கிரெடிட் கார்டு UPI எப்படியுள்ளது? FAQ

5
கிரெடிட் கார்டு UPI

UPI மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு பலரின் வேண்டுகோளுக்கிணங்க NPCI நிறுவனம் கிரெடிட் கார்டையும் UPI யில் பயன்படுத்த அனுமதித்துள்ளது. Image Credit

கிரெடிட் கார்டு UPI

UPI சேவையில் வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டு மற்றவருக்குச் செலுத்துவோம். அதையே கிரெடிட் கார்டிலிருந்து செலுத்துவதே கிரெடிட் கார்டு UPI.

தற்போது இந்திய அரசின் RuPay கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விரைவில் Visa, Master நிறுவனங்களும் இணைக்கப்படும்.

தற்போது HDFC Bank, Indian Bank, Punjab National Bank, Union Bank ஆகிய வங்கிகளின் RuPay கிரெடிட் கார்டுகளை மட்டும் இணைக்கலாம்.

டெபிட் கார்டில் RuPay முன்னணியில் இருந்தாலும், கிரெடிட் கார்டில் பின்தங்கியுள்ளது. தற்போது UPI முறை RuPay கிரெடிட் கார்டுக்கான தேவையை அதிகரிக்கும்.

எடுத்துக்காட்டுக்கு, என் அட்டையை Master ல் இருந்து RuPay க்கு மாற்றியுள்ளேன்.

எப்படி இணைப்பது?

வங்கிக்கணக்குகளை இணைப்பது போலவே கிரெடிட் கார்டுகளையும் இணைக்கலாம்.

PIN வேண்டுமா?

ஆமாம்.

வங்கிக்கணக்குக்கு UPI PIN set செய்வது போலக் கிரெடிட் கார்டுக்கும் PIN set செய்ய வேண்டும். அப்போது தான் பரிவர்த்தனையின் போது கொடுக்க முடியும்.

PIN உருவாக்கக் கிரெடிட் கார்டு அட்டையின் விவரங்களைக் கொடுத்தால் போதும்.

தனி நபருக்குச் செலுத்த முடியுமா?

முடியாது.

செலுத்தும் பணம் நிறுவனத்தின் / கடையின் QR code மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.

QR code சேமிப்புக்கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்தால், செலுத்த முடியாது, நடப்புக்கணக்காக (Current Account) இருக்க வேண்டும்.

எவ்வளவு ருபாய் வரை செலுத்தலாம்?

₹2,00,000 வரை கட்டுப்பாடுகளைப் பொறுத்துச் செலுத்தலாம். பதிவு செய்யாத நிறுவனமாக இருந்தால், அதிகபட்சம் ₹2,000 வரை செலுத்த முடியும்.

உங்கள் கிரெடிட் கார்டு உச்ச வரம்பு அனுமதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

மற்ற வங்கிகளின் RuPay கிரெடிட் கார்டு எப்போது இணைக்கலாம்?

மார்ச் 2023 முதல் இணைக்கலாம் என்று NPCI கூறியுள்ளது.

Google Pay, PhonePe போன்ற செயலிகளில் இணைக்க முடியுமா?

கிரெடிட் கார்டு UPI வசதியை BHIM PhonePe, Google Pay போன்ற செயலிகளில் இணைக்கலாம்.

Default கணக்காக மாற்ற முடியுமா?

முடியாது.

வங்கிக்கணக்கு மட்டுமே Default கணக்காக இருக்கும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும் என்றால், Drop Down list ல் கிரெடிட் கார்டை தேர்வு செய்து செலுத்த வேண்டும்.

பிற்சேர்க்கை – PhonePe ல் செய்ய முடியும்.

இதைப்பயன்படுத்துவதால் என்ன இலாபம்?

