RuPay வளர்ச்சியால் கதிகலங்கும் Master & Visa நிறுவனங்கள்

3
RuPay

NPCI நிறுவனத்தால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், இந்தியாவில் 2012 ம் ஆண்டு RuPay துவங்கப்பட்டது. Image Credit

RuPay

பாஜக ஆட்சிக்கு வந்த 2014 க்கு பிறகு RuPay உள்நாட்டுப் பரிவர்த்தனை முறை ஊக்குவிக்கப்பட்டது.

அறிமுகப்படுத்தப்பட்ட போது அனைவராலும் (இந்தியர்கள் உட்பட) குறைத்து மதிப்பிடப்பட்டதால், கவனிக்கப்படாமல் இருந்தது.

ஆனால், மத்திய அரசு வங்கிக்கணக்கு துவங்காத மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு ஆரம்பித்த போது பற்று அட்டையை (டெபிட் கார்டு) RuPay நிறுவனத்திலிருந்து கொடுக்க ஆரம்பித்தது.

துவக்கத்தில் இதைச் சாதாரணமாக நினைத்த Master & Visa நிறுவனங்கள், RuPay அட்டை கோடிக்கணக்கில் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் பயப்பட ஆரம்பித்தன.

Master & Visa

இவ்விரு நிறுவனங்களுமே அமெரிக்க நிறுவனங்களாகும்.

பரிவர்த்தனைக்கு இந்நிறுவனங்களைப் பயன்படுத்தும் போது பரிவர்த்தனை கட்டணம் கோடிக்கணக்கில் இவர்களுக்குச் சென்று கொண்டு இருந்தது.

ஆனால், RuPay களத்தில் வந்து பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், இவர்களின் வருமானமும் குறைய ஆரம்பித்தது.

RuPay உள்நாட்டு நிறுவனம் என்பதாலும், RBI, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருப்பதாலும், இதன் பரிவர்த்தனை கட்டணம் மிகக்குறைவு.

அதோடு இதற்குச் செலுத்தப்படும் கட்டணம் இந்தியாவிலேயே இருக்கும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

RuPay மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு இதன் கட்டணத்தை 2020 ஜனவரி 1 ரத்து செய்தது. இதன் காரணமாக RuPay பயன்பாடு அதிகரித்தது.

60 கோடிக்கும் அதிகமான டெபிட் அட்டைகள் இந்தியாவில் கொடுக்கப்பட்டுள்ளன, இவற்றில் பெரும்பாலானவை ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களுடையது.

மொத்த சந்தை மதிப்பில் 35% RuPay வைத்துள்ளது.

கடுப்பான Master & Visa

டெபிட் அட்டையில் முன்னணியில் இருந்தாலும், கிரெடிட் அட்டை பயன்பாட்டில் RuPay பின் தங்கியுள்ளது.

காரணம், டெபிட் அட்டை பெரும்பாலும் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது ஆனால், RuPay கிரெடிட் அட்டை இன்னமும் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அதோடு Master Visa போல RuPay இன்னும் கிரெடிட் அட்டைகளுக்குச் சலுகைகளைக் கொடுக்கவில்லை.

டெபிட் அட்டை மூலம் சிறிய தொகை அளவில் ஆனால், அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், Master Visa கடுப்பாகியுள்ளது.

UPI பரிவர்த்தனையில் ₹200 க்கு குறைவான பரிவர்த்தனைகளே அதிகம் என்று NPCI நிறுவனம் கூறியது. கடந்த 2021 – 2022 நிதி ஆண்டில் 1 ட்ரில்லியன் பரிவர்த்தனை.

Master ஒரு படி மேலே சென்று தேசிய உணர்வை வைத்து மக்களிடையே RuPay வை மோடி பிரபலப்படுத்துகிறார் என்று அமெரிக்க அரசிடம் புலம்பி இருந்தது.

