையங்களில் சோதனை செய்கிறார்கள். இந்நேரத்தில் WhatsApp மூலமாகச் சில நொடிகளில் பெற்று காண்பிக்க முடியும்.

எனவே, இவ்வழிமுறையைப் பின்பற்றித் தேவையை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரை

ஆதார் PVC அட்டை பெறுவது எப்படி?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here