  • நம் பணம் வங்கியிலேயே இருக்கும். வங்கிக்கணக்கில் இருப்பதால் கிடைக்கும் வட்டி தொகை உயரலாம்.
  • Reward Points கிடைக்கும்.
  • பரிவர்த்தனை தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் குறைவு
  • பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்தலாம்.
  • காரணம், கிரெடிட் கார்டாகப் பயன்படுத்தினால், சேவைக்கட்டணம் இருக்கும் ஆனால், UPI முறையில் செலுத்தினால், சேவைக்கட்டணத்தைத் தவிர்க்கலாம்.
  • Swipe Machine வைத்துள்ளவர்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள் என்பதால், பலர் UPI வசதி மட்டுமே வைத்து Swipe Machine தவிர்த்து இருப்பார்கள்.
  • இது போன்ற கடைகளில் கிரெடிட் கார்டு UPI பயன்படுத்த முடியும்.
  • எனவே, UPI பயன்படுத்தியது போலவும் ஆச்சு, கிரெடிட் கார்டை பயன்படுத்தியது போலவும் ஆச்சு.
  • நேரடி கிரெடிட் கார்டு வழியாக செலுத்தும் போது கடைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும், அதோடு பணம் கிடைக்கவும் கொஞ்சம் தாமதமாகும்.
  • ஆனால், கிரெடிட் கார்டு UPI வழியாக செலுத்துவதால், கடைகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை, அதோடு பணமும் உடனடியாக அவர்களுக்கு கிடைக்கும்.

RuPay கிரெடிட் கார்டு

என்னிடம் RuPay கிரெடிட் கார்டு இல்லை. எனவே, ஏற்கனவே இருந்த HDFC Master கார்டை RuPay கார்டாக (convert) மாற்றிக்கொண்டேன்.

இதில் ஒரு தலையைச் சுற்றி மூக்கை தொடும் வேலையிருந்தது.

அதாவது Master ல் இருந்து Visa க்கு மாற்றிப் பின்னரே RuPay க்கு மாற்ற முடிந்தது. ஏன்யா இப்படி? என்றால்.. அப்படித்தான் சார் என்கிறார்கள்.

வெட்டியா ஒரு (Visa) அட்டை பயன்படுத்தாமலே வீணானது, புதிதாக அப்படியே உள்ளது.

சில நடைமுறை சிக்கல்கள்

கிரெடிட் கார்டை இணைத்த பிறகு BHIM செயலி சரியாக வேலை செய்யவில்லை, உள்ளே நுழையவே முடியலை.

பின்னர் சில முயற்சிகளைச் செய்து பார்த்த பிறகு WiFi யில் வேலை செய்கிறது, Mobile Data வில் வேலை செய்யவில்லை.

இப்படியிருந்தால், எப்படி வெளியே பயன்படுத்துவது?

BHIM சேவை மையத்திடம் கூறினால், பார்க்கிறேன் என்று கூறினார்கள். அதன் பிறகு சத்தமே இல்லை.

சரி இணையத்தில் தேடி பார்ப்போம் என்று தேடினால், 3G க்கு மாற்றினால் வேலை செய்கிறது என்று ஒருவர் கூறி இருந்தார்.

அதன் படி மாற்றினால் வேலை செய்யவில்லை ஆனால், அதன் பிறகு 4G க்கு மாற்றினால் வேலை செய்கிறது. அதன் பிறகு 5G க்கு மாற்றினால் வேலை செய்கிறது.

இது சில மணி நேரங்கள் தான், பின்னர் திரும்ப இதே பிரச்சனை.

திரும்ப 3G க்கு மாற்றிப் பின்னர் 4G மாற்ற வேண்டும். 3G யிலிருந்து 5G க்குப் போனால் வேலை செய்வதில்லை. 3G –> 4G –> 5G இப்படித் தான் போகணும்.

படிக்கக் கிறுக்குத்தனமா இருக்குனு உங்களுக்குத் தோன்றும், தவறில்லை 🙂 எனக்கும் அப்படித்தான் தோன்றியது ஆனால், இப்படித்தான் வேலை செய்கிறது.

வேலை செய்தாலும் செயலி மிக மெதுவாக உள்ளது, பொறுமையை சோதிக்கிறது.

எனவே, எவன்டா இதை மாற்றிட்டு இருப்பது என்று சிறிய தொகையாக இருக்கும் நேரங்களில் வழக்கமான UPI சேவையையே பயன்படுத்தி விடுகிறேன்.

அனைவருக்கும் இப்பிரச்சனையில்லை.

எனவே, உங்களுக்குச் சரியாக இருக்கலாம். ஒருவேளை உங்களுக்குப் பிரச்சனையென்றால், மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

பின்னர் இப்பிரச்சினைகள் களையப்படும் என்று நம்புகிறேன்.

பிற்சேர்க்கை

Paytm, Google Pay, PhonePe நிறுவனங்களும் தற்போது UPI Lite & கிரெடிட் கார்டு UPI வசதியைக் கொண்டு வந்துள்ளது.

தற்போது Google Pay தான் அனைத்துப் பரிவர்தனைகளுக்கும்பயன்படுத்துகிறேன்.