தற்போது சிங்கப்பூர், பூட்டான், மாலத்தீவு, UAE, சவூதி அரேபியா, மியான்மர், தென் கொரியா, நேபாள் நாடுகளில் Rupay அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் Master Visa நிறுவனங்கள் ஆழமாக ஊடுருவி உள்ளதால், வெளிநாடுகளில் இடத்தைப் பிடிப்பது எளிதல்ல.

RuPay & UPI முக்கியத்துவம்

ரஷ்யா உக்ரைன் போரால் Master Visa, Google Pay நிறுவனங்கள் ரஷ்யாக்குத் தடை விதித்தன. இதனால் இச்சேவையைப் பயன்படுத்திய ரஷ்யா மக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.

இந்நிலையில் RuPay எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரிகிறது. இந்தியாவில் ரஷ்யா போல ஒரு நிலை ஏற்பட்டால், RuPay & UPI வைத்து எளிதாகச் சமாளிக்க முடியும்.

சுருக்கமாகக் கூறினால், இந்தியாக்கு பாதிப்பே இருக்காது. மின்னணு பரிவர்த்தனையில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பணப் பரிவர்த்தனைக்கு மட்டுமல்ல மற்ற நாடுகளின் தொழில்நுட்பத்தை, சேவைகளை, நிறுவனங்களை அதிகம் சார்ந்திருப்பது நெருக்கடி காலத்தில் மிகப்பெரிய சிக்கலைக் கொண்டு வரும்.

எனவே, தான் மத்திய அரசு Atmanirbhar என்ற தற்சார்பு உற்பத்தி முறையை முன்னெடுத்து வருகிறது.

உள்நாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, உற்பத்தி அதிகரிக்கும் போது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது குறைந்து ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறையும்.

இதையொட்டியே பல Startup கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் உருவாகி வருகின்றன. இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

எனவே, இந்திய தயாரிப்புகளை எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் முடிந்தவரை பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

UPI பரிவர்த்தனை பரிந்துரைகள் | மிரட்டும் வளர்ச்சி

மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. அருமையான பயனுள்ள தகவல்களை எழுதிகிறீர்கள். எனது Bookmark இல் தினமலருக்கு அடுத்து http://www.giriblog.com save செய்து வைத்துள்ளேன். தினமலருக்கு பிறகு அடிக்கடி பார்க்கும் website கிரிப்ளாக் தான்.

  2. கிரி, இதெல்லாம் நடக்குமா? சாத்தியமா? இது சுத்தமா வேலைக்கு ஆகாது? என எண்ணிய பல நிகழ்வுகள் தற்போது அபரிதமான வளர்ச்சி பெற்று வருகிறது.. (மின்னணு பரிவர்த்தனையில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.) மறுக்க முடியாத உண்மை!!! இன்னும் சில ஆண்டுகளில் இதன் பயன்பாடு இன்னும் அதிகம் இருக்கும்.. சாதாரண மக்களும் இதை பயன்படுத்த துவங்கியதும், ஏற்று கொண்டதும் , இதன் எளிமையும் தான் வளர்ச்சிக்கு முதன்மை காரணமாக எண்ணுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @ஹரிஷ் நன்றி. எழுதும் எண்ணிக்கை குறைவு தான். இருப்பினும் நீங்க யாசின் போன்றவர்கள் தொடர்ந்து படிப்பது உற்சாகம் அளிக்கிறது.

    @யாசின்

    “சாதாரண மக்களும் இதை பயன்படுத்த துவங்கியதும், ஏற்று கொண்டதும் , இதன் எளிமையும் தான் வளர்ச்சிக்கு முதன்மை காரணமாக எண்ணுகிறேன்”

    இதற்கு காரணம் ஜியோ கொடுத்த குறைவான கட்டண இணையம். மொபைல் பயன்பாடு. இவையெல்லாவற்றையும் விட UPI என்ற மிக எளிதான முறை அறிமுகமாகியது.

    எவரும் கற்பனை கூட செய்து இருக்க மாட்டார்கள். தற்போது சாலைக்கடையில் கூட UPI வைத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here