கிரெடிட் கார்டு UPI க்கு MDR கட்டணம் காரணமாக, பல கடைகள், நிறுவனங்கள் இவ்வசதியை தடை செய்து வைத்துள்ளன.

Paytm UPI Lite எப்படியுள்ளது?

கொசுறு 1

RuPay & UPI பரிவர்த்தனையை ஊக்குவிக்க ₹2,600 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதாவது பரிவர்த்தனை கட்டணங்களை வங்கிக்குச் செலுத்த இவை பயன்படுத்தப்படும்.

மக்கள் தொடர்ந்து கட்டணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியும்.

கொசுறு 2

UPI வெற்றிக் காரணமாக, பல நாடுகளும் UPI பயன்படுத்த முன்வந்துள்ளன, சில நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன.

தற்போது வெளிநாட்டில் உள்ளவர்களும் (NRI) தாங்கள் வசிக்கும் நாட்டின் மொபைல் எண்ணையே பயன்படுத்தி, UPI பரிவர்த்தனைகள் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Singapore, Australia, Canada, Hong Kong, Oman, Qatar, USA, Saudi Arabia, UAE, UK நாடுகளில் உள்ளவர்கள் தாங்கள் உள்ள நாட்டின் மொபைல் எண் வழியாகவே UPI சேவையை விரைவில் பயன்படுத்தலாமென NPCI அறிவித்துள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்

UPI கிரெடிட் கார்டு இணைப்பு

UPI Lite என்றால் என்ன?

PhonePe Google Pay Paytm எது சிறந்தது?

Tokenization | RBI எடுத்த அதிரடி முடிவு

RuPay வளர்ச்சியால் கதிகலங்கும் Master & Visa நிறுவனங்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. கிரி.. விளக்கமான தகவலுக்கு நன்றி.. சில பகுதிகளை படிக்கும் போது உண்மையில் நகைச்சுவையாக இருந்தது.. குறிப்பாக ( அதாவது Master ல் இருந்து Visa க்கு மாற்றிப் பின்னரே RuPay க்கு மாற்ற முடிந்தது. ஏன்யா இப்படி? என்றால்.. அப்படித்தான் சார் என்கிறார்கள்.) இந்த இடம்..

    இது ஒரு படி மேல போயி இன்னும் சிரிப்பை வர வைத்தது.. (படிக்கக் கிறுக்குத்தனமா இருக்குனு உங்களுக்குத் தோன்றும், தவறில்லை 🙂 எனக்கும் அப்படித்தான் தோன்றியது ஆனால், இப்படித்தான் வேலை செய்கிறது.)..

    இது எப்படியோ எல்லா பிரச்சனைகளும் களையப்பட்டு, சரியான சேவையை விரைவில் வழங்கப்படும் என நம்புகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின் 🙂

    தற்போது மேற்கூறிய பிரச்சனை சரியாகி விட்டது ஆனால், வேகம் குறைவாக உள்ளது. இதுவும் சரியாகி விடும் என்று கருதுகிறேன்.

  3. Phonepe அல் credit Card upi unofficial ஆக default ஆக வைத்துக்கொள்ளலாம். நன்றாக உள்ளது

  4. ‘’(Default கணக்காக மாற்ற முடியுமா?)

    முடியாது.

    வங்கிக்கணக்கு மட்டுமே Default கணக்காக இருக்கும்.

    கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும் என்றால், Drop Down list ல் கிரெடிட் கார்டை தேர்வு செய்து செலுத்த வேண்டும்)’’

    ஃபோன்பே app இல் கிரெடிட் கார்டு யுபிஐ default ஆக வைத்துக்கொள்ளலாம். இது அதிகாரபூர்வமாக ஃபோன்பே தெரிவிக்கவில்லையே தவிர கடைசியாக அல்லது அடிக்கடி எந்த மோடில் பே செய்கிறோமோ அதிலேயே default ஆக இருக்கிறது. இது மிக வசதியாக உள்ளது. முயற்சித்து பாருங்கள்.

  5. @ஹரிஷ்

    நான் முழுக்க Paytm தான் பயன்படுத்துகிறேன். இது எனக்கு பிரச்சினையில்லாமல் உள்ளது.

    PhonePe ல் கார்டை சேர்த்து விட்டேன் ஆனால், பயன்படுத்த இன்னும் துவங்கவில்லை.

    ஒருவழியாக RuPay கார்டு வாங்கி விட்டீர்கள் போல 